search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    கேப்டன் பதவியில் ரோகித்தால் நீண்ட காலம் இருக்க முடியாது- பாகிஸ்தான் முன்னாள் வீரர் கருத்து
    X

    கேப்டன் பதவியில் ரோகித்தால் நீண்ட காலம் இருக்க முடியாது- பாகிஸ்தான் முன்னாள் வீரர் கருத்து

    • ரோகித் சர்மாவின் பேட்டிங் நிலை சரிவில் இருக்கிறது.
    • ரோகித்சர்மா பலவீனமாகவும், பயத்துடனும் இருக்கிறார் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் கூறினார்.

    இஸ்லாமாபாத்:

    இந்திய கிரிக்கெட் அணியின் 3 நிலைகளிலும் (டெஸ்ட், ஒரு நாள் போட்டி, 20 ஓவர்) ரோகித் சர்மா கேப்டனாக உள்ளார்.

    ஆசிய கோப்பை போட்டியில் ரோகித்சர்மாவின் பேட்டிங் குறித்தும், கேப்டன் பதவி குறித்தும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது ஹபீஸ் கருத்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ரோகித் சர்மாவை போட்டியில் பார்க்கும் போது பலவீனமாக தெரிந்தார். அவர் பயத்துடன் இருக்கிறார். குழப்பமாகவும் காணப்படுகிறார்.

    இதற்கு முன்பு நான் அவரை இப்படி பார்த்ததில்லை. கேப்டன் பதவி ரோகித்சர்மாவுக்கு கூடுதல் அழுத்தத்தை கொடுக்கிறது என்று நினைக்கிறேன். அவர் பல சிரமங்களை சந்தித்து வருகிறார்.

    ரோகித் சர்மாவின் பேட்டிங் நிலை சரிவில் இருக்கிறது. ஐ.பி.எல்.லில் அவரால் ரன்களை குவிக்க முடியவில்லை. கேப்டன் பதவியில் இந்திய அணிக்காக ஆடும் போது கூடுதல் அழுத்தம் ஏற்படுகிறது.

    அவர் பல விஷயங்களை பேசுகிறார். ஆனால் அவருக்கு அது சரியாக அமையவில்லை. பேசுவது எளிது. ஆனால் செய்வது கடினமானது. இது எனது கணிப்பு அல்ல. ரோகித் சர்மா முன்னோக்கி செல்வது கடினம் என்பது எனது கருத்தாகும்.


    கேப்டன் பதவியில் அவரால் நீண்ட காலம் நிலைத்து இருக்க முடியாது.

    ரோகித் சர்மா ரசித்து வெளிப்படுத்தும் ஆட்டத்தை பார்த்து இருக்கிறேன். ஆனால் அது மாதிரியான ஆட்டத்தை அவரால் தற்போது வெளிப்படுத்த இயலவில்லை. பல விஷயங்களை அவர் தவற விட்டுள்ளார். நான் அவருக்காக வருந்துகிறேன். இந்த விஷயத்தில் அவரோ இந்திய சிந்தனையாளர் குழுவோ முடிவு செய்யும் என்று நினைக்கிறேன்.

    இவ்வாறு முகமது ஹபீஸ் கூறியுள்ளார்.

    ஆசிய கோப்பையில் ரோகித் சர்மா பாகிஸ்தானுக்கு எதிராக 18 பந்தில் 12 ரன்னும், ஆங்காங்குக்கு எதிராக 13 பந்தில் 21 ரன்னும் எடுத்தார்.

    Next Story
    ×