search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • 24-ந்தேதி தேய்பிறை அஷ்டமி.
    • 28-ந்தேதி ஏகாதசி

    22-ந்தேதி (செவ்வாய்)

    * சஷ்டி விரதம்.

    * சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

    * திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாள். மூலவருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    23-ந்தேதி (புதன்)

    * திருநெல்வேலி காந்திமதி அம்மன் காலை அன்ன வாகனத்தில் பவனி.

    * வீரவநல்லூர் மரகதாம் பிகை, பத்தமடை மீனாட்சியம்மன் தலங்களில் திருவீதி உலா.

    * திருபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு,

    * மேல்நோக்கு நாள்.

    24-ந்தேதி (வியாழன்)

    * தேய்பிறை அஷ்டமி.

    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    * சமநோக்கு நாள்.

    25-ந்தேதி (வெள்ளி)

    * திருவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.

    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.

    * சமயபுரம் மாரியம்மன், இருக்கன்குடி மாரியம்மன் அலங்கார திருமஞ்சனம்.

    * மேல்நோக்கு நாள்.

    26-ந்தேதி (சனி)

    * திருநெல்வேலி காந்திமதி அம்மன் மாலை சிவபூஜை, இரவு சப்தாவர்ண பல்லக்கில் வீதி உலா.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன், பத்தமடை மீனாட்சியம்மன் தலங்களில் புறப்பாடு.

    * திருவரங்கம் நம்பெருமான், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள். மதுரை கூடலழகர் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.

    * கீழ்நோக்கு நாள்.

    27-ந்தேதி (ஞாயிறு)

    * வீரவநல்லூர் மரகதாம்பிகை, தென்காசி உலகம்மை தலங்களில் திருவீதி உலா.

    * திருபெரும்புதூர் மணவாள மாமுனிகள் உற்சவம் ஆரம்பம்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.

    * திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    * கீழ்நோக்கு நாள்.

    28-ந்தேதி (திங்கள்)

    * சர்வ ஏகாதசி.

    * திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

    * திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்

    * கீழ்நோக்கு நாள்.

    • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாடை தரிசனம்.
    • முருகர் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஐப்பசி-5 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: பஞ்சமி காலை 8.12 மணி வரை பிறகு சஷ்டி

    நட்சத்திரம்: மிருகசீர்ஷம் காலை 11.55 மணி வரை பிறகு திருவாதிரை

    யோகம்: சித்த, மரணயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், தென்காசி ஸ்ரீ உலகம்மை கோவில்களில் பவனி. உத்திரமாயூரம் ஸ்ரீ வள்ளலார் சந்நிதியில் ஸ்ரீ சந்திரசேகரர் புறப்பாடு குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமான் புறப்பாடு. குரங்கனி ஸ்ரீ முத்துமாலையம்மன் பவனி. கழுகுமலை, மருதமலை கோவில்களில் ஸ்ரீ முருகப்பெருமான் பவனி. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் காலை அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாடை தரிசனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஈகை

    ரிஷபம்-ஆசை

    மிதுனம்-பண்பு

    கடகம்-பாராட்டு

    சிம்மம்-கடமை

    கன்னி-உதவி

    துலாம்- நன்மை

    விருச்சிகம்-தனம்

    தனுசு- வெற்றி

    மகரம்-ஆர்வம்

    கும்பம்-நிறைவு

    மீனம்-பற்று

    • ஆன்லைன் ரேடியோ ஒலிபரப்பு சன்னிதானத்தில் இருந்து செய்யப்படும்.
    • வானொலி நிலையத்தை நடத்துவதற்கான டெண்டர் தொடர்பான அறிவிப்பு வெளியீடு.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் அடுத்தமாதம் (நவம்பர்) 16-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை தேவசம்போர்டு செய்து வருகிறது.

    பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக ஆன்லைன் ரேடியோ சேவையை திருவிதாங்கூர் தேவசம்போர்டு தொடங்க உள்ளது. 

    "ரேடியோ ஹரிவராசனம்" என்ற பெயரில் அந்த ஆன்லைன் ரேடியோ தொடங்கப்படுகிறது. இது 24 மணி நேரமும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அய்யப்ப பக்தர்கள் உலகம் முழுவதும் எங்கிருந்தாலும் கேட்கக்கூடிய வகையில் இந்த ஆன்லைன் ரேடியோ தொடங்கப்படுகிறது.

    ஆன்லைன் ரேடியோ ஒலிபரப்பு சன்னிதானத்தில் இருந்து செய்யப்படும். இதில் வழிபாடுகள், பக்தி பாடல்கள், கோவில் விழாக்களின் நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் சபரிமலையின் வரலாறு பற்றிய சிறப்பு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படும்.

    மேலும், கோவில் மற்றும் அதன் பாரம்பரியங்கள் தொடர்பான நேர்காணல்கள் மற்றும் பேச்சுகளும் ஒலிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வானொலி நிலையத்தை நடத்துவதற்கான டெண்டர் தொடர்பான அறிவிப்பை திருவிதாங்கூர் தேவசம்போர்டு வெளியிட்டிருக்கிறது.

    • பெருமாள் மீது பெரும்பக்தி கொண்ட கஜேந்திரன் என்ற யானையை, முதலையின் வாயிலிருந்து மீட்டு மோட்ஷம் கொடுத்த உண்மை சம்பவம் நடந்தது இத்தலத்தில் தான்
    • காஞ்சி கருட சேவை என்பது உலகப்பிரசித்தம் .

    1. புராணங்களில் இத்தலம் ஸத்யவ்ருத ஷேத்திரம் என்றே அறியப்படுகிறது. இங்கு செய்யும் பாவ புண்ணியங்களுக்கு 100 மடங்கு பலன் என்பதாலேயே அப்பெயர்.

    2. காஞ்சி மாநகர் சோழ பல்லவ ஆட்சி காலத்தில், நான்கு நகரங்களாக பிரிக்கப்பட்டிருந்தது: புத்த காஞ்சி, ஜைன காஞ்சி , சிவ காஞ்சி மற்றும் விஷ்ணு காஞ்சி. காஞ்சிபுரத்தின் மையமான தேரடி வீதிக்கு தெற்கே விஷ்ணு காஞ்சியும், வடக்கே சிவ காஞ்சியும் அமைந்துள்ளன.

    3. ப்ரம்மா யாகம் செய்தது, கோவிலுக்குள் நுழைந்தவுடன் இடப்பக்கம் இருக்கும் திருகுளத்து கரை மண்டபத்தில். சரஸ்வதி நதியின் சீற்றத்தை ஆதிசேஷன் ஆயிரம் தலை கொண்டு தடுத்ததால், அனந்த சரஸ் என்று பெயர்கொண்டது அந்த குளம்.

    4. யாகத்தின் இறுதியில், யாக குண்டத்தில் தோன்றியவர் தான் தேவாதிராஜன் என்று இன்றும் வணங்கப்படும் உற்சவர். நெருப்பினால் உண்டான வடுக்களை இன்றும் ஸ்வாமியின் திருமுகம் தெளிவாக காணலாம்.

    5. மற்ற எந்த திவ்ய தேசங்களிலும் இல்லாத மகிமையாய், இங்கு இவர் ராஜாதி ராஜனாக ஆட்சி செய்கிறார். தேசத்தை ஆளும் மன்னருக்குண்டான அனைத்து சடங்குகளும் இவருக்கு உண்டு. பெருமாள் என்பதை விட ராஜன் என்றே அதிகம் கொண்டாடப்படுகிறார். பெருந்தேவி தாயார் பட்டமகிஷி.

    6. பெருமாள் மீது பெரும்பக்தி கொண்ட கஜேந்திரன் என்ற யானையை, முதலையின் வாயிலிருந்து மீட்டு மோட்ஷம் கொடுத்த உண்மை சம்பவம் நடந்தது இத்தலத்தில் தான். 'கஜேந்திர மோட்ஷம்' காஞ்சி சாசனம்.

    7. 'ப்ரம்மா' ஒவ்வொரு வருடமும் வந்து பூஜிக்கும் பத்து நாட்களும் 'ப்ரம்ம உட்சவமாக கொண்டாடப்படுவது தொடங்கியது இங்கே தான். 10 நாட்களுக்கான பூஜை முறைகள் ப்ரம்மா வகுத்த விதி. இதை பின்பற்றியே அனைத்து வைணவ கோவில்களிலும் இந்த உட்சவம் நடக்கிறது.

    8. கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளும் விசேஷமும் முதல் முதலில் தொடங்கியது இங்கே தான். காஞ்சி கருட சேவை என்பது உலகப்பிரசித்தம் .

    9. ராமானுஜர் அவதரித்த ஸ்ரீபெரும்புதூர் அருகில் இருப்பது போலவே, வேதாந்த தேசிகர் அவதரித்த 'தூப்புல்' என்ற தலமும் மிக அருகிலேயே உள்ளது.

    10. 108 திவ்யா தேசங்களில் ஒன்றான பரமபதத்தை சேவிக்க முடியாது, ஏனெனில் அது பூலோகத்தில் இல்லை. ஆகவே வருடத்திற்கு ஒருமுறை, தேவாதிராஜன் இங்கு பரமபத நாதனாக சேவை சாதிக்கிறான்.

    • இதன் ஒவ்வொரு மூலையிலும் விதானத்தில் தொங்கும் கருங்கல்லினால் ஆன சங்கிலிகள் சிற்ப அற்புதம்!
    • இதன் மையத்தில் பிரமாண்டமான மேடை ஒன்று விமானம் மற்றும் நான்கு மரத் தூண்களுடன் அமைந்துள்ளது.

    மாட வீதி எனப்படும் வெளிப்பிராகரத்தில் மேற்கு கோபுரம் வழியே உள்ளே நுழைந்தால் இடப்புறம் நூற்றுக்கால் மண்டபம்.

    முகம் பார்க்கும் கண்ணாடியுடன் ஒப்பனை செய்யும் பெண், விஸ்வாமித்ரர் யாகம், சீதா கல்யாணம், வாலி வதம், ராமபிரானின் கணையாழியை சீதாவிடம் தரும் அனுமன், கிளி வாகனத்தின் மீது ரதிதேவி, அன்ன வாகனத்தின் மீது மன்மதன், சஞ்சீவி பர்வதத்தை தூக்கி வரும் அனுமன் மற்றும் தசாவதார காட்சிகள் என்று சிற்ப களஞ்சியமாகத் திகழ்கிறது நூறு கால் மண்டபம்.

    இதன் ஒவ்வொரு மூலையிலும் விதானத்தில் தொங்கும் கருங்கல்லினால் ஆன சங்கிலிகள் சிற்ப அற்புதம்!

    இதன் மையத்தில் பிரமாண்டமான மேடை ஒன்று விமானம் மற்றும் நான்கு மரத் தூண்களுடன் அமைந்துள்ளது.

    இவற்றையும் சேர்த்தே நூறுகால்! விசேஷ நாட்களில் உற்சவ மூர்த்தியர் இந்த மேடையில் எழுந்தருள்கின்றனர்.

    • ஒரு முறை ‘சிறந்தது இல்லறமா? துறவறமா?’ என்ற தர்க்கம் எழுந்தபோது, ‘துறவறமே சிறந்தது!’ என்று தீர்ப்பளித்தார் பிரகஸ்பதி.
    • மாற்றுக் கருத்து கொண்ட இந்திரன் கோபம் கொண்டான்.

    ஒரு முறை 'சிறந்தது இல்லறமா? துறவறமா?' என்ற தர்க்கம் எழுந்தபோது, 'துறவறமே சிறந்தது!' என்று தீர்ப்பளித்தார் பிரகஸ்பதி.

    மாற்றுக் கருத்து கொண்ட இந்திரன் கோபம் கொண்டான்.

    'பூலோகத்தில் ஓர் ஏழையாகப் பிறக்கக் கடவது!' என்று சாபம் கொடுத்தான். அதன்படி பூமியில் ஏழையாகப் பிறந்து உணவுக்கு வழியில்லாமல் துன்புற்றார் பிரகஸ்பதி.

    இந்த நிலையில் ஒரு நாள் அவர் உணவருந்தும்போது நாய் ஒன்று தொல்லை தந்தது. அவர் அதை விரட்டினார். கோபம் கொண்ட நாய், 'நீ நாயாக பிறப்பாய்!' என்று அவரை சபித்தது.

    இதனால் மிகவும் வருந்திய பிரகஸ்பதி இறுதியில், பரத்வாஜ முனிவரின் அறிவுரைப்படி இங்கு வந்து பெருமாளை வழிபட்டு சாப விமோசனம் பெற்றாராம். எனவே, இங்கு வழிபட்டால் குரு தோஷங்கள் அகலும் என்பது ஐதீகம்.

    ஸ்ரீவரதராஜ பெருமாள் திருக்கோவில், சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தொண்டரடிப்பொடி வாயில் கோபுரம், ஸ்ரீகருடன் சந்நிதி வாயில் கோபுரம் உட்பட இன்னும் 4 கோபுரங்களும் உண்டு.

    புண்ணியகோடி விமானமும், புனரமைக்கப்பட்டு 27.1.1991-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    • தமிழகத்தில் எங்கும் காணமுடியாத மிகப்பெரிய அளவில் சுதர்சன ஆழ்வார் திருமேனி காட்சி தருகின்றது.
    • இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி காட்சியளிக்கின்றார்.

    திருக்குளத்தின் கிழக்குத்திசையில் சக்கரத்தாழ்வார் என பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சந்நிதி அமைந்துள்ளது.

    தமிழகத்தில் எங்கும் காணமுடியாத மிகப்பெரிய அளவில் சுதர்சன ஆழ்வார் திருமேனி காட்சி தருகின்றது.

    இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி காட்சியளிக்கின்றார்.

    பெருமாளை தரிசித்த பிறகு, பிரகாரத்தில் உள்ள தங்கப்பல்லியை தரிசிக்கும் வழக்கம் உள்ளது.

    முனி குமாரர்கள் இருவர் முனிவரின் சாபத்தினால் பல்லிகளாகி இந்தத் தலத்துக்கு வந்து தவம் செய்து சாபவிமோசனம் பெற்றதாக ஒரு வரலாறு உண்டு.

    அவர்களின் நினைவாக இந்திரன் தங்கத்தால் ஆன பல்லி ஒன்றையும், வெள்ளியால் ஆன பல்லி ஒன்றையும் இங்கே ஸ்தாபித்தான்.

    ஆயினும் இப்போது தங்கப்பல்லி மட்டும்தான் உள்ளது.

    இதைத் தொட்டு வணங்கினால் எல்லா தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

    நம் தலைக்கு மேலே, உயரத்தில் நிறுவப்பட்டுள்ள சுமார் 3 அடி நீளம் உள்ள தங்கப்பல்லியை, படிகளில் ஏறிக் கையால் அதன் உடல் முழுவதும் தொட்டு வணங்கும் பழக்கம் உள்ளது.

    இதனால் வடமாநிலத்தவர்கள் இத்தலத்தை பல்லி கோவில் என்றே அழைக்கிறார்கள்.

    இக்கோவிலின் மிகச்சிறப்பாக போற்றப்படுவது ஆதி அத்தி வரதர்.

    வரதராஜ பெருமாள் ஆலயத்தின் உள்ளே இருக்கும் அனந்தசரஸ் புனித குளத்தின் அடியில் வீற்றிருக்கும் அத்திவரதர் பெருமாளை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும்.

    ஏனெனில் அவர் பக்தர்களின் கண்ணுக்குப் புலப்படாது வீற்றிருப்பது அனந்தசரஸ் திருக்குளத்தின் அடியில்.

    இக்கோவிலின் நூறுகால் மண்டபத்தின் அருகில் நீருக்கு அடியில் உள்ள நான்கு கால் மண்டபத்தில் தன்னை மறைத்துக்கொண்டு பக்தர்களின் எண்ணத்தோடு அருள்பாலித்து வருகிறார்.

    இக்குளத்தில் நீர் எப்போதும் வற்றுவதில்லை. அதனால் பெருமாள் யார் கண்ணுக்கும் புலப்படமாட்டார்.

    பெருமாளின் திருமேனி மிகப்பெரிய அத்தி மரத்தால் வடிவமைக்கப்பட்டு, பிரம்மதேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    அனந்தசரஸ் திருக்குளத்தில் மூழ்கியிருக்கும் பெருமாள் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேலே வந்து 24 நாட்களுக்கு சயன மற்றும் 24 நாட்களுக்கு நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலிப்பார்.

    பேரருளாளன் அத்தி வரதரை வசந்த மண்டபத்தில் 48 நாள்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு வைப்பர்.

    தரிசனம் தந்தபின், மீண்டும் அனந்த தீர்த்தத்தில் பெருமாள் சயனிக்கச் சென்று விடுவார்.

    ஒவ்வொருவரும் அவரது ஆயுள்காலத்திற்குள் ஒருமுறை, தவறினால் இருமுறைதான் இந்த பெருமாளை தரிசிக்க முடியும். எனவே இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள். 

    • காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் ஆலயம் காஞ்சியின் தெற்கே, நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.
    • மூலவர் வரதர் மேற்கு பார்த்தவாறு திருநின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் ஆலயம் காஞ்சியின் தெற்கே, நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.

    மூலவர் வரதர் மேற்கு பார்த்தவாறு திருநின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    தாயார் பெருந்தேவியார் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

    திருவேங்கடம் என்றால் திருமலையையும், பெருமாள் கோவில் என்றால் அது காஞ்சிபுரத்தையும் குறிக்கும் அளவுக்கு இக்கோவில் சிறப்பு வாய்ந்தது.

    ஐராவதம் யானையே மலைவடிவம் கொண்டு நாராயணனைத் தாங்கி நின்றமையால் இத்தலம் அத்திகிரி என்றும் அழைக்கப்படுகிறது.

    பிரம்மா தன் மனம் பரிசுத்தமாவதற்கு காஞ்சியில் யாகம் செய்தார்.

    அவ்வமயம் அவருடைய பத்தினியாகிய சரஸ்வதியை விடுத்து மற்ற இரு மனைவியராகிய சாவித்திரி, காயத்திரி ஆகியோருடன் இருந்து யாகம் செய்யத் தொடங்கினர்.

    அதனை அறிந்த சரஸ்வதி மிகவும் கோபம் கொண்டு வேகவதி என்ற ஆறாய் வந்து யாகத்தை அழிக்க முயற்சி செய்தாள்.

    பிரம்மாவின் வேண்டுகோளின்படி மகாவிஷ்ணு யதோத்தகாரியாக வந்து பிறந்த மேனியாக குறுக்கே சயனித்துக் கொண்டார்.

    பிரம்மாவின் யாகம் பூர்த்தியான உடனே யாக குண்டத்திலிருந்து புண்ணியகோடி விமானத்துடன் பெருமாள் தோன்றினார்.

    பின்பு, பிரம்மா அத்திமரத்தில் ஒரு சிலை வடித்து இங்கே பிரதிஷ்டை செய்தார்.

    வேண்டும் வரம் தருபவர் என்பதால் இவர், "வரதராஜர்' எனப் பெயர் பெற்றார்.

    வரதராஜபெருமாளின் தேவிக்கு பெருந்தேவி என்றுபெயர். 24 நான்கு படிகள் ஏறி அத்திகிரியை அடைய வேண்டும்.

    • தமிழகத்தில் எங்கும் காணமுடியாத மிகப்பெரிய அளவில் சுதர்சன ஆழ்வார் திருமேனி காட்சி தருகின்றது.
    • இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி காட்சியளிக்கின்றார்.

    கோவில் வெளி பிரகாரத்தில் கண்ணன், ராமர், வராஹா பெருமாள் சன்னதிகளும், ஆண்டாள், ஆழ்வார்கள், களியமாணிக்க பெருமாள், ஆச்சார்யர்கள் சன்னதிகளும் மற்றும் நம்மாழ்வார் சன்னதியும் உள்ளன.

    இராஜகோபுரம் 96 அடி உயரமுள்ளது.

    அத்தி வரதர் எனப்படும் மரத்தல் செய்யப்பட்ட பெருமாள், திருக்குளத்தில் பள்ளி கொண்டிருக்கிறார்.

    முழுதும் அத்திமரத்தால் ஆன பள்ளிகொண்ட பெருமாள் நீண்ட நெடிய உருவம்.

    40 ஆண்டுகளுக்கு ஒருமுறை, குளத்து நீரை முழுவதும் வெளியேற்றி ஸ்ரீ அத்திவரதரின் திருவுருவச் சிலையை வெளியெடுத்து, கோவிலில் பள்ளிகொள்ள வைத்து ஒருமாத காலத்திற்கு உற்சவங்கள் பிரமாதமாக நடக்கும்.

    அத்திவரதரை தம் வாழ்நாளில் தரிசிப்பது மிகப் பெரும் பேறு ஆகையால், எங்கிருந்தெல்லாமோ வந்து மக்கள் பெருமாளைத் தரிசிப்பர்.

    திருக்குளத்தின் கிழக்குத்திசையில் சக்கரத்தாழ்வார் என பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சந்நிதி அமைந்துள்ளது.

    தமிழகத்தில் எங்கும் காணமுடியாத மிகப்பெரிய அளவில் சுதர்சன ஆழ்வார் திருமேனி காட்சி தருகின்றது.

    இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி காட்சியளிக்கின்றார்.

    வைகாசி மாதத்தில் உற்சவத் திருவிழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடைபெறும்.

    இவ் உற்சவத் திருவிழாவில் கருடசேவையும், தேரும் மிகப்பிரபலம்.

    காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் காஞ்சிபுரம் - செங்கற்பட்டு சாலையில் அமைந்துள்ள இத்திருத்தலத்திற்கு நகர பேருந்துகளும் ஆட்டோக்களும் இயக்கப்படுகின்றன.

    காஞ்சிபுரத்திற்கு சென்னையிலிருந்து எண்ணற்ற பேருந்துகளும் ரயில்களும் உள்ளன.

    • இதற்குள் உள்ள சிறிய நன்கு தூண் கொண்ட மண்டபத்தையும் சேர்த்து நூறு கால் மண்டபம் என அழைக்கபடுகிறது.
    • இதன் நன்கு மூலைகளில் தொங்கும் கற்ச்சங்கிலிகள் சிற்பக்கலையின் விந்தையாகும்.

    திருக்கச்சி அல்லது காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் என்பது பெருமாள் கோவில் என்று வைணவர்களால் போற்றப்படுகிறது.

    வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த தலம்.

    இது சென்னைக்கு அடுத்த காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள முப்பத்தோராவது திவ்ய தேசமாகும்.

    வரலாறும் சிற்பக்கலையும்

    இக்கோவில் எவரால் முதலில் நிறுவப்பட்டது என்பது தெரியவில்லை.

    எனினும் கி பி 1053 இல் சோழகளால் வேழமலையில் குகைவரைக் கோவில் கிழக்கு மேற்கே விரிவாக்கப்பெற்றது என்று கல்வெட்டுகளின் மூலம் அறியபடுகிறது.

    முதலாம் குலோத்துங்க சோழனும், விக்கிரம சோழனும் கோவிலை விரிவுபடுத்தினர்.

    பதினான்காம் நூற்றாண்டில் தாயார் சன்னதியும், அபிஷேக மண்டபமும் அமைக்கப்பெற்றன.

    சோழர்களின் வீழ்ச்சிக்குபின், விஜயநகர அரசர்கள் கிழக்கு கோபுரம், ஊஞ்சல் மண்டபம் மற்றும் கல்யாண மண்டபங்களை நிறுவினர்.

    கல்யாண மண்டபம் எட்டு வரிசைகளில், வரிசைக்கு பன்னிரண்டு தூண்களாக 96 சிற்பகலை மிக்க ஒரே கல்லாளான தூண்கள் நிறைந்த மண்டபம் ஆகும்.

    தூண்களில் யாளி, போர்குதிரை, குதிரை மீது வீரர்கள் மற்றும் பல்வகை சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

    இதற்குள் உள்ள சிறிய நன்கு தூண் கொண்ட மண்டபத்தையும் சேர்த்து நூறு கால் மண்டபம் என அழைக்கபடுகிறது.

    இதன் நன்கு மூலைகளில் தொங்கும் கற்ச்சங்கிலிகள் சிற்பக்கலையின் விந்தையாகும்.

    கிழக்கு கோபுரம் ஒன்பது நிலைகளுடன் 180 அடி உயரமுடையது. தற்போது இக்கோபுரம் சிதிலமடைந்துள்ளது.

    மூலவராகிய தேவராஜப் பெருமாள், வேழ மலை (அத்திகிரி) மீது நின்ற திருக்கோலத்தில் மேற்கே திருமுகமண்டலமுடன் நாற்கரத்துடன் அருள்பாலிக்கிறார்.

    மூலவர் மலை மீது அமைந்துள்ளார் என்பதற்கு சான்றாக கர்ப்பகிரகத்தின் நேர் கீழே குன்று குடைவரை கோவிலில் யோக நரசிங்க பெருமாள் வீற்றுக்கிறார்.

    பெருமாளை காண்பதற்கு இருப்பதிநான்கு படிகளை ஏறிச்செல்லும் போது காணப்படும் தங்க பல்லி மற்றும் வெள்ளி பல்லி, இக்கோவிலில் பிரசிதம்.

    மூலவரை நோக்கிய படி தென்மேற்கே பெருந்தேவி தாயாருக்கு தனி சன்னதியும், திருக்குளத்தின் எதிரே சக்கரத்தாழ்வர் சன்னிதியும் உள்ளது.

    • திருதியை, பஞ்சமி, சப்தமி, ஏகாதசி, திரயோதசி திதிகள் சீமந்தம் செய்ய உகந்த நாட்கள்.
    • பஞ்சமி, சஷ்டி, தசமி, ஏகாதசி, பவுர்ணமி திதிகள் தங்கம் வாங்க உகந்த நாட்கள்.

    மாங்கல்யம்

    துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, துவாதசி, திரயோதசி ஆகிய திதிகள் திருமாங்கல்யம் செய்ய உகந்த நாட்கள் ஆகும்.


    திருமணம்

    துவிதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, துவாதசி, திரயோதசி ஆகிய திதிகள் திருமணம் செய்ய உகந்த நாட்கள் ஆகும்.

    சாந்தி முகூர்த்தம்

    துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகிய திதிகள் சாந்தி முகூர்த்தத்துக்கு உகந்த நாட்கள் ஆகும்.


    சீமந்தம்

    திருதியை, பஞ்சமி, சப்தமி, ஏகாதசி, திரயோதசி ஆகிய திதிகள் சீமந்தம் செய்ய உகந்த நாட்கள்.

    குழந்தையை தொட்டிலில் போட

    துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகிய திதிகள் குழந்தையை தொட்டிலில் போட உகந்த நாட்கள்.


    காது குத்தல்

    துவிதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, துவாதசி, திரயோதசி ஆகிய திதிகள் காது குத்தலுக்கு உகந்த நாட்கள்.

    கல்விகற்க

    துவிதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, தசமி, ஏகாதசி ஆகிய திதிகள் கல்வி கற்க தொடங்குவதற்கான வித்யாரம்பம் செய்ய உகந்த நாட்கள்.

    கார் வாங்க

    சஷ்டி, ஏகாதசி, பவுர்ணமி ஆகிய திதிகள் புதிய கார் வாங்கி முதலில் ஓட்டுவதற்கு உகந்த நாட்கள்.

    உழவு செய்தல்

    திருதியை, பஞ்சமி, சப்தமி, ஏகாதசி, திரயோதசி ஆகிய திதிகள் உழவு செய்ய உகந்த நாட்கள்.


    விதை விதைத்தல்

    திருதியை, பஞ்சமி, சப்தமி, ஏகாதசி, திரயோதசி, பவுர்ணமி-2, துவாதசி, சஷ்டி, தசமி ஆகிய திதிகள் விதை விதைத்தலுக்கு உகந்த நாட்கள்.

    கதிர் அறுக்க

    துவிதியை, திருதியை, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, பவுர்ணமி ஆகிய திதிகள் கதிர் அறுக்க உகந்த நாட்கள்.

    தானியத்தை களஞ்சியத்தில் வைத்தல்

    துவிதியை, திருதியை, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, பவுர்ணமி ஆகிய திதிகள் தானியத்தை களஞ்சியத்தில் வைக்க உகந்த நாட்கள்.

    தானியம் செலவிட

    துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, பவுர்ணமி ஆகிய திதிகள் தானியம் செலவிட உகந்த நாட்கள்.

    மாடு வாங்குதல், கொடுத்தல்

    துவிதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, ஆகிய திதிகள் மாடு வாங்க, கொடுக்க உகந்த நாட்கள்.

    பொன் ஆபரணம் அணிவதற்கு

    பஞ்சமி, சஷ்டி, தசமி, ஏகாதசி, பவுர்ணமி ஆகிய திதிகள் பொன் ஆபரணம் சூடுவதற்கு உகந்த நாட்கள்.

    புத்தாடை உடுத்தல்

    துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, பவுர்ணமி ஆகிய திதிகள் புத்தாடை உடுத்தலுக்கு உகந்த நாட்கள்.


    கிரகபிரவேசம்

    துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகிய திதிகள் கிரகபிரவேசம் ஆரம்பத்திற்கு உகந்த நாட்கள்.

    நோயாளிகள் மருந்து சாப்பிட

    துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகிய திதிகள் நோயாளிகள் மருந்து சாப்பிட உகந்த நாட்கள்.

    பிரயாணம் செய்ய

    துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, திரயோதசி ஆகிய திதிகள் பிராணம் செய்ய உகந்த நாட்கள்.

    • கரிநாள் என்ற நாளிலும் நல்ல காரியங்கள் செய்யப்படுவதில்லை.
    • அஷ்டமி, நவமி திதிகள் எதிர்மறையான எண்ணங்களைத் தோற்றுவிக்கும்.

    அஷ்டமி கிருஷ்ணர் பிறந்த திதி, நவமி ராமர் பிறந்த திதி. இருப்பினும் இந்த திதிகளில் எந்த நல்ல காரியங்களையும் யாரும் தொடங்குவதில்லை. அதோடு கரிநாள் என்ற நாளிலும் நல்ல காரியங்கள் செய்யப்படுவதில்லை.

    இந்த மூன்று தினங்களிலும் தொடங்கும் காரியங்கள் விரைவில் முடிவுக்கு வராது. தொடர்ந்து கொண்டே போகும் என்று சொல்கிறார்கள். அதற்கான காரணங்களைப் பார்ப்போம்.


    அஷ்டமி

    கோகுல அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்தது அனைவருக்கும் தெரிந்தே. அவர் அந்த திதியில் பிறந்த காரணத்தால் அவர் எண்ணற்ற கஷ்டங்களை அனுபவித்தார். கிருஷ்ணன் அவதார புருஷன் என்பதால் அவற்றை சமாளித்தார். இறுதியில் வெற்றி பெற்றார்.

    எனவேதான் அஷ்டமி திதிகளில் சுபகாரியங்களான திருமணம், வீடு குடி புகுதல், சொத்து வாங்குதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

    ஆனால் இந்நாள், தீட்சை பெறுவது, மந்திரங்கள் ஜெபிப்பது, ஹோமங்கள் உள்ளிட்ட தெய்வீக காரியங்களுக்கு உகந்த நாளாகும்.

    குறிப்பாக செங்கல் சூளைக்கு நெருப்பு மூட்ட, எதிரிகள் மீது வழக்கு தொடுக்க, ஆயுதங்கள் பிரயோகிக்க, எதிரி நாட்டின் மீது போர் தொடுப்பது போன்ற செயல்களுக்கு அஷ்டமி திதி ஏற்றவை ஆகும்.


    நவமி

    அமாவாசை நாளுக்கும், பவுர்ணமி நாளுக்கும் அடுத்து வரும் ஒன்பதாவது நாள் நவமி ஆகும். இந்த திதியில் தான் ராமபிரான் அவதரித்தார். அவர் அரியணை ஏற்க இருந்த நேரத்தில், காட்டிற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அது மட்டும் இல்லாது சீதையை பிரிந்து அவர் பட்ட துயரங்கள் சொல்லில் அடங்காதவை.

    இதன் காரணமாகவும் நவமி திதியை பலரும் நல்ல காரியங்கள் செய்ய தவிர்க்கிறார்கள். ஆனால் இந்த திதியும் தெய்வீக காரியங்களுக்கு ஏற்ற நாளாகும். பொதுவாக, அஷ்டமி, நவமி நாட்களில் செய்யும் காரியம் இழுபறியாக இருக்கும். அஷ்டமி, நவமி திதிகள் எதிர்மறையான எண்ணங்களைத் தோற்றுவிக்கும்.


    கரிநாள்

    இந்த நாளைப் பற்றி அறிந்து கொள்ள, முதலில் திதி, நட்சத்திரக் கணக்கு பற்றி அறிந்து கொள்ள வேண்டும். சந்திரனை நெருங்கக்கூடிய பாகையை திதி என்றும், அதற்கு எதிரே உள்ள பாகையை நட்சத்திரக் கணக்கு என்றும் கூறுவர்.

    குறிப்பிட்ட திதி, நட்சத்திரம் அமையும் நாளில் குறிப்பிட்ட கிழமை வந்தால் அது கரிநாளாக கருதப்படுகிறது.

    பொதுவாக கரி நாளன்று நல்ல காரியங்களைத் தொடங்கினால், அது விருத்தியைத் தராது என்பார்கள். இனி தொடரக் கூடாது என்று நாம் நினைக்கும் காரியங்களை இந்த கரிநாளில் செய்யலாம்.

    குறிப்பாக கடனை திரும்பி செலுத்துதல். அன்றைய தினம் கடனை அடைத்தால், மீண்டும் கடன் வாங்கும் நிலை வராது.

    ×