search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கிசுகிசு
    X
    கிசுகிசு

    அக்காவாக நடிக்க அதிக சம்பளம் கேட்ட நடிகை

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர், தற்போது அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க அதிக சம்பளம் கேட்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் சிரித்து சிரித்து பல ரசிகர்களை கவர்ந்த நடிகை, திருமணம் செய்த பிறகு படங்களில் நடிக்காமல் இருந்தாராம். குழந்தைகளை பெற்ற பிறகு குடும்பத்தில் கவனம் செலுத்தி வந்த நடிகை, தற்போது ரீ-என்ட்ரி கொடுத்து வருகிறார். முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடித்த அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதாம்.

    அதன்பின் நடிகையை அதிக படங்களில் பார்க்கலாம் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நிலையில், நடிகைக்கு எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லையாம். நடிகையை அணுகி பலரும் கதை சொல்லிவிட்டு, நீங்கள் அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்கிறார்களாம். 

    அதற்கு நடிகை, அக்கா என்றால் கதாநாயகியை விட அதிக சம்பளம் வேண்டும் என்று கேட்கிறாராம். அதிக சம்பளம் கேட்பதால் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் நடிகையை தங்கள் படங்களில் நடிக்க வைக்க மறுக்கிறார்களாம்.
    Next Story
    ×