என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
- நாராயணன் என்ற பெயரில் நாரம் என்ற சொல் இருக்கிறது. நாரம் என்றால் தண்ணீர், தீர்த்தம் என்ற பொருள்கள் உண்டு.
- பெருமாள்கோவில்களில் தீர்த்தம் கொடுப்பது கூட அவரது பெயர் காரணமாகத்தான்.
நாராயணன் என்ற பெயரில் நாரம் என்ற சொல் இருக்கிறது. நாரம் என்றால் தண்ணீர், தீர்த்தம் என்ற பொருள்கள் உண்டு.
பெருமாள்கோவில்களில் தீர்த்தம் கொடுப்பது கூட அவரது பெயர் காரணமாகத்தான்.
நாரம் என்ற சொல்லுக்கு பிரும்ம ஞானம் என்ற பொருளும் உண்டு. இந்த உலக வாழ்வு நிலையற்றது, என் திருவடியே நிலையானது என்ற தத்துவத்தையும் அவரது பெயர் உணர்த்துகிறது.
நாராயணன் என்பதை நாரம்+அயணன் என பிரிக்கலாம். நாரம் என்றால் தீர்த்தம். அயணன் என்றால் படுக்கை உடையவன்.
பாற்கடலாகிய தீர்த்தத்தில் பாம்பணையில் படுத்திருப்பவன் என்பதே நாராயணன் என்ற சொல்லுக்குப் பொருள். நாராயணனின் நாமத்தை அதிகமாக உச்சரிப்பவர் நாரதர்.
நாராயண நாராயண என்று உச்சரித்தபடியே தான் அவர் சகல லோகங்களுக்கும் செல்வார்.
இவர் தோன்றுவதற்கு முன், இந்த உலகில் தண்ணீர் என்பதே குறைவாக இருந்ததாம். அவரது பிறப்புக்கு பின்தான் தண்ணீர் அதிகரித்தது. இதன் காரணமாக அவர் நாரதர் என்ற பெயர் பெற்றார் என்பர்.
நாரதர் போல நாமும் நாராயணன் பெயரை அதிகம் உச்சரித்தால் வெள்ளமாக அருள் மழை பெற முடியும். அதுவும் புரட்டாசியில் உச்சரித்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.
- அவள் மனம் போலவே அரங்கன் அவளுக்கு மாலை சூடி தன்னுடன் ஐக்கியம் செய்துகொண்டார்.
- புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு அக்கார வடிசல் செய்து வணங்கினால் பெருமாளிடம், நாம் என்ன கேட்டாலும் கிடைக்கும்.
''மாதவா, என் மனதுக்கு பிடித்த அரங்கனே எனக்கு மணவாளனாக வந்தால் நூறு அண்டா வெண்ணையும், நூறு அண்டா அக்காரவடிசலும் உனக்கு நிவேதனமாகத் தருகிறேன்...'' திருமாலிருஞ்சோலை அழகரிடம் ஆண்டாள் இப்படி வேண்டிக் கொண்டாள்.
அவள் மனம் போலவே அரங்கன் அவளுக்கு மாலை சூடி தன்னுடன் ஐக்கியம் செய்துகொண்டார்.
ஆண்டாள், தான் வேண்டியபடி நூறு அண்டா வெண்ணெயும், நூறு அண்டா அக்காரவடிசலும் பகவானுக்குக் கொடுத்தாளா, இல்லையா...? சுமார் முந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு சந்தேகம் ராமானுஜருக்கு வந்தது.
உடனே அந்த மகான் என்ன செய்தார் தெரியுமா? நூறு அண்டா வெண்ணெயும், நூறு அண்டா அக்காரவடிசலும் நிவேதனம் செய்து அழகரை ஆராதனை செய்தார்.
ஆண்டாளின் வேண்டுதலை தானே நிறைவேற்றினார்.
அதனால், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அவர் வந்தபோது, வாசலுக்கே ஓடிவந்து, வாருங்கள் அண்ணா...! என்று கூப்பிட்டாளாம் ஆண்டாள்.
இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் வருடத்துக்கு ஒருமுறை இந்த சம்பவத்தை உத்சவமாக கொண்டாடுகிறார்கள்.
அன்று அக்காரஅடிசல் பிரசாதமும் உண்டு. அக்காரை என்றால் சர்க்கரை.
அடிசல் என்பது குழைய வெந்த சாதம். பார்க்க சர்க்கரைப் பொங்கல் போல இருந்தாலும் சர்க்கரைப் பொங்கலுக்கும் இதற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.
புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு அக்கார வடிசல் செய்து வணங்கினால் பெருமாளிடம், நாம் என்ன கேட்டாலும் கிடைக்கும்.
- ஸ்ரீசுதர்சன அஷ்டோத்தரம் சொல்லி, அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும்.
- இவ்விதமான வழிபாட்டினால் பல்வேறு நன்மைகளைப் பெறலாம். வாழ்க்கையில் எந்த விதமான கஷ்டமும் ஏற்படாது.
தினசரி அதிகாலையில் குளித்து முடித்து, தூய்மையுடன், நித்திய கர்மாக்களை முடித்து விட்டு, ஸ்ரீசுதர்சன யந்திரம் முன் உட்கார்ந்து கொண்டு ஸ்ரீசுதர்சனரை பிரார்த்தனை செய்ய வேண்டும்.
ஸ்ரீசுதர்சன அஷ்டோத்தரம் சொல்லி, அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும்.
இவ்விதமான வழிபாட்டினால் பல்வேறு நன்மைகளைப் பெறலாம். வாழ்க்கையில் எந்த விதமான கஷ்டமும் ஏற்படாது.
எடுத்த காரியம் யாவிலும் வெற்றி கிடைக்கும்.
ஆபத்துகளிலிருந்து விடுபடுவதும், தீராத நோய்கள் நீங்குவதும், சத்ரு நாசமும், சர்வஜன வசியமும், இஷ்ட காரிய சித்தியும் இந்த வழிபாட்டினால் ஏற்படும்.
இதைப்போலவே, பக்தி சிரத்தையுடன் நித்ய கர்மானுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, சுத்தமான இடத்திலோ அல்லது பூஜை அறையிலோ அமர்ந்து, ஒரு பஞ்சபாத்திரத்தில் உள்ள புனித நீரில் சில துளசி தளங்களைச் சேர்த்து, வலது கரத்தால் மூடிக்கொண்டு, வலிமை மிக்க சுதர்சன மகா மந்திரத்தை ஆயிரத்தெட்டு முறைக்கு மேல் ஜபித்து பகவான் மீது நம்பிக்கை கொண்டு தீர்த்தத்தை நோயுற்றவர்களுக்குக் கொடுத்தால் நோய் தீர்வதை காணலாம்.
ஸ்ரீசுதர்சன மகாமந்திரம் சர்வ வல்லமை பெற்றது.
உடனே பலன் தரக்கூடியது. எனவே தக்க பெரியோர்களிடம் உபதேசம் பெற்று, அங்க நியாச, கர நியாச, தியான முறைகளோடு சரியான உச்சரிப்புடன் முறைப்படி ஜபிக்க வேண்டியது அவசியம்.
ஸ்ரீசுதர்சன மகா மந்திரத்தை தானே ஜபிப்பதும், மற்றவர் ஜபிக்கக் கேட்பதும், சுதர்சன யாகம் நடக்குமிடத்தில் இருப்பதும் மிகவும் புண்ணியம் தரக்கூடியது.
யாகத்துக்குரிய திரவியங்களைக் கொடுக்கலாம்.
இயலாதவர்கள் பொருளாகவோ, பணமாகேவா யாகத்துரியவர்களிடம் சேர்ப்பிப்பதும் மிகுந்த புண்ணியம் தரும்.
ஏராளமான நற்பலன்களையும் அளிக்கும்.
- யந்திர பூஜையைக் கடைப்பிடிப்போர், ஸ்ரீமன் நாராயண மூர்த்தியின் தத்துவத்தை மகா யந்திரங்களில் தியானித்து வழிபடுகிறார்கள்.
- மனதை செலுத்தி, அதற்கு திருமஞ்சனம், அர்ச்சனை முதலியவற்றால் வழிபட்டு பயன் பெறுகிறார்கள்.
சுதர்சன சக்கர யந்திர அமைப்பு இரு வகையானது. செப்புத் தகட்டில் வரி வடிவிலேயே முக்கோணம், ஷட்கோணம் போன்ற கோண அமைப்புகளில் ஸ்ரீசுதர்சன வடிவை வழிபடலாம். இது ஒரு முறை.
இன்னொன்று சக்கரத்தில் ஸ்ரீசுதர்சனரின் வடிவை உள்ளடக்கிய விக்கிரக ஆராதனை வழிபாடு.
இந்த இரண்டு வகைகளிலும் சுதர்சனரை வழிபட இயலாமல் போனால், சுதர்சனரை மனக் கண்ணில் இருத்தி, அவரின் பல்வேறு மந்திரங்களை தூய்மையான மனதுடன் சொல்லி வழிபடலாம்.
உடலும் உள்ளமும் சுத்தமான சூழ்நிலையில் இந்த மந்திரங்களை உச்சரிப்பது, நிறைவான பலனை அளிப்பதோடு மனதுக்கு அமைதியையும் கொடுக்கும்.
பகவான் தன்னை வழிபடும் பக்தர்களுக்கு அருள் புரிவதற்காக, சிலை வடிவம் தாங்கி இந்த பூலோகத்தில் தோன்றினார்.
விக்ரக வழிபாடு முறையில் பகவானை நன்கு அலங்கரித்து அவனது அற்புற அழகிலே லயித்து, அவனது ஆயிரத்தெட்டு நாமாக்களினால் அர்ச்சித்து, ஆராதித்து ஆத்ம சாந்தியைப் பெறுகிறார்கள்.
அதுபோல், பகவான் மந்திர ரூபமாகவும், யந்திர ரூபமாகவும் உருவெடுத்தான். சிலை உருவை வீட்டில் வைத்து வழிபட இயலாதவர்களும் தன்னை வழிபட ஏதுவாக யந்திர உருவம் தாங்கினான் பகவான்.
அதனால், பக்தி சிரேஷ்டர்கள் பகவானை விக்ர ரூபமாகவும், மகா யந்திரத்தின் ரூபமாகவும், சாளக்கிராம ரூபமாகவும் வழிபடுகிறார்கள்.
யந்திர பூஜையைக் கடைப்பிடிப்போர், ஸ்ரீமன் நாராயண மூர்த்தியின் தத்துவத்தை மகா யந்திரங்களில் தியானித்து வழிபடுகிறார்கள்.
மனதை செலுத்தி, அதற்கு திருமஞ்சனம், அர்ச்சனை முதலியவற்றால் வழிபட்டு பயன் பெறுகிறார்கள்.
மகாசுதர்சன யந்திரத்தை முறையாக வழிபடுவோர், எவ்விதமான இன்னல்களுமற்று, சகல சவுபாக்கியங்களுடன், இன்பமாக வாழ்கிறார்கள்.
ஸ்ரீசுதர்சன உபாசனை வீரம் அளிப்பது. தீர்க்க முடியாத நோய்களும், சுதர்சனரின் கடாட்சத்தால் நீங்கப் பெறும்.
போர்முனையில் வெற்றித் திருமகளின் கடாட்சத்தைப் பெறுவதே, தமது லட்சியமாகக் கொண்ட வீரவாழ்வு வாழ்ந்த பல மாமன்னர்கள், சுதர்சன உபாசனை செய்தவர்களாகவே இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- புரட்டாசி மாதம் தெய்வீக தன்மை நிறைந்த மாதமாகவும் கருதப்படுகிறது.
- கன்னி ராசியில் சஞ்சரிப்பதால் இதனை ‘கன்னியா மாதம்’ என்றும் அழைப்பர்.
தமிழ் மாதங்கள் மொத்தம் பன்னிரெண்டு. அதில் பெருமாளுக்கு உகந்த மாதம் என்றால், அது புரட்டாசி மாதம் தான். புரட்டாசி மாதம் தமிழ் மாதங்களில் ஆறாவதாக இருக்கும் மாதமாகும். புரட்டாசி மாதம் என்றதுமே நம் அனைவரின் நினைவுக்கும் வருவது திருமாலின் 'கோவிந்தா' என்னும் திருநாமமே.
புரட்டாசி மாதம் தெய்வீக தன்மை நிறைந்த மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் சூரியன், கன்னி ராசியில் சஞ்சரிப்பதால் இதனை 'கன்னியா மாதம்' என்றும் அழைப்பர். புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதிலும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பானது ஆகும்.
பெருமாள் வழிபாட்டுக்குரிய இந்த புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகளை தவிர்த்து, சைவ உணவை மட்டுமே உண்பார்கள். அதுதான் சிறந்ததும் கூட. இந்த மாதத்தில் ஏதேனும் ஒரு சனிக்கிழமைகளில் தங்களால் இயன்ற அளவுக்குப் பெருமாளுக்குப் படையல் போட்டு, துளசி தீர்த்தம் வைத்து 'கோவிந்தா.. கோவிந்தா..' என்று பெருமாளை அழைத்து வழிபடுவது வழக்கம். முடிந்தால் இந்த மாதத்தில் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை வழிபட்டு வந்தால் மிகச் சிறப்பான பலனைப் பெற முடியும்.
வழிபாட்டு முறைகள்
புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் ஏதேனும் ஒரு சனிக்கிழமையில் பெருமாளுக்கு நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும். அது எந்த சனிக்கிழமையாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து வீடு மற்றும் பூஜை அறையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
பூஜை அறையில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் மலர் சூடி அலங்காரம் செய்யுங்கள். உங்களிடம் பெருமாள் படமாகவோ அல்லது விக்கிரகமாகவோ இருந்தால், அதனை நன்கு சுத்தம் செய்து பூ வைத்து பெருமாளை அலங்கரிப்பது உத்தமம்.
பின்பு வீட்டில் இருக்கும் காமாட்சி விளக்கு, குத்து விளக்கில் ஏதாவது ஒன்றை ஏற்றவும். பின்பு பெருமாளுக்கு நைவேத்தியமாக செய்த உணவை, படைக்க வேண்டும். அந்த படையலில் மாவிளக்கு, துளசி தீர்த்தம் இருப்பது அவசியம்.
பச்சரிசி மற்றும் வெல்லம் கலந்து செய்த மாவிளக்கில் நெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். மா விளக்கு போடுவது பெருமாளுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். பின் சர்க்கரை பொங்கல், வடை, பாயசம் மற்றும் பல உணவுகளை தயாரித்து பெருமாளுக்கு படைக்கலாம்.
வீட்டில் இருக்கும் அனைவரும் பெருமாளின் நாமத்தை நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும். பெருமாளின் உருவத்திற்கு, கற்பூர தீபாராதனை மற்றும் தூபம் காட்டி வழிபாடு செய்ய வேண்டும். பின்னர் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் துளசி தீர்த்தத்தை கொடுத்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
தொடர்ந்து நைவேத்திய பிரசாதத்தையும் அனைவருக்கும் வழங்கலாம். இவ்வாறு வழிபடுவதால் பெருமாளின் முழு அருளும் நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம்.மேலும் வாழ்க்கையில் அனைத்து செல்வங்களும் கிடைத்து, நிறைவான வாழ்க்கை அமையும்.
- 25-ந்தேதி தேய்பிறை அஷ்டமி
- 30-ந்தேதி பிரதோஷம்.
24- ந்தேதி (செவ்வாய்)
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை.
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல் .
* திருவைகுண்டம் வைகுண்டபதி பால் அபிஷேகம்.
* சமநோக்கு நாள்.
25-ந்தேதி (புதன்)
* தேய்பிறை அஷ்டமி, சிவாலயங்களில் பைரவர் சிறப்பு அபிஷேகம்.
* திருத்தணி முருகப்பெருமான் பால் அபிஷேகம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.
* மேல்நோக்கு நாள்.
26-ந்தேதி (வியாழன்)
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சனம்.
* சமநோக்கு நாள்.
27-ந்தேதி (வெள்ளி)
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, தங்கப்பல்லக்கில் புறப்பாடு.
* சமயபுரம் மாரியம்மன், இருக்கன்குடி மாரியம்மன், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில்களில் அலங்கார திருமஞ்சனம்.
* மேல்நோக்கு நாள்.
28-ந்தேதி (சனி)
* சர்வ ஏகாதசி.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன் னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல் .
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்,
29-ந்தேதி (ஞாயிறு)
* திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
30-ந்தேதி (திங்கள்)
* பிரதோஷம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* கீழ்திருப்பதி கோவிந்த ராஜப்பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சனம்
* கீழ்நோக்கு நாள்.
- உன்னதம் என்றால் உயர்வு, மேன்மை என்பது பொருள்.
- திருத்தலங்களிலே உயர்வான, மேன்மைமிகுந்த திருத்தலமாக திகழ்கிறது.
கோவில் தோற்றம்
உன்னதம் என்றால் உயர்வு, மேன்மை என்பது பொருள். அவ்வகையில் உலகில் உள்ள திருத்தலங்களிலே உயர்வான, மேன்மைமிகுந்த திருத்தலமாக திகழ்கிறது, உன்னதபுரம் என்னும் மெலட்டூர். வெட்டாற்றின் கரையில் உள்ள இத்திருத்தலம் 'சப்த சாகர ஷேத்திரம்' என்றும் போற்றப்படுகிறது.
அன்னை பராசக்தி மகிஷாசுரனை வதம் செய்வதற்காக ஏழு சக்திகளாக உருவெடுத்தாள். அந்த ஏழு சக்திகளே 'சப்த மாதாக்கள்' ஆவர். அந்த சப்தமாதர்களும் இங்கு வந்து ஈசனை வழிபட்டு, வரங்கள் பல பெற்றுள்ளனர். ஆதலால் இத்தலம் ஆதியில் 'சிவசக்தி பீட'மாகத் திகழ்ந்துள்ளது.
தேவலோக தச்சனான மயனால், உன்னத புரீஸ்வரர் ஆலயம் அமைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நகரின் எல்லைகளில் உள்ள பிற தெய்வங்களையும் தேச தச்சனே நிறுவியதாக சொல்கிறார்கள். இதனால் மேலான ஊர் என்னும் பொருளில் 'மேலத்தூர்' என்று அழைக்கப்பட்டு, அதுவே மருவி 'மெலட்டூர்' என்று ஆனதாக கூறப்படுகிறது.
தல வரலாறு
ஈசனிடம் வரம் பெற்ற கோமுகாசுரன், பிரம்மனது வேதச் சுவடிகளை பறித்துக்கொண்டு, கடலில் சென்று ஒளிந்துகொண்டான். திருமால் மச்ச அவதாரம் எடுத்து, கோமுகாசுரனிடம் சண்டையிட்டு வேதங்களை மீட்டார்.
மிகப்பெரிய மீன் வடிவில் இருந்த திருமாலால், கடல் கலங்கி கடல்வாழ் உயிரினங்களுக்கு துன்பம் நேர்ந்தது. எனவே சிவபெருமான் மீனவராக வந்து, ஏழு கடலையும் மறைக்கும் படியான வலையை வீசி, மீன் வடிவில் இருந்த திருமாலை பிடித்தார்.
இதையடுத்து அவரின் வலிமை குறைந்தது. அப்போது ஈசன் உருவாக்கிய திருத்தலமே, உன்னதபுரம் என்று தல புராணம் தெரிவிக்கிறது.
மகாவிஷ்ணு ஒரு சமயம் கயிலை சென்றபோது, அவரை நந்தியம்பெருமான் தடுத்து நிறுத்தினார். இதனால் அவர் நந்தியை கதாயுதத்தால் தாக்கினார். இதனால் கோபம் கொண்ட நந்தி, மகாவிஷ்ணுவை சாதாரண மனிதனாக பிறக்கும்படியும், அவரது வாகனமான கருடனை சாதாரண பறவையாக பிறக்கும்படியும் சபித்தார்.
கருட பகவான், உன்னதபுரம் திருத்தலத்தில் உள்ள சிவகங்கை தீர்த்தத்தில் நீராடி, இத்தலபெருமானை வழிபட்டு, சாப நிவர்த்தி பெற்றார். பின் தனது பெயரில் கருட தீர்த்தம் உண்டாக்கியும் வழிபாடு செய்தார்.
மகாவிஷ்ணு ராம அவதாரத்தின்போது இத்தலம் அடைந்து, சிவகங்கை தீர்த்தத்தில் நீராடி, பெருமானை வழிபட்டு சாப நிவர்த்தி அடைந்தார்.
ஆலயத்தின் எதிரே சிவகங்கை தீர்த்தம் பிரமாண்டமாக அமையப்பெற்றுள்ளது. முதலில் தோரணவாயில் நம்மை வரவேற்கிறது. அதையடுத்து கிழக்கு முகம் கொண்ட ஐந்து நிலை ராஜகோபுரம் அமைந்துள்ளது. உள்ளே நேராக கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளது.
அதை அடுத்து முகமண்டபம், இடை மண்டபம் இருக்கின்றன. தொடர்ந்து அர்த்த மண்டபம் மற்றும் கருவறை அமைந்துள்ளது. கருவறையிலே சுயம்பு நாதனாக எழில் மிகு கோலத்தில் உன்னதபுரீஸ்வரர் அருள்காட்சி தருகிறார்.
முக மண்டபத்தின் வடக்கு திசையில் தென் திசை பார்த்தபடி, சிவப்பிரியாம்பிகா தேவி அருள்பாலிக்கிறாள். கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அவர் அருகே தல விருட்சமாக வன்னி மரம் உள்ளது.
இரண்டு கால பூஜை நடைபெறும் இந்த ஆலயம், தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
திருக்கருகாவூரில் இருந்து திட்டை குருஸ்தலம் செல்லும் வழியில், சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, மெலட்டூர் திருத்தலம்.
- 51 அட்சரங்களை மையமாகக் கொண்டு 51 சக்தி கோவில்கள் எழுப்பப்பட்டுள்ளன.
- சக்தியானவள் ‘அட்சர சுந்தரி’ என்றும் போற்றப்படுகிறாள்.
படைப்பு கடவுள் என்று அறியப்படும் பிரம்மதேவன், தன்னுடைய படைப்புத் தொழிலுக்கு உதவியாக இருக்க நான்கு பேரை தோற்றுவித்தார். சனத்குமாரர், சனகர், சதானந்தர், சனாதனர் ஆகிய அந்த நால்வரும், பிரம்மபுத்திரர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். ஆனால் இவர்கள் நால்வரும் தோன்றிய உடனேயே ஆன்மிக அறிவில் ஆழ்ந்து, நித்திய பிரம்மச்சரிய வாழ்வை மேற்கொண்டனர்.
இவர்களில் முதல்வரான சனத்குமாரர், ஒரு முறை சதச்ருங்க மலை மீது அமர்ந்து, சிவபெருமானை நோக்கித் தவம் செய்தார். அவரது தவத்தால் மகிழ்ந்த ஈசன், ரிஷபாரூடராக அங்கே தோன்றினார். ஆனாலும் ஆழ்ந்த தியானம் காரணமாக சனத்குமாரர், கண் விழித்துப் பார்க்கவில்லை.
இதனால் அவரை எழுப்ப சிவபெருமான் தன் கையில் இருந்த டமருகத்தை (உடுக்கை) வேகமாக அசைத்தார். அந்த உடுக்கையில் இருந்து 'டம்.. டம்..' என்று எழுந்த நாதமே, சமஸ்கிருதத்தின் 'அ முதல் க்ஷ' வரையான 51 எழுத்துக்கள் ஆகின என்றும், மேலும் அந்த எழுத்துக்கள் பாரத தேசத்தின் 51 இடங்களில் எரிநட்சத்திரம் போல தெறித்து விழுந்தன என்றும் ஆன்மிக சான்றோர்கள் நம்புகின்றனர்.
இந்த 51 அட்சரங்களை மையமாகக் கொண்டு 51 சக்தி கோவில்களும் எழுப்பப்பட்டிருக்கின்றன. இதனால் சக்தியானவள், 'அட்சர சுந்தரி' என்றும் போற்றப்படுகிறாள். 51 அட்சரங்களுக்கான தேவிகளின் பெயர்களும் குறிப்பிடப்படுகின்றன. அவற்றை இங்கே பார்க்கலாம்.
* அமிர்தா தேவி
* ஆகர்ஷணீ தேவி
* இந்திராணி தேவி
* ஈஷிணி தேவி
* உமா தேவி
* ஊர்த்வகேஷி தேவி
* ருத்திதாயீ தேவி
* ரூகார தேவி
* லுகார தேவி
* லூகார தேவி
* ஏகபாத தேவி
* ஐஷ்வர்யாத்மிகா தேவி
* ஓம்கார தேவி
* ஔஷதா தேவி
* அம்பிகா தேவி
* அக்ஷரா தேவி
* காராத்ரி தேவி
* கண்டிதா தேவி
* காயத்ரி தேவி
* கண்டாக்ர்ஷிணி தேவி
* டார்ணா தேவி
* சாமுண்டா தேவி
* சயார்தா தேவி
* ஜயா தேவி
* ஜங்காரிணி தேவி
* ஞானரூபா தேவி
* டங்கஹஸ்தா தேவி
* டங்காரிணி தேவி
* டாமரி தேவி
* டங்காரிணீ தேவி
* ணார்ணீ தேவி
* தமஸ்யா தேவி
* ஸ்தாண்வீ தேவி
* தாக்ஷாயணி தேவி
* தத்யா தேவி
* நார்யா தேவி
* பார்வதி தேவி
* பட்காரிணி தேவி
* பந்தினி தேவி
* பத்ரகாளி தேவி
* மகாமாயா தேவி
* யக்ஷஸ்வினி தேவி
* ரக்தா தேவி
* லம்போஷ்டி தேவி
* வரதா தேவி
* திரு தேவி
* ஷண்டா தேவி
* சரஸ்வதி தேவி
* ஹம்ஸவதி தேவி
* பந்தமோகினி தேவி
* க்ஷமா தேவி
- சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
- சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு புரட்டாசி-8 (செவ்வாய்க்கிழமை)
பிறை: தேய்பிறை.
திதி: சப்தமி இரவு 6.49 மணி வரை. பிறகு அஷ்டமி.
நட்சத்திரம்: மிருகசீரிஷம் நாளை விடியற்காலை 4.12 மணி வரை. பிறகு திருவாதிரை.
யோகம்: சித்த, மரணயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம். ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் புறப்பாடு. திருநாறையூர் ஸ்ரீசித்தாதீஸ்வரர் திருக்கோவிலில் ஸ்ரீசண்முகருக்கு சத்ரு சம்ஹார அர்ச்சனை. திருக்கோளூர் ஸ்ரீவைத்த மாநிதிப் பெருமாள் குமுதவல்லி கோளூர் வள்ளி தாயார் திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பொறுப்பு
ரிஷபம்-ஜெயம்
மிதுனம்-கடமை
கடகம்-தேர்ச்சி
சிம்மம்-லாபம்
கன்னி-வரவு
துலாம்- சுகம்
விருச்சிகம்-ஆக்கம்
தனுசு- கவனம்
மகரம்-கடமை
கும்பம்-பெருமை
மீனம்-சாந்தம்
- கோதுமையில் செய்த ரொட்டியைப் பொடி செய்து தயாரிக்கப்பட்ட பலகாரம், வாழைப்பழம் ஆகியவற்றை படைக்க வேண்டும்.
- ஆஞ்சநேயரின் சரீரத்தில் தைலம் கலந்த செந்தூரத்தைப் பூச வேண்டும். இதனால் விரும்பிய பலன்களைப் பெறலாம்.
ஆஞ்சநேயரை எல்லா நாட்களிலும் வழிபடலாம்.
அதற்கு வசதிப்படாதவர்கள் புதன், வியாழன், சனி இம்மூன்று கிழமைகளில் வழிபடலாம்.
ஸ்ரீஆஞ்சநேயரின் திருவுருவப் படத்தையோ அல்லது ராமர் பட்டாபிஷேகத்தையோ பூஜையில் வைத்து, அவருக்கு நைவேத்தியமாக அவரவர் வசதிக்கேற்ப பழங்களையும், வடை போன்ற இன்ன பிறவற்றையும் சமர்ப்பிக்கலாம்.
துளசி மாலையும், வெற்றிலைச்சுருள் மாலையும் ஆஞ்சநேயருக்கு விசேஷமானவை.
பூஜையை ஆரம்பிக்கும்போது 'ஸ்ரீராமஜெயம்' அல்லது "ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம" என்ற மந்திரத்தை 54 முறை அல்லது 108 முறை தியானிக்க வேண்டும்.
அதன்பிறகு தமது பிரார்த்தனையை சொல்லி நாமாவளி மற்றும் மலர் வழிபாட்டினால் அர்ச்சனை செய்ய வேண்டும். கவசம் மற்றும் ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்ய வேண்டும்.
ஓம் ஹம் ஹனுமதே நம... என்ற மந்திரத்தை சொல்லி அனுமனின் தலையில் துளசிகளும் வாசனை மலர்களும் வைத்தால் கஷ்டங்கள் யாவும் பறந்து போகும்.
அனுமனின் ஆரத்தியின்போது 5, 11, 50, 108 நெய் நிரப்பிய சிவப்பு திரியைப் பயன்படுத்த வேண்டும்.
கோதுமையில் செய்த ரொட்டியைப் பொடி செய்து தயாரிக்கப்பட்ட பலகாரம், வாழைப்பழம் ஆகியவற்றை படைக்க வேண்டும்.
ஆஞ்சநேயரின் சரீரத்தில் தைலம் கலந்த செந்தூரத்தைப் பூச வேண்டும். இவ்வாறு செய்வதால் விரும்பிய பலன்களைப் பெறலாம்.
ஆஞ்சநேய விரதம் இருந்தால் பிரிந்து சென்ற கணவன்மனைவி வாழ்வில் ஒற்றுமையாக இருப்பர். பகை மாறி வெற்றி உண்டாகும்.
தாய், தந்தை, அண்ணன், தம்பி உறவு பலம்பெறும். ஆத்ம பலம், சம்பத் பலம் ஆகிய ஆறு வகையான பலன்களும் நிரந்தரமாக கிடைக்கப்பெறுவர்.
அனுமன் விரதம் இருப்பவர்கள் குபேரனுக்கு இணையாக வாழ்வார்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
சகல வியாதிகளும் விலகும். மோட்சம் பெறலாம்.
- கோவிலுக்கு வரமுடியாதவர்கள் கூட தூரத்தில் இருந்தபடியே கோபுர தரிசனம் செய்வது இறைவனை வணங்குவதற்கு சமமாகும்.
- எனவே தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள்.
விஷ்ணு கோவிலில் நுழைந்தவுடன் நமது கண்களில் பிரமாண்டமாக தெரியும் கோபுரம் ராஜகோபுரம் எனப்படும். அதனைத்தெய்வ வடிவமாக எண்ணி வணங்கி விட்டுத்தான் கோவிலுக்குள் நுழைய வேண்டும்.
கோவிலுக்கு வரமுடியாதவர்கள் கூட தூரத்தில் இருந்தபடியே கோபுர தரிசனம் செய்வது இறைவனை வணங்குவதற்கு சமமாகும். எனவே தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள்.
கோவிலில் உள்ளே நுழைந்தவுடன் தெரிவது பலிபீடம் ஆகும். அதன் அருகில் சென்று கீழே விழுந்து நமது உடலில் உள்ள காமம். கோபம், பேராசை, பற்று, அகங்காரம் ஆகியவற்றை அந்த இடத்தில் பலி கொடுத்து விட்டு இறைவனை வணங்க செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது.
அதற்கு அடுத்து இருப்பது துவஜஸ்தம்பம் அல்லது கொடிக்கம்பமாகும். இந்த கொடிக்கம்பத்தில் தான் கோவிலின் திருவிழாக்காலங்களில் கொடியேற்றி அதை ஊர் முழுவதும் தெரிவிப்பார்கள். அதற்கு அடுத்து பெருமாளின் வாகனமான கருடனின் மண்டபம் அமைந்துள்ளது.
இவரை வணங்கிய பின் மூலஸ்தானத்தில் உள்ள பெருமாளை ஒரே சிந்தனையுடன் வணங்க வேண்டும். அதன்பின் லட்சுமி, ராமர், கிருஷ்ணர், நரசிம்மர், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், சரஸ்வதி, ஆழ்வார்கள் ஆகியோரை தனித்தனியே வணங்க வேண்டும்.
கோவிலை விட்டு வெளியே வரும் போது சிறிது நேரம் உட்கார்ந்து இறைவா! நான் எனது பிரார்த்தனையை உன்னிடம் கூறிவிட்டேன், இதில் எனக்கு எது தேவை, எது தேவையில்லை என்பது உனக்கு தெரியும்.
அதன்படி வரம் கொடு என பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும், பின் மறுபடியும் கொடிக்கம்பத்திற்கு அருகில் சென்று வடக்கு நோக்கி தலை வைத்து பெண்களாக இருந்தால் இரண்டு கை, இரண்டு கால், தலை ஆகிய ஐந்து உறுப்புகள் தரையில் படும்படியாக பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்களாக இருந்தால் உடல் முழுவதும் தரையில் படும்படியாக சாஷ்டாங்க நமஸ்காரமும் செய்துவிட்டு வெளியில் வரவேண்டும்.
- மாலை வேளைகளில் ஊஞ்சல் சேவை நடைபெறும்.
- ஆறாவது நாள் இரவு யானை வாகனத்தில் பகவான் பவனி வருவார்.
ஐந்தாம் நாள் திருவிழா அன்று காலையில் மோகினி அவதார உத்சவம் நடைபெறும். இரவு எம்பெருமான் கருடாழ்வார் மீது பவனி வந்து அருட்காட்சி தந்து அருளுகிறார்.
கருட வாகனத்திற்கு வெண்பட்டுக் குடைகள் சமர்ப்பிக்கும் வழக்கம் இருந்து வருகிறது. ஆறு பெரிய குடைகளும், நான்கு சிறிய குடைகளும் சமர்ப்பிக்கப்படும்.
இக்குடைகள் சென்னையிலிருந்து திருமலைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
கருடோத்சவ தினத்தன்று மூலவருக்கு அணிவிப்பதற்காக விலை உயர்ந்த பட்டாடைகள் தயாரித்து ஒரு கண்ணாடிப் பெட்டியில் வைத்து தினசரி பூஜை செய்வர்.
காலை, மாலை இரு வேளைகளிலும், சின்ன சேஷவாகனம், பெரிய சேஷவாகனம், தங்கத் திருச்சி, ஹம்சவாகனம், முத்துப்பந்தல், கல்ப விருஷம், சர்வ பூபால வாகனங்கள், பல்லக்கு கருட சேர்வை, ஹனுமந்த வாகனம், சூரிய, சந்திரப்பிரபை வாகனம், திருத்தேர், குதிரை வாகனம் இப்படி பல வாகனங்களில் பெருமாள் திருவீதி உலா வருகிறார்.
குடை, சாமரம், மங்கள வாத்தியம் முதலியவற்றுடன் வடமொழி மறையும், தென் மொழி மறையும் பாராயணம் செய்ய பக்தர்களின் பஜனை புடை சூழ பிரம்ம உத்சவம் நடைபெறும். இத்திருவிழா காண்போரை இன்பக்கடலில் மூழ்கச் செய்யும்.
மாலை வேளைகளில் ஊஞ்சல் சேவை நடைபெறும்.
ஆறாவது நாள் இரவு யானை வாகனத்தில் பகவான் பவனி வருவார்.
இதற்கு முன்பாக வசந்த உத்சவம் நடைபெறும். வெள்ளை வஸ்திரங்களால் அலங்கரிக்கப்பட்டு குங்குமக் குழம்புடன் கூடிய சந்தனத்தை வாரி அள்ளி வழங்கிக் கொண்டு பவனி வருகிறார்.
தேர் திருவிழா அன்ற பகவான் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
திருவிழாவின் கடைசி தினமான திருவோணத்தன்று சுவாமி புஷ்கரணியில் சக்கரத்தாழ்வாருக்கு நீரோட்டம் நடைபெறும்.
பின் கொடியிறக்கம் (துவஜாவரோகணம்) நடைபெற்றுத் திருவிழா இனிதே நடைபெறுகிறது.
இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் திருமலையில் பிரம்ம உத்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்