search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும்.
    • அமாவாசை விரதமிருப்பவர் காலையில் சாப்பிடக் கூடாது.

    ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று, இறந்த நமது முன்னோர்களை வேண்டி வணங்கும் விரதம் அமாவாசை விரதமாகும். அமாவாசை விரதங்களில், ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மாதம் வரக்கூடிய மகாளய அமாவாசை ஆகிய மூன்றும் விசேஷமானவை.

    மகாளய அமாவாசையன்று, காலையில் எழுந்து குளித்து விட்டு இறந்த முன்னோர்களுக்குத் தர்ப்ப ணம் செய்ய வேண்டும். முறைப்படி தர்ப்பணம் செய்து வைக்கும் அந்தணர்கள், ஆற்றின் கரையோரங்களில், குளக்கரைகளில், கடற்கரை யோரங்களில் இருப்பார்கள்.

    அவர்கள் மூலம் தர்ப்பணம் செய்யலாம். அதன்பின்னர், முதியவர்களுக்கு பெரிய அளவில் இல்லாவிட்டாலும், சிலருக்காவது அன்னதானம் வழங்க வேண்டும்.

    அமாவாசையன்று, வீட்டில் பெண்கள் குளித்து காலை உணவு உண்ணாமல் இறந்த முன்னோர்களுக்குப் பிடித்தமான உணவுகளையும், பதார்த்தங்களையும் செய்வார்கள். அன்றைய சமையலில் எல்லாவிதமான காய்கறிகளும் இடம் பெற்றிருக்கும்.

    விரதம் இருப்பவர்கள், காலையில் எதுவும் சாப்பிடாமல் இருந்து, பின் எத்தனை நபர்களை வணங்க வேண்டுமோ, அத்தனை இலைகள் போட்டு, சமைத்த எல்லா உணவுகளையும், பதார்த்தங்களையும் படைத்து, துணிகள் வைத்து படைப்பவர்கள் துணிகளையும் வைத்து, அகல் விளக்கேற்றி வைத்து, தூப தீபம் காட்டி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும்.

    பிறகு, படைத்த எல்லா உணவு, பதார்த்தங்களையும் தனித்தனியாக இலையோடு எடுத்து, வீட்டிற்கு வெளியில், உயரமான இடத்தில் வைக்க வேண்டும். தரையிலோ, எட்டும் இடங்களிலோ வைத்தால் நாய்கள், பன்றிகள் தின்றுவிடும்.

    முன்னோர்களுக்குப் படைத்து வைப்பவைகளை, காக்கைகள் (பித்ருக்கள் என்று கூறுவதால்) மட்டுமே உண்ண வேண்டும் என்பதால்தான் உயரமான இடங்களில் வைக்க வேண்டும்.

    காக்கைகள் உண்டபிறகு, வீட்டிற்குள் முறைப்படி பரிமாறப்பட்ட இலைகளில் உறவுமுறைகளுக்கேற்ப உள்ளவர்கள் அமர்ந்து சாப்பிட வேண்டும். இறந்தவர்களுக்கு படைத்த துணிகளை அவர்களுக்கு பிரியமானவர்கள் பயன்படுத்த வேண்டுமேயொழிய, பிறருக்கு தானமாகத் தரக்கூடாது.

    அமாவாசை விரதமிருப்பவர் காலையில் சாப்பிடக் கூடாது. பகலில் சாப்பிடலாம். இரவில் பால், பழம் அல்லது சிற்றுண்டிகள் ஏதாவது சாப்பிடலாம். முறைப்படி அமாவாசை விரதமிருந்து முன்னோர்களை வழிபடுபவர்களுக்கு அவர்களின் ஆசியும், அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    • இன்று விஷசஸ்ரஹத பிதுர் மகாளயம் கிருஷ்ண அலங்கார சதுர்த்தசி.
    • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு புரட்டாசி-15 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சதுர்த்தசி இரவு 10.34 மணி வரை பிறகு அமாவாசை

    நட்சத்திரம்: பூரம் காலை 11.15 மணி வரை பிறகு உத்திரம்

    யோகம்: சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று விஷசஸ்ரஹத பிதுர் மகாளயம் கிருஷ்ண அலங்கார சதுர்த்தசி. சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூ மாலை சூடியருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமான் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கும் திருமஞ்சன சேவை. திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீஸ்வரர் கோவில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு சம்ஹார அர்ச்சனை. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருசெங்காட்டங்குடி ஸ்ரீ உத்திரபதீஸ்வரர் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. குரங்கனி ஸ்ரீ முத்துமாலையம்மன் பவனி.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வெற்றி

    ரிஷபம்-நலம்

    மிதுனம்-சுகம்

    கடகம்-வாழ்வு

    சிம்மம்-பொறுமை

    கன்னி-மகிழ்ச்சி

    துலாம்- உயர்வு

    விருச்சிகம்-உற்சாகம்

    தனுசு- ஆதரவு

    மகரம்-சாந்தம்

    கும்பம்-நன்மை

    மீனம்-உதவி

    • அன்று அன்னையை ப்ராஹ்மி ஆக வழிபடவேண்டும். அன்ன வாகனத்தில் இருப்பவள்.
    • வாக்கிற்கு அதிபதியாவாள். ஞானசொரூபமானவள். கல்விச்செல்வம் பெற அன்னையின் அருள் அவசியமாகும்.

    அன்று அன்னையை ப்ராஹ்மி ஆக வழிபடவேண்டும். அன்ன வாகனத்தில் இருப்பவள்.

    வாக்கிற்கு அதிபதியாவாள். ஞானசொரூபமானவள். கல்விச்செல்வம் பெற அன்னையின் அருள் அவசியமாகும்.

    ஒன்பதாம் நாள் நெய்வேத்தியம்:- அக்கர வடசல், சுண்டல்

    இப்படி நாம் அனைவரும் மகிழ்வாக நவராத்திரிப் பண்டிகை கொண்டாடுவதற்கு பின்னணியில் ஒரு புராணக்கதை உள்ளது.

    அசுரர்களை அழிக்க அம்பிகை அவதரித்ததும், தேவர்கள் அனைவரும் தங்களுடைய ஆயுதங்களைத் தேவியிடம் ஒப்படைத்துவிட்டனர்.

    அம்பாளான பராசக்தி அசுரர்களுடன் சண்டையிட்ட பொழுது தேவர்கள் பொம்மை மாதிரி நின்று கொண்டிருந்ததைக் காட்டத்தான் பொம்மை கொலு வைப்பதாக ஐதிகம்.

    • கன்னியா பூஜை: 9 வயது சிறுமிக்கு துர்கை என்ற திருநாமம் கொண்ட திருக்கோலம் அமைத்து பூஜிக்க வேண்டும்.
    • சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள்வேண்டும்.

    அன்று அன்னையை நரசிம்ஹி ஆக வழிபடவேண்டும்.

    மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள்.

    கன்னியா பூஜை: 9 வயது சிறுமிக்கு துர்கை என்ற திருநாமம் கொண்ட திருக்கோலம் அமைத்து பூஜிக்க வேண்டும்.

    சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள்வேண்டும்.

    எட்டாம் நாளுக்கான பலன்கள்: சகல தோஷங்களும் நீங்கி வாழ்வில் நம்பிக்கையும் தைரியமும் சேரும்.

    எட்டாம் நாள் நெய்வேத்தியம்: சர்க்கரைப் பொங்கல்.

    • பூ மற்றும் மண் கொண்டு திட்டாணி கோலம் போட்டு, தும்பை பூவால் அர்ச்சனை செய்து, தாழம்பூவால் அலங்கரிக்க வேண்டும்.
    • நைவேத்தியமாக எலுமிச்சை சாதம் வைத்து வணங்க வேண்டும். பிலஹரி ராகத்தில் பாடி அம்மனை ஆராதிக்க வேண்டும்.

    இன்று அம்மன் ஷாம்பவி அல்லது ஷம்புபத்தினி அல்லது சரஸ்வதி என்ற ரூபத்தில் அருள்புரிகிறாள்.

    கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள்.

    பூ மற்றும் மண் கொண்டு திட்டாணி கோலம் போட்டு, தும்பை பூவால் அர்ச்சனை செய்து, தாழம்பூவால் அலங்கரிக்க வேண்டும்.

    நைவேத்தியமாக எலுமிச்சை சாதம் வைத்து வணங்க வேண்டும். பிலஹரி ராகத்தில் பாடி அம்மனை ஆராதிக்க வேண்டும்.

    இந்த முறையில் அம்மனை வணங்கினால் கலைகளில் தேர்ச்சி உருவாகும். பதவி உயர்வு வரும். தேக அழகு கூடும்.

    அரசு காரியங்களில் வெற்றி கிடைக்கும். நம்மிடம் இருக்கும் தீய எண்ணங்கள் எல்லாம் விலகி நல்ல எண்ணங்கள் உருவாகும்.

    தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வரியங்களையும் தருபவள் அன்னை.

    ஏழாம் நாள் நெய்வேத்தியம்:- கற்கண்டு சாதம்.

    • அம்பிகையை இந்திராணியாக அலங்கரித்து வழிபட வேண்டும். இவளை வழிபட்டால் சுகபோக வாழ்வு கிடைக்கும்.
    • மதுரை மீனாட்சி சித்தர் திருக்கோலத்தில் காட்சியளிக்கிறாள்.

    அம்பிகையை இந்திராணியாக அலங்கரித்து வழிபட வேண்டும். இவளை வழிபட்டால் சுகபோக வாழ்வு கிடைக்கும்.

    மதுரை மீனாட்சி சித்தர் திருக்கோலத்தில் காட்சியளிக்கிறாள்.

    அபிஷேக பாண்டியன் ஆட்சிக் காலம்.

    ஒரு பொங்கலன்று மன்னன் கோவிலை வலம் வந்து கொண்டிருந்தான். பிரகாரத்தில் சித்தர் அமர்ந்திருந்தார்.

    அவரை சோதிக்க விரும்பிய மன்னன், ஒரு கரும்பை கொடுத்து, சித்தரே! நீர் சக்தி மிக்கவர் என்று எல்லாரும் சொல்கிறார்கள்.

    அதை நிரூபிக்க, இங்குள்ள கல் யானையிடம் கரும்பைக் கொடும்! அது அதை தின்னுமானால், நீர் எல்லாம் வல்ல சித்தர் தான், என்று சவால் விட்டான்.

    புன்னகைத்த சித்தர் கல்யானையை பார்க்க, யானையும் துதிக்கையை அசைத்து கரும்பை சுவைத்தது.

    அவரது சக்தியறிந்த மன்னன், "ஐயனே! மன்னித்து விடுங்கள். நீண்டகாலம் பிள்ளை இன்றி வாடும் என் குறையை போக்க வேண்டும் என்று பணிந்தான்.

    சித்தரும்,"விரைவில் மகப்பேறு வாய்க்கும், என சொல்லி மறைந்தார்.

    சித்தராக வந்தது சொக்கநாதர் என உணர்ந்தான். சித்தர் அலங்காரத்தை தரிசித்தால் குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு வாய்க்கும்.

    நைவேத்யம்: வெண்பொங்கல்

    தூவ வேண்டிய மலர்: பிச்சி, செவ்வந்தி

    • அம்பிகையை வைஷ்ணவியாக அலங்கரிக்க வேண்டும். இவளை வழிபட்டால் செல்வ வளம் பெருகும்.
    • மதுரை மீனாட்சியம்மன் பிட்டுக்கு மண்சுமந்த கோலத்தில் காட்சி தருகிறாள்.

    அம்பிகையை வைஷ்ணவியாக அலங்கரிக்க வேண்டும். இவளை வழிபட்டால் செல்வ வளம் பெருகும்.

    மதுரை மீனாட்சியம்மன் பிட்டுக்கு மண்சுமந்த கோலத்தில் காட்சி தருகிறாள்.

    அரிமர்த்தனபாண்டியன் ஆட்சி செய்தபோது, பெருமழை பெய்து வைகையில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

    கரையை அடைக்க வீட்டுக்கு ஒரு ஆள் அனுப்புமாறு மன்னர் உத்தரவிட்டார்.

    சிவ பக்தையான வந்தி என்பவள், பிட்டு விற்று பிழைத்து வந்தாள். அவளுக்கு கணவரோ, பிள்ளையோ இல்லை.

    தன் பங்குக்கு யாரை அனுப்புவது என்று தவித்தாள். சிவனே கூலியாளாக தோன்றி, வந்திக்கு உதவ முன் வந்தார்.

    கூலியாக பிட்டை வாங்கி சாப்பிட்டு விட்டு, கரையை அடைக்காமல் உறங்கத் தொடங்கினார்.

    இதை அறிந்த மன்னன் பிரம்பால் சிவனை அடிக்க, அந்த அடி அனைவரின் உடம்பிலும் விழுந்தது.

    சிவன் ஒரு கூடை மண்ணைக் கரையில் போட்டதும், வெள்ளம் கட்டுப்பட்டது. இக்கோலத்தை தரிசித்தால் மனக்கவலை விரைவில் நீங்கும்.

    நைவேத்யம்: கல்கண்டு சாதம்

    தூவ வேண்டிய மலர்: பிச்சிப்பூ

    • அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்கு செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் உண்டாகும்.
    • தொழிலில் லாபம் பெருகும். மதுரை மீனாட்சியம்மன் நாரைக்கு முக்தி கொடுத்த அலங்காரத்தில் காட்சியளிக்கிறாள்.

    அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்கு செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் உண்டாகும்.

    தொழிலில் லாபம் பெருகும். மதுரை மீனாட்சியம்மன் நாரைக்கு முக்தி கொடுத்த அலங்காரத்தில் காட்சியளிக்கிறாள்.

    சத்தியன் என்னும் தவமுனிவர் ஒருவர் இருந்தார். அவர் தினமும் அச்சோதீர்த்தம் என்னும் குளத்தில் நீராடி, சிவனை தியானத்து வந்தார்.

    அங்கொரு நாரை ஒன்று வசித்து வந்தது. சத்திய முனிவரும், மற்ற தவசீலர்களும் மதுரையின் பெருமையை பேசிக் கொண்டிருந்தனர்.

    அதைக்கேட்ட நாரைக்கும் சிவபக்தி உண்டானது. மதுரை கோவிலுக்கு வந்து பொற்றாமரைக்குளத்தில் நீராடி சிவனை வழிபட்டது.

    பதினாறாம் நாள் நாரைக்கு காட்சியளித்த சிவன், நாரைக்கு முக்தியளித்தார்.

    இக்கோலத்தை தரிசித்தால் சிவனருளால் பிறவாத நிலை உண்டாகும்.

    நைவேத்யம்: புளியோதரை

    தூவும் மலர்கள்: செந்தாமரை, ரோஜா

    • அம்பிகையை வராஹியாக அலங்கரிக்க வேண்டும்.
    • பன்றி முகம் கொண்ட இவளை வழிபட்டால் பகைவர் பயம் நீங்கும்.

    அம்பிகையை வராஹியாக அலங்கரிக்க வேண்டும்.

    பன்றி முகம் கொண்ட இவளை வழிபட்டால் பகைவர் பயம் நீங்கும். குலோத்துங்க பாண்டியன் ஆட்சிக் காலத்தில், முதியவர் ஒருவர் வாள் வித்தை கற்பித்து வந்தார்.

    அவரிடம் படித்த சித்தன் என்ற மாணவன், தானும் வித்தை கற்பிக்கும் ஆசிரியரானான்.

    ஒழுக்கமற்ற அவன் ஒருநாள், குருபத்தினியின், கையைப் பிடித்து இழுத்தான்.

    அவளோ, சித்தனை வெளியே தள்ளி கதவைத் தாழிட்டுக் கொண்டாள். சிவனிடம் முறையிட்டு அழுதாள். சிவன் அவளைக் காக்க, குருவின் வடிவில் புறப்பட்டார்.

    சித்தனுடன் வாள்போர் புரிந்து அவனுடைய அங்கங்களை வெட்டி வீழ்த்தினார்.

    இதை அறிந்த மாணிக்கமாலை, "தன் கணவர் அவ்வாறு செய்ய வாய்ப்பில்லை.

    அவர் கோவிலுக்குச் சென்றிருக்கிறார், என மறுத்தாள்.

    வழிபாடு முடித்து வந்த குரு, இந்த அற்புதத்தை நிகழ்த்தியது சிவனே என உணர்ந்தார்.

    மன்னன் அத்தம்பதியை யானை மீது அமர்த்தி நகரை வலம் வரச் செய்தான்.

    மதுரை மீனாட்சி பாணனுக்கு அங்கம் வெட்டிய கோலத்தில் காட்சியளிக்கிறாள்.

    இதை தரிசித்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.

    நைவேத்யம்: எலுமிச்சை சாதம்

    தூவ வேண்டிய மலர்கள்: மல்லிகை, செவ்வந்தி

    • அம்பிகையை மயில்வாகனம், சேவல் கொடியுடன் அலங்கரிக்க வேண்டும்.
    • இவளை கவுமாரி என்றும், குமார கணநாதாம்பா என்றும் அழைப்பர். பக்தர்களின் பாவத்தைப் போக்கி தைரியத்தை அளிப்பவள் இவள்.

    அம்பிகையை மயில்வாகனம், சேவல் கொடியுடன் அலங்கரிக்க வேண்டும்.

    இவளை கவுமாரி என்றும், குமார கணநாதாம்பா என்றும் அழைப்பர். பக்தர்களின் பாவத்தைப் போக்கி தைரியத்தை அளிப்பவள் இவள்.

    மதுரை மீனாட்சியம்மன் கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலையில் காட்சி தருகிறாள். மதுரையை ஆட்சி செய்த சுகுணபாண்டியன், மறுபிறவியில் கருங்குருவியாகப் பிறந்தான்.

    மற்ற பறவைகள் துன்புறுத்தியதால் காட்டிற்கு பறந்த அக்குருவி, ஒரு மரத்தில் தங்கியது.

    அங்கு வந்த சிவபக்தர் ஒருவர், சிவநாமத்தை ஜெபிக்க கேட்ட குருவி ஞானம் அடைந்தது. குருவியும் மதுரை கோவிலுக்கு வந்து, குளத்தில் நீராடி ஈசனை வழிபட்டது.

    சிவனும் குருவிக்கு மந்திர உபதேசம் செய்தருளி, குருவியினத்தில் வலிமை மிக்க வலியன் குருவியாக இருக்க வரமளித்தார்.

    இக்கோலத்தை தரிசித்தால் மன வலிமை உண்டாகும்.

    நைவேத்யம்: தயிர் சாதம்

    தூவ வேண்டிய மலர்: முல்லை

    • நவராத்திரியின் முதல்நாளில் அம்பாளுக்கு மகேஸ்வரி பாலா என்று பெயர் சூட்டி வணங்க வேண்டும்.
    • மது, கைடபர் ஆகிய அசுரர்களின் அழிவுக்கு காரணமான இவளை, இந்நாளில் சாமுண்டியாக அலங்காரம் செய்ய வேண்டும்.

    நவராத்திரியின் முதல்நாளில் அம்பாளுக்கு மகேஸ்வரி பாலா என்று பெயர் சூட்டி வணங்க வேண்டும்.

    மது, கைடபர் ஆகிய அசுரர்களின் அழிவுக்கு காரணமான இவளை, இந்நாளில் சாமுண்டியாக அலங்காரம் செய்ய வேண்டும்.

    மதுரை மீனாட்சி அன்றைய நாளில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சி தருகிறாள்.

    அண்ட சராசரத்துக்கும் அம்பிகையே தலைவி. இதை அண்டம்+ சரம்+அசரம் என்று பிரிக்க வேண்டும்.

    அண்டம் என்றால் உலகம். சரம் என்றால் அசைகின்ற பொருட்கள். அசரம் என்றால் அசையாத பொருட்கள்.

    ஆம்.... அன்னை ராஜராஜேஸ்வரி, இந்த உலகிலுள்ள அசைகின்ற, அசையாப் பொருட்களுக்கெல்லாம் அதிபதியாக இருந்து அருளாட்சி நடத்துவதைக் குறிக்கும் வகையில் இந்த அலங்காரம் செய்யப்படுகிறது.

    இக்கோலத்தை தரிசித்தால் ராஜபோக வாழ்வு கிடைக்கும்.

    நைவேத்யம்: சர்க்கரைப் பொங்கல்

    தூவும் மலர்கள்: மல்லிகை, வில்வம்

    • மக்களின் துன்பம் கண்டு சகியாத அவளும் மிக அழகான மங்கையின் வடிவம் கொண்டு பூமிக்கு வந்தாள்.
    • அவளுடைய அழகுக்கு யாரும் நிகர் இல்லை என விளங்கினாள்.

    முன்னொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என இரு அசுரர்கள் இருந்தார்கள். அவர்கள் தெய்வங்களிடம் வரம் பல பெற்று, தங்களை அழிக்க யாருமில்லை என்று தலைக்கனம் பிடித்துத் திரிந்தார்கள்.

    அவர்களது ஆட்சிக்காலத்தில் மக்கள் மிகவும் அல்லலுற்றனர். தவசீலர்களால் வேள்விகளைச் செய்ய முடியவில்லை.

    அனைவரும் இந்த இரு அரக்கர்களையும் கண்டு அஞ்சி நடுங்கினர்.

    இனியும் இப்படியே போனால் மக்கள் தாங்கமாட்டார்கள் என்று எண்ணிய தேவர்கள், விஷ்ணுவிடமும், சிவனிடமும் முறையிட்டனர்.

    அவர்கள் பிரம்மனையும் சேர்த்துக் கொண்டு, என்ன செய்வது என ஆலோசித்தனர்.

    ஆண்கள் யாராலும் அந்த இரு அசுரர்களையும் வெல்ல முடியாது என்பது வரம். அதனால் தேவர்களும் மூவர்களும் அன்னை ஆதி சக்தியை நோக்கிப் பிரார்த்தித்தனர்.

    மக்களின் துன்பம் கண்டு சகியாத அவளும் மிக அழகான மங்கையின் வடிவம் கொண்டு பூமிக்கு வந்தாள். அவளுடைய அழகுக்கு யாரும் நிகர் இல்லை என விளங்கினாள்.

    பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரும் தங்களுடைய சக்திகளை எல்லாவற்றையும் ஒன்று திரட்டி அன்னைக்கு அளித்துவிட்டு, சிலை என ஆனார்கள்.

    அதே போல இந்திரனும் திக்குப் பாலர்களும் தங்களுடைய ஆயுதங்களை எல்லாம் அளித்துவிட்டு சிலையாக நின்றார்கள்.

    அப்படி அவர்கள் நின்றதால்தான் அதைக் குறிக்கும் வகையில் பொம்மைக் கொலு வைக்கும் பழக்கம் வந்தது.

    அன்னை அந்த ஆயுதங்களை பத்துக் கரங்களில் தாங்கி, போர்க்கோலம் பூண்டு சும்ப, நிசும்பர்களையும், அவர்களது படைத்தளபதிகளான மது, கைடபன், ரக்தபீஜனையும் அழித்து தர்மத்தை நிலைநாட்டினாள்.

    அவள் வெற்றி பெற்ற தினமே விஜயதசமி. ஒன்பது நாட்கள் போர் விடாமல் நடந்தது. அதனாலேயே நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம்.

    ஏன் ராத்திரி? ஒன்பது பகலில் கொண்டாடலாம் என்று கேள்வி எழுவது சகஜம். அந்நாட்களில் போருக்கு என்று சில சட்ட திட்டங்கள் உண்டு.

    மாலை நேரம் சூரிய அஸ்தமனம் ஆன பிறகு போர் புரிய மாட்டார்கள். படைகள் தங்கள் கூடாரங்களில் ஓய்வெடுத்துக் கொள்ளும்.

    அப்போது அன்னையின் படைக்கு ஊக்கம் கொடுக்கவும், மறுநாளைய போரில் உற்சாகமாகப் போரிடவும் வேண்டி அன்னையைக் குறித்த ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    இது ஒன்பது இரவுகள் நடந்தது. அதனாலேயே நாம் நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம்.

    ×