search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    2-வது வெற்றி ஆர்வத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- கோவையுடன் இன்று மோதல்
    X

    2-வது வெற்றி ஆர்வத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- கோவையுடன் இன்று மோதல்

    • கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 2 தோல்வி பெற்று உள்ளது.
    • ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி 4 ஆட்டத்தில் 2 வெற்றி, 2 தோல்வி பெற்று உள்ளது.

    கோவை:

    8 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் நடந்து வருகிறது.

    இன்று நடக்கும் 17-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 2 தோல்வி பெற்று உள்ளது.

    நடைபெற்ற ஆட்டங்களில் நெல்லை அணியிடம் சூப்பர் ஓவரிலும், 2-வது ஆட்டத்தில் மதுரையிடம் 4 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்றது.

    திருச்சிக்கு எதிரான 3-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் ஜெகதீசன், ராதாகிருஷ்ணன், சசிதேவ் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.

    பந்து வீச்சில் சாய் கிஷோர், ஹரீஷ்குமார், சித்தார்த், சந்தீவ் வாரியர், அலெக்சாண்டர் ஆகியோர் உள்ளனர்.

    கடந்த ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 203 ரன் குவித்தது. இதனால் அந்த உத்வேகத்துடன் இன்று களம் இறங்கும் அந்த அணி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி 4 ஆட்டத்தில் 2 வெற்றி, 2 தோல்வி பெற்று உள்ளது.

    முதல் 2 ஆட்டத்தில் (திண்டுக்கல், மதுரைக்கு எதிராக) கோவை அணி தோற்றது. கடந்த இரண்டு லீக் ஆட்டத்தில் (சேலம், திருச்சி) வெற்றி பெற்றது.

    அந்த அணியில் கங்கா ஸ்ரீதர் ராஜூ, சாய் சுதர்சன், சுரேஷ்குமார், அபிஷேக் தன்வார், விக்னேஷ், பாலு சூர்யா, அஜித் ராம், திவாகர் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    கோவை அணி 3-வது வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது. இப்போட்டி இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது.

    Next Story
    ×