search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    Trust the Process -  `நண்பன் ஒருவன் வந்த பிறகு பட இயக்குனரின் நெகிழ்ச்சி பதிவு
    X

    Trust the Process - `நண்பன் ஒருவன் வந்த பிறகு' பட இயக்குனரின் நெகிழ்ச்சி பதிவு

    • அனந்த் `நண்பன் ஒருவன் வந்த பிறகு' என்ற படத்தை இயக்கியுள்ளார்.
    • திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகியது.

    ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்து வெளியான மீசைய முறுக்கு படத்தில் நடித்து பலருக்கும் பரீட்சையமான முகமானார் அனந்த் .

    தற்பொழுது அனந்த் `நண்பன் ஒருவன் வந்த பிறகு' என்ற படத்தை இயக்கியுள்ளார். திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

    இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு வழங்கி மசாலா பாப்க்கார்ன் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் ஒயிட் ஃபெதர் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் அனந்த் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க அவருடன் பவானி ஸ்ரீ, ஆர் ஜே விஜய், மோனிகா, யூடியூபர் இர்ஃபான் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    முழுக்கமுழுக்க இப்படம் இளம் தலைமுறையின் நட்பைப் பற்றி பேசக்கூடியப் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தை சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பார்த்து விட்டு படக்குழுவினரை பாராட்டி இருந்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இயக்குனர் அனந்த் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

    அதில் " செயல்முறையை நம்புங்கள், நீங்கள் செய்யும் முயற்சிகள் அனைத்தும் ஒரு நாள் கண்டிப்பாக பலன் தரும். ஒரு நாள். அந்த ஒரு நாள், அந்த ஒரு நொடி எனக்கு சிவகார்த்திகேயன் அண்ணாவை பார்க்கும் போது நடந்தது."

    "ரெமோ படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்தில் நடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் சிவகார்த்திகேயன் அண்ணாவை ஒரு முறையாவது பார்த்திட மாட்டோமா என்ற எண்ணத்தில் ஓட் சென்றேன், ஆனால் இன்றோ அவர் நான் நடித்து இயக்கிய படத்தை பார்த்துவிட்டு பாராட்டும் போது, என்னுடைய பயணம் தொடங்கிவிட்டது என தோன்றுகிறது. உங்கள் அன்புக்கு என்றும் நன்றியுடன் இருப்பே. இதற்கு காரணமாக இருந்த வெங்கட் பிரபு சார் மற்றும் தயாரிப்பாளர் ஐஷ்வர்யாவிற்கு நன்றி தெரிவித்து அப்பதிவில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு இருந்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×