search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    துளசியை பறிக்கும்போது செய்ய வேண்டியவை!
    X

    துளசியை பறிக்கும்போது செய்ய வேண்டியவை!

    • துளசியை பறிக்கும்போது, அதற்குரிய ஸ்லோகத்தை சொல்லியபடி பறிப்பது மிகவும் நல்லது.
    • துளசி பறிக்கும் போது நான்கு இலைகளும், நடுவில் துளிரும் உள்ளதையும் சேர்த்து பறிக்க வேண்டும்.

    துளசியை எடுக்கும் போது பயப்பக்தியுடன் பறிக்க வேண்டும்.

    அதிகாலையில் நீராடி சந்தியா வந்தனம் செய்து, எல்லாவித அனுஷ்டானங்களையும் முடித்த பிறகே துளசி இலையை பறிக்க வேண்டும்.

    துளசியை பறிக்கும்போது, அதற்குரிய ஸ்லோகத்தை சொல்லியபடி பறிப்பது மிகவும் நல்லது.

    துளசி பறிக்கும் போது நான்கு இலைகளும், நடுவில் துளிரும் உள்ளதையும் சேர்த்து பறிக்க வேண்டும்.

    துளசிச் செடியில் பழையது, புதியது என்ற நிலை எதையும் பார்க்க முடியாது. ஆகையால் நாம் பறிக்கும் ஒவ்வொரு துளசியும் பூஜைக்கு உகந்ததாகும்.

    ஆனால் அசுத்தமாக இருக்கும் போது துளசிச் செடி பக்கமே போகக்கூடாது. பவுர்ணமி, அமாவாசை, துவாதசி, மாதப்பிறப்பு, வெள்ளி, செவ்வாய் ஆகிய நாட்களில் துளசியைப் பறிக்கக் கூடாது.

    உடலில் எண்ணைத்தேய்த்துக் கொண்டிருக்கும் போதும் துளசியைப் பறிக்க கூடாது. மதியம், இரவு மற்றும் சந்தியா நேரத்திலும் துளசியைப் பறிக்கக்கூடாது.

    எப்போதும் தேவைக்கு ஏற்ப துளசி எடுப்பது நல்லது.

    விஷ்ணு பூஜை, பிரதிஷ்டை, தானம், விரதம் மற்றும் பித்ருகாரியங்களுக்கு துளசியை அவசியம் பயன்படுத்த வேண்டும்.

    துளசி கலந்த தண்ணீரில் நீராடினால் புண்ணியம் கிடைக்கும். மரணத்தின் விளிம்பில் இருப்பவர்கள் துளசி தீர்த்தம் உட்கொண்டால் விஷ்ணு லோகம் அடைவார்கள் என்பது நம்பிக்கை.

    ஹோமத்தில் துளசி குச்சிகளை போட்டு வழிபட்டால் நினைத்தது நடக்கும்.

    Next Story
    ×