என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
- துளசியை பறிக்கும்போது, அதற்குரிய ஸ்லோகத்தை சொல்லியபடி பறிப்பது மிகவும் நல்லது.
- துளசி பறிக்கும் போது நான்கு இலைகளும், நடுவில் துளிரும் உள்ளதையும் சேர்த்து பறிக்க வேண்டும்.
துளசியை எடுக்கும் போது பயப்பக்தியுடன் பறிக்க வேண்டும்.
அதிகாலையில் நீராடி சந்தியா வந்தனம் செய்து, எல்லாவித அனுஷ்டானங்களையும் முடித்த பிறகே துளசி இலையை பறிக்க வேண்டும்.
துளசியை பறிக்கும்போது, அதற்குரிய ஸ்லோகத்தை சொல்லியபடி பறிப்பது மிகவும் நல்லது.
துளசி பறிக்கும் போது நான்கு இலைகளும், நடுவில் துளிரும் உள்ளதையும் சேர்த்து பறிக்க வேண்டும்.
துளசிச் செடியில் பழையது, புதியது என்ற நிலை எதையும் பார்க்க முடியாது. ஆகையால் நாம் பறிக்கும் ஒவ்வொரு துளசியும் பூஜைக்கு உகந்ததாகும்.
ஆனால் அசுத்தமாக இருக்கும் போது துளசிச் செடி பக்கமே போகக்கூடாது. பவுர்ணமி, அமாவாசை, துவாதசி, மாதப்பிறப்பு, வெள்ளி, செவ்வாய் ஆகிய நாட்களில் துளசியைப் பறிக்கக் கூடாது.
உடலில் எண்ணைத்தேய்த்துக் கொண்டிருக்கும் போதும் துளசியைப் பறிக்க கூடாது. மதியம், இரவு மற்றும் சந்தியா நேரத்திலும் துளசியைப் பறிக்கக்கூடாது.
எப்போதும் தேவைக்கு ஏற்ப துளசி எடுப்பது நல்லது.
விஷ்ணு பூஜை, பிரதிஷ்டை, தானம், விரதம் மற்றும் பித்ருகாரியங்களுக்கு துளசியை அவசியம் பயன்படுத்த வேண்டும்.
துளசி கலந்த தண்ணீரில் நீராடினால் புண்ணியம் கிடைக்கும். மரணத்தின் விளிம்பில் இருப்பவர்கள் துளசி தீர்த்தம் உட்கொண்டால் விஷ்ணு லோகம் அடைவார்கள் என்பது நம்பிக்கை.
ஹோமத்தில் துளசி குச்சிகளை போட்டு வழிபட்டால் நினைத்தது நடக்கும்.
- துளசி செடியின் கீழ் தேங்கி இருக்கும் தண்ணீரில் எல்லாப் புண்ணிய தீர்த்தங்களும் அடங்கி இருப்பதாக ஐதீகம்.
- அந்த தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டால் தோஷங்கள் விலகி விடும்.
கார்த்திகை மாதம் பவுர்ணமி தினத்தன்று துளசி அவதரித்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே கார்த்திகை பவுர்ணமி தினத்தன்று துளசி மாடத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபாடுகள் செய்தால் நினைத்தது நடக்கும்.
பெண்கள் துளசியை எந்த அளவுக்கு வழிபாடு செய்கிறார்களோ, அந்த அளவுக்கு அவர்களிடம் லட்சுமி கடாட்சம் ஏற்படும்.
துளசி செடியின் கீழ் தேங்கி இருக்கும் தண்ணீரில் எல்லாப் புண்ணிய தீர்த்தங்களும் அடங்கி இருப்பதாக ஐதீகம்.
அந்த தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டால் தோஷங்கள் விலகி விடும்.
துளசித் தீர்த்தத்துக்கு இருக்கும் சிறப்பை பல தடவை மகாவிஷ்ணு வெளிப்படுத்தியுள்ளார்.
"துளசி தீர்த்தத்தால் எனக்கு அபிஷேகம் செய்தால், ஆயிரம் அமிர்தக் குடங்களால் அபிஷேகம் செய்த அளவுக்கு ஆனந்தம் அடைவேன்" என்று மகாவிஷ்ணு கூறியுள்ளார்.
அது மட்டுமல்ல, ஒரு தடவை துளசிக்கு மகா விஷ்ணுவே பூஜை செய்தார் என்று ஹரிவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விஷ்ணுவுக்கு உரிய நட்சத்திரம் திருவோணம் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். திருவோணம் குளிர்ச்சியான நட்சத்திரமாகும்.
எனவே தான் அதிக குளிர்ச்சியில் இருக்கும் மகாவிஷ்ணுவுக்கு வெப்பத்தைத் தரும் துளசியை பூஜைக்குரிய பொருளாக வைத்துள்ளனர்.
- பொதுவாக பசுக்கள் நிறைந்த இடம், புனித நதிக்கரைகள் மற்றும் பிருந்தாவனம் ஆகிய இடங்களில் துளசி வாசம் செய்வதாக ஐதீகம்.
- எனவே வீட்டில் துளசியை வளர்க்கும் போது, அதற்குரிய சுத்தம் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அன்னதானம், ரத்த தானம் உள்பட நீங்கள் எத்தனையோ தானங்கள் செய்திருப்பீர்கள். துளசியை நீங்கள் தானமாக கொடுத்து இருக்கிறீர்களா?
ஒரு தடவை துளசி இலைகளை தானமாக கொடுத்துப் பாருங்கள்.
அது தரும் மேன்மைக்கு நிகராக எதுவுமே இல்லை என்பதை உணரலாம்.
கார்த்திகை மாதம் துளசியை தானம் செய்தால் ஆயிரம் பசுக்களை தானம் செய்த புண்ணியமும், பலனும் கிடைக்கும்.
எப்போது தானம் செய்தாலும், எதை தானம் செய்தாலும், அதனுடன் ஒரு துளசி இலை வைத்தே தானம் செய்ய வேண்டும் என்று தர்ம சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
துளசியின் வேரில் தேவர்களும், தேவதைகளும் வாசம் செய்கிறார்கள். எனவே துளசியை வீட்டில் வளர்க்கலாம்.
வீட்டு மாடத்தில் வைத்திருக்கும் துளசி செடியை தெய்வமாக கருதி சுமங்கலி பெண்கள் தினமும் வழிபாடு செய்ய வேண்டும்.
துளசி செடிக்கு தினமும் காலை, மாலை இரு நேரமும் பூஜை நடத்த வேண்டும்.
பொதுவாக பசுக்கள் நிறைந்த இடம், புனித நதிக்கரைகள் மற்றும் பிருந்தாவனம் ஆகிய இடங்களில் துளசி வாசம் செய்வதாக ஐதீகம்.
எனவே வீட்டில் துளசியை வளர்க்கும் போது, அதற்குரிய சுத்தம் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.
- ஒப்பில்லாத அழகுடன் திகழ்ந்ததால் அந்த குழந்தைக்கு துளசி என்று பெயரிட்டனர்.
- அந்த குழந்தை வளர்ந்து பெரியவள் ஆனவதும் நாராயணனை திருமணம் செய்ய வேண்டும் என்று தவம் செய்தாள்.
இத்தகைய சிறப்புடைய துளசி தோன்றியதன் பின்னணியில் ஒரு புராண கதை உள்ளது.
மநு வம்சத்தை சேர்ந்த தர்மவத்வசன் எனும் அரசனின் மனைவி மாதவி கர்ப்பம் தரித்து அழகான ஒரு பெண் குழந்தையைப் பெற்றாள்.
ஒப்பில்லாத அழகுடன் திகழ்ந்ததால் அந்த குழந்தைக்கு துளசி என்று பெயரிட்டனர்.
அந்த குழந்தை வளர்ந்து பெரியவள் ஆனவதும் நாராயணனை திருமணம் செய்ய வேண்டும் என்று தவம் செய்தாள்.
பிரம்மன் அவள் முன் தோன்றி, பூமியில் நீ துளசி விருட்சமாக பிறந்து கிருஷ்ணரை திருமணம் செய்து கொள்வாய்" என்ற வரம் கொடுத்தார்.
அதன்படி துளசியை விஷ்ணு மணந்து வைகுண்டம் அழைத்து சென்றார்.
எத்தனையோ லீலைகளை நடத்திக் காட்டிய கண்ணன், துளசியின் சிறப்பையும் ஒரு லீலை மூலம் உலகறிய செய்தார்.
ஒரு தடவை கண்ணன் மீது அதிக அன்பு வைத்திருப்பவர் யார் என்று சத்தியபாமாவுக்கும் ருக்மணிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது.
அதை உறுதிபடுத்த கண்ணன் தராசில் ஒரு பக்கம் அமர்ந்து கொள்ள, மறுபக்க தராசில் சத்தியபாமா பொன்னும் மணியுமாக குவித்தார்.
தராசு சமநிலைக்கு வரவில்லை. அடுத்து வந்த ருக்மணி, ஒரு சிறு துளசியை எடுத்த தராசு தட்டில் வைக்க, தராசு சமநிலைக்கு வந்தது.
துளசியின் பெருமையை சொல்ல இந்த ஒரு புராண நிகழ்வே போதுமானதாகும்.
- துளசிக்கு “திருத்துழாய்” என்றும் ஒரு பெயர் உண்டு. வைணவக் கோவில்களில் துளசிக்கு தனி இடம் உண்டு.
- துளசி கலந்த நீரைத்தான் தீர்த்தமாக வழங்குகிறார்கள்.
துளசி என்றால் "தன்னிகரில்லாதவள்" என்று அர்த்தமாகும்.
துளசி என்பது ஒரு வகை செடியின் இலையாகும். இதை துள+சி என்பார்கள். இதற்கு "ஒப்பில்லாத செடி" என்று பொருள்.
துளசிக்கு "திருத்துழாய்" என்றும் ஒரு பெயர் உண்டு. வைணவக் கோவில்களில் துளசிக்கு தனி இடம் உண்டு.
துளசி கலந்த நீரைத்தான் தீர்த்தமாக வழங்குகிறார்கள்.
மகாலட்சுமியின் சொரூபமான துளசி, எப்போதும் திருமாலின் மார்பை அலங்கரிக்கும் சிறப்புப் பெற்றது.
இதன் மூலம் மகாவிஷ்ணு எப்போதும் துளசியில் வாசம் செய்வதாக சொல்கிறார்கள்.
மூவுலகங்களிலும் எத்தனையோ மலர்கள், இலைகள் பூஜைக்கு பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் துளசி மட்டுமே மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
- இன்று அவிதவா நவமி.
- திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் அலங்கார திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு புரட்டாசி-10 (வியாழக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: நவமி மாலை 5.30 மணி வரை பிறகு தசமி
நட்சத்திரம்: புனர்பூசம் நாளை விடியற்காலை 4.32மணி வரை பிறகு பூசம்
யோகம்: அமிர்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று அவிதவா நவமி. சுவாமிமல ஸ்ரீமுருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். சோழவந்தான் சமீபம் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம். ஆராதனை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை மற்றும் மைசூர் மண்டபம் எழுந்தருளல். ஆலங்குடி ஸ்ரீ குருபகவானுக்கு கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு காலையில் சிறப்பு குரு வார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் அலங்கார திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-தனம்
ரிஷபம்-வரவு
மிதுனம்-லாபம்
கடகம்-இன்பம்
சிம்மம்-ஆசை
கன்னி-நிறைவு
துலாம்- பணிவு
விருச்சிகம்-பண்பு
தனுசு- ஒழுக்கம்
மகரம்-ஆக்கம்
கும்பம்-ஆதரவு
மீனம்-அன்பு
- பைரவருக்கு விரதமிருந்து விளக்கேற்றி வழிபட அனைத்து வளங்களும் கிடைக்கும்.
- ராகுகால வேளையில் பைரவரை வணங்கி வழிபடுவது இன்னும் கூடுதல் பலத்தையும் பலன்களையும் வழங்கும்.
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று பைரவ வழிபாடு செய்ய உகந்தது ஆகும். அந்நாள் பைரவாஷ்டமி என்று வழங்கப்படுகிறது. அதிலும் தேய்பிறை அஷ்டமி கால பைரவாஷ்டமி என்று வழங்கப்பட்டு சிறப்பு பெறுகிறது. சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்கு...
அதுவும் பித்ருகளுக்கு உகந்த புரட்டாசி மாதம் தேய்பிறையில் வருகிற அஷ்டமியை சம்புகாஷ்டமி என்று கூறுவதுண்டு. இந்நாளில் பைரவருக்கு விரதமிருந்து விளக்கேற்றி வழிபட அனைத்து வளங்களும் கிடைக்கும். இந்நாளில் பைரவரை வழிபடும் முறை குறித்து தெரிந்துகொள்வோம்...
* பைரவருக்கு செவ்வரளி மலர் சூட்டி நான்கு புறமும் தீபம் கொண்ட விளக்கேற்றி வழிபடலாம்.
* மிளகு சேர்த்த உளுந்தவடை, தயிர் சாதம் ஆகியவற்றை கால பைரவருக்கு நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும்.
* முடிந்தால், நான்குபேருக்கேனும் தயிர்சாதப் பொட்டலம் தானமாக வழங்குங்கள்.
* கடன் தொல்லை, தொழில் நஷ்டம் போன்றவைகளால் பாதிப்படைந்தவர்கள் பூசணிக்காயில் நல்லெண்ணெய் ஊற்றி தீபடமிட வேண்டும்.
* ராகுகால வேளையில் பைரவரை வணங்கி வழிபடுவது இன்னும் கூடுதல் பலத்தையும் பலன்களையும் வழங்கும்.
- புரட்டாசி மாதம் தமிழகம் முழுவதும் உள்ள வைணவத் தலங்களில் கருட சேவை நடை பெறும்.
- அன்றையதினம் கருட சேவை வழிபாடு செய்தால், பெருமாளின் கருணைப் பார்வை நம் மீது திரும்பும்.
எல்லா திசைகளிலும் மிக வேகமாக பறக்கும் ஆற்றல் கொண்ட கருடன், தன் சக்தி மூலம் திருமாலுக்கு உதவினார்.
முதலையிடம் சிக்கிய கஜேந்திரயானையைக் காப்பாற்ற திருமால் கருடன் வாகனத்தில் பறந்து வந்தார் என்ற ஒரே ஒரு உதாரணமே இதற்கு போதும்.
திருமால் நினைக்கும் முன்பே அந்த செயலுக்கு கருடன் தயாராகி விடுவார் என்பார்கள்.
எனவே தான் பக்தர்களை காப்பாற்ற திருமால் கருட வாகனத்தில் எழுந்தருள்வதை சிறப்பாக சொல்கிறார்கள்.
இதையே "கருட சேவை" என்கிறோம்.
சிலருக்கு பெருமாளை தினமும் வழிபட, வழிபட ஒருவித அகங்காரம் வந்து விடக்கூடும்.
அப்படி இல்லாமல் பெருமாளுக்கு என்றென்றும் தாசனாக இருக்கும் ஸ்ரீகருடன் போல எப்போதும் திருமாலுக்கு சேவை செய்து வாழ வேண்டும் என்பதை கருட சேவை நமக்கு உணர்த்துகிறது.
புரட்டாசி மாதம் தமிழகம் முழுவதும் உள்ள வைணவத் தலங்களில் கருட சேவை நடை பெறும்.
அன்றையதினம் கருட சேவை வழிபாடு செய்தால், பெருமாளின் கருணைப் பார்வை நம் மீது திரும்பும்.
எனவே புரட்டாசி கருட சேவைகளை தவற விடாதீர்கள்.
திருமாலின் வாகனமாக கருடன் மாறியதற்கு பல கதைகள் சொல்லப் படுகிறது.
கருடன் பல நூறு ஆண்டுகள் தவம் இருந்து மகாவிஷ்ணுவை சுமந்து செல்லும் வாகனமாக மாறியதாக ஒரு கதை உண்டு.
இன்னொரு கதையும் இருக்கிறது. ஒரு சமயம் கருடன், இந்திரனுடன் போரிட்டார்.
அப்போது திருமால் உபேந்திரனாக அவதாரம் எடுத்து இந்திரனுக்காக கருடனுடன் போரிட்டார்.
அந்த போரில் கருடனின் ஆணவம் நீங்கும் வகையில் அவரை வீழ்த்தி அடக்கினார்.
தன் நிலை உணர்ந்த கருடன் திருமாலின் வாகனமாகவும், கொடியாகவும் மாறியதாக சொல்வார்கள்.
கருடன் மகா பலம் பொருந்தியவர்.
அழகான முகம், குவிந்த இறகுகள், உறுதியான நகங்கள், கூர்மையான கண் பார்வை, பருத்த கழுத்து, குட்டையான கால்கள், பெரிய தலை என பல சிறப்பம்சங்களைக் கொண்டவர்.
- புதன், வியாழன் கிழமைகளில் வழிபட்டால், எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும்.பகைவர்கள் வைத்த சூனியம் நீங்கும்.
- வெள்ளி, சனிக்கிழமைகளில் வழிபட்டால் ஆயுள் கெட்டியாகும்.
ஒவ்வொரு நாள் கருடன் தரிசனத்துக்கும் ஒவ்வொரு பலன் உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை கருடனை வழிபட்டால், நோய்கள், பாவங்கள் மனக்குழப்பங்கள் நீங்கும்.
திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் கருடனை வழிபட்டால் பெண்களுக்கு அழகு உண்டாகும். பகை விலகும். குடும்ப சிக்கல்களுக்கு விடை கிடைக்கும்.
புதன், வியாழன் கிழமைகளில் வழிபட்டால், எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும்.
பகைவர்கள் வைத்த சூனியம் நீங்கும். வெள்ளி, சனிக்கிழமைகளில் வழிபட்டால் ஆயுள் கெட்டியாகும்.
எந்த விஷயத்திலும் துணிச்சல் உண்டாகும். தன்னம்பிக்கை, ஆர்வம் அதிகரிப்பதால் செல்வம் பெருகும்.
இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ள கருடன், பெருமாளுக்கு செய்யும் கருட சேவையால் மேலும் சிறப்பு பெறுகிறார்.
வைணவத் தலங்களில் விழா நாட்களிலும், பிரம்மோற்சவத்தின் போதும் திருமால் எத்தனையோ விதமான வாகனங்களில் எழுந்தருளினாலும் கருட வாகனத்தில் வரும் போது, பக்தர்களால் அதிகம் ஆராதனை செய்யப்படுகிறார்.
- மேலும் கருடனின் பார்வை நம் மீது பட்டாலே போதும், நாம் எடுத்த செயல்கள் எல்லாம் வெற்றிபெறும்.
- கருடனின் பார்வைக்கு, “சூட்சும திருஷ்டி” என்று பெயர்.
ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் கருடன் பிறந்தார்.
எனவே சுவாதி நட்சத்திர நாட்களில் கருடனை வழிபட்டால், கன்னிப் பெண்களுக்கு நல்ல கணவன் எளிதில் கிடைப்பார். குழந்தை பாக்கியம் உண்டாகும்.
ஆலயங்களில் முக்கிய திருவிழாக்கள் நடக்கும் போது மேலே கருடன் பறப்பதை பார்த்திருப்பீர்கள்.
அப்படி கருட தரிசனம் கிடைக்கும் போது கை கூப்பி வணங்க தேவை இல்லை.
மனதுக்குள் கருடன் அருள் பெறும் மந்திரங்களை சொல்லி வழிபட்டால் போதும்.
மேலும் கருடனின் பார்வை நம் மீது பட்டாலே போதும், நாம் எடுத்த செயல்கள் எல்லாம் வெற்றிபெறும்.
கருடனின் பார்வைக்கு, "சூட்சும திருஷ்டி" என்று பெயர்.
அந்த பார்வை பட்டால் உங்களை எந்த தீய சக்திகளும், திருஷ்டிகளும், தீ வினைகளும் நெருங்காது.
எனவே கருடனை கண்டால் மனதை ஒருமுகப்படுத்தி தரிசனம் செய்யுங்கள்.
- கருடனின் அம்சமாக அவதரித்தவர் பெரியாழ்வார்.
- ஸ்ரீவில்லிப்புத்தூரில் வசித்த பெரியாழ்வாரின் மகளாக அவதாரம் எடுத்தவர் ஸ்ரீ ஆண்டாள்.
கருடன் இந்திரலோகத்தில் இருந்து அமிர்தத்தை எடுத்து வந்து தன் தாய் வினதையின் அடிமைத் தனத்தை நீக்கினார்.
அந்த தாயின் அருளால் தான் பெருமாளின் வாகனமாக கருடன் திகழ்கிறார்.
இவருக்கென்றே "கருட பஞ்சமி" என்ற பண்டிகையும் உள்ளது.
சகோதரர்களின் நலனுக்காக பெண்களால் இப்பண்டிகைக் கொண்டாடப்படுகிறது.
கருடனின் அம்சமாக அவதரித்தவர் பெரியாழ்வார்.
ஸ்ரீவில்லிப்புத்தூரில் வசித்த பெரியாழ்வாரின் மகளாக அவதாரம் எடுத்தவர் ஸ்ரீ ஆண்டாள்.
பெரியாழ்வார் தன் மகள் ஆண்டாளை ரங்கநாதருக்கு திருமணம் செய்து கொடுத்த போது மாப்பிள்ளை அருகில் நின்று கொண்டு தாரை வார்த்துக் கொடுத்தாராம்.
இதன் அடிப்படையில் பெரியாழ்வாரின் அம்சமான கருடாழ்வார் பெருமாள் அருகிலேயே இருக்கிறார் என்பார்கள்.
இதனால் தான் வைணவத் தலங்களில் கருட கொடி அருகில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து கருடனை தரிசனம் செய்த பிறகு, பெருமாளையும், தாயாரையும் தரிசிப்பதை சம்பிரதாயமாக வைத்திருக்கிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்