search icon
என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    இந்திய தோர் ரசிகர்களுக்கு இந்த பொழுதுபோக்கு ஸ்டைலிஷ் ஆக்சன் படத்தின் புதிய டீசர் இந்திய ரசிகர்களிடையே பெரும் வைரலாகி வருகிறது.
    மார்வல் ஸ்டுடியோஸ் திங்களன்று தோர்: லவ் அண்ட் தண்டர் படத்தின் முதல் டீசரை அறிமுகப்படுத்தியது, இது அவெஞ்சர்ஸ்: எண்ட்கேமின் நிகழ்வுகளுக்குப் பிறகு, உள் அமைதியைக் கண்டறிவதற்கான தோரின் பயணத்தை வெளிப்படுத்துகிறது. முதல் சில தொடக்கக் காட்சிகளில், தோர் தனக்கு பிரியமான நட்சத்திர பெருவெளியில் தியானத்தில் இருப்பதைப் பார்க்கலாம், இதனை கண்ட இந்திய ரசிகர்கள் நமது சொந்த சிவபெருமானைப் போன்ற தோற்றத்துடனும் அதிர்வுகளுடனும், டீசர் இந்தியாவை எப்படி ஈர்க்கிறது என்று ரசிகர்கள் உற்சாகமாக பேசி வருகின்றனர்.

    பிரபலமான தோர்: ரக்னாரோக் படத்தினை இயக்கி, லவ் அண்ட் தண்டர் படத்திற்காக மீண்டும் இயக்குனரின் நாற்காலிக்குத் திரும்பியிருக்கும் இயக்குநர் டைகா வெயிட்டிடியின் அசல் அம்சங்கள் ஆக்‌ஷன் பேக் செய்யப்பட்ட ஸ்டைலான மற்றும் வேடிக்கையான டிரெய்லரில் பிரதிபலிக்கின்றன. மார்வல் படங்களில் இந்தப் படம் இந்தியாவில் புதிய அளவுகோல்களை அமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    மார்வெல் ஸ்டுடியோஸ் 'தோர்: லவ் அண்ட் தண்டர்' ஜூலை 8 ஆம் தேதி இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது.

    தோர்

    ஆஸ்கார் விருது பெற்ற டைகா வெயிட்டிடி இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் இந்திய ரசிகர்களின் விருப்பமான அவெஞ்சர் தோர் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் மற்றும் நட்சத்திர குழும நடிகர்கள்: டெஸ்ஸா தாம்சன், நடாலி போர்ட்மேன் ஆகியோருடன் நடிகர் கிறிஸ்டியன் பேல் மாரவல் திரையுலகிற்குள் அறிமுகமாகிறார்.
    சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ஓ மை டாக் படத்தின் முன்னோட்டம்.
    நடிகர் அருண் விஜய் தற்போது 'ஓ மை டாக்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை ஷரோவ் சண்முகம் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அருண் விஜய், அவரது தந்தை விஜயகுமார் மற்றும் அவரது மகன் அர்னவ் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 தலைமுறையினர் நடித்துள்ளனர்.

    நடிகர் அருண் விஜய் மகன் அர்னவுக்கும் அவன் வளர்க்கும் நாய்க்கும் இடையே உள்ள பாச போராட்டத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. 'ஓ மை டாக்' திரைப்படம் வருகிற ஏப்ரல் 21-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது.
    டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் 'மாயோன்' படத்தின் முன்னோட்டம்.
    டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் திரைப்படம் 'மாயோன்'. இதில் சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்ய, என். கிஷோர் (இயக்கம்), பாடல்களுக்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

    டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் படம் குறித்த புதிய தகவல்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்த தருணத்தில் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து தணிக்கைக்காக சென்றது. படத்தை பார்வையிட்ட தணிக்கை குழுவினர், எந்த இடத்திலும் ஒரு காட்சியைக்கூட நீக்காமல் பாராட்டி 'யு' சான்றிதழை வழங்கினர்.

    பிரம்மாண்டமான பொருட்செலவில் பழங்கால கோவில் ஒன்றை கதைக்களமாகக் கொண்டு உருவாகியிருக்கும் 'மாயோன்' திரைப்படம் ஜூன் மாதம் 17ஆம் தேதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
    ஆம்ரோ சினிமா நிறுவனம் முதல் படைப்பாக ஸ்ரீ பா.ராஜராஜன் வழங்கி அதை திருமதி முத்துலெட்சுமி ராஜராஜன் தயாரிக்கும் RAT படத்தின் முன்னோட்டம்.
    பல துறைகளில் கால் பதித்து வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆம்ரோ கிங்ஸ் நிறுவனம் முதன்முதலாக சினிமாத் துறையில் ஆம்ரோ சினிமா என்ற பெயரில் கால் தடம் பதிக்கிறது. அதன் முதல் படைப்பாக டிஜிட்டல் கந்துவட்டி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக, பெரும் பொருட்செலவில் "RAT" என்கிற படம் உருவாகிறது.

    விஞ்ஞான உலகத்தில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பல நன்மைகள் நடந்தாலும், சில தீமைகளும் அன்றாடம் நடந்தே வருகின்றன. தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு மக்களை மூளைச்சலவை செய்து அவர்களை ஏமாற்றும் நபர்களும் அதிகமாக வளர்ந்து வருகிறார்கள். அப்படி ஏமாற்றப்பட்டவர்கள் அவமானத்தால் தற்கொலைக்குத் தூண்டப்படும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தினமும் செய்திகளைக் கவனித்தாலே போதும் - எப்படியும் ஒவ்வொரு நாளும் ஓரிரண்டு நபர்களாவது இப்படிப் பாதிக்கப்பட்டுக் தற்கொலை செய்துகொள்வது தெரியவரும். இது உண்மையில் ஒரு மிகப்பெரிய சமூகப் பிரச்சினையாகவே மாறிவருகிறது. இப்படிப்பட்ட ஆன்லைன் மோசடியான டிஜிட்டல் கந்து வட்டி மூலம் மூன்று பெண்களுக்கு ஒரு பெரிய துரோகம் நடக்கிறது. அந்தத் துரோகம் அவர்களை எப்படி பாதிக்கிறது? அதன்பின் அவர்களுக்கு என்ன ஆனது? அதிலிருந்து அவர்கள் மீண்டு வந்தார்களா? இல்லையா? என்பதை விரிவாகச் சொல்லும் கதைதான் RAT.

    ஆம்ரோ சினிமா நிறுவனம் முதல் படைப்பாக ஸ்ரீ பா.ராஜராஜன் வழங்கி அதை திருமதி முத்துலெட்சுமி ராஜராஜன் தயாரிக்கிறார். இதை இயக்குபவர் அறிமுக இயக்குநர் ஜோயல் விஜய்.

    இந்தப் படத்தில் கதாநாயகியாக ரேஷ்மா வெங்கட் இவர் சசிகுமார், அட்டகத்தி தினேஷ் படத்தில் நாயகியாக நெட்பிளிக்ஸ்காக ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மற்றும் சாயா தேவி நடிக்கிறார். போஸ் வெங்கட் இயக்கத்தில் வெளிவந்த கன்னிமாடம் படத்தின் நாயகியாக சாயா தேவி நடித்துள்ளார். இவர்களைத் தவிர கன்னிகா ரவி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் சில பிரபல நடிகர் நடிகைகளும் நடிக்கின்றனர்.

    படத்திற்கு ஒளிப்பதிவு சீனிவாஸ் தேவாம்சம். வசனம் கருந்தேள் ராஜேஷ். இசை அஸ்வின் ஹேம்நாத். இப்படத்திற்கு சினேகன் பாடல்களை எழுதுகிறார். படத்தொகுப்பு - இக்னேசியஸ் அஸ்வின். கலை இயக்கம் - முஜிபுர் ரஹ்மான்.

    'RAT' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் சென்னையின் சுற்றுப்புறங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    எமினென்ட் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் டேனியல் கிரிஸ்டோபர் மற்றும் தென்னிலவன் ஆகியோர் தயாரிக்கும் இயல்வது கரவேல் படத்தின் முன்னோட்டம்.
    எமினென்ட் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் டேனியல் கிரிஸ்டோபர் மற்றும் தென்னிலவன் ஆகியோர் தயாரிக்கும் படம் இயல்வது கரவேல். அறிமுக இயக்குனர் எஸ்.எல்.எஸ். ஹென்றி இயக்கும் இந்தப் படத்தில் நடிகர் கதிர் கதாநாயகனாக நடிக்க, குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த யுவலக்ஷ்மி முதல் முறையாக இப்படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார்.

    சென்னையின் பழமை வாய்ந்த கல்லூரியில் நடக்கும் காதல் மற்றும் மாணவர்கள் அரசியலை அடிப்படையாக கொண்ட இந்த படத்தில் கதிருக்கு வில்லனாக மாஸ்டர் மகேந்திரன் நடிக்கிறார்.  

    இதில் ஆச்சரியம் என்னவென்றால் நிஜத்தில் கதிரும் மாஸ்டர் மகேந்திரனும் திக் பிரண்ட்ஸ். இப்படி நிஜத்தில் நண்பர்களாக இருப்பவர்கள் திரையில் எதிரிகளாக மாறுவது படத்தின் மீதான சுவாரசியத்தை இன்னும் அதிகப்படுத்தவே செய்யும். அதிலும் குறிப்பாக மாஸ்டர் மகேந்திரனை இதுவரை பார்த்திராத ஒரு புதிய கோணத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்திலும் இந்தப்படத்தில் பார்க்கலாம்.
    தி ஷோ பிபுள் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும், புதிய திரைப்படத்திற்கு கேப்டன் என தலைப்பிடப்பட்டுள்ளது.
    ஆர்யா மற்றும் இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணியில் வெளியான திரைப்படம் ‘டெடி’. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர்கள் கூட்டணி மீண்டும் புதிய படத்தின் மூலம் இணைந்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி இனிதே நடந்து வரும் நிலையில், இப்படத்திற்கு “கேப்டன்” என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

    இப்படத்தில் நடிகை சிம்ரன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, தியாகராஜன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். 

    “கேப்டன்” படத்திற்கு, டி.இமான் இசையமைக்க, கார்கி பாடல்கள் எழுதியுள்ளார். யுவா ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் ஈ ராகவ் படத்தொகுப்பு செய்துள்ளார். ஆர்.சக்தி சரவணன் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்ற, எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்கம் செய்துள்ளார். 

    இப்படத்தை எழுதி இயக்குகிறார் இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன். நடிகர் ஆர்யாவின் தி ஷோ பிபுள் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.
    டி.டி.சினிமா ஸ்டுடியோ தயாரிப்பில் இயக்குனர் ஏ.எல்.ராஜா இயக்கத்தில் உருவாகும் சூரியனும் சூரியகாந்தியும் படத்தின் முன்னோட்டம்.
    பார்த்திபன், தேவயானி நடிப்பில், 'நினைக்காத நாளில்லை', 'தீக்குச்சி' மற்றும் தெலுங்கில் 'அக்கிரவ்வா' ஆகிய படங்களை தொடர்ந்து, இயக்குனர் ஏ.எல்.ராஜா இயக்கியுள்ள புதிய படம் "சூரியனும் சூரியகாந்தியும்"!

    டி.டி.சினிமா ஸ்டுடியோ சார்பில் உருவாகும் இந்தப் படத்தில் தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி, ஶ்ரீ ஹரி, விக்ரம் சுந்தர் மூவரும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். ரிதி உமையாள் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் சந்தான பாரதி, இயக்குனர் செந்தில் நாதன், குட்டிப்புலி வில்லன் ராஜசிம்மன், இயக்குனர் ஏ.எல்.ராஜா, மங்களநாத குருக்கள், அழகு, சேஷு, மிப்புசாமி, உடுமலை ரவி, சச்சின், ரேவதி, ரிந்து ரவி, திமிரு புடிச்சவன் கமலேஷ், குமார் ஏ.ஆர்.கே.ஆனந்த், செஞ்சி கே.அசோகன், சக்தி சொரூபன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

    கதை, திரைக்கதை, வசனம் எழுதி, ஏ.எல்.ராஜா இயக்குகிறார். ஒளிப்பதிவு திருவாரூர் ராஜா, இசை ஆர்.எஸ்.ரவி பிரியன், எடிட்டிங் வீரசெந்தில்ராஜ், டான்ஸ் மாஸ்டர் மஸ்தான், பாடல்கள் ஏ.எல்.ராஜா, கவிஞர் செங்கதிர் வாணன், சண்டைப் பயிற்சி ஸ்பீடு மோகன், கலை ஜெயசீலன், ஸ்டில்ஸ் சாய் சக்தி, பிஆர்ஓ கோவிந்தராஜ், இணைத் தயாரிப்பு டெய்லி குருஜி, தயாரிப்பு ஏ.எல்.ராஜா.

    வேல் முருகன், முகேஷ், நேகா ஆகியோர் படத்தின் இனிமையான பாடல்களை பாடியுள்ளனர். பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்களால் படம் தொடங்கப்பட்டு, நான்கு பாடல்கள், மூன்று சண்டைக் காட்சிகளுடன், மதுரை, தேனீ, திண்டுக்கல், மைலம், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில், முப்பத்தைந்து நாட்களில் படப்பிடிப்பு நிறைவுப் பெற்று, இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
    கஜசிம்ஹா மேக்கர்ஸ் சார்பில் பிரபுஜித் தயாரித்துள்ள போலாமா ஊர் கோலம் படத்தின் முன்னோட்டம்.
    கால்பந்தாட்ட வீரர்கள் 20 பேர் நடித்துள்ள படம் 'போலாமா ஊர் கோலம்'. இப்படத்தை நாகராஜ் பாய் துரைலிங்கம் இயக்கியுள்ளார். கஜசிம்ஹா மேக்கர்ஸ் சார்பில் பிரபுஜித் தயாரித்துள்ளார்.

    படத்தை இயக்கியிருக்கும் நாகராஜ் பாய் துரைலிங்கம் கலாபிரபு தொடங்கி விக்னேஷ் சிவன், ஹெச். வினோத் வரை பல இயக்குநர்களிடம் பல்வேறுபட்ட படங்களில் துணை, உதவி, இணை இயக்குநராகப் பணிபுரிந்த அனுபவம் பெற்றவர்.

    இதில் கதாநாயகனாக பிரதான கதாபாத்திரம் ஏற்றிருக்கும் பிரபுஜித், ஒரு நடிகராக ஏற்கெனவே சுட்டுப் பிடிக்க உத்தரவு, ஜகமே தந்திரம், பேட்ட,போன்ற தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.

    இதில் நாயகியாக நடித்துள்ள சக்தி மகேந்திரா பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் பயின்றவர். முதன் முதலாக இதில் நாயகியாக நடித்துள்ளார். இவர்கள் தவிர ரவி ஏழுமலை, துளசி, சிவகார்த்திக், சூர்யா, கிருஷ்ணா, ரபிக், ஆதீ இராசன் போன்றோரும் நடித்துள்ளனர்.

    முன்னோட்டம்

    அதுமட்டுமல்ல 1980களில் மாநில, தேசிய அளவில் பங்கெடுத்துப் புகழ்பெற்ற மூத்த கால்பந்தாட்ட வீரர்கள் 20 பேர் படத்தில் நடித்திருக்கிறார்கள். அவர்கள் இன்றும் விளையாடிக் கொண்டிருப்பவர்கள். அவர்களைச் சுற்றி இந்தக் கதை சுழல்கிறது. ஓய்வுபெற்ற கால்பந்தாட்ட வீரர்கள் இப்படத்தில் நடித்து இருப்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இசை சமந்த் நாக். பாடலை அனுராதா எழுதியுள்ளார். பின்னணி இசை ஏ. ஆர். ரஹ்மானின் கேஎம் இசைப்பள்ளியில் கற்பிக்கும் கே.எம்.ரயான் பணியாற்றி இருக்கிறார்.
    தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ் சார்பில் விரைவில் தமிழில் வெளியாக இருக்கும் படம் ‘நிலை மறந்தவன்’ படத்தின் முன்னோட்டம்.
    தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ் சார்பில் விரைவில் தமிழில் வெளியாக இருக்கும் படம் ‘நிலை மறந்தவன்’.. மலையாளத்தில் இளம் முன்னணி நடிகராகவும் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிரட்டல் வில்லனாகவும் நடித்துவரும் நடிகர் பஹத் பாசில் கதாநாயகனாக நடித்துள்ளார். 

    ராஜாராணி, நையாண்டி படங்களில் கதாநாயகியாக நடித்தவரும் பஹத் பாசிலின் மனைவியுமான நடிகை நஸ்ரியா நசீம் ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். 

    வில்லன்களாக இயக்குனர் கவுதம் மேனனும் அவருடன் கோலிசோடா-2 படத்தில் வில்லனாக நடித்த செம்பான் வினோத்தும் நடிக்க, திமிரு படத்தில் நடித்த விநாயகன் இதில் மனதை தொடும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

    ராஜமாணிக்கம், உஸ்தாத் ஹோட்டல் ஆகிய சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவரும் பிரேமம் போன்ற சூப்பர்ஹிட் படங்களை தயாரித்தவருமான பிரபல மலையாள இயக்குனர் அன்வர் ரஷீத் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். 

    மலையாளத்தில் 'ட்ரான்ஸ்' என்கிற பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் தற்போது தமிழில் 'நிலை மறந்தவன்' என்கிற பெயரில் வெளியாக இருக்கிறது.

    விரைவில் வெளியாகவுள்ள இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா வரும் ஏப்-16ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
    2 எம்.பி ரகுநாதன் தயாரிப்பில் ராம்பாலா இயக்கத்தில் உருவாகும் வந்தான் சுட்டான் ரிப்பிட்டு படத்தின் முன்னோட்டம்.
    தரமான கதைகளை தேர்ந்தெடுத்து தயாரிக்கும் தயாரிப்பாளர் "2 MB" ரகுநாதன் பி.எஸ். தற்போது தொடர் வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் "வந்தான் சுட்டான் ரிப்பிட்டு" எனும் புதிய படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. 

    காமெடி கலந்த திகில் படமாக உருவாகும் "வந்தான் சுட்டான் ரிப்பிட்டு" படத்தில் சந்திரமௌலி நாயகனாக நடிக்கின்றார். மீனாக்‌ஷி கோவிந்தராஜன், ரெபா மோனிகா நாயகிகளாக நடிக்கின்றனர். மனோ பாலா, ஊர்வசி, லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

    சந்திரமௌலி - மீனாட்சி கோவிந்தம்
    சந்திரமௌலி - மீனாட்ஷி கோவிந்தராஜன்

    செவிலோ ராஜா ஒளிப்பதிவை மேற்கொள்ள, சந்தோஷ் தயாநிதி மற்றும் கே.எஸ்.பாலசாரங்கன் இப்படத்திற்கு இசையமைக்கின்றனர்.
    ஸ்ரீஅங்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுந்தரவடிவேல் கதை எழுதி இயக்கி தயாரித்திருக்கும் ரீ படத்தின் முன்னோட்டம்.
    முற்றிலும் வணிக மயமாகிப் போய்விட்ட இந்த வாழ்க்கைச் சூழலில் தொழில்நுட்பம் உலகத்தை உள்ளங்கைக்குள் இணைக்கிறது. உலகத் தொடர்புகள் மிக விரைவில் சாத்தியமாகிறது. ஆனால் அருகிலிருக்கும் வீடுகளில் இருப்பவர் யார்? அங்கு என்ன நடக்கிறது என்று தெரிவதில்லை.

    ஆனால் 'ரீ' படத்தின் கதாநாயகி அப்படி இருப்பவள் அல்ல. அவளது பக்கத்து வீட்டிலிருந்து ஒரு சத்தம் வருகிறது. அது அவளை அலைக்கழிக்கிறது. அவளைச் சமநிலை இழக்கச் செய்கிறது.

    என்ன சத்தம் இந்த நேரம்? பேயின் ஒலியா? மனிதனின் வலியா? என்று அறிய முற்படுகிறாள். ஆனால் பக்கத்து வீட்டில் ஒரு நாகரிகமான டாக்டர் குடும்பம் தான் வசிக்கிறது. இந்நிலையில் எங்கிருந்து சத்தம் வருகிறது அதன் பின்னணி என்ன என்று ஆராய முற்படும் போது பல மர்மங்கள் விரிகின்றன. எதிர்பாராத திசையில் சம்பவங்கள் நடக்கின்றன. அவை என்ன? அவற்றைப் பற்றிப் பேசும் படம் தான் ''ரீ'.

    ரீ

    இப்படத்தை சுந்தரவடிவேல் எழுதி இயக்கியுள்ளார். அவரே தனது ஸ்ரீஅங்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். இது கதாநாயகியை மையப்படுத்திய கதை கொண்ட படம். இப்படத்தில் 'ஹர மகாதேவி' படத்தில் நடித்த காயத்ரி ரமா நாயகியாக நடித்துள்ளார். பாலச்சந்தரின் ஆஸ்தான எழுத்தாளர் அனந்துவின் தங்கையின் பேரன் பிரசாந்த் ஸ்ரீனிவாசன் நாயகனாக நடித்துள்ளார். மேலும் பிரசாத், சங்கீதா பால், மணி சங்கர், சுரேஷ் பாபு ஆகியோரும் நடித்துள்ளனர். படத்தின் இயக்குநரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    படத்திற்கு ஒளிப்பதிவு தினேஷ் ஸ்ரீநிவாஸ், பின்னணி இசை ஸ்பர்ஜன் பால், பாடல் இசை ஹரிஜி, எடிட்டிங் கே.ஸ்ரீனிவாஸ்.
    பிளாக் பீப்பிள் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஜி ஜே சத்யா இயக்கத்தில், பிக்பாஸ் சாக்‌ஷி நடிப்பில் உருவாகி வரும் ‘புரவி’ படத்தின் முன்னோட்டம்.
    பிளாக் பீப்பிள் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.சுமதி தயாரிப்பில், ஜி ஜே சத்யா இயக்கத்தில், பிக்பாஸ் சாக்‌ஷி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘புரவி’. பெண்களை மையமாகக் கொண்டு அதிரடி, அரசியல், திரில்லர் பாணியில் உருவாக இருக்கிறது.  

    ‘பிக்பாஸ்’ புகழ் சாக்‌ஷியுடன் இணைந்து சம்பத்ராம், காஜல் பசுபவேட்டி, ஷிமோர், சலீமா, தீபா, அம்மன் சுந்தர் ஆகியோருடன் முக்கிய வேடத்தில் ஆரிஃப், ரிஷி சுப்பிரமணியம், லோகேஷ், சந்தோஷ் டேனியல், சுபாஷ் சந்திரபோஸ், பூஷ்மிஹா, இஷ்மத் பானு, நளினி கணேசன், பர்ஷத் நடிக்கிறார்கள்.  

    கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பு பொறுப்புகளை மணிகுமார், ரகு சேதுராமன் கவனிக்க, கலைக்கு எம்எஸ்பி மதன் பொறுப்பேற்கிறார். பி முகம்மது ஆதிப் இசையமைக்க, பாடல்களை கே வி கார்த்திக் எழுதியிருக்கிறார். நடன அசைவுகளுக்கு சதீஷ் பொறுப்பேற்க, அதிரடிக் காட்சிகளை அசோக் குமார் கவனிக்கிறார்.
    ×