search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ரசிகர்களுடன்  படத்தை பார்த்து கொண்டாடிய வேட்டையன் படக்குழு
    X

    ரசிகர்களுடன் படத்தை பார்த்து கொண்டாடிய வேட்டையன் படக்குழு

    • உலகம் முழுவதும் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் இன்று வெளியானது.
    • என்கவுன்டர் பற்றி அலசும் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்தும், என்கவுன்டரை எதிர்க்கும் வழக்கறிஞராக அமிதாப்பச்சனும் நடித்துள்ளனர்.

    ரஜினிகாந்த் - அமிதாப்பச்சன் இணைந்து நடித்துள்ள வேட்டையன் படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்கில் இன்று ரிலீசானது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராகவும், இந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரமாகவும் உலா வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் `வேட்டையன்'.

    உலகம் முழுவதும் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் இன்று வெளியானது. தியேட்டர்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    என்கவுன்டர் பற்றி அலசும் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்தும், என்கவுன்டரை எதிர்க்கும் வழக்கறிஞராக அமிதாப்பச்சனும் நடித்துள்ளனர்.

    இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர்ஸ்டார்கள் இருவர் நடித்திருப்பதால் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருப்பதால் இந்த படத்தை ரஜினி ரசிகர்கள் திரையரங்கில் ஆர்வத்துடன் முதல் நாள் காட்சியில் கொண்டாடி வருகின்றனர்.

    படத்தை நடிகர் தனுஷ் பார்த்து மகிழ்ந்தார். கார்த்திக் சுப்பராஜ் இன்று காலை கமலா திரையரங்கிள் கண்டு மகிழ்ந்தார். படக்குழு இன்று காலை ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்தனர். இதில் ரித்திகா சிங், அபிராமி, ரஜினிகாந்தின் மனைவி, இயக்குனர் ஞானவேல் ரோகினி தியேட்டரில் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூகத்தில் பரவி வருகிறது.

    இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் – அமிதாப் பச்சன் ஆகிய இருவருடன் இணைந்து பகத் ஃபாசில், ராணா, கிஷோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் பெரும்பாலான காட்சிகள் பெண் கதாபாத்திரங்களையே மையப்படுத்தி நகர்வது போல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

    துஷாரா விஜயன், ரித்திகா சிங், அபிராமி, ரோகிணி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்துள்ளார்.

    மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வேட்டையன் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருப்பது படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×