என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
தரவரிசையில் முதலிடம்.. புதிய சாதனை படைத்த விக்ரம் திரைப்படம்
- இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் விக்ரம்.
- விக்ரம் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'விக்ரம்'. இப்படத்தில், முன்னணி நட்சத்திரங்களான பகத் ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பலர் நடித்துள்ளனர். ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.440 கோடி வசூலை கடந்துள்ளது.
இந்நிலையில் 'விக்ரம்' திரைப்படம் புதிய சாதனையை படைத்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் அதிகம் விரும்பப்பட்ட, இந்தியத் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் தரவரிசை பட்டியலை ஐஎம்டிபி என்கிற திரைப்படங்களை மதிப்பீடு செய்யும் இணையம் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் 8.6 மதிப்பீடு பெற்று முதலிடைத்தை பிடித்துள்ளது. இது கமல் ரசிகர்களின் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.