search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஆசிய கோப்பை தோல்வி குறித்து கிரிக்கெட் வாரியம் ஆய்வு- கங்குலி, ஜெய்ஷா பங்கேற்பு
    X

    ஆசிய கோப்பை தோல்வி குறித்து கிரிக்கெட் வாரியம் ஆய்வு- கங்குலி, ஜெய்ஷா பங்கேற்பு

    • உலக கோப்பைக்கு முன்பு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவுடன் இந்தியா 20 ஓவர் தொடரில் இந்திய அணி ஆடுகிறது.
    • உலக கோப்பையில் இந்திய அணி சிறப்பாக விளையாட என்னென்ன முறைகளை கையாள்வது என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    15-வது ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் பாகிஸ்தானை இறுதி போட்டியில் வீழ்த்தி இலங்கை ஆசிய கோப்பையை கைப்பற்றியது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியின் ஆட்டம் ஆசிய கோப்பையில் மோசமாக இருந்தது. பாகிஸ்தான், இலங்கையிடம் தோற்று இறுதி போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.

    பல திறமையான வீரர்கள் இருந்தும் ஆசிய கோப்பையில் ஏற்பட்ட தோல்வி ஏமாற்றம் அளித்தது. இந்த போட்டிக்கு முன்பு சுழற்சி முறையில் பல வீரர்களுக்கு பல்வேறு தொடர்களில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதில் வெற்றி கிடைத்தது.

    ஆனால் முக்கியமான ஆசிய கோப்பையில் இந்திய வீரர்கள் சொதப்பி விட்டனர். இதனால் அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

    20 ஓவர் உலகக்கோப்பை போட்டி அடுத்த மாதம் நடைபெற உள்ளதால் அதற்குள் அணி மீண்டும் நல்ல நிலையை பெறுவது அவசியமாகும். உலகக்கோப்பைக்கு முன்பு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவுடன் இந்தியா 20 ஓவர் தொடரில் இந்திய அணி ஆடுகிறது.

    இந்த நிலையில் ஆசிய கோப்பை போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) ஆய்வு நடத்தியது.

    கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி, செய லாளர் ஜெய்ஷா, தேர்வு குழுவினர் உள்ளிட்டோர் இந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றனர்.

    ஆசிய கோப்பையில் 7 முதல் 15-வது ஓவர் வரை அதாவது மிடில் ஓவரில் பேட்டிங் மிகவும் மெதுவாக இருந்தது. அதிரடியான பேட்டிங் இல்லாததால் ரன் குவிப்பு இல்லாமல் போனது.

    இதுகுறித்து இந்த கூட்டத்தில் கவலை தெரிவிக்கப்பட்டது. உலக கோப்பையில் இந்திய அணி சிறப்பாக விளையாட என்னென்ன முறைகளை கையாள்வது என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    இந்த கூட்டம் தொடர்பாக கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    ஆசிய கோப்பையில் ஏற்பட்ட மோசமான செயல்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால் வெளிப்படையான பல பிரச்சினைகள் உள்ளன. 20 ஓவர் உலக கோப்பையில் அதை மேம்படுத்த வேண்டிய விஷயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

    ஆசிய கோப்பையில் 7 முதல் 15 ஓவர் வரை வீரர்கள் சிறப்பாக ஆடவில்லை. இது குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. அணியின் தேவைக்கேற்ப வீரர்களின் வரிசை மாற்றி அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×