என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாங்களே.. தனுஷுக்கு நயன்தாரா சொன்ன 'ஜெர்மன்' வார்த்தையின் அர்த்தம்!
- அதன் அர்த்தத்தைத் தெரிந்து கொண்டு இனி யாருக்கும் அதனை செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள்
- தனிப்பட்ட முறையில் பழிவாங்குகிறார் என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.
நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ந்தேதி திருமணம் செய்துகொண்டார். தற்போது இந்த ஜோடிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
மகாபலிபுரம் ஷெரட்டன் ரிசார்ட் ஹோட்டலில் நடந்த இவர்களின் திருமணம் தொடர்பாக ஆவணப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டு அது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்துக்கு விற்கப்பட்டது. இந்த ஆவணப்படம் 'Nayanthara Beyond the Fairy Tale' என்ற தலைப்பில் வரும் 18 ஆம் தேதி நயன்தாரா பிறந்தநாளை ஒட்டி வெளியிடப்பட்ட உள்ளது.
இந்நிலையில் தனது திருமண வீடியோ 2 ஆண்டுகளாக வெளியாகாமல் இருப்பதற்கு நடிகர் தனுஷ் தான் காரணம் என்று நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நானும் ரவுடிதான் படத்தில் வரும் 3 நொடி காட்சியை பயன்படுத்தியதற்கு நடிகர் தனுஷ் 10 கோடி நஷ்டஈடு கேட்டதாக நயன்தாரா பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
'நானும் ரௌடிதான்' படத்தின் காட்சிகளை பயன்படுத்த தனுஷ் கடந்த இரண்டு ஆண்டுகளாக தடையில்லா சான்றிதழ் (NOC) தராமல் இழுத்தடித்ததோடு மட்டுல்லாமல் தற்போது 10 கோடி நஷ்டஈடு கேட்டும் தனிப்பட்ட முறையில் பழிவாங்குகிறார் என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.
தனது நீண்ட அறிக்கையில் ஒரு இடத்தில் குறிப்பிட்ட நயன்தாரா, உங்களின்[ தனுஷின்] கடவுள் பார்த்துக் கொண்டிருப்பார் என்பதை மறந்து விடாதீர்கள். இந்த நேரத்தில், ஜெர்மனிய மொழியின் "Schadenfreude" எனும் வார்த்தையை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன், அதன் அர்த்தத்தைத் தெரிந்து கொண்டு இனி யாருக்கும் அதனை செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
திடுதிப்பென நயன்தாரா தனுஷுக்கு அறிமுகப்படுத்திய இந்த ஜெர்மன் சொல்லின் அர்த்தம் என்ன என்று பலருக்கும் இணையத்தில் தேடி வருகின்றனர். நயன்தாரா குறிப்பிட்ட "schadenfreude" என்ற ஜெர்மன் மொழி வார்த்தைக்கு, "மற்றவர் துயரத்தை கண்டு ஒருவர் இன்பம் கொள்வது அல்லது திருப்தி அடைவது" என்பது பொருளாகும்.
தனுஷை இத்தனை காட்டமாக நயன்தாரா திட்டுவதற்கும், இந்த மொத்த குற்றச்சாட்டுக்கும் பின்னால் நயன்தாரா மற்றும் தனுஷ் இடையே இருக்கும் அந்த தனிப்பட்ட பகை என்ன என்ற கேள்வி கோலிவுட் வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்