என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
- இன்று சர்வ மகாளய அமாவாசை.
- வத்ராயிருப்பு சமீபம் சதுரகிரி ஸ்ரீ சுந்தர மகாலிங்க சுவாமி பெருந்திருவிழா.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு புரட்டாசி-16 (புதன்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: அமாவாசை நள்ளிரவு 12.34 மணி வரை பிறகு பிரதமை
நட்சத்திரம்: உத்திரம் நண்பகல் 1.44 மணி வரை பிறகு அஸ்தம்
யோகம்: அமிர்த, மரணயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று சர்வ மகாளய அமாவாசை. ராமேசுவரம், வேதா ரண்யம், திருவள்ளூர், திலதர்ப்பணபுரி, திருவெண்காடு கோவில்களில் பித்ரு தர்ப்பணம் செய்ய நன்று. வத்ராயிருப்பு சமீபம் சதுரகிரி ஸ்ரீ சுந்தர மகாலிங்க சுவாமி பெருந்திருவிழா. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம். தேவக்கோட்டை, மிலட்டூர், திண்டுக்கல் கோவில்களில் ஸ்ரீ விநாயகப் பெருமான் பவனி. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராமர் திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்மருக்கு திருமஞ்சனம். விருதுநகர் ஸ்ரீ விஸ்வநாதர் அபிஷேகம், திருக்கண்ணப்புரம் ஸ்ரீ சவுரிராஜப் பெருமாள் ஸ்ரீ விபீஷணாழ்வாருக்கு நடையழகு காண்பித்தருளல்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-செலவு
ரிஷபம்-நிறைவு
மிதுனம்-வரவு
கடகம்-சுபம்
சிம்மம்-இன்பம்
கன்னி-முயற்சி
துலாம்- சிறப்பு
விருச்சிகம்-ஆதாயம்
தனுசு- பாராட்டு
மகரம்-பக்தி
கும்பம்-தெளிவு
மீனம்-தாமதம்
- பராசக்தியின் பாடல்களை வீடுகளிலும், கோவில்களிலும் பாடி அன்னையை ஆராதித்தல் சிறப்பும், மேன்மையும் தரும்.
- அம்பிகையை சக்தி சொரூபத்தை நினைத்து தியானிப்பதால், சகல பாவங்களும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.
நவராத்திரி பண்டிகையின் போது ஒவ்வொரு ராத்திரிக்கும் ஒவ்வொரு நவதானியமாக ஒன்பது வகை சுண்டல் செய்து கடவுளுக்குப் படைத்து வழிபடுவர்.
நவதானிய வகைகள் வருமாறு:
* கோதுமை
* பச்சரிசி
* துவரை
* பச்சைப்பயறு
* கடலை
* மொச்சை
* எள்ளு
* உளுந்து
* கொள்ளு
9 நாட்கள் நிறைவடைந்து 10 வது நாளான விஜயதசமி அன்று அம்பிகையானவள், ஆக்ரோஷத்துடன் அதர்மங்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டி பக்தர்களுக்கு அருள்பாலிப்பதையே இந்த 10 நாட்களின் விரதம் மற்றும் பூஜை குறிக்கிறது.
அம்பிகையை விக்கிரக ரூபத்திலோ, படங்களிலோ பிரதிஷ்டை செய்து முறைப்படி பூஜை செய்யலாம்.
ஒன்பது நாட்களிலும் தேவிபாகவத பாராயணம் செய்யலாம்.
சுமங்கலிகளையும், கன்னிப் பெண்களையும் இல்லத்திற்கு வரவழைத்து, அவர்களை தேவியாகவே கருதி தாம்பூலம், பழங்கள், வஸ்திரங்கள், வீட்டு உபயோகத்திற்கு தேவையான பொருட்களை அவரவர் வசதிக்கேற்ப அளித்து மகிழலாம்.
இந்த நாட்களில் கொண்டைக்கடலை, கடலைப் பருப்பு உள்ளிட்ட பல்வேறு பயறு வகைகளுடன் விதவிதமான நைவேத்யங்களை நாளுக்கு ஒன்றாக படைத்து வழிபட வேண்டும்.
பராசக்தியின் பாடல்களை வீடுகளிலும், கோவில்களிலும் பாடி அன்னையை ஆராதித்தல் சிறப்பும், மேன்மையும் தரும்.
அம்பிகையை சக்தி சொரூபத்தை நினைத்து தியானிப்பதால், சகல பாவங்களும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.
- நவராத்திரி பூஜை செய்வதால் கடன் நிவாரணம், மன அமைதி பெறலாம். அறிவு பெருகும்.
- இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என மூன்று சக்திகளைப் பெறலாம்.
நவராத்திரி கொலுவில் கீழே உள்ள மூன்று படிகளில் வைக்கப்படும் அரிசி, பருப்பு, பாத்திரம் போன்றவை, தாமச குணத்தைக் குறிக்கும்.
அடுத்த மூன்று படிகளில் வைக்கப்படும் அரசர், ராணி, மந்திரி போன்றவை, ரஜோ குணத்தைக் காட்டும்; மற்ற மூன்று படிகளில் வைக்கப்படும் தெய்வ உருவங்கள் சத்துவ குணத்தை அடையும் வழியை நமக்குக் காட்டுகின்றன.
நவராத்திரி பூஜை பலன்கள்
நவராத்திரியின் ஒன்பது நாளும் துர்க்கையை ஒன்பது வடிவாக வழிபட வேண்டும்.
வந்ஹி துர்கா, வன துர்கா, ஜல துர்கா, ஸ்தூல துர்கா, விஷ்ணு துர்கா, பிரம்ம துர்கா, ருத்ர துர்கா, மகா துர்கா, சூலினி துர்கா போன்ற அன்னைகளின் சக்திகளை ஒவ்வொரு உயிரும் வாழ்வில் பெற்றிருக்கும்.
அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு நவராத்திரி விழாவில் தேவதைகளைச் சிறப்பிக்க வேண்டும்.
நவராத்திரி பூஜை செய்வதால் கடன் நிவாரணம், மன அமைதி பெறலாம். அறிவு பெருகும்.
இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என மூன்று சக்திகளைப் பெறலாம்.
- மூன்றாம் நாளில் சக்தித் தாயை இந்திராணியாக வழிபட வேண்டும். இவளை மாகேந்தரி, சாம்ராஜதாயினி என்றும் அழைப்பர்.
- இவள் இந்திரனின் சக்தி ஆவாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள்.
நூல் சுற்றிய கும்பத்தில் (குடம்) பச்சரிசி, மஞ்சள் கிழங்கு, குங்குமம், ஒரு ரூபாய் காசு, வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை ஆகியவற்றை போட வேண்டும்.
குடுமியுடன் கூடிய மஞ்சள் தடவிய தேங்காயில் சந்தனம், குங்குமம் வைத்து, மாலை சூட்டி அதன் மீது வைக்க வேண்டும். சுற்றிலும் மாவிலைகளை அடுக்க வேண்டும்.
கொலுமேடை முன்பு மேஜையிட்டு அதில் கும்பத்தை வைக்க வேண்டும். அதை அம்பாளாக நினைத்து, தினமும் காலை, மாலையில் பூஜை செய்ய வேண்டும்.
நவராத்திரி வழிபாட்டு முறை
முதலாம் நாள்:
சக்தியை முதல்நாளில் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும்.
தெத்துப்பல் திருவாயும், முண்ட மாலையும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்தவள் என்பதால் சாமுண்டா எனவும் அழைப்பர்.
கோபம் கொண்டவளாக காட்சியளிக்கும் இந்த அன்னையின் கோபம் மற்றவர்களை திருத்தி நல்வழிப்படுத்தவே ஆகும்.
நைவேத்தியம்: சர்க்கரைப் பொங்கல்.
இரண்டாம் நாள்:
இரண்டாம் நாளில் அன்னையை வராகி தேவியாக வழிபட வேண்டும். வராகி (பன்றி) முகமும் தெத்துபற்களும் உடையவள்.
சூலமும் உலக்கையும் ஆயுதங்கள். பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள். தனது தெத்து பற்களால் பூமியை தூக்கியிருப்பவள்.
இவளுக்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு. இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள்.
ஏவல், பில்லி சூனியம், எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபட இவளின் அருளைப் பெறுவது அவசியம்.
நைவேத்தியம்: தயிர் சாதம்.
மூன்றாம் நாள்:
மூன்றாம் நாளில் சக்தித் தாயை இந்திராணியாக வழிபட வேண்டும். இவளை மாகேந்தரி, சாம்ராஜதாயினி என்றும் அழைப்பர்.
இவள் இந்திரனின் சக்தி ஆவாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள்.
ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள்.
விருத்திராசுரனை அழித்தவள். தேவலோகத்தை பரிபாலனம் செய்பவளும் இவளே ஆகும்.
பெரிய பெரிய பதவிகளை அடைய விரும்புபவர்களுக்கு இவளது அருட்பார்வை கட்டாயம் வேண்டும்.
மற்றும் வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க, பதவியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க அருள்புரிபவளும் இந்த அன்னையே ஆவாள்.
நைவேத்தியம்: வெண் பொங்கல்.
நான்காம் நாள்:
சக்தித்தாயை இன்று வைஷ்ணவி தேவியாக கருதி வழிபாடு செய்ய வேண்டும்.
சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை தன் கையில் கொண்டிருப்பவள்.
தீயவற்றை சம்ஹரிப்பவள். இவளின் வாகனம் கருடன் ஆகும்.
நைவேத்தியம்: எலுமிச்சை சாதம்.
ஐந்தாம் நாள்:
ஐந்தாம் நாளில் அன்னையை மகேஸ்வரி தேவியாக கருதி வழிபாடு செய்ய வேண்டும். அன்னை மகேஸ்வரனின் சக்தியாவாள்.
திரிசூலம், பிறைச் சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்தருளி இருப்பவள்.
அளக்க முடியாத பெரும் சரீரம் உடையவள். சர்வ மங்களம் தருபவள். தர்மத்தின் திருவுருவம்.
கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற இந்த அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.
நைவேத்தியம்: புளியோதரை.
ஆறாம் நாள்:
இந்த நாளில் அன்னையை கவுமாரி தேவியாக நினைத்து வழிபடவேண்டும். மயில் வாகனமும், சேவல் கொடியும் கையில் ஏந்தியவள்.
தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள்.
சகல பாவங்களையும் விலக்கி விடுபவள். வீரத்தை தருபவள்.
நைவேத்தியம்: தேங்காய் சாதம்.
ஏழாம் நாள்:
அன்னையை ஏழாம் நாள் அன்று சரஸ்வதி தேவியாக கருதி வழிபட வேண்டும்.
கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு, வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள்.
பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள்.
தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வரியங்களையும் தருபவள்.
இந்த அன்னையை வேண்டினால் அனைத்து செல்வங்களும் வந்து சேரும்.
நைவேத்தியம்: கல்கண்டு சாதம்.
எட்டாம் நாள்:
இன்று அன்னையை நரசிம்மகி ஆக வழிபாடு செய்ய வேண்டும். மனித உடலும், சிம்ம தலையும் உடையவள்.
கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள்.
சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடு பட அன்னையின் அருள் வேண்டும்.
நைவேத்தியம் : சர்க்கரைப் பொங்கல்.
ஒன்பதாம் நாள்:
இன்று அன்னையை பிராக்மி ஆக வழிபட வேண்டும். அன்ன வாகனத்தில் இருப்பவள்.
வாக்கிற்கு அதிபதியாவாள். ஞான சொரூபமானவள். கல்விச் செல்வம் பெற இந்த அன்னையின் அருள் மிகவும் அவசியமாகும்.
நைவேத்தியம்: அக்கார வடிசல்.
- நவராத்திரி வழிபாடு செய்யும் வழிமுறைகளை தேவி பாகவதம் நமக்கு அழகாக சொல்லித் தருகிறது.
- புரட்டாசி அமாவாசை அடுத்த பிரதமை துவங்கி 9 நாட்கள் நவராத்திரி அனுஷ்டிக்க வேண்டும்.
நவராத்திரி வழிபாடு செய்யும் வழிமுறைகளை தேவி பாகவதம் நமக்கு அழகாக சொல்லித் தருகிறது.
புரட்டாசி அமாவாசை அடுத்த பிரதமை துவங்கி 9 நாட்கள் நவராத்திரி அனுஷ்டிக்க வேண்டும்.
நவராத்திரிக்கு முதல் நாள், அதாவது அமாவாசை தினத்திலேயே பூஜைக்கு வேண்டியவற்றை சேகரிக்க வேண்டும்.
அன்றைய தினமே பூஜையறையைக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
பூஜையறையில் பூஜை மண்டபம் அமைப்பதற்கான இடம் மேடு பள்ளம் இல்லாமல் சமதளமாக இருக்க வேண்டும்.
அதை பசுஞ்சாணத்தால் மெழுகி, கோலமிட்டு செம்மண் இட வேண்டும்.
அந்த இடத்தின் நான்கு மூலைகளிலும் 16 முழம் உயரத்துடன் தூண்கள் நட்டு, தோரணங்களால் அலங்கரிக்க வேண்டும்.
தூண்களில் அம்பாள் உருவம் உள்ள சிவப்புக் கொடி கட்டுவது சிறப்பு.
பூஜை இடத்தில் மையமாக நான்கு முழம் நீளஅகலமும், ஒரு முழம் உயரமும் கொண்ட ஒரு பீடம் (மேடை) அமைக்க வேண்டும்.
பிரதமை அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, பூஜைக்குத் தயாராக வேண்டும். (இயன்ற வரையில் தகுந்த அந்தணர்களை வரவழைத்து, வழிபாடுகள் நடத்தி வைக்கச் சொல்வது சிறப்பு).
பூஜை மேடையில் வெண்பட்டு விரித்த ஆசனம் இட்டு, அதன் மீது சங்குசக்கரம், கதை மற்றும் தாமரை ஏந்திய நான்கு கரங்களுடன் திகழும் தேவியின் திருவுருவம் அல்லது 18 கரங்கள் கொண்ட அம்பாளின் திருவடிவத்தை வைத்து தூய ஆடை ஆபரணம், மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும்.
அருகில் அம்பிகைக்கான கலச பூஜைக்காக கலசம் வைத்து அதில் நீர் நிரப்பி, தங்கம், ரத்தினம் ஆகியவற்றைப் போட்டு, மாவிலைகளை மேலே வைத்து மங்கல இசை முழங்க, வேத கோஷம் ஒலிக்க, பூஜையைத் துவங்க வேண்டும்.
''தாயே... உன்னைப் பிரார்த்தித்து நவராத்திரி பூஜை செய்யப் போகிறேன். அது நல்லபடியாக நிறைவேற உன்னருள் வேண்டும்.
பூஜையில் ஏதேனும் குற்றம் குறைகள் இருப்பினும் பொறுத்துக்கொண்டு, உனது அனுக்கிரகத்தை எங்கள் வீட்டில் நிறையச் செய்ய வேண்டும்'' என்று மனதார வேண்டிக்கொண்டு
பூஜிக்க வேண்டும்.
பலவிதமான பழரசங்கள், இளநீர், மாதுளை, வாழை, மா, பலா முதலானவற்றையும், அன்னத்தையும் (சித்ரான்னங்கள்) நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.
இப்படி தினமும் மூன்று கால பூஜை செய்தல் வேண்டும். 9 நாட்களும் விரதம் இருப்பவர்கள் பூஜை முடித்து, ஒரு வேளை உண்ண வேண்டும்.
தரையில் படுத்துத் தூங்க வேண்டும்.
சப்தமி, அஷ்டமி, நவமி ஆகிய மூன்று நாட்கள் விரதமிருந்து வழிபடலாம். அதுவும் இயலவில்லை எனில், அஷ்டமி தினத்தில் அம்பாளை பூஜித்து வழிபட்டு அருள் பெறலாம்.
இந்த தினத்தில்தான் தட்ச யாகத்தை அழித்த அம்பாள், அநேக கோடி யோகினியருடன் தோன்றினாள். அதனால் இந்த தினம் விசேஷமானது.
எவரொருவர் இந்த விரதத்தைத் தொடர்ந்து 9 நாட்கள் கடைப்பிடிக்கிறார்களோ, அவர்களுக்கு தேவர்களுக்கும் கிட்டாத இன்பமும், பிணியின்மையும் வரமாகக் கிட்டும்; சத்ருக்கள் தொல்லையும் நீங்கும்.
சரி... இந்த விரதத்தை சந்தனம், புஷ்பம், தூபதீபம், நைவேத்தியம் கூடிய உபசாரங்களுடன் தான் ஆராதிக்க வேண்டுமா?
இதுபோன்று செய்ய முடியாதவர்களும் இந்த விரதத்தில் பங்குகொள்ள ஏதேனும் வழி உண்டா?
இதற்கு மிக அருமையாக பதில் சொல்கிறது பவிஷ்ய புராணம்.
'இதுபோன்ற உபசாரங்கள் இல்லை என்றாலும், பூவும் நீரும் அளித்தாலே போதும்; அதுவும் இல்லையென்றாலும் உண்மையான பக்தியுடன், 'அம்மா என்னைக் காப்பாற்று' என்று சக்தியை சரணடைந்தாலே போதும்; நாம் கேட்டதை மட்டுமின்றி, நமக்கு நன்மையானவை அனைத்தையும் அளிக்க எல்லாம் வல்ல அன்னை காத்துக் கொண்டிருக்கிறாள்' என்கிறது அந்த புராணம்.
- முதல் படியில் செடி, கொடி, காய், கனி பொம்மைகளை வைக்க வேண்டும். மனிதன் இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
- இரண்டாம் படியில் சங்கால் செய்த பொம்மைகளை வைக்கலாம். நத்தை பொம்மை வைப்பது நலம்.
கொலு வைக்கும் போது 5,7,9 என்ற கணக்கில் படி அமைக்கின்றனர்.
ஒன்பது படிகள் வைப்பது பொருத்தமானதாக இருக்கும். கொலு மேடை படிகளை கிழக்கு அல்லது வடக்கு திசையில் இருக்கும் வகையில் அமைக்க வேண்டும்.
முதல் படியில் செடி, கொடி, காய், கனி பொம்மைகளை வைக்க வேண்டும். மனிதன் இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
இரண்டாம் படியில் சங்கால் செய்த பொம்மைகளை வைக்கலாம். நத்தை பொம்மை வைப்பது நலம்.
எதையும் நிதானமாகச் செய்து உயர் இடத்தை பிடிக்க வேண்டும் என்பது இதன் பொருள்.
மூன்றாம் படியில் பூச்சி வகை பொம்மைகள், கரையான் புற்று, சிலந்தி வலை, களிமண்ணில் செய்த எறும்பு, வண்ணத்துப்பூச்சி (காதிகிராப்ட் கடைகளில் மரத்தால் செய்தது கிடைக்கிறது) பொம்மைகளை வைக்க வேண்டும்.
எறும்பு போல் சுறுசுறுப்பு, கரையான் புற்றையும், சிலந்தி வலையையும் கலைத்தாலும் திரும்பத் திரும்பக் கட்டும் திடமனப்பான்மையை அம்பாளிடம் வேண்டி இந்த பொம்மைகளை அடுக்க வேண்டும்.
நான்காம் படியில் நண்டு,வண்டு, தேனீ பொம்மைகள் இடம்பெற வேண்டும். ஆழமாக சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்பதை இது குறிக்கும்.
ஐந்தாம் படியில் மிருகங்கள், பறவை பொம்மைகள் வைக்க வேண்டும். மிருக குணத்தை விட்டு, பறவைகள் போல் கூடி வாழ வேண்டும் என்பது இதன் பொருள்.
ஆறாம் படியில் மனித பொம்மைகள் வைக்க வேண்டும்.
முதல் ஐந்து படிகளில் வைக்கப்பட்ட பொம்மைகளுக்கு கூறப்பட்ட குணநலன்களைக் கடைபிடித்தால் முழு மனிதன் என்ற அந்தஸ்தைப் பெறலாம்.
ஏழாம் படியில் மகான்கள், முனிவர்களின் பொம்மைகள் வைக்க வேண்டும்.
மனித நிலையில் இருந்து தெய்வீக நிலைக்கு உயர பக்தி அவசியம் என்பதை இது உணர்த்துகிறது.
விவேகானந்தர், ராமகிருஷ்ணர், ராகவேந்திரர் பொம்மை கடைகளில் கிடைக்கிறது.
வியாசர் போன்ற முனிவர்களின் படங்களைப் பார்த்து பொம்மை செய்யலாம். கிடைக்காத பொம்மைகளுக்கு பதிலாக சுவாமி சிலைகள் வைக்கலாம்.
எட்டாம் படியில் நாயன்மார்கள் (அப்பர், சம்பந்தர், சுந்தரர்), ஆழ்வார்கள் (ஆண்டாள்,பெரியாழ்வார்), சூரியன், நாகர் போன்ற தேவர்களின் பொம்மைகளை வைக்க வேண்டும்.
மகானாக உயர்ந்தவர் தவம், யாகம் முதலான உயர்நிலை பக்தியைக் கடைபிடித்து தேவர் அந்தஸ்துக்கு உயர வேண்டுமென்பதை இது காட்டுகிறது.
ஒன்பதாம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் தங்கள் தேவியரான சரஸ்வதி, லட்சுமி, பார்வதியுடன் இருக்கும் வகையிலான சிலைகளை வைத்து, நடுவில் ஆதிபராசக்தி சிலையை சற்று பெரிய அளவில் வைக்க வேண்டும்.
தேவநிலைக்கு சென்ற உயிர்கள் தெய்வநிலையை அடைய வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.
- யாதுமாகி நின்றாய் காளி என்று தேவியே இந்த உலகமாக இருக்கிறாள் என்கிறார் பாரதியார்.
- புல், பூண்டு, புழு, மரம், பசு, புலி, மனிதர் என்று எல்லாவித உயிர்களுமாக விளங்குகிறாள் பராசக்தி.
நவராத்திரி வந்தால் கொலு வைக்க வேண்டும், சுண்டல் நைவேத்யம் செய்ய வேண்டும், வீட்டுக்கு வருபவர்களுக்கு பிரசாதம் கொடுக்க வேண்டும் என்ற விஷயமெல்லாம் நமக்கு அத்துப்படி.
ஆனால், ஏன் கொலு வைக்க வேண்டும் தெரியுமா?
பலவகை பொம்மைகளை அடுக்குகிறோமே, அதற்கான ஆன்மிக காரணத்தை தெரிந்து வைத்திருக்கிறீர்களா? தேவி ஆதிபராசக்தி இப்பூவுலகம் முழுவதிலும் அருளாட்சி செய்கிறாள்.
யாதுமாகி நின்றாய் காளி என்று தேவியே இந்த உலகமாக இருக்கிறாள் என்கிறார் பாரதியார்.
புல், பூண்டு, புழு, மரம், பசு, புலி, மனிதர் என்று எல்லாவித உயிர்களுமாக விளங்குகிறாள் பராசக்தி.
ஆக, அனைத்து உயிர்களிலும், பொருள்களிலும் அவளைக் காண வேண்டும் என்பதே கொலு வைப்பதன் நோக்கம்.
இதனால்தான் கொலுவிற்கு சிவை ஜோடிப்பு என்றும் பெயருண்டு. சிவை என்றால் சக்தி. சக்தியின் வடிவே பொம்மை அலங்காரமாகச் செய்யப்படுகிறது.
எனவே, கொலு வைத்தால் மட்டும் போதாது. எல்லா உயிர்களையும் தன்னுயிர் போலக் கருதும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மொத்தத்தில் இந்தப் பண்டிகை.. முழுக்க முழுக்க பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பண்டிகை.
மாலை வேளையானதும் முருகன், கிருஷ்ணன், ராமன், கணபதி, ராதை, அம்மன் போன்ற வேஷங்களுடன் குழந்தைகளை கொலுவுக்கு அழைத்துச் செல்வார்கள்.
அந்தத் தெய்வங்களே இவர்களின் உருவில் தங்கள் வீட்டுக்கு வருவதாக எண்ணி மகிழ்வார்கள்.
- நாரதர் அறிவுரைப்படி ராமர் கடைப்பிடித்து ராவணனை அழித்து சீதையை மீட்டு வந்தார்.
- கண்ணபிரான், சியமந்தக மணி காரணமாக அடைந்த அபவாதம் இப்பூஜை செய்ததால் நீங்கியது.
நவராத்திரி பூஜையை தெய்வங்களும், தேவர்களும்கூட செய்து பலன் பெற்றுள்ளனர்.
நாரதர் அறிவுரைப்படி ராமர் கடைப்பிடித்து ராவணனை அழித்து சீதையை மீட்டு வந்தார்.
கண்ணபிரான், சியமந்தக மணி காரணமாக அடைந்த அபவாதம் இப்பூஜை செய்ததால் நீங்கியது.
பஞ்சபாண்டவர்கள் பாரதப் போரில் வென்றதும் இந்த பூஜை செய்ததால்தான்.
தீய சக்தி மேலோங்கும்போது காத்திட வேண்டினால் அம்பாள் சண்டிகையாக ஒன்பது கோடி வடிவங்கள் எடுத்து தீமையை அழித்து நன்மை செய்வாள் என தேவி மகாத்மியம் கூறுகிறது.
நவராத்திரியில் 9 நாட்களும் பூஜை விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.
இயலாதவர்கள் அஷ்டமி நாளில் மட்டுமாவது விரதம் இருந்து பூஜை செய்யலாம். விஜயதசமி தினத்தில் அம்பிகை அசுரர்களை அழித்து வெற்றிவாகை சூடினாள்.
ஆணவம் சக்தியாலும், வறுமைசெல்வத்தினாலும், அறியாமைஞானத்தினாலும் வெற்றி கொள்ளப்பட்ட தினம் என்பதால் வீரம், செல்வம், கல்விக்கு உரிய தேவியரான துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என முப்பெரும் தேவியர்க்கும் உரியதாக இதை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.
அன்றைய தினம் புதிதாகத் தொடங்கும் எல்லாக் காரியங்களும் எளிதாக வசமாகும் என்பது ஐதீகம்.
அன்று அபிராமி அந்தாதியினைப் படிப்பது மிகச் சிறந்த பலன் தரும்.
- அம்பிகையை விக்கிரக ரூபத்திலோ, படங்களிலோ பிரதிஷ்டை செய்து முறைப்படி பூஜை செய்யலாம்.
- ஒன்பது நாட்களிலும் தேவிபாகவத பாராயணம் செய்யலாம்.
ஆண்டுக்கு இருமுறை நவராத்திரி கொண்டாடவேண்டும் என்று தேவி புராணம் கூறுகிறது.
சித்திரையில் வரும் நவராத்திரிக்கு வசந்த நவராத்திரி என்றும், புரட்டாசியில் வரும் நவராத்திரிக்கு சாரதா நவராத்திரிஎன்றும் பெயர்.இவ்விரு காலங்களும் எமனுடைய கோரைப்பற்களுக்குச் சமமாகும்.
கோடை, குளிர் என பருவகாலம் மாறும் போது நோய்நொடிகள் பரவும். இந்த ஆபத்திலிருந்து மக்களைக் காக்கும்படி தேவியைப் பூஜிக்கவேண்டும் என்பதால் இவ்விழாவை நடத்தினர்.
ஆனால், கோடையில் நடந்த சித்திரை நவராத்திரி காலப்போக்கில் மறைந்து விட்டது.
புரட்டாசி சாரதா நவராத்திரியே இப்போது வழக்கத்தில் உள்ளது.
9 நாட்கள் நிறைவடைந்து 10 வது நாளான விஜயதசமி அன்று அம்பிகையானவள், ஆக்ரோஷத்துடன் அதர்மங்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டி பக்தர்களுக்கு அருள் பாலிப்பதையே இந்த 10 நாட்களின் விரதம் மற்றும் பூஜை குறிக்கிறது.
அம்பிகையை விக்கிரக ரூபத்திலோ, படங்களிலோ பிரதிஷ்டை செய்து முறைப்படி பூஜை செய்யலாம்.
ஒன்பது நாட்களிலும் தேவிபாகவத பாராயணம் செய்யலாம்.
சுமங்கலிகளையும், கன்னிப் பெண்களையும் இல்லத்திற்கு வரவழைத்து, அவர்களை தேவியாகவே கருதி தாம்பூலம், பழங்கள், வஸ்திரங்கள், வீட்டு உபயோகத்திற்கு தேவையான பொருட்களை அவரவர் வசதிக்கேற்ப அளித்து மகிழலாம்.
இந்த நாட்களில் கொண்டைக்கடலை, கடலைப் பருப்பு உள்ளிட்ட பல்வேறு பயறு வகைகளுடன் விதவிதமான நைவேத்யங்களை நாளுக்கு ஒன்றாக படைத்து வழிபட வேண்டும்.
பராசக்தியின் பாடல்களை வீடுகளிலும், கோவில்களிலும் பாடி அன்னையை ஆராதித்தல் சிறப்பும், மேன்மையும் தரும்.
அம்பிகையை சக்தி சொரூபத்தை நினைத்து தியானிப்பதால், சகல பாவங்களும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.
- நான்காம் நாளில் அருள்பவள், மகாலட்சுமி. இவள் ரோகிணி என்று அழைக்கப்படுகிறாள்.
- ஐந்தாம் நாள் வைஷ்ணவியாகவும் மோகினியாகவும் அலங்கரிப்பர்.
நவராத்திரி நாட்களில் அம்பிகையை வெவ்வேறு வடிவங்களில் அலங்கரித்து வழிபடுவர்.
அம்பிகையை முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும்; அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியின் அம்சமாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் முப்பெரும் சக்தியரை வழிபடுவார்கள்.
நவராத்திரியின் முதல் நாள் தேவியான மகேஸ்வரி பாலா, மது கைடபர் அழிவுக்குக் காரணமான தேவி.
இரண்டாம் நாள் வழிபடப்படும் கவுமாரி, குமாரியாகப் போற்றப்படுகிறாள். அவளே ராஜ ராஜேஸ்வரியாகவும் ஆராதிக்கப்படுகிறாள்.
மூன்றாவது நாளுக்கு உரியவாராகி, கன்யா கல்யாணி என்று அழைக்கப்படுகிறாள்.
நான்காம் நாளில் அருள்பவள், மகாலட்சுமி. இவள் ரோகிணி என்று அழைக்கப்படுகிறாள்.
ஐந்தாம் நாள் வைஷ்ணவியாகவும் மோகினியாகவும் அலங்கரிப்பர்.
ஆறாவது நாளுக்குரிய தேவிவடிவம். இந்திராணி. அன்று சர்ப ராஜ ஆசனத்தில் தேவி அமர்ந்திருக்கும் கோலத்தில் பூஜை செய்வது வழக்கம்.
ஏழாம் நாள், தேவி மகாசரஸ்வதி, சுமங்கலி என அழைக்கப்படுகிறாள்.
எட்டாவது நாள் தேவியானவள் நரசிம்மிதருமி. நரசிம்மி வடிவின் சினம் தணிந்த கோலம் இது.
அன்று அன்னை அன்பே உருவாக அருள்பாலிக்கிறாள்.
ஒன்பதாம் நாள் அம்பிகை, சாமுண்டி மாதா, அம்பு, அங்குசம் தரித்த லலிதா பரமேஸ்வரியாக அன்னையை வழிபடுவது வழக்கம்.
பத்தாம் நாள் அசுரர்களை அழித்து அம்பிகை பெற்ற வெற்றியைக் குறிக்கும் விஜயதசமி.
அன்று அன்னை வெற்றித் திருமகளாக அலங்கரிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறாள்.
இந்த வடிவங்களில் தேவியைத் தரிசித்து வழிபடுவதால் நவநிதிகளும் பெற்று, நீடுழி வாழ்வர் என்பது ஐதிகம்.
- 21 தலைமுறைகளில் உள்ள பித்ருக்களை சென்றடையும்.
- தாகம் தீர எள் தண்ணீர் கொடுத்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
நாளை (புதன்கிழமை) மகாளய அமாவாசை தினம். இந்த அமாவாசை தினம் மற்ற மாதங்களில் வரும் அமாவாசைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. சிறப்பு வாய்ந்தது. ஆற்றல்கள் மிகுந்தது.
நம்மில் பெரும்பாலானவர்கள் ஆடி அமாவாசையையும், தை அமாவாசையையும் மட்டும்தான் சிறப்பான அமாவாசை நாட்களாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் ஆடி அமாவாசை, தை அமாவாசையை விட பலமடங்கு உயர்வானது மகாளய அமாவாசை.
ஆடி, தை அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுத்தால், நீங்கள் யாரை நினைத்து தர்ப்பணம் கொடுக்கிறீர்களோ, அவர்களுக்கு மட்டுமே சென்றடையும்.
ஆனால் மகாளய அமாவாசை தினத்தன்று நீங்கள் கொடுக்கும் திதி அல்லது தர்ப்பணம் மறைந்த முன்னோர்களான உங்கள் மூதாதையர்கள் அனைவருக்கும் போய் சேரும்.
மகாளய பட்சமான 14 நாட்கள் அல்லது மகாளய அமாவாசை நாளில் யார் ஒருவர் பித்ருக்களான நமது மறைந்த முன்னோர்களுக்கு எள், தண்ணீர் வழங்கும் தர்ப்பணத்தை கொடுக்கிறாரோ, அந்த எள்ளும், தண்ணீரும் அவரது முந்தைய 21 தலைமுறைகளில் உள்ள பித்ருக்களை சென்றடையும்.
இந்த ஒரு காரணத்தினால்தான் மற்ற மாதங்களில் வரும் அமாவாசையை விட புரட்டாசி மாத மகாளய அமாவாசை உயர்வானதாக, சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த ஆண்டு மகாளய பட்சம் கடந்த 18-ந்தேதி தொடங்கியது. நாளை (செவ்வாய் கிழமை) மகாளயபட்சத்தின் 14-வது நாள் நிறைவு பெறுகிறது. இந்த 14 நாட்களும் ஒவ்வொருவரும் மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு எள்-தண்ணீர் கொடுத்திருக்க வேண்டும்.
இந்த 14 நாட்களில் கொடுக்கும் எள்-தண்ணீர் தர்ப்பணத்துக்கு ஒவ்வொரு நாள் வரும் திதிக்கு ஏற்ப பலன்கள் கிடைக்கும். மகாளய பட்சத்தின் 14 நாட்கள் சிறப்பை உணர்ந்தவர்கள் இந்த 14 நாட்களை நிச்சயம் தவற விட்டிருக்க மாட்டார்கள்.
ஆனால் குடும்ப சூழ்நிலை, வேலை சூழ்நிலை காரணமாக பெரும்பாலானவர்களுக்கு மகாளய பட்ச நாட்களில் தங்கள் மூதாதையர்களான பித்ருக்களுக்கு எள்-தண்ணீர் தர்ப்பணம் கொடுக்க இயலாமல் போய் இருக்கலாம். வெறுமனே தங்கள் மூதாதையர்களை இந்த நாட்களில் வழிப்பட்டிருப்பார்கள்.
மகாளயபட்ச 14 நாட்களில் பித்ருக்களுக்கு எள்-தண்ணீர் கொடுக்க முடியாதவர்கள் அதற்காக கவலைப்பட வேண்டாம், வருந்த வேண்டாம். இருக்கவே இருக்கிறது மகாளய அமாவாசை தினம். அக்டோபர் 2-ந்தேதி அன்று காலை கடற்கரைகள், நீர்நிலைகள் அல்லது சில ஆலயங்களுக்கு சென்று பித்ருக்களுக்குரிய தர்ப்பணத்தை கொடுக்க வேண்டும்.
இந்த தர்ப்பணம் மகாளயபட்சம் நாட்களிலும் தர்ப்பணம் கொடுத்த பலனை உங்களுக்குப் பெற்றுத் தரும். இது மறைந்த முன்னோர்களுக்கு நாம் செய்ய வேண்டிய மிகப்பெரிய கடமை ஆகும்.
மகாளயபட்ச நாட்கள் மற்றும் மகாளய அமாவாசை நாட்களில் மட்டுமே பித்ரு லோகத்தில் இருந்து விஷ்ணு அனுமதியுடன் பித்ருக்கள் உங்களைத்தேடி வருவார்கள். அந்த சமயத்தில் நீங்கள் அவர்களை நினைத்து தர்ப்பணம், தானம் போன்றவற்றை செய்தால் உங்கள் பித்ருக்கள் மனம் மகிழ்வார்கள்.
நமது வாரிசுகள் நம்மை மறக்கவில்லை. நம்மை நினைத்து வழிபட்டு ஆராதனை செய்கிறார்கள் என்று மனம் முழுக்க மகிழ்ச்சியால் பூரித்துப் போவார்கள்.
அந்த மகிழ்ச்சி காரணமாக நீங்க என்ன வரம் கேட்டாலும் அது உங்களுக்கு எளிதில் கிடைக்க உதவி செய்வார்கள். உங்கள் வாழ்க்கை அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருக்க வழி வகை செய்வார்கள். நீங்கள் கேட்காதவைகளை கூட பித்ருக்கள் தந்து விட்டு செல்வார்கள்.
மகாளய அமாவாசை வழிபாடு தரும் மிகப்பெரிய பலன்கள் இது. எனவே நாளை மறு நாள் மறக்காமல் உங்கள் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுங்கள், அன்னதானம் செய்யுங்கள், ஆடை, குடை தானம் செய்யலாம்.
ஒரு வேளை நீங்கள் இந்த தர்ப்பணத்தை செய்யாவிட்டால் உங்கள் பித்ருக்கள், மிக மிக வேதனைப்படுவார்கள். நமது வாரிசுகள் மட்டும் மூன்று நேரமும் மூக்கு முட்ட நன்றாக சாப்பிடுகிறார்கள். பசியோடும், தாகத்தோடும் இருக்கும் நம்மை மறந்து விட்டார்களே என்று மனதில் கவலை கொள்வார்கள்.
அந்த கவலையும், வேதனையும் தான் அவர்களது வாரிசுகளுக்கு தோஷங்களாக மாறி விடும். இதைத்தான் ஜோதிடர்கள் பித்ரு தோஷம் அல்லது பித்ரு சாபம் என்று சொல்வார்கள்.
இத்தகைய தோஷத்தையும், பாவத்தையும் நீங்களும் உங்கள் வாரிசுகளும் ஏன் சுமக்க வேண்டும்? பித்ருக்களின் பசி, தாகத்தை தீர்க்கும் எள், தண்ணீர் தர்ப்பணத்தை செய்தாலே போதும். இந்த ஆண்டு நாளை மறுநாள் நீங்கள் உங்கள் முன்னோரைப் போற்றி தர்ப்பணம் செய்யுங்கள். அடுத்து வரும் நாட்களில் முன்னேற்றம் தானாக வருவதை கண் கூடாக பார்ப்பீர்கள்.
நம் முன்னோர்கள் காட்டிய வழியில் மகாளய பட்ச பித்ரு தர்ப்பண வழிபாடுகளை செய்ய வேண்டியது நமது முக்கியமான கடமையாகும்.
தற்போதைய கலிகாலம் காரணமாகவோ, என்னவோ பெற்றோர் மறைந்த பிறகு, பெரும்பாலனவர்கள் அவர்களை மறந்து விடுகிறார்கள். சிலர் 3-வது நாள் விசேஷம், 16வது நாள் காரியம் என்று செய்த பிறகு கடமை முடிந்து விட்டதாக நினைக்கிறார்கள்.
பிறகு ஆண்டுக்கு ஒரு தடவை, அவர்கள் இறந்த நாளில், அவர்கள் விரும்பி சாப்பிடும் உணவை சமைத்து அவர்களுக்கு படையல் போட்டு கும்பிடுவார்கள்.
அப்புறம் ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் போட்டோவுக்கு மாலைப் போட்டு கும்பிட்டு விட்டு திருப்திப்பட்டுக் கொள்வார்கள். நாளடைவில் அந்த வழிபாடும் வம்ச வழியாக தொடரப்படாமல் போய்விடுவதுண்டு.
அப்படிப்பட்ட அவர்களுக்கு முன்னோர் வழிபாடு என்பது ஏதோ வருடத்துக்கு ஒரு தடவை வரும் கோவில் கொடை விழா மாதிரி ஆகிவிட்டது.
ஆனால் கண்கண்ட தெய்வங்களான நம் முன்னோர்கள் நம்மை அப்படி விட்டு விடுவது இல்லை. ஆத்மாவாக இருந்து அவர்கள் தினம், தினம் நமக்கு அருளாசி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
நீங்கள் அவர்களை கும்பிட்டாலும் சரி, கும்பிடா விட்டாலும் சரி, நினைத்தாலும் சரி, நினைக்கா விட்டாலும் சரி, அவர்கள் உங்களுக்கு உதவிகள் செய்யத் தவறுவதே இல்லை.
உங்களை, உங்கள் அருகில் இருந்து அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கர்ம வினைகளுக்கு ஏற்ப உங்களுக்கு நல்லது செய்கிறார்கள்.
உங்களுக்கு வரும் கெடுதல்களை அவர்கள்தான் தடுத்து நிறுத்துகிறார்கள். அந்த புண்ணிய ஆத்மாக்களின் இந்த புனித செயலால்தான், அவர்களது குடும்பம் இந்த பூ உலகில் தழைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறது.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், ஒரு குடும்பத்தையும், அதை சார்ந்துள்ள குலத்தையும் காப்பது மறைந்த முன்னோர்கள்தான்.
நாம் கும்பிடாமலே நம் பித்ருக்கள் நமக்கு உதவிகள் செய்கிறார்கள் என்றால், நாம் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சிரார்த்தம் செய்து வணங்கினால் நம்மை எந்த அளவுக்கு அவர்கள் காப்பாற்றுவார்கள் என்று சொல்ல வேண்டியதில்லை.
நமக்கு சாப்பாடு தர மாட்டார்களா? தாகம் தீர தண்ணீர் தர மாட்டார்களா? நல்ல உடை தரமாட்டார்களா? என்று ஏக்கத்தோடு நம்மைப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.
நம்மை ஆசை, ஆசையாக வளர்த்து, நல்ல நிலைக்கு ஆளாக்கி விட்ட மறைந்த அந்த முன்னோர்களை நாம் அப்படி தவிக்க விடலாமா?
அவர்களை பார்க்க வைத்து விட்டு, நாம் மட்டும் வகை, வகையாக சாப்பிடலாமா?
அவர்களது பசியையும், தாகத்தையும், ஏக்கத்தையும் தணிக்க வேண்டியது நம் கடமை அல்லவா?
மறைந்த அம்மாவும், அப்பாவும் நாம் ஏதாவது தர மாட்டோமா என்று காத்துக் கொண்டிருக்கும் போது, அவர்களை அப்படியே விட்டு விட்டால் அவர்கள் மனம் என்ன பாடுபடும்.
அவர்கள் மீண்டும் நம் வீட்டில் இருந்து, 15 நாள் மகாளய அமாவாசை தினம் முடிந்த பிறகு பித்ருலோகத்துக்கு புறப்பட்டு போகும் போது, பசியும் பட்டினியுமாக செல்ல நேரிட்டால் அவர்கள் வேதனையின் உச்சத்தில் இருப்பார்கள்.
நம்ம மகன், மகள் நம்மை கவனிக்கவே இல்லையே என்று கோபத்தில் சாபம் கூட கொடுக்க வாய்ப்புள்ளது. இதுதான் பாவமாகவும், தோஷமாகவும் மாறிவிடும்.
இத்தகைய நிலை ஏற்பட விடலாமா? விடக் கூடாது.
அதற்கு நாம் மகாளய பட்ச அமாவாசை தினத்தன்று கண்டிப்பாக மறைந்த நம் முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும். உரிய வகையில் அவர்கள் தாகம் தீர எள் தண்ணீர் கொடுத்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
முக்கியமாக அத்தியாவசியப் பொருட்களை தானம் கொடுக்க வேண்டும். அன்னதானம் செய்ய வேண்டும். நீங்கள் செய்யும் அன்னதானம் உங்கள் முன்னோர்களின் ஆத்மா பலத்தை அதிகரிக்க செய்யும் என்பதை மறந்து விடாதீர்கள்.
இந்த தான-தர்மம் மூலம் மகிழ்ச்சி அடையும் உங்கள் முன்னோர்கள் மிகவும் திருப்தியுடன் உங்கள் வீட்டில் இருந்து பித்ருலோகத்துக்கு கிளம்பிச் செல்வார்கள். அவர்கள் மன நிறைவுடன் வாழ்த்த, வாழ்த்த உங்கள் வாழ்க்கையில் மேம்பாடு உண்டாகும்.
நாளை அமாவாசையில் பெரிதாக யார் கண்ணுக்கும் புலப்படாத இடத்தில் ஒரு மரத்தின் அடியில் மூன்று இலைகளைப் போட்டு, அதில் உணவை வைத்து, முதல் இலை தங்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கும், இரண்டாம் இலை இந்த உலகத்தில் பிறந்த மகான்கள், முனிவர்கள், ரிஷிகளுக்காகவும், மூன்றாவது இலை இந்த உலகத்தில் பிறந்து ஈம காரியம் செய்ய முடியாத ஆன்மாக்களுக்காகவும் என்று மனதாரக் கூறி சிறிய வழிபாட்டை மேற்கொள்ளும்போது, இவர்களின் வாழ்வில் அமைந்துள்ள அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும். உலகத்தில் வசிக்கும் எல்லா ஜீவன்களும் உறுதுணையாகவும், வழிகாட்டியாகவும் இருந்து நன்மையளிக்கும்.
- 3-ந்தேதி நவராத்திரி ஆரம்பம்.
- நாளை மகாளய அமாவாசை.
1-ந்தேதி (செவ்வாய்)
* சுவாமிமலை முருகப்பெருமானுக்கு ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்
* திருமயம் ஆண்டாள் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
2-ந்தேதி (புதன்)
* மகாளய அமாவாசை.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.
* திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.
* மேல்நோக்கு நாள்.
3-ந்தேதி (வியாழன்)
* நவராத்திரி ஆரம்பம்.
* குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.
* சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைர வேல் தரிசனம்.
* சமநோக்கு நாள்.
4-ந்தேதி (வெள்ளி)
* திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
* திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு.
* மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி, மச்ச அவதார காட்சி.
* சமநோக்கு நாள்.
5-ந்தேதி (சனி)
* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் காலை வெள்ளி பல்லக்கில் பவனி.
* மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள், கிருஷ்ண அவதாரக் காட்சி.
* திருவில்லிபுத்தூர் அருகில் உள்ள திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் கோவிலில் கருட சேவை.
* சமநோக்கு நாள்.
6-ந்தேதி (ஞாயிறு)
* மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள், இரவு அனுமன் வாகனத்தில் பவனி.
* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் காலை வெள்ளிப் பல்லக்கிலும், இரவு வெள்ளி சேஷ வாகனத்திலும் வீதி உலா.
* குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் மயில் வாகனத்தில் புறப்பாடு.
7-ந்தேதி (திங்கள்)
* கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் பவனி.
* திருப்பதி ஏழுமலையான் காலை கற்பக விருட்ச வாகனத்தில் வீதி உலா.
* காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி சிறப்பு அலங்காரம்.
* சமநோக்கு நாள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்