என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
முதல் ஒரு நாள் போட்டி: இந்தியா-ஜிம்பாப்வே நாளை மோதல்
- ஜிம்பாப்வேக்கு எதிராக இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது.
- 6 ஆண்டுகளுக்கு பிறகு இரு அணிகள் இடையே ஒருநாள் போட்டி நடக்கிறது.
ஹராரே:
லோகேஷ் ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது.
இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஹராரேயில் நாளை ( 18-ந்தேதி) நடக்கிறது.
ஜிம்பாப்வேக்கு எதிராக இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 ஒருநாள் போட்டி யிலும் இந்தியாவே வெற்றி பெற்று இருந்தது. 6 ஆண்டுகளுக்கு பிறகு இரு அணிகள் இடையே ஒருநாள் போட்டி நடக்கிறது.
கடைசியாக 2016-ம் ஆண்டு ஜிம்பாப்வே பயணத்தின் போது இந்திய அணி 3 ஒருநாள் போட்டி களிலும் வென்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
காயத்தில் இருந்து குணமடைந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு லோகேஷ் ராகுலும், வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரும் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள். பிப்ரவரி மாதம் அவர்கள் கடைசியாக சர்வதேச போட்டியில் ஆடினார்கள்.
இதனால் இருவரும் இந்த தொடரில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர்.
கேப்டன் ராகுலும், ஷிகர் தவானும் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள். ரோகித் சர்மா , ரிஷப் பண்ட் , வீராட் கோலி, பும்ரா உள்ளிட்ட வீரர்களுக்கு இந்த தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது. சஞ்சு சாம்சன் , இஷான் கிஷன் ஆகியோரில் ஒருவர் விக்கெட் கீப்பராக பணியாற்றுவாவர். வாஷிங்டன் சுந்தர் காயம் அடைந்ததால் அவர் இடத்துக்கு ஷபாஸ் அகமது சேர்க்கப்பட்டு உள்ளார்.
இந்திய அணி சமீபத்திய வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரையும் , 20 ஓவர் தொடரையும் கைப்பற்றி இருந்தது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடும்.
ஜிம்பாப்வே அணி சமீபத்தில் வங்காள தேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ரெஜிஸ் சகபவா தலைமையிலான ஜிம்பாப்வே அணி தனது முழு திறமையை வெளிப்படுத்த கடுமையாக போராடும்.
இரு அணிகளும் நாளை மோதுவது 64-வது ஒரு நாள் போட்டியாகும். இதுவரை நடந்த 63 ஆட்டத்தில் இந்தியா 51-ல், ஜிம்பாப்வே 10ல் வெற்றி பெற்று உள்ளன.
நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 12.45 மணிக்கு தொடங்குகிறது. இரு அணி வீரர்கள் வருமாறு:-
இந்தியா: லோகேஷ் ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், தீபக் ஹூடா, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், சுப்மன் கில், ராகுல் திரிபாதி, அக்சர் படேல், ஷர்துல் தாகூர், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், தீபக் சாஹர், அவேஷ்கான், ஷபாஸ் அகமது
ஜிம்பாப்வே: ரெஜிஸ் சகபவா (கேப்டன்), சிக்கந்தர் ரசா, மில்டன் ஷிம்பா, தடிவான்ஷே, வெஸ்லி, ரியான் பர்ல், தனகா சிவங்கா, பிரட் இவான்ஸ், லுகே ஜாஸ்வே, இன்னோசன்ட் கய்யா, கைய்டினோ, கிளைவ் மடானே, ஜான் மகாரா, முன்யோங்கா, ரிச்சர்டு நகர்வா, விக்டர், டொனால்டு டிரிபினோ.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்