என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
'கங்குவா' சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்த தமிழக அரசு
- கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14-ந் தேதி வெளியாகவுள்ளது.
- பல திரையரங்குகளில் முன் பதிவு தொடங்கி வேகமாக டிக்கெட் புக் செய்யப்பட்டு வருகிறது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கங்குவா'. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் 38 மொழிகளில் 3டி முறையில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
திரைப்படம் வரும் நவம்பர் 14-ந் தேதி வெளியாகவுள்ளது. வட இந்தியாவில் 3500 மேற்பட்ட திரையரங்குகளில் கங்குவா திரைப்படம் வெளியாகவுள்ளது.
படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் ரிலீஸ் டிரெய்லர் இரண்டு நாட்களுக்கு முன் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
திரைப்படம் வெளியாக இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில். பல திரையரங்குகளில் முன் பதிவு தொடங்கி வேகமாக டிக்கெட் புக் செய்யப்பட்டு வருகிறது. கேரளா மற்றும் பெங்களூரு பகுதியில் உள்ள திரையரங்குகளில் கங்குவா திரைப்படம் சிறப்பு காட்சியாக அதிகாலை 4 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
தமிழகத்தில் கங்குவா திரைப்படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதி அளித்துள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் கங்குவா திரைப்படம் காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கும் .
TN Govt Granted Special Show (9 AM Show) Permission for #Kanguva ? pic.twitter.com/LgVYtPivol
— Trendswood (@Trendswoodcom) November 12, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.