search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வருகிறவர்கள் தட்சணை கொடுக்க ஆரம்பித்தார்கள்.
    • வாங்குவார், அடுத்த நிமிடமே அருகில் உள்ள ஏழைகளுக்கு அள்ளி இறைத்து விடுவார்.

    பாபாவின் புகழ் பரவப் பரவ சீரடிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக்கிக் கொண்டே சென்றது.

    ஆரம்ப காலங்களில் வந்தவர்கள் பாமரர்கள், படிப்பு அறியாதவர்கள், சமய உணர்வு உள்ளவர்கள் தான். ஆனால் அந்த நிலை மாறியது.

    அறிஞர்கள், வழக்கறிஞர்கள், தத்துவ வித்தகர்கள், சமயப் பெரியார்கள், இன்ஜினியர்கள், அரசு அதிகாரிள், ஊழியர்கள் என்று பல்வேறு தரப்பினரும் பாபாவைத் தரிசிரிக்க வந்தனர்.

    வாழ்க்கைப் போராட்டத்தில் நசிந்து போனவர்கள், இனம் புரியாத மனப் போராட்டங்களில் இடிந்து போனவர்களெல்லாம் கரைபுரளும் கோதாவரி வெள்ளம் போல் பாபாவைத் தேடி வந்தனர்.

    ஆனால் பாபா எப்போதும் போல் அமைதியாகத் தான் இருந்தார். தம்மைத் தரிசிக்க இவ்வளவு பெரிய கூட்டமா என்று கணக்குப் போட்டு அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளவில்லை.

    வருகிறவர்கள் தட்சணை கொடுக்க ஆரம்பித்தார்கள். வாங்குவார், அடுத்த நிமிடமே அருகில் உள்ள ஏழைகளுக்கு அள்ளி இறைத்து விடுவார்.

    அன்றைக்கு தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும் என்று பாபா தீர்மானித்தால் அந்தப் பொறுப்பையும் தாமே சுமந்து கொள்வார்.

    தட்சணையாய் வந்த தொகையோடு கடை வீதிக்குப் போவார். சோளம், கேழ்வரகு, மாவு, வாசனைப் பொருட்கள் அனைத்தையும் அவரே வாங்குவார். சுமந்து வருவார்.

    சோளம், கோதுமை அரைக்க ஒரு திருகை வைத்திருந்தார். அந்த திருகையால் அவரே மாவு அரைப்பார். அந்தத் திருகை இன்றும் உள்ளது.

    மசூதிக்கு முன் பக்கம் உள்ள திறந்த வெளியில் அடுப்பு மூட்டுவார்.

    அடுப்பின் மீது ஹண்டி என்ற பாத்திரத்தை வைப்பார். 50 பேர்களுக்கு உணவு சமைக்க ஒரு ஹண்டி, 100 பேர்களுக்கு உணவு சமைக்க இன்னொரு பெரிய ஹண்டி.

    சமயங்களில் அவர் சர்க்கரைப் பொங்கல் தயார் செய்வார், சமயங்களில் ஆட்டுக்கறி வாங்கி வரச் சொல்லி புலவு தயார் செய்வார்.

    மவுலியை அழைப்பார், தொழுகை நடத்தி அந்த உணவைப் புனிதப்படுத்தச் சொல்வார்.

    உணவின் முதல் பகுதியை மகால்சபாதிக்கும், தாத்யா படீலுக்கும் அனுப்பி வைப்பார்.

    அதன் பின்னர் அவரே பரிமாறுவார். பாபாவின் பொற்கரங்களால் பிரசாதம் பெறுவது என்பது சாதாரண காரியமா? அப்படிப் பெற்றவர்கள் பாக்கியவான்கள்.

    இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் அல்லவா?

    1910-ஆம் ஆண்டு வர தம்மைத் தேடி வந்த பக்தர்களுக்கு பாபா இப்படி உணவு அளித்தார்.

    ஆனால் அதன் பின்னர் பாபாவிற்காக வந்த காணிக்கைகள், பழங்கள், இனிப்புப் பண்டகங்களை என்ன செய்வது என்றே தெரியவில்லை."

    அவைகளைக் கொண்டு வந்த பக்தர்கள் மலை மலையாய் குவித்து விட்டனர். அவைகளெல்லாம் பாபாவிற்கு நைவேத்தியமாகப் படைக்கப்பட்டன.

    முதலில் ஆரத்தி நிகழ்ச்சி அடுத்த பாபா எல்லோரையும் ஆசீர்வதிப்பார், அணையாது எரியும் அடுப்பில் இருந்து எடுக்கப்பட்ட உதியை (விபூதியை) வழங்குவார்.

    அதன் பின்னர் அவர் தர்காவின் உள் அறையில் அமருவார்.

    பக்தர்கள் கொண்டு வந்த அத்தனை உணவுப் பண்டங்களும் ஒன்றாகக் கலக்கப்படும், "வழங்குக" என்று பாபா தலை அசைப்பார். எதிரே அமர்ந்த பக்தர்களுக்கு மட்டுமல்ல வெளியே காத்திருந்த பக்தர்களுக்கும் வயிறும், மனமும் நிரம்பும் அளவிற்கு உணவு வழங்கப்படும்.

    அந்த வழக்கம் இன்றும் சீரடியில் தொடர்கிறது.

    • முதலில் ““ஸ்ரீ சச்சிதானந்த ஸத்குரு சாயிநாத் மகாராஜ் கீ ஜய்”” என்று ஒருமுறை குரல் எழுப்பவும்.
    • ““ஓம் சாய் ஸ்ரீ ஸாயி ஐய ஐய ஸாயி”” என்ற மூல மந்திரத்தை ஏழு முறை உச்சரிக்கவும்.

    ஸ்ரீசாயி அம்ருத்வாணி ஒரு முக்கியமான கர்ந்தமாகப்படும். இதனை சுமூகமாக பாராயணம் செய்தால் மிகுந்த சந்தோஷத்தை அடையலாம். இதனை வாத்தியத்துடன் இசையோடு பாடலாம்.

    1. முதலில் ""ஸ்ரீ சச்சிதானந்த ஸத்குரு சாயிநாத் மகாராஜ் கீ ஜய்"" என்று ஒருமுறை குரல் எழுப்பவும்.

    1. ""ஓம் சாய் ஸ்ரீ ஸாயி ஐய ஐய ஸாயி"" என்ற மூல மந்திரத்தை ஏழு முறை உச்சரிக்கவும்.

    3. பின் கீழ்வரும் ""ஸாயி க்ரூபா அவதரண்"" எனும் அடியில் உள்ள ஸ்லோகங்களில் தொடங்கி ""மங்களமய பிரார்த்தனை"" வரையும் பாராயணம் செய்யவும். ஒரு நிமிடம் மவுனமாக இருந்தபின் மறுபடியும் மங்களமய பிரார்த்தனையைப் படிக்கவும்.

    4. ஸ்ரீ சாயி அம்ருத் வாணி படித்த பின் அவரவர் நேரத்துக்கு ஏற்றார் போல் சாயி லீலா. சாயி மகிமை, சாயி பஜனை மற்றும் பாபாவின் ஸத் சரித்திரத்தையும் உபந்யசமாக செய்யலாம். பாபாவின் ஆரத்தி பாடவும்.

    5. பிறகு ""ஓம் சாய் ஸ்ரீ சாயி ஐய ஐய சாயி"" என்று ஏழு முறை உச்சரிக்கவும்.

    6. முடிவில் ""ஸ்ரீ சச்சிதானந்த சத்ருகு சாயிநாத் மஹாரஜ் கீ ஜய்"" என்று குரல் எழுப்பி பூர்த்தி செய்யவும்.

    • அதற்கு பாபாவின் ஆசியும் அனுமதியும் கிடைத்தது . உருசு விழாவை ராம நவமி நாளன்று நடத்துவது என்று முடிவாயிற்று.
    • இதனால் இஸ்லாமியர்களும் இந்துகளும் ஒன்று படவும் அவர்களுடைய விழாக்களும் ஒருங்கிணைந்து நடக்கவும் வாய்ப்பு ஏற்பட்டது.

    கோபர்கானில் இருந்த கோபால்ராவ்குண்டு என்பவர் பாபாவின் பரம பக்தர்களில் ஒருவர்.

    அவருக்கு மூன்று மனைவியர் இருந்தனர் என்றாலும் அவருக்கு மூன்று மனைவியர் இருந்தும் பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்தது.

    பின்னர் பாபாவின் ஆசியால் அவருக்கு ஒரு மகன் பிறந்தான்.

    அதனால் அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்த அவர் சிறப்பாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று விரும்பினார்.

    உருசு என்ற விழாவை சீரடியில் நடத்தலாம் என அவருக்குச் தோன்றியது. தம் விருப்பத்தைச் சில பக்தர்களிடம் கூற அவர்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள்.

    அதற்கு பாபாவின் ஆசியும் அனுமதியும் கிடைத்தது . உருசு விழாவை ராம நவமி நாளன்று நடத்துவது என்று முடிவாயிற்று.

    இதனால் இஸ்லாமியர்களும் இந்துகளும் ஒன்று படவும் அவர்களுடைய விழாக்களும் ஒருங்கிணைந்து நடக்கவும் வாய்ப்பு ஏற்பட்டது.

    மேளதாளத்துடன் நடந்த ஊர்வலத்தின் போது தட்டுகளில் சந்தனம் எடுத்துச் செல்லப்பட்டது.

    ஊர்வலம் சீரடி தெருக்களின் வழியே சென்று பின்னர் மசூதிக்குத் திரும்பும்.

    ஒரே நாளில் இந்துக்கள் கொடிகளை ஏற்றிச் செல்ல இஸ்லாமியர்கள் சந்தனத்தை எடுத்துச் செல்ல இரு மத்தினரும் எந்த மன வேற்றுமையுமின்றி மகிழ்ச்சியுடன் விழாவைக் கொண்டாடினர்.

    • அவரவர்களுக்கு விருப்பமான கோவில்களுக்குச் செல்லுதல், தமது இஷ்டத் தெய்வங்களை வணங்குதல் ஆகியவற்றை பாபா ஆதரித்தார்.
    • தெய்வங்களின் படங்களையும் சிவலிங்கங்களையும், பாதுகைகளையும் பாபா தாமே தம் பக்தர்களுக்குக் கொடுப்பது உண்டு.

    எல்லா மதங்களின் அடிப்படைக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளுதல், சகிப்புத்தன்மை, கடவுள் நம்பிக்கை முதலியவை பக்தர்களிடம் இருக்க வேண்டும் என்பதை பாபா அடிக்கடி வலியுறுத்தினார்.

    அவரவர்களுக்கு விருப்பமான கோவில்களுக்குச் செல்லுதல், தமது இஷ்டத் தெய்வங்களை வணங்குதல் ஆகியவற்றை பாபா ஆதரித்தார்.

    தெய்வங்களின் படங்களையும் சிவலிங்கங்களையும், பாதுகைகளையும் பாபா தாமே தம் பக்தர்களுக்குக் கொடுப்பது உண்டு.

    தம்முடைய படங்களையே கூட அவர் அளிப்பதுண்டு. பக்தர்களின் கூட்டம் பெருகு வதற்கு இதுவும் ஒரு காரணமாயிற்று.

    பாபாவின் வாழ்நாள் இறுதி வரை அவர் இஸ்லாமியரா, இந்துவா என்று எவராலும் அறிய முடியவில்லை.

    அவருடைய உபதேசங்களில் இந்து ,முஸ்லிம் ஒற்றுமை இழையோடியது.

    அது மட்டுமல்லாமல் அவருடைய அன்பு என்ற அடிப்படைக் கொள்கையினால் மக்களை சாதி சமய வேறுபாடின்றி ஒருங்கிணைத்தார்.

    படிப்படியாக ஒருங்கிணைந்த ஒரு சமுதாயத்தில் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் படியான ஒரு வழிபாட்டு சடங்குகளில் இஸ்லாமியர் தலையிடாமல் இருந்தனர்.

    அதைப்போலவே இஸ்லாமியர் வழிபாட்டு நேரத்தில் இந்துகள் தலையிடாமல் இருந்தனர். மத சகிப்புத்தன்மையை பாபா வலியுறுத்தினார்.

    • சாய் விரத கதை, சாய் ஜெபம், சாய் பாமாலை, சாய் பாவனி இவற்றைப் பக்தியுடன் படிக்கவும்.
    • ஒன்பதாவது வியாழக்கிழமை 5 ஏழைகளுக்கு உணவு அளிக்கவும்.

    ஒன்பது வியாழக்கிழமைகள் பழ, திரவ உணவு மட்டுமே அருந்தி பாபாவுக்கு விரதம் இருக்க வேண்டும்.

    ஒன்பது வியாழக்கிழமைகளும் சாய்பாபா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வரவும்.

    * இந்த விரதம் ஆண், பெண் குழந்தைகள் யார் வேண்டுமானாலும் செய்யலாம். வியாழக்கிழமை சாய்பாபா படத்திற்கு பூஜை செய்யவும்.

    * மஞ்சள் நிற மலர்கள் (அல்லது) மாலை அணிவித்து, தீபம், ஊதுபத்தி ஏற்றி, பிரசாதம் அர்ப்பணம் செய்து, மக்களுக்கு வழங்கி சாய்பாபாவை தியானம் செய்யவும்.

    * சாய் விரத கதை, சாய் ஜெபம், சாய் பாமாலை, சாய் பாவனி இவற்றைப் பக்தியுடன் படிக்கவும்.

    * ஒன்பதாவது வியாழக்கிழமை 5 ஏழைகளுக்கு உணவு அளிக்கவும்.

    * ஒன்பதாவது வியாழக்கிழமை இந்த பாபா தொடர்பான புத்தகங்களை இலவசமாக 5, 11, 21 என்ற எண்ணிக்கையில் பலருக்கு வழங்கவும்.

    அகில இந்திய சாய் சமாஜத்தை நிறுவி அதன் மூலம் நாடு முழுவதும் பாபாவின் தத்துவம் பரவிட உழைத்தார்.

    இன்றைக்கு நாடு முழுவதும் சாய்பாபாவின் தத்துவம் தழைத்தோங்கவும், சாய்பாபா வழிபாடு சிறப்புற்றுத் திகழவும் வழிவகுத்தவர், தமிழகத்தைச் சேர்ந்த பூஜ்ய ஸ்ரீ நரசிம்ம சுவாமிஜி அவர்களேயாவார்.

    அகில இந்திய சாய் சமாஜத்தை நிறுவி அதன் மூலம் நாடு முழுவதும் பாபாவின் தத்துவம் பரவிட உழைத்தார்.

    சாய்பாபா மகா சமாதி அடைந்து பல வருடங்களுக்குப் பிறகு, நாடு முழுவதும் பயணம் செய்து அவருடைய வரலாற்றைப் பற்றிய விஷயங்களைத் திரட்டி, அவற்றைச் சுவைபட தொகுத்து நாட்டுக்கு வழங்கிய பெருமை அமரர் நரசிம்ம சுவாமிஜியை சேரும்.

    • தம்மிடம் விடைபெற்றுச் செல்வோர்க்கெல்லாம் பாபா தம் கையாலேயே உதிகொடுத்தனுப்புவார்.
    • சில சமயங்களில் பக்தர்களின் நெற்றியில் பூசி விடுவார்.

    அக்னி குண்டம் அணையாமல் எக்காலத்திலும் எரிந்து கொண்டே இருப்பதற்காக அவ்வப்பொழுது விறகுக்கட்டைகள், மட்டையுடன் கூடிய தேங்காய்கள், கற்பூரம் போன்றவை அதில் போடப்படும்.

    அவை எரிந்த பின் கிடைக்கும் சாம்பலே "உதி" என வழங்கப்படுகிறது.

    உதியின் மகிமையை விளக்கிச் சொல்வது எளிதல்ல. அது மன நோயைத் தீர்க்கும் மாமருந்து. உடல் நோயைத் தீர்க்கும் உயர்ந்த மருந்து. பாம்பு தீண்டினாலும், தேள் கொட்டினாலும் கடிவாயில் வைத்தால் நஞ்சைக் கக்க வைக்கும் நல்ல மருந்து.

    பெண்கள் பிரசவ வேதனையில் துடிக்கும் போது உதியை வயிற்றின் மீது தடவி விட்டு சிறிதளவு நீரில் கரைத்துக் கொடுத்தால் வேதனையே இல்லாமல் மகப்பேறு உண்டாகும்.

    இந்த நோய் தீராது என்று மருத்துவர் கைவிட்ட பின்னரும் உதியை நீரில் கரைத்துக் கொடுக்க நோய் இருந்த இடம் தெரியாமல் விரைவில் பறந்து போய்விடும்.

    தம்மிடம் விடைபெற்றுச் செல்வோர்க்கெல்லாம் பாபா தம் கையாலேயே உதிகொடுத்தனுப்புவார் சில சமயங்களில் பக்தர்களின் நெற்றியில் பூசி விடுவார்.

    தொலை தூரத்தில் இருந்தாலும் பக்தர்கள் துன்பம் துடைக்கத் தக்க சமயத்தில் கிடைக்கும்படி உதி கொடுத்தனுப்புவார் பாபா.

    சாய் பக்தர்களின் உயர்ந்த உடைமைகளில் உதிமேலான இடத்தைப் பெற்றுள்ளது. உதி இல்லாத சாய் பக்தர்களின் இல்லமே இல்லை எனலாம்.

    உதியைப் பயன்படுத்தாத சாய் பக்தரே இல்லை எனலாம்.

    • இந்த அற்புதச் செயலைக் கண்டு கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் வியப்பில் மூழ்கி விட்டனர்.
    • அவர்களுடைய கண்களில் ஆனந்தக்கண்ணீர் பெருகியது. பாபா ஒரு அவதார நாயகர் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டனர்.

    சீரடியில் சாய்பாபா வாழ்ந்திருந்த மசூதியின் நடுவில் அமைந்திருக்கும் அக்னி குண்டமே துனி எனப்படுவது. மசூதியின் நடுவில் அக்னி குண்டம் எப்படி வந்தது?

    ஒரு நாள் மசூதியில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்பொழுது பாபாவுக்குப் புகை பிடிக்க வேண்டும் என்று தோன்றியது.

    ஆனால் அங்கே நெருப்பு இல்லை.

    இது தான் தக்க சமயம் என்று எண்ணிய மகல்சாபதி, தாஸ்கணு முதலிய பக்தர்கள், பாபா நெருப்புக்காக தினந்தோறும் அலைய வேண்டியதாக இருக்கிறது.

    இங்கேயே எப்பொழுதும் நெருப்பு கிடைக்கும்படி ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும் என்றனர்.

    எப்பொழுதும் நெருப்பு என்று கேட்டு விட்டு வியப்படைந்தவர் போல் பாபா தம் இருப்பிடத்திலிருந்து எழுந்து சென்றார்.

    மசூதியின் மத்தியில் போய் நின்று தம் கையில் இருந்த குச்சியால் தரையில் தட்டினார். உடனே அந்த இடத்தில் நெருப்பு உண்டாகி எரியத் தொடங்கியது.

    இந்த அற்புதச் செயலைக் கண்டு கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் வியப்பில் மூழ்கி விட்டனர்.

    அவர்களுடைய கண்களில் ஆனந்தக்கண்ணீர் பெருகியது. பாபா ஒரு அவதார நாயகர் என்பதை மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டனர்.

    பாபா பக்தர்களை பார்த்து நான் உண்டாக்கிய இந்த நெருப்பு என்றென்றும் அணையாமல் எரிந்து கொண்டேயிருக்கும்.

    இதிலிருந்து கிடைக்கும் "உதி" (சாம்பல்) துன்பங்களையெல்லாம் போக்கும்.

    பிணிகளை நீக்கும் என்று கூறினார். பின் மசூதியில் பணிபுரியும் அப்துல்லாவை அழைத்து இந்த நெருப்பை அணையவிடக்கூடாது.

    அவ்வப்பொழுது விறகுக்கட்டைகளைப் போட்டு எரித்து கொண்டே இருக்க வேண்டும் என்றார்.

    நாள் தோறும் தமக்குப் பக்தர்கள் தட்சணையாக செலுத்தும் தொகையில் தான தர்மங்கள் செய்தது போக மீதி இருக்கும் தொகையில் பாபா அக்னி குண்டத்திற்காக விறகுக்கட்டைகளை வாங்கி விடுவார்.

    அக்னி குண்டம் இல்லாத கோவில் எப்படி என் கோவிலாகும் என்று பாபாவே கேட்டதுண்டு.

    பாபாவின் "எம் மதமும் சம்மதமே" என்பதை விளக்குவதாய் உள்ளது அக்னி குண்டம். இந்துகளுக்கும், பார்சிகளுக்கும் புனிதமானது அக்னி. கோவிலுக்குச் சென்றால் அக்னி குண்டத்தை வலம் வராத பக்தர்களே இல்லை எனலாம்.

    • துயரங்கள் துடைப்பாய் போற்றி
    • துதிப்பவர்க்கு அருள்வாய் போற்றி

    சீரடி வாசா போற்றி

    சீலங்கள் தருவாய் போற்றி

    ஞாலத்தின் ஒளியே போற்றி

    நலம்தந்து அருள்வாய் போற்றி

    நான்மறைப் பொருளே போற்றி

    ஞானத்தின் ஒளியே போற்றி

    கற்பக விருட்சம் போற்றி

    கற்பூர ஒளியே போற்றி

    துளசியாய் இருப்பாய் போற்றி

    துயரங்கள் துடைப்பாய் போற்றி

    துதிப்பவர்க்கு அருள்வாய் போற்றி

    துணைநின்று காப்பாய் போற்றி

    பாபங்கள் தீர்ப்பாய் போற்றி

    பலன்களை அருள்வாய் போற்றி

    கிருஷ்ணனும் நீயே போற்றி

    பரமனும் நீயே போற்றி-

    சிவனும் நீயே போற்றி

    தத்தாத்ரேயராய் வந்தாய் போற்றி

    பாற்கடல் நீயே போற்றி

    பசுமையும் நீயே போற்றி

    சலனங்கள் தீர்ப்பாய் போற்றி

    சங்கடம் தீர்ப்பாய் போற்றி

    உலகெல்லாம் நீயே போற்றி

    உன்னதத் தெய்வம் போற்றி

    வீரத்தை தருவாய் போற்றி

    வெற்றிகள் அருள்வாய் போற்றி

    பசிப்பிணி தீர்ப்பாய் போற்றி

    பக்குவம் அருள்வாய் போற்றி

    நலம்தந்து காப்பாய் போற்றி

    நன்மையின் உருவே போற்றி

    வழிகாட்டி அருள்வாய் போற்றி

    வழித்துணை ஆவாய் போற்றி

    புகழ்தந்து காப்பாய் போற்றி

    புண்ணிய நேசா போற்றி

    கருணையின் உருவே போற்றி

    கலிகளைத் தீர்ப்பாய் போற்றி

    அதர்மங்கள் அழிப்பாய் போற்றி

    அறங்களை வளர்ப்பாய் போற்றி

    நற்குணத் தெய்வம் போற்றி

    நலம்பல தருவாய் போற்றி

    காண்பதற்கு எளியாய் போற்றி

    கனிவுடன் வருவாய் போற்றி

    எல்லையில்லாப் பரம்பொருள் போற்றி

    இல்லத்திற்கு வந்தருள்வாய் போற்றி

    அரிதினும் அரிதாய் இருப்பாய் போற்றி

    எளிதினும் எளிதாய் வருவாய் போற்றி

    பொன்மலர் மணமே போற்றி

    பொன்மனத் தெய்வம் போற்றி

    வண்ணங்கள் நீயே போற்றி

    வளர்கலை நீயே போற்றி

    எண்ணங்கள் நீயே போற்றி

    இதயமும் நீயே போற்றி

    வானவர்க்கு அரசே போற்றி

    வையத்தின் தெய்வம் போற்றி

    கவிகளும் நீயே போற்றி

    காவியம் ஆவாய் போற்றி

    எளியவர்க்கு தாயே போற்றி

    இனிமையாய் காப்பாய் போற்றி

    தவறுகள் தடுப்பாய் போற்றி

    தகுதிகள் தருவாய் போற்றி

    வேதனை தீர்ப்பாய் போற்றி

    வித்தகத்தேவா போற்றி

    நன்மையின் உருவே போற்றி

    நலம்தந்து அருள்வாய் போற்றி

    சங்கடம் தீர்ப்பாய் போற்றி

    சமரசத் தெய்வம் போற்றி

    அனுதினம் துதிப்போம் போற்றி

    ஆனந்தம் தருவாய் போற்றி

    துன்பங்கள் தீர்ப்பாய் போற்றி

    துணிவைத் தருவாய் போற்றி

    வேண்டுவன தருவாய் போற்றி

    விரைந்து வந்து அருள்வாய் போற்றி

    மோகத்தை அழிப்பாய் போற்றி

    முன்வந்து காப்பாய் போற்றி

    நினைத்ததை தருவாய் போற்றி

    நிம்மதி அருள்வாய் போற்றி

    மகிழ்ந்திட வருவாய் போற்றி

    மங்கலம் தருவாய் போற்றி

    எளியவர்க்கு அருள்வாய் போற்றி

    இனியவரை காப்பாய் போற்றி

    அனுதினம் துதிப்போம் போற்றி

    அருள்நெறி காப்பாய் போற்றி

    மலர்ப்பாதம் உடையாய் போற்றி

    மனங்கனிந்து அருள்வாய் போற்றி

    நற்குண நாதா போற்றி

    நலம் தந்து காப்பாய் போற்றி

    குங்கும நிறத்தாய் போற்றி

    குலம்காக்க வருவாய் போற்றி

    சந்தன மலராய் போற்றி

    சந்ததம் காப்பாய் போற்றி

    பொன்மனத் தெய்வம் போற்றி

    புகழ்தந்து அருள்வாய் போற்றி

    நதிஎன வந்தாய் போற்றி

    நலம்தந்து அருள்வாய் போற்றி

    கவலைகள் தீர்ப்பாய் போற்றி

    கலங்கரை விளங்கே போற்றி

    கீதையாய் வந்தாய் போற்றி

    கீதங்கள் நீயே போற்றி

    பக்தி கொண்டோம் போற்றி

    பரவசம் தந்தாய் போற்றி

    நாமங்கள் சொல்வோம் போற்றி

    நற்துணை ஆவாய் போற்றி

    வந்தனை செய்தோம் போற்றி

    வரம்தந்து அருள்வாய் போற்றி

    ஓம்காரப் பொருளே போற்றி

    உடன்வந்து அருள்வாய் போற்றி

    சாயி ஜோதியே போற்றி

    சகலமும் அருள்வாய் போற்றி.

    • செல்வர்களாய் இருப்பவர்களிடம் பணிவு வேண்டும்.
    • செடிகளில் பழங்கள் அதிகமானால் அவை வளைந்து கொடுக்கின்றன. அதுபோலத்தான் வாழ வேண்டும்.

    செல்வர்களாய் இருப்பவர்களிடம் பணிவு வேண்டும். செடிகளில் பழங்கள் அதிகமானால் அவை வளைந்து கொடுக்கின்றன.

    அதுபோலத்தான் வாழ வேண்டும்.

    தாழ்மையாய் இருக்க வேண்டும் என்று நான் சொல்வதால் அனைவரிடமும் பணிவாய் இருக்க வேண்டும் என்று பொருள் அன்று. கொடியவர்களிடம் கடுமையாகத்தான் இருக்க வேண்டும்.

    அறவழிகளில் பொருளைச் செலவு செய்ய வேண்டும். அதற்காக அளவுக்கு அதிகமாய் பொருளை தானம் செய்து ஆண்டியாகி விடக் கூடாது. வாழ்க்கைக்கு ஓரளவு செல்வம் அவசியமே. அதன் பொருட்டு கஞ்சனாகவும் இருக்கக்கூடாது.

    சிறியதை பெரிது செய்யாமல் வாழ்க்கையில் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும். அதற்காக அதிலேயே மூழ்கி கடவுளை மறந்து விடக்கூடாது.

    மனம் கட்டுக்கு அடங்காது. அதை அடக்க முயல வேண்டும். மனிதனது நிம்மதி என்பது அதில் தான் இருக்கிறது.

    ஈயானது எல்லா பொருட்கள் மீதும் உட்காருகிறது. ஆனால் தீயை அணுகும் போது பறந்து விடுகிறது.

    அது போலத்தான் மனமானது சிற்றின்பங்களில் மயங்கி பேரின்பமான கடவுளை நெருங்கும் போது வேறு புறம் போய்விடுகிறது.

    பிறவிகளில் மானுடப் பிறவியே மிக மிக உயர்ந்தது. அந்த பிறவி தான் தன்னை படைத்தவனை நினைத்து ஆராதித்து ஆனந்தம் அடைகிறது.

    வழிபாடுகளுள் உருவ வழிபாடு மிகவும் உயர்ந்தது. அந்த உருவத்தை மனத்தில் எண்ணி வழிபடும் போது மனம் ஒரு நிலையை அடைவது எளிதாகிறது.

    கடவுளின் திருவிளையாடல்களை எண்ணினாலும், தியானம் செய்வதாலும், புராணங்களை பாராயணம் செய்வதாலும் கடவுளை நெருங்குவதற்கு மேலும் வழி பிறக்கிறது.

    சித்தர்களையும் சாதுக்களையும் வழிபடுவதும் நன்மையே பயக்கும். வாழ்வில் ஆசைகளை குறைத்துக்கொண்டே வந்தால் நிம்மதி பெருகிக்கொண்டே போகும்.

    ஹரி யார் என்று அறியாதவர்கள் பண்டரிபுரத்திற்கு யாத்திரை சென்று பலன் என்ன? இப்படி யாத்திரை போகிறவர்கள் பலர் உண்மையான பக்தியால் போவதில்லை.

    பிறர் மதிக்க வேண்டும் என்பதற்காகவே போகிறார்கள்.

    ஆத்மாவை தூய்மையாய் வைத்திருப்பவன் என்றும் நிம்மதியாய் வாழ்கிறான்.

    • எவ்வளவு பெரிய மேதையானாலும் அவனால் கர்மாவிலிருந்து தப்ப முடியாது.
    • எத்தனை கோடி பணம் வைத்திருப்பவனும் பசி, தாகம் இல்லாமல் வாழ முடியாது.

    எவ்வளவு பெரிய மேதையானாலும் அவனால் கர்மாவிலிருந்து தப்ப முடியாது.

    எத்தனை கோடி பணம் வைத்திருப்பவனும் பசி, தாகம் இல்லாமல் வாழ முடியாது.

    முற்பிறப்பில் நீ செய்த கர்மாவின் பலனையே இப்போது நீ அனுபவிக்கிறாய். அதன் பலனால் தான் நீ மனித உடல் கொண்டு உள்ளாய்.

    உலகில் மனிதன் மட்டும் ஏற்றத்தாழ்வுடன் வாழ்வதாய் நீ நினைத்தால் அது தவறு. பெரிய தவறு. எல்லா உயிர்களிடத்திலும் அதனதன் கர்மாவை பொறுத்து வேறுபாடு உள்ளது. நுட்பமாய் நோக்கினால் உனக்கு அது புரியும்.

    நாய்களை பொதுவாக நோக்கினால் அவற்றிடையே உள்ள வேறுபாடு தெரியாது. அதே சமயம் உற்று நோக்கினால் உண்மை தெரியும். பணக்காரன் வீட்டு நாய் பஞ்சனையில் உலாவுகிறது. ஏழை வீட்டு நாய் குப்பை மேட்டில் தான் உழல்கிறது.

    மனிதனுக்கு பகையாய் இருப்பவை காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் என்னும் ஆறுந்தான். இவை அனைத்துமே மாயையின் தோற்றங்கள்.

    கடலில் நீந்துபவன் ஒவ்வோர் அலையையும் கடந்து கரை சேர்வது போல, நல்வாழ்க்கையை பெற விரும்புபவன் இந்த ஆறு அலைகளை கடக்க வேண்டும்.

    செல்வன் ஒருவன் பொன்னாபரணம் ஒன்றை வாங்கி அணிந்தால் ஏழை ஒருவன் அதை பார்த்து பொறாமை அடைகிறான்.

    தானும் அது போன்ற ஆபரணம் ஒன்றை பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறான். இது லோபம், மாயையால் தோன்றும் ஒவ்வொன்றும் இப்படிப்பட்டவை தான்.

    • என்னை அண்டியவர்களின் அன்பை ஏற்கிறேன். மற்றவர்கள் மன நிறைவிற்காக அவர்கள் என்னை வணங்குவதை ஒப்புக்கொள்கிறேன்.
    • இவையெல்லாம் ஒரு வகையில் சம்சார பந்தங்களே.

    வருவனவற்றை எல்லாம் எதிர்கொள்பவன் தான் துறவி. வந்த ஒரு நிகழ்ச்சிக்கு நொந்து வெந்து விரக்தியானவன் எப்படி துறவியாக முடியும்?

    துறவு என்பது ஒரு கடமை. அதுபோல இல்லறம் என்பதும் ஒரு கடமை தான். அதில் ஒவ்வொருவரும் தம் கடமை சரிவர செய்ய வேண்டும்.

    குழந்தை பிறப்பதும் உறவினர் இறப்பதும் முன் கர்மாவின் பலன். அதை உலகத்தை உருவாக்கிய பிரம்மாவினாலும் மாற்ற இயலாது.

    சூரியனையும் சந்திரனையும் பார்த்து எப்போதும் தோன்றும் இடத்திலிருந்து இன்று இரண்டு அடி தள்ளி உதிக்க வேண்டும் என்று யாராவது கட்டளை இட முடியுமா?

    பிறந்த ஒவ்வொருவரும் கர்மப்படி தமக்கு உரிய காலத்தில் மரணம் உண்டு என்பதை உணர வேண்டும்.

    பெற வேண்டியதை உரிய காலத்தில் பெறுவது எப்படி தவிர்க்க முடியாதோ, அது போலவே இழக்க வேண்டியதையும் உரிய காலத்தில் இழந்து தான் ஆக வேண்டும்.

    சம்சாரத்தை துறப்பதில் நிம்மதி உள்ளது என்று கூறுவதில் உண்மை இருக்கிறது என்றாலும், அதுவே முழுமையான உண்மையாகாது.

    ஒவ்வொரு மனிதனும் பிறந்த பின் எப்படி வாழ்ந்தாலும் அவன் மறையும் வரையில் ஏதோ ஒரு வழியில் சம்சார பந்தத்திற்கு கட்டுப்பட்டவனாகவே இருக்கிறான். இருந்து தான் ஆக வேண்டும். இது தான் உலக நியதி.

    நான் கூட ஒரு வகையில் சம்சார பந்தத்தில் சிக்கிக்கொண்டு தான் விழிக்கிறேன். என்னை நம்பியவர்களுக்கு துயரம் வரக்கூடாது என்று நினைக்கிறேன்.

    என்னை அண்டியவர்களின் அன்பை ஏற்கிறேன். மற்றவர்கள் மன நிறைவிற்காக அவர்கள் என்னை வணங்குவதை ஒப்புக்கொள்கிறேன்.

    இவையெல்லாம் ஒரு வகையில் சம்சார பந்தங்களே.

    ×