என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
- பரசுராகத்தில் சுக்ர கீர்த்தனைகளைப் பாடிப் பிராத்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.
- யதுகுலகாம் போதி ராகத்தில் சனிபகவானை கீர்த்தனைகளை பாடி பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.
சுக்கிரன்
சுக்கிர பகவானுக்கு வெள்ளிக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து, வெள்ளை வஸ்திரம், வைரக்கல், வெண் தாமரை மலர் போன்றவற்றால் அலங்காரம் செய்து சுக்கிர மந்திரங்களை ஓதி அத்திச் சமித்தினால் யாகத்தீயை எழுப்பி மொச்சைப் பொடியன்னம் தயிரன்னம் ஆகியவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, பரசுராகத்தில் சுக்ர கீர்த்தனைகளைப் பாடிப் பிராத்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.
இப்படி செய்தால் சுக்கிரக் கிரக தோஷம் நீங்கும்.
சனி
சனி பகவானுக்கு சனிக்கிழமைகளில் அபிஷேகம் செய்து கருப்பு வஸ்திரம், நீலக்கல், நீலோற்பலம் (கருங்குவளை) ஆகியவைகளால் அலங்காரம் செய்து சனிபகவானின் மந்திரங்களை ஓதி வன்னிச் சமித்தினால் யாகத்தீயை எழுப்பி எள்ளுத்தானியம், எள்ளுப்பொடி, அன்னம் ஆகியவைகளால் பூஜை செய்து தீபாராதனை செய்து நல்லெண்ணை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து, தூப தீப நைவேத்தியம் கொடுத்து, யதுகுலகாம் போதி ராகத்தில் சனிபகவானை கீர்த்தனைகளை பாடி பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.
இப்படி செய்தால் சனிக்கிரக தோஷம் நீங்கும்.
- நாட்டக் குறிஞ்சி ராகத்தில் புதன் கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்துகொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.
- அடாணா ராகத்தில் குரு கீர்த்ததனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.
புதன்
புதன் பகவானுக்குப் புதன்கிழமையில் அபிஷேகம் செய்வித்துப் பச்சை வஸ்திரம் மரகதமணி வெண்தாமரை போன்றவற்றால் அலங்காரம் செய்து, புதன் மந்திரங்களை ஓதி நாயுருவி சமித்தால் யாகத் தீயை எழுப்பிப் பாசிப் பயத்தம் பருப்பு பொடி அன்னத்தை ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, நாட்டக் குறிஞ்சி ராகத்தில் புதன் கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்துகொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.
இப்படிச் செய்தால் புதன் கிரகதோஷம் நீங்கும்.
குரு
குரு பகவானுக்கு வியாழக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து மஞ்சள் நிற வஸ்திரம், புஷ்பராகமணி, வெண் முல்லை போன்றவற்றால் அலங்காரம் செய்து குரு மந்திரங்களை ஓதி அரசஞ்சமித்தினால் யாகத்தீயை எழுப்பிக் கடலைப் பொடி அன்னம் எலுமிச்சம்பழ அன்னம் ஆகியவற்றால் ஆகுதி பண்ணித் தீபாரதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, அடாணா ராகத்தில் குரு கீர்த்ததனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.
இப்படிச் செய்தால் குருக்கிரக தோஷம் நீங்கும்.
- வைத்தீஸ்வரன் கோவில் தலம் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகிய இருபெரும் அருளாளர்களால் பாடல் பெற்ற தலமாகும்.
- அங்காரகன் சடாயு, ரிக்வேதம், அம்பிகை, முருகன், சூரியன் ஆகியோர் வழிபட்ட தலம்.
வைத்தீஸ்வரன் கோவில் தலம் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகிய இருபெரும் அருளாளர்களால் பாடல் பெற்ற தலமாகும்.
அங்காரகன் சடாயு, ரிக்வேதம், அம்பிகை, முருகன், சூரியன் ஆகியோர் வழிபட்ட தலம்.
சூரபத்மனின் மார்பை பிளக்க முருகப் பெருமான் வேல் வாங்கிய தலம்.
காமதேனு இறைவன் மீது பாலைப்பொழிந்து அபிஷேகம் செய்த தலம்.
சித்தர்கள் இறைவனது திருமுடியில் அமிர்தத்தால் அபிஷேகம் செய்த தலம்.
செவ்வாய்தோஷம் உள்ளவர்கள் அங்காரகனால் துன்பம் வரும் எனக்கருதுபவர்கள் திருஞான சம்பந்தப்பெருமான் அருளிய இரண்டாம் தமிழ்வேதப் பதிகத்தைப் பாராயணம் செய்து வருதல் வேண்டும்.
முடிவில் இத்தலத்திற்கு சென்று சிவலிங்கத்திருமேனியை வழிபாடு செய்து வருதல் வேண்டும்.
இம்மூர்த்தியை வழிபட்டே அங்காரகன் தனது தோஷத்தை போக்கிக் கொண்டான்.
- செவ்வாய் தோஷ பரிகாரங்கள் பல வகைகளில் செய்யப்படுகின்றன.
- செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதி நாளில் விநாயகருக்கு அபிஷேக ஆராதனை செய்து விரதம் இருப்பதால் நல்லவை நடைபெறும்.
செவ்வாய் தோஷம் காரணமாக சிலருக்கு திருமணம் நடைபெறக் காலதாமதம் ஏற்படக்கூடும். அதற்கு பரிகாரம் செய்ய வேண்டியது அவசியமாகும்.
செவ்வாய் தோஷ பரிகாரங்கள் பல வகைகளில் செய்யப்படுகின்றன.
செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதி நாளில் விநாயகருக்கு அபிஷேக ஆராதனை செய்து விரதம் இருப்பதால் நல்லவை நடைபெறும்.
41 செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும். விரதநாள் அன்று அதிகாலை எழுந்து நீராடி சிவந்த ஆடை உடுத்தி, செவ்வாய் கிரகத்திற்கு செண்பகப்பூ, சிவப்பு அலரி ஆகிய மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
விரதம் பூர்த்தி செய்யும் நாள் ஐந்து பேருக்கு விருந்து அளிக்க வேண்டும்.
அவர்களுக்கு சிவப்பு நிறத்தில் ஆடைகள், செம்பு சொம்பு, தம்ளர் மற்றும் தாம்பூலத்துடன் தட்சணையும் அளித்து அவர்களை வணங்கி ஆசிபெற வேண்டும்.
செவ்வாய் தோஷமுள்ள பெண்ணுக்கு திருமணம் தடங்கலாகிக் கொண்டே வந்தால் வளர்பிறையில் வரும் செவ்வாய்க்கிழமையில் பரிகாரம் செய்ய வேண்டும்.
அந்த பரிகாரத்தை நாமே நம் வீட்டிலேயே செய்து கொள்ளலாம்.
வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை நீராடி சிவந்த ஆடை உடுத்தி மாங்கல்யத்தை தெய்வத்தின் முன் மஞ்சள் சரட்டில் கோர்த்து வைத்து வணங்கி எடுத்து கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும்.
செவ்வாய்க்கிழமை முழுவதும் மாங்கல்யத்தை அவிழ்க்க கூடாது.
மறுநாள் காலை நீராடி நெற்றியில் குங்குமமிட்டு தெய்வத்தை வணங்கி மாங்கல்யத்தை அவிழ்த்து ஏதாவது ஓர் ஆலயத்தின் உண்டியலில் சிறிது காணிக்கை சேர்த்து சமர்ப்பித்து விட வேண்டும்.
சிவந்த ஆடையை யாருக்காவது தானம் செய்துவிட வேண்டும்.
இவ்விதம் செய்தால் திருமணம் தடையின்றி விரைவாக நடைபெற்று விடும்.
- கோதுமை சர்க்கரைப்பொங்கலை ஆகுதி பண்ணி தீபாராதனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.
- அசாவேரி ராகத்தில் சந்திர கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.
சூரியன்
சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து சிவப்பு வஸ்திரம் சிவப்புமணி செந்தாமரை போன்றவற்றால் அலங்காரம் செய்து சூரிய மந்திரங்களை ஓதி வெள்ளெருக்குச் சமித்தினால் யாகத்தீயை எழுப்பி கோதுமை சர்க்கரைப்பொங்கலை ஆகுதி பண்ணி தீபாராதனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.
இப்படி செய்தால் சூரியக் கிரக தோஷம் நீங்கும்.
சந்திரன்
சந்திரபகவானுக்குத் திங்கட்கிழமையில் அபிஷேகம் செய்வித்து வெள்ளை வஸ்திரம் முத்துமாலை வெள்ளலரி, வெள்ளல்லி போன்றவற்றால் அலங்காரம் செய்து சந்திர மந்திரங்களை ஓதி முருக்கஞ் சமித்தினால் யாகத் தீயை எழுப்பிப் பச்சரிசி, பாலன்னம், தயிரன்னம் போன்றவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூபதீப நைவேத்தியம் கொடுத்து, அசாவேரி ராகத்தில் சந்திர கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.
இப்படி செய்தால் சந்திரக்கிரக தோஷம் நீங்கும்.
- திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நகரின் மேற்கில் அமைந்துள்ளது.
- திருவண்ணாமலையை பார்த்தபடி தெற்கு நோக்கி நரசிம்மர் காட்சி தருகிறார்.
இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்பதை உலக உயிர்களுக்கு மெய்பித்துக் காட்டியது, திருமாலின் அவதாரமான நரசிம்ம அவதாரம். அவர் உடனடியாக பக்தர்களுக்கு பலன் அளிப்பவர்.
அப்படிப்பட்ட நரசிம்மர் அருளும் ஆலயங்கள் ஏராளமாக இருக்கின்றன. அப்படி ஒரு உன்னதமான தலம்தான், திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் அமைந்துள்ள சம்பத்கிரி லட்சுமி நரசிம்மர் கோவில்.
தொண்டை மண்டலத்தின் பல்குன்ற கோட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கிய போளூர், புலஸ்திய மகரிஷி தவம் இயற்றிய காரணத்தால் 'புலஸ்தியபுரம்' என்று புராணப் பெயர் பெற்றது. போளூர் நகரின் மேற்கே அமைந்துள்ளது, சம்பத்கிரி என்ற மலை.
இங்கு குபேரனுக்கு அனைத்து சம்பத்களையும் (செல்வங்களையும், பொருளையும்) நரசிம்மர் வழங்கியதால், இது 'சம்பத்கிரி' என்று பெயர் பெற்றது.
'பொருள்' நிறைந்த ஊர் என்பதாக, சம்பத்கிரி மலைக்கு கீழே அமைந்த ஊரை 'பொருளூர்' என்று அழைத்தனர். அதுவே மருவி 'போளூர்' என்றானதாக சொல்கிறார்கள். சம்பத்கிரி மலையில் சப்தரிஷிகளும் தவம் இயற்றியதாக கூறப்படுகிறது.
சப்தகிரி மலையில் புலஸ்தியர் மற்றும் பவுலஸ்தியர் ஆகிய இரு மகரிஷிகள், திருமாலை நோக்கி தவம்புரிந்து வந்தனர். அந்த தவத்தின் பயனாக கோவிந்தனிடம் இருந்து ஒரு மாம்பழம் பிரசாதமாக கிடைத்தது. அதை பங்கிடும் போட்டியில் பவுலஸ்தியரின் இரண்டு கரங்களும் சிதைந்தன.
இதையடுத்து பவுலஸ்தியர், இம்மலைக்கு மூன்று மைல் தொலைவில் உள்ள சேயாற்றில் (செய்யாறு) தினமும் நீராடி, ஒரு மண்டலம் (48 நாட்கள்) நரசிம்மரை நினைத்து, இம்மலையை கிரிவலம் வந்தார்.
48-ம் நாள் சேயாற்றில் மூழ்கி எழுந்தபோது, அவரது சிதைந்த கைகள் கூடி, அவர் கரங்களில் நரசிம்மர் விக்கிரகமும் கிடைத்தது. அந்த விக்கிரகத்தை ஊருக்குள் பிரதிஷ்டை செய்யும்படி அசரீரி கூறிட, அதன்படியே ஊருக்குள் பிரதிஷ்டை செய்தார்.
சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இம்மலையின் உச்சியில் கல் உடைக்கும்போது உளிபட்ட இடத்தில் இருந்து ரத்தம் பீரிட்டது. அதை கண்டு அஞ்சிய மக்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
அன்றே ஊரில் இருந்த ஒரு பக்தரின் கனவில் தோன்றிய பெருமாள், தான் இங்கு லட்சுமி நரசிம்மராக, சுயம்பு வடிவில் எழுந்தருளி உள்ளதாகக் கூறி மறைந்தார். இதையடுத்து அங்கே ஆலயம் எழுப்பப்பட்டு, வழிபாடுகள் இன்றுவரை சிறப்புடன் நடந்து வருகிறது.
மலை மீது சுயம்புவாக எழுந்தருளியுள்ள நரசிம்மமூர்த்திக்கு ஹொய்சாளர்கள் ஊருக்குள் ஒரு ஆலயம் எழுப்பினர். இந்த ஆலயத்திற்கு விஜயநகர அரசர்களால் திருப்பணிகளும் செய்யப்பட்டுள்ளன.
பின்னாளில் விஜயநகர வம்சத்தில் வந்த ஓகூர் சீனிவாசராவ் என்பவர், உற்சவர் நரசிம்மரோடு ஸ்ரீதேவி - பூதேவி தாயார்களின் விக்கிரகத்தையும் இங்கே நிறுவியுள்ளார். மேலும் பாமா - ருக்மணி உடனான வேணுகோபால சுவாமியையும் கற்சிலையாக நிறுவினார்.
இந்த சம்பத்கிரி மலை சுமார் 850 படிகளைக் கொண்டது. மலையடிவாரத்தில் சிறிய திருவடியான ஆஞ்சநேயருக்கும் சன்னிதி இருக்கிறது. அதோடு நான்கு ஓய்வு மண்டபங்களும் உள்ளன. இரண்டு குளிர்ந்த நீர் சுனைகள் காணப்படுகின்றன.
மலை மீது ஏற, ஏற செங்குத்தான படிகள் அமைந்துள்ளன. மலை உச்சியில் அரண் போன்று மலையைச் சுற்றிலும் மதில்கள் அமைந்துள்ளன. நடுவே தென்முகம் பார்த்த ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆலயத்தின் முன்பு பலிபீடம், தீப ஸ்தம்பம், கருடாழ்வார் உள்ளனர். மின்னொளியில் மின்னும் வகையில், சங்கு, சக்கரத்துடன் திருநாமம் அமைக்கப்பட்டிருக்கிறது.
கருவறைக்குள் சுயம்புவாக திருவண்ணாமலையை பார்த்தபடி தெற்கு நோக்கி நரசிம்மர் காட்சி தருகிறார். இவருக்கு முன்பாக லட்சுமி தேவியின் நரசிம்மமூர்த்தியின் சிலை நிறுவப்பட்டுள்ளது.
இவரது சன்னிதிக்கு வலது புறம் கனகவல்லி தாயாருக்கு தனி சன்னிதி உள்ளது. மலை மீது பிரம்ம தீர்த்தமும், மலையின் கீழ் புலஸ்திய தீர்த்தமும் இருக்கின்றன. பாஹுநதி என்னும் செய்யாறும் இத்தலத்தின் தீர்த்தமாக விளங்குகிறது.
இவ்வாலயத்தில் உள்ள இறைவனுக்கு சுவாதி, மாத பிறப்பு, ஏகாதசி, திருவோணம், புனர்பூசம், ரோகிணி, பஞ்சமி திதி, சப்தமி திதி ஆகிய நாட்களில் அதிகாலை 4.30 மணிக்கு திருமஞ்சனம் நடைபெறுகின்றன.
சித்திரை வருடப்பிறப்பில் படிவிழா, வைகாசியில் 10 நாள் பிரமோற்சவம், ஆவணியில் கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகள், தனுர் (மார்கழி) மாத பூஜைகள், வைகுண்ட ஏகாதசி போன்றவை மலைக் கோவிலில் நடைபெறும் விசேஷ நிகழ்வுகளாகும்.
திருமணவரம், புத்திரப்பேறு, அரசு வேலை, கடன் நிவர்த்தி, தொழில் முன்னேற்றம் மற்றும் அமானுஷ்ய - மாந்திரீக தொல்லைகளில் இருந்து விடுபட, பிரதோஷ நாட்களில் சம்பத்திரி லட்சுமி நரசிம்மருக்கும், ஊரில் உள்ள பாமா - ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி மற்றும் உற்சவர் நரசிம்மருக்கும் திருமஞ்சனம் செய்து, துளசி மாலை சாற்றி, பானகம் மற்றும் வெல்லத்தினால் ஆன நைவேத்தியங்களை படைத்து கிரிவலம் வந்து வழிபட்டால் பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அமைவிடம்
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நகரின் மேற்கில் அமைந்துள்ளது சம்பத்கிரி லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில்.
சனிக்கிழமை மட்டும்...
மலை மீது உள்ள லட்சுமி நரசிம்மர் கோவில் ஒவ்வொரு சனிக்கிழமையும் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.
அதே நேரம் கீழே உள்ள வேணுகோபாலர் கோவில் தினமும் காலை 6 மணி முதல் 8.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.
- திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு.
- திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் கிளி வாகன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு புரட்டாசி-11 (வெள்ளிக்கிழமை)
பிறை: தேய்பிறை.
திதி: தசமி மாலை 5.34 மணி வரை. பிறகு ஏகாதசி.
நட்சத்திரம்: : பூசம் மறுநாள் விடியற்காலை 5.29 மணி வரை. பிறகு ஆயில்யம்.
யோகம்: மரணயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை. மாடவீதி புறப்பாடு. கரூர் தான்தோன்றி மலை ஸ்ரீகல்யாண வெங்கட்ரமண சுவாமிக்கு திருமஞ்சனம். திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் கிளி வாகன சேவை. குறுக்குத்துறை ஸ்ரீமுருகப் பெருமான் பவனி. படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்கிற பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வரவு
ரிஷபம்-போட்டி
மிதுனம்-அமைதி
கடகம்-தெளிவு
சிம்மம்-மாற்றம்
கன்னி-கடமை
துலாம்- கவனம்
விருச்சிகம்-நட்பு
தனுசு- சுகம்
மகரம்-உற்சாகம்
கும்பம்-இன்பம்
மீனம்-ஓய்வு
- சங்கில் உள்ள ஜலதாள யோக ஜோதி சக்தியானது நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுத் தரும் ஆற்றல் கொண்டது.
- சங்கை அருகில் வைத்து எந்த கடவுளை வேண்டினாலும், அந்த இறைவனின் சக்தி நமக்கு முழுமையாக கிடைக்கும்.
சோமவார சங்காபிஷேகத்தை நம்மால் நடத்த இயலாவிட்டாலும் பரவாயில்லை.
அந்த அபிஷேகத்தை கண் குளிர தரிசனம் செய்தாலே சங்கடங்கள் நீங்கி விடும் என்பது ஐதீகம்.
சங்காபிஷேகத்தில் தீர்த்தம் தவிர மூலி கைகள், பச்சிலைகள், வாசனைத் திரவியங்கள் கலந்தும் பயன்படுத்தலாம்.
இத்தகைய சங்கு அபிஷேகங்களை கண்டால் 7 பிறவி பாவங்கள் விலகுமாம். அதோடு இழந்த பொருள், பதவி கிடைக்கும். இம்மை & மறுமை வினைகள் தீரும்.
சங்காபிஷேக தீர்த்தத்தை அருந்தியவர் களுக்கு அகாலமரணம் என்பது வராது. உடலில் தோன்றும் 4446 வகை நோய்கள் நீங்கும்.
சங்கு நிலையான தன்மை கொண்டது. சுட்டாலும் அது வெண்மையேத்தரும். பஞ்சபூதங்களால் சங்கை எந்த மாற்றமும் செய்ய இயலாது.
அது போல மனிதனும் மாறாத இயல்புடன் இறைவனை பூஜிக்க வேண்டும் என்பதை உணர்த்தவே இறைவழிபாட்டில் நம் முன்னோர்கள் சங்கை சேர்த்துள்ளனர்.
சங்காபிஷேகம் நடத்துபவர்களுக்கு தெளிவான மனநிலை உண்டாகும்.
குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். குறிப்பாக கணவன் & மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
சங்குக்கு ஆகாயத்தில் உள்ள வேத மந்திரங்களை ஈர்க்கும் சக்தி உண்டு.
சங்கில் உள்ள ஜலதாள யோக ஜோதி சக்தியானது நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுத் தரும் ஆற்றல் கொண்டது.
சங்கை அருகில் வைத்து எந்த கடவுளை வேண்டினாலும், அந்த இறைவனின் சக்தி நமக்கு முழுமையாக கிடைக்கும்.
எனவே ஆலயத்தில் நடக்கும் சங்காபிஷேங்களில் கலந்து கொள்வது உங்களை மேன்மைப்படுத்தும் என்பதை மறந்து விடாதீர்கள்.
வீட்டிலும் சங்கு வழிபாட்டை உரிய முறையில் செய்தால், இந்த பிறவியில் எல்லா இன்பத்தையும் பெற முடியும்.
- சங்குக்கு வெள்ளிக்கிழமை தோறும் பூஜை செய்து சங்கு காயத்ரியை 108 முறை ஜெபித்தால் வற்றாத வளம் வந்து சேரும்.
- சங்கு தீர்த்தம் போலவே சங்கு ஒலியும் மகிமை நிறைந்தது. சங்கொலி கேட்டதும் தீய சக்திகள் ஓடி விடும்.
ஆழ்வார்களில் முதல் ஆழ்வாரான பொய்கை ஆழ்வார் சங்கின் அம்சமாக அவதரித்தவர் ஆவார்.
தோஷங்களில் மிக உயர்ந்த தோஷமான பிரம்மஹத்தி தோஷத்தை விரட்டும் ஆற்றல் வலம்புரி சங்குக்கு உண்டு.
வீட்டில் வலம்புரி சங்கு வைத்து வழிபட்டு வந்தால் மற்றவர்களுக்கு உதவும் அளவுக்கு நம் பொருளாதார நிலை உயரும்.
செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் வலம்புரி சங்கில் பால் வைத்து 27 செவ்வாய்க் கிழமை அம்மனை வழிபட்டு வந்தால் எல்லா தோஷங்களும் நீங்கி விடும்.
சங்குக்கு வெள்ளிக்கிழமை தோறும் பூஜை செய்து சங்கு காயத்ரியை 108 முறை ஜெபித்தால் வற்றாத வளம் வந்து சேரும்.
பெருமாளுக்கு பால், தேன், இளநீர், சந்தனம் உள்பட 12 வகை பொருட்களை 1008 சங்காபிஷேகமாக செய்தால் நல்ல குணம் உண்டாகும்.
சங்கு தெய்வீகப் பொருளாகக் கருதப்படுவதால் அதற்கு "புனிதமான பாத்திரம்" என்றும் ஒரு பெயர் உண்டு.
எனவே தான் அதில் ஊற்றப்படும் நீர் புனிதமானதாக மாறுகிறது. அந்த தீர்த்தத்தை குடித்தால் ஆயுள் பெருகும்.
சங்கு தீர்த்தம் போலவே சங்கு ஒலியும் மகிமை நிறைந்தது.
சங்கொலி கேட்டதும் தீய சக்திகள் ஓடி விடும். எனவே தான் பூஜை தொடங்கும் முன்பு சங்சொலி எழுப்புவது இன்னமும் நடைமுறையில் உள்ளது.
- சங்கில் 16 வகை சங்குகள் இருந்தாலும் இடம்புரி சங்கு, வலம்புரி சங்கு, திருகு சங்கு ஆகிய 3 வகை சங்குகள் முக்கியமானவை.
- இதில் இடம் புரி சங்குகள் அதிகமாக கிடைக்கும். லட்சத்தில் ஒரு சங்குதான் வலம்புரி சங்காக இருக்கும்.
சங்கின் பிறப்புக்கு தேவி மகாத்மியத்தில் ஒரு கதை கூறப்பட்டுள்ளது......
கிருஷ்ணரின் மகனாக சுதர்மன் என்பவன் அவதரித்தான். ராதையின் சாபம் காரணமாக இவன் அசுரகுலத்தில் சங்கசூடன் என்ற பெயரில் பிறக்க நேரிட்டது.
சங்கசூடன் தான் பெற்ற வரத்தால் தேவர்களை கொடுமைப்படுத்தினான்.
இதனால் சிவபெருமான் அவனை சூலத்தால் அழித்து சாம்பலாக்கினார். அவனது எலும்புகள் தான் ஆழ்கடலில் விழுந்து சங்குகளாக மாறியதாக சொல்கிறார்கள்.
சங்கில் 16 வகை சங்குகள் இருந்தாலும் இடம்புரி சங்கு, வலம்புரி சங்கு, திருகு சங்கு ஆகிய 3 வகை சங்குகள் முக்கியமானவை.
இதில் இடம் புரி சங்குகள் அதிகமாக கிடைக்கும். லட்சத்தில் ஒரு சங்குதான் வலம்புரி சங்காக இருக்கும்.
ஆலயங்களில் சாதாரணமாக செய்யப்படும் சங்கு, சப்தாகர்ஷண சக்தி பூஜைகளில் இடம்புரி சங்கையே பயன்படுத்துவார்கள்.
திருகு சங்குகள் திருஷ்டி போக்கவும், வாஸ்து குறைபாடுகளை நீக்கவும் பயன்படும்.
வலம்புரி சங்கு புனிதமும் ஆற்றலும் நிறைந்தது. இடது கையால் பிடிக்க தகுந்த அமைப்புடன் இருப்பது வலம்புரி சங்காகும்.
- லட்சுமியின் அம்சமாகக் கருதப்படும் சங்கு, ஓம் எனும் பிரணவ மந்திர வடிவில் அமைந்துள்ளது. சங்கில் இருந்தும் ஓம் எனும் ஒலி எழும்.
- இந்த ஓலி துர்சக்திகளை விரட்டும் ஆற்றல் கொண்டது.
தேவர்களும், அசுரர்களும் ஒன்றிணைந்து பாற்கடலை கடந்த போது லட்சுமியுடன் சங்கும் சேர்ந்து வெளியில் வந்தது.
இந்த உலகுக்கு சங்கு அறிமுகமானது இப்படித்தான்.
லட்சுமியின் அழகில் மயங்கி அவளை திருமணம் செய்து கொண்ட மகா விஷ்ணு, சங்குவை இடது கையில் ஏந்தி "சங்கு சக்கர தாரி"யாக மாறினார்.
அன்று முதல் விஷ்ணுவின் படைகளில் "சங்குப் படை" முக்கியமானதாக மாறியது என்று விஷ்ணு புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகாவிஷ்ணு, லட்சுமி இருவரிடமும் சங்கு நிலை பெற்றுள்ளதால், அது செல்வம், வெற்றி உள்பட அனைத்தையும் தரும் என்று புராணங்கள் சொல்கின்றன.
லட்சுமியின் அம்சமாகக் கருதப்படும் சங்கு, ஓம் எனும் பிரணவ மந்திர வடிவில் அமைந்துள்ளது.
சங்கில் இருந்தும் ஓம் எனும் ஒலி எழும். இந்த ஓலி துர்சக்திகளை விரட்டும் ஆற்றல் கொண்டது.
எனவேதான் வீட்டில் சங்கு வைத்து வழிபடுவது நல்லது என்று கூறப்படுகிறது.
சங்கில் நீர் விட்டு கும்பத்தின் மேல் வைத்து, பூக்கள் போட்டு, பூஜை செய்து ஆராதனை நடத்தி, சங்கில் உள்ள நீரை சாமி சிலைகள் மீது அபிஷேகம் செய்தால் அது தீர்த்தமாக மாறி விடும் என்கிறார்கள்.
இப்படி சாதாரண நீரை, சக்தி வாய்ந்த மகா தீர்த்தமாக மாற்றிவிடும் சக்தி படைத்த சங்கின் முன்பாகத்தில் கங்கை, மத்தியில் வருணன், பின்பாகத்தில் பிரஜாபதி வசிக்கிறார்களாம். இவர்கள் தவிர சங்கில் குபேரன் உள்பட எல்லா தேவதைகளும் வசிப்பதாக சொல்கிறார்கள்.
இதனால்தான் சைவ, வைணவ ஆலய வழி பாடுகளில் சங்கு பிரதான இடம் வகிக்கிறது.
- துளசியை ஒவ்வொரு துவாதசி திதி தினத்தன்றும் பிரம்மனே பூஜை செய்கிறார்.
- எனவே யார் ஒருவர் துளசியை பூஜித்து வருகிறாரோ அவர்களது பாவம் விலகி விடும்.
துளசியின் நுனியில் பிரம்மா, அடியில் சிவபெருமான், மத்தியில் விஷ்ணு விசிக்கின்றனர்.
12 ஆதித்தியர்கள், 11 ருத்ரர்கள், 8 வசுக்கள் மற்றும் அக்னி தேவர்கள் வாசம் செய்கின்றனர். துளசி இலை பட்ட தண்ணீர் கங்கைக்கு சமமாக கருதப்படுகிறது.
துளசியை ஒவ்வொரு துவாதசி திதி தினத்தன்றும் பிரம்மனே பூஜை செய்கிறார்.
அது போல மற்ற தேவர்களும் பூஜிக்கிறார்கள். எனவே யார் ஒருவர் துளசியை பூஜித்து வருகிறாரோ அவர்களது பாவம் விலகி விடும்.
துளசியில் ஏராளமான மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளது.
தினமும் 10 துளசி இலையை சாப்பிட்டால் ரத்தம் சுத்தமாகும். துளசி சாறுக்கு பார்வை குறைபாடுகளை நீக்கும் சக்தி உண்டு.
துளசி தீர்த்தம் வயிற்றுக் கோளாறுகளையும், சிறுநீரகக் கோளாறுகளையும் போக்கும். ஜீரண சக்தி மேம்படும். இதயம், கல்லீரல் சீராக செயல்படும்.
வீட்டில் துளசி வளர்ப்பதால் சுத்தமான காற்றை நாம் பெற முடியும். புகை மற்றும் மாசுவை தூய்மைப் படுத்தும் ஆற்றல் துளசிக்கு உண்டு.
எனவே அறிவியல் ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் துளசி உயர்வானது. புனிதமானது.
ஈடு இணையற்றது. இத்தகைய சிறப்புடைய துளசியை வைணவத் தலங்களுக்கு செல்லும் போது மறக்காமல் வாங்கிச் செல்ல வேண்டும்.
துளசி சார்த்தி நீங்கள் வழிபடும் போது பெருமாளின் அருளை மிக எளிதாகப் பெற முடியும்.
அது மட்டுமின்றி மகா விஷ்ணுவின் வைகுண்டத்துக்கு சென்று மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ வழி ஏற்படும்.
துளசி வழிபாடு செய்யும் இளம் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடக்கும். செல்வம் சேரும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்