என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
மோடி மீண்டும் பிரதமர் ஆவதை தடுக்க எதை வேண்டுமானாலும் செய்வேன்.. அசாதுதீன் ஒவைசி
- மத்தியில் பிரதமர் மோடிக்கு பதிலாக வேறு யார் ஆட்சியமைக்க வந்தாலும் அவருக்கு ஆதரவு அளிப்போம்.
- நாட்டில் இருந்த சூழல்படி பாஜகாவுக்கு இத்தனை இடங்கள் கூட கிடைத்திருக்க கூடாது.
புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி பா.ஜனதா 240 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 99 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
அந்த வகையில் பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சியை பிடிக்க தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மோடியை பிரதமராகிவிடக்கூடாது என்பதற்காக எதை வேண்டுமாலும் செய்வேன் என ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார்.
இது அவர் கூறியதாவது:-
என்ன நடக்கும், இது நடக்க வாய்ப்பு இருக்கு, நடக்குமா? என்பதை பற்றியெல்லாம் பேச விரும்பலில்லை. ஏற்கனவே நான் கூறியது போல, மத்தியில் பிரதமர் மோடிக்கு பதிலாக வேறு யார் ஆட்சியமைக்க வந்தாலும் அவருக்கு ஆதரவு அளிப்போம். நாட்டில் இருந்த சூழல்படி பாஜகாவுக்கு இத்தனை இடங்கள் கூட கிடைத்திருக்க கூடாது.
நாங்கள் சிறப்பாக வேலை செய்திருந்தால் அவர்களுக்கு 150 இடங்களில்தான் கிடைத்திருக்கும். இதன்மூலம் பாஜக-வை ஆட்சி அமைக்க விடாமல் தடுத்திருக்கலாம். மக்களும் அதைதான் விரும்பினர். ஆனால் அது நடக்காமல் போய்விட்டது.
நாடு முழுவதும் முஸ்லீம் ஓட்டு வங்கி எங்கேயும் இல்லை. ஒருபோதும் இருக்காது என்பது தெளிவாகிறது,