search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    வேட்டையன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில்
    X

    வேட்டையன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில்

    • இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.
    • கடந்த சில வாரங்களாக படத்தின் டப்பிங் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

    'ஜெய் பீம்' இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் அறிவித்தது.

    கடந்த சில வாரங்களாக படத்தின் டப்பிங் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் முதல் பாடலான `மனசலாயோ' என்ற பாடல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    Next Story
    ×