search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    வேட்டையன் படத்தின் முதல் நாள் வசூல்
    X

    வேட்டையன் படத்தின் முதல் நாள் வசூல்

    • நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் வேட்டையன்.
    • படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வாங்கியுள்ளது.

    நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் வேட்டையன். இயக்குநர் ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ஸ்ருதி ஹாசன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் ரஜினிகாந்தின் நடிப்பு, மாஸ் மொமண்ட் என பக்கவாக கொடுத்து இருக்கிறார் இயக்குனர் ஞானவேல். பகத் பாசில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் கலக்கியுள்ளார்.

    படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வாங்கியுள்ளது. மாலை 5 மணி நிலவரப்படி தமிழகத்தில் மட்டும் திரைப்படம் 12 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. வட அமெரிக்காவில் மட்டும் 20 லட்ச டாலர்கள் வசூலித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

    திரைப்படத்தின் வசூல் வரும் பண்டிகை நாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×