search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    • பங்குனி மாதத்திற்கு உண்டான தனிச்சிறப்பு நம்மை ஒன்று படவைப்பதாக அமைகின்றது.
    • பங்குனி உத்திரம் பல குடும்பங்களின் குல தெய்வங்களை தேடி சென்று வழிபடும் நன்நாளாக அமைகின்றது.

    பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும், பவுர்ணமியும் சேரும் நாள் நட்சத்திரத்தால் பவுர்ணமியின் பலன் கூடுதலாக அமையும் நாளாக அமைகின்றது.

    ஒவ்வொரு மாதத்தின் பவுர்ணமி வெவ்வேறு சிறப்புகளை நமக்கு தருவதாக அமைகின்றது.

    அதில் பங்குனி பவுர்ணமி குடும்ப ஒற்றுமையை உணர்த்தும் நாளாக அமைவது தனிச்சிறப்பு.

    பொதுவாக `பங்குனி உத்திரம்' என நட்சத்திரத்துக்கு சிறப்பு தரும் பவுர்ணமி நாள் என்றவுடன் அனைவரது உள்ளமும் குதூகலம் அடையக் காரணம் முருகனுக்கு விழா எடுக்கும் நாள் என்ற சிறப்பை பெறுகின்றது.

    தமிழ் கடவுள் சுப்பிரமணியின் ஆலயங்கள் அனைத்தும் விழா கோலம் அடையும் தினம் என்று மட்டுமே பலர் அறிந்து வைத்திருப்போம்.

    இந்நாளில்தான் தெய்வத் திருமணங்கள் நடைபெற்றுள்ளது என்று நமது புராணங்கள் நமக்கு தெளிவுபடுத்துகின்றன.

    எனவேதான் பங்குனி மாதத்தில் நம் குடும்பங்களில் திருமண சடங்குகளை நாம் நடத்துவதில்லை.

    பங்குனி மாதத்திற்கு உண்டான தனிச்சிறப்பு நம்மை ஒன்று படவைப்பதாக அமைகின்றது.

    பங்குனி உத்திரம் பல குடும்பங்களின் குல தெய்வங்களை தேடி சென்று வழிபடும் நன்நாளாக அமைகின்றது.

    பங்குனி உத்திரம் அன்று நாம் நம் குலதெய்வங்களை வழிபட உகந்த நாளாக அமைகின்றது.

    இந்நாளில் நமது குலதெய்வ கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வது நம் குலம் சிறக்க உதவுகின்றது.

    நாம் நம்குல தெய்வங்களை இந்த நாளில் சென்று வழிபாடு செய்தால் நமது மூதாதையரின் பரிபூரண ஆசிகள் நமக்கு கிடைக்கின்றது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பன்னிரண்டு சிவஸ்தலங்களில் கடைசியாக இருப்பது ஏகாம்பரேஸ்வர் திருக்கோவில்.
    • கும்பகோணத்திற்குள் இருக்கும் இந்த கோவிலைப் பற்றி புராணங்களில் அங்கங்கே லேசாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    பன்னிரண்டு சிவஸ்தலங்களில் கடைசியாக இருப்பது ஏகாம்பரேஸ்வர் திருக்கோவில்.

    கும்பகோணத்திற்குள் இருக்கும் இந்த கோவிலைப் பற்றி புராணங்களில் அங்கங்கே லேசாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    எல்லா சிவன் கோவில்களில் காணப்படும் நெறிமுறைகள் இங்கு இருக்கிறது.

    மாசி மகப் பெருவிழா அன்று ஏகாம்பரேஸ்வரர் உத்சவர் மகாமகக் குளத்திற்கு எழுந்தருளுகிறார்.

    இக்கோவில் நகரின் மையப்பகுதியில் உள்ளது.

    கோவிலில் உள்ள ராஜகோபுரம் நான்கு நிலைகளைக் கொண்டு அழகுற அமைக்கப்பட்டுள்ளது.

    இக்கோவிலில் உள்ள இறைவன் ஏகாம்பரேஸ்வரர், இறைவி காமாட்சியம்மன்.

    அலங்கார நாயகன் ஏகாம்பரேஸ்வரர் நான்கு கரங்களுடன் நின்ற வடிவில் அற்புதமாகக் காட்சியளிக்கிறார்.

    அம்மன் சன்னதியின் இரு புறமும் அழகுற தீட்டப்பட்டுள்ள காயத்ரிதேவியின் திருவுருவமும், காமாட்சியம்மனின் ஓவியமும் அழகின் அற்புதமாகக் காண்போரை ரசிக்கத் தூண்டுகிறது.

    மகாமண்டபத்தின் தெற்கு முகமாக நின்ற கோலத்தில் அபயம், வரதம், அங்குசம், கதை, நாகாஸ்திரம், பாசம், எச்சரிக்கை ஆகிய கரங்களுடன் எழுந்தருளி தெய்வீகக்கலை அழகுடனும் சிம்ம வாகனத்தில் துவாரபாலகியர் வாசலை அலங்கரிக்க கொலு வீற்றிருக்கிறார் காமாட்சியம்மன்.

    • இன்றைக்கு இந்த திருத்தலம் சாக்கோட்டை என்று வழங்கப்பட்டு வருகிறது.
    • சுந்தரர் மிகவும் போற்றி பாடியிருக்கிற பெருமையையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது.

    கும்பகோணத்திலிருந்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தொலைவில் அரசலாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது இந்தத் திருக்கோவில்.

    இன்றைக்கு இந்த திருத்தலம் சாக்கோட்டை என்று வழங்கப்பட்டு வருகிறது.

    சுந்தரர் மிகவும் போற்றி பாடியிருக்கிற பெருமையையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது.

    முன்னொரு காலத்தில் ஏராளமான இயற்கை வளம் பொருத்தி செழிப்பாக விளங்கியது.

    மாளிகை, கோட்டைச்சுவர் என்றெல்லாம் இந்த ஊரைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்தது.

    இங்குள்ள சிவபெருமானுடைய கோவிலைச் சுற்றி மிக பலமான கோட்டை கட்டப்பட்டிருந்ததால் கோட்டைச் சிவன் கோவில் என்று வழங்கப்பட்டு வருகிறது.

    அமிர்த கலசத்தின் நடுப்பகுதி இங்கு தங்கியதால் கலயநல்லூர் என்ற பெயர் முதலில் ஏற்பட்டது.

    இந்த இடத்தில் பிரம்ம தேவர் தவம் இருந்து சிவபெருமானே வழிபட்டு வந்ததால் இந்த ஸ்தலத்திற்கு மற்றொரு பெருமையும் உண்டு.

    உமையவளே இங்கு வந்து கடுந்தவம் புரிந்து உயிர்களைக் காக்க முயற்சித்ததோடு சிவபெருமானையும் விரும்பி அமர்ந்த இடம் என்று தனிச்சிறப்பும் பெற்றது.

    இறைவன் அமிர்தகலேஸ்வரர் என்றும், இறைவி அமிர்தவல்லி என்றும் வழங்கப்படுகின்றனர்.

    இங்குள்ள தீர்த்தத்திற்கு நால்வகைத் தீர்த்தம் என்று பெயர்.


    • இங்கு மூன்று கால் கொண்ட உருவத்தோடு காட்சியளிப்பது வியப்பினைத் தருகிறது.
    • அகத்திய முனிவர் தனது சாபம் தீர ஸ்ரீ பாணபுரீஸ்வரம் வந்து இறைவனை வழிபட்டு பேறு பெற்றார்.

    இந்த அழகிய திருக்கோவில் கும்பகோணம் ரயில் சந்திப்பிலிருந்து வடமேற்கில் சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.

    மகா பிரளயத்தின் பொழுது மிதந்து வந்த அமுத கும்பத்தை சிவபெருமான் உடைக்க எண்ணியபொழுது இந்த இடத்தில் நின்று கொண்டுதான் கும்பத்தின் மீது பாணம் தொடுத்தார்.

    பாணம் தொடுத்த இடமாதலால் இந்த இடத்திற்கு பாணாத்துறை என்றும், இறைவன் பாணபுரீஸ்வரர் என்றும், அம்பாள் சோம கமலாம்பாள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

    புராணத்தில் கூறப்படும் கோவில்களில் அதி முக்கியத்துவம் வாய்ந்த முதன்மையான கோவில் என்றும் சொல்லலாம்.

    உலக அழிவை, பிரளயத்தை இங்கு இருந்துதான் சிவபெருமான் தடுத்தார் என்பதால் உன்னதமான தலம்.

    இத்தலத்தில் மூன்று கால்கள் உடைய சிவபெருமானின் திரு உருவம் காணப்படுகிறது.

    பொதுவாக சிவபெருமான் லிங்க வடிவில்தான் காட்சியளிப்பார்.

    இங்கு மூன்று கால் கொண்ட உருவத்தோடு காட்சியளிப்பது வியப்பினைத் தருகிறது.

    அகத்திய முனிவர் தனது சாபம் தீர ஸ்ரீ பாணபுரீஸ்வரம் வந்து இறைவனை வழிபட்டு பேறு பெற்றார்.

    சூரசேனனின் மனைவி காந்திமதியும் இங்கு வந்து தவம் புரிந்து சிவபெருமானை வழிபட்டு பேறு பெற்றார்.

    காசிக்குச் சென்று விஸ்வநாதரை வணங்கிய வியாசருக்கு தரிசனம் கொடுத்த சிவபெருமான் பொய் உரைத்து நிறைய பாவத்தைப் பெற்ற நீங்கள், காசியில் இங்கு வந்து என்னை வணங்கினால் உங்கள் பாவம் கழியாது.

    எனவே கும்பகோணம் சென்று அங்குள்ள மகாமகக் குளத்தில் மாசிமகத்தன்று நீராடி அப்படியே பாணபுரீஸ்வரம் சென்று அங்கு எம்மை பூஜித்தால் யாம் அங்கு வந்து உமது சாபத்தை விமோசனம் செய்வோம் என்று சொன்னதால் வியாசபெருமான் இங்கு வந்து சாபவிமோசனம் பெற்றார்.

    புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இந்த ஸ்தலத்திற்கு வந்து சிவபெருமானை மானசீகமாக வழிபட்டால், ஆரோக்கியமான புத்திர பாக்கியம் பெறுவார்கள் என்பது காலகாலமாக வழங்கி வரும் நியதி.

    பிரளயம் முடிந்து முதலில் தோன்றிய சிவன் கோவில் என்பதால் மற்ற எந்தக் கோவில்களுக்கும் கிடைக்காத பெருமை, புகழ், அந்தஸ்து இந்தக் கோவிலுக்கு அதிகமாகவே உண்டு.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த ஸ்தலத்திலுள்ள அம்பிகையான ஞானபிரகலாம்பிகையை வழிபட்டால் காளஹஸ்திப் பெருமானை வணங்கிய புண்ணியம் கிடைக்கும்.
    • இங்குள்ள ஒரு பழமையான சன்னதிக்குப் பெயர் ஜுரகேஸ்வரர்.

    ஆந்திராவில் சித்தூருக்குப் பக்கத்தில், திருப்பதி செல்லும் வழியில் உள்ள காளஹஸ்தி கோவிலுக்குச் சென்று வழிபட முடியாதவர்களுக்கெல்லாம் இறைவன் தானே அருள்பாலிக்கும் வகையில் கும்பகோணத்திற்குப் பக்கத்தில் காவிரி நதியின் தெற்கு பக்கத்தில் காளஹஸ்தீஸ்வரராக திருக்கோவில் கொண்டிருக்கிறார்.

    இந்த ஸ்தலத்திலுள்ள அம்பிகையான ஞானபிரகலாம்பிகையை வழிபட்டால் வாயு சேத்திரம் என்று அழைக்கப்படும் காளஹஸ்திப் பெருமானை வணங்கிய புண்ணியம் கிடைக்கும்.

    இங்குள்ள ஒரு பழமையான சன்னதிக்குப் பெயர் ஜுரகேஸ்வரர்.

    யாருக்கு வெகு நாட்களாக கடுமையான ஜுரம் அடிக்கிறதோ என்ன மருந்து, மாத்திரை கொடுத்தாலும் நிற்கவில்லையோ, டாக்டர்களாலும் கைவிடப்பட்டாலும் பரவாயில்லை.

    அவர்களை சேர்ந்தவர்கள் இந்த சன்னதிக்கு வந்து சுவாமிக்கு வெந்நீரால் அபிஷேகம் செய்து, புழுங்கல் அரிசியால் சாதம் செய்து நிவேதனம் செய்து, மிளகு ரசம், பருப்புத் துவையல் மற்றும் ஜுரகேஸ்வரருக்கு நைவேத்தியமாக செய்து வில்வ இலையால் அர்ச்சனை செய்து, அங்கு தரப்படும் விபூதிப் பிரசாதத்தை சாப்பிட்டால் எப்பேர்ப்பட்ட ஜுரமும் குறைந்து விடும்.

    இது இன்று வரை நடக்கின்ற அதிசயம்.

    • அற்புதமான சிவஸ்தலம். அமைதியாக கோடீஸ்வரர் அருள் பாலித்து வருகிறார்.
    • மார்க்கண்டேய மகரிஷி பூஜித்த ஸ்தலம் என்பது இன்னொரு பெருமை.

    அற்புதமான சிவஸ்தலம். அமைதியாக கோடீஸ்வரர் அருள் பாலித்து வருகிறார்.

    மார்க்கண்டேய மகரிஷி பூஜித்த ஸ்தலம் என்பது இன்னொரு பெருமை.

    ஒரு சமயம் ஹேரண்ட முனிவர் காவிரியில் மூழ்கி இந்த தலத்தில் வெளியே வந்தார்.

    இன்னொரு சமயம் திருவலம் சுழியிலுள்ள காவிரி படுகைக்குள் இறங்கி, மறைந்து போனவர், இந்த கோடீஸ்வரர் திருக்கோவிலில் எழுந்து நின்று தரிசனம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

    இதற்கு அத்தாட்சியாக கொண்ட முனிவரின் திரு உருவம் இந்தத் திருக்கோவிலில் அமைந்திருக்கிறது.

    முன்பொரு சமயம் இந்த இடம் ஆமணக்கு காடாக இருந்தது. இறைவன் ஆமணக்கு கொட்டைச் செடியின் கீழ் இருந்ததால் இந்த ஊருக்கு கொட்டையூர் என்ற பெயர் ஏற்பட்டது.

    சோழ மன்னன் ஒருவன் தன் மீது கொண்ட அளவற்ற பக்தியைக் கண்டு இறைவன் கோடி லிங்கமாக தரிசனம் கொடுத்த ஸ்தலம் என்று பெருமைப்பட்ட ஸ்தலம்.

    இதனால் இன்றைக்கு கோடீஸ்வரம் என்று பெயர் வழங்கி வருகிறது.

    • மிகப்பெருமையும், புகழும் கொண்ட மற்றொரு திருக்கோவில் இது.
    • ஆதி கும்பேஸ்வரர் திருக்கோவிலுக்கு தென்மேற்குத் திசையில் அமைந்திருக்கிறது.

    மிகப்பெருமையும், புகழும் கொண்ட மற்றொரு திருக்கோவில் இது.

    ஆதி கும்பேஸ்வரர் திருக்கோவிலுக்கு தென்மேற்குத் திசையில் அமைந்திருக்கிறது.

    தஞ்சை, பழையாறைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டு வந்த சோழ மன்னர்கள் இந்த இடத்தைதான் பொற்காசுகளை அடிக்கும் நிலையமாக வைத்திருந்தார்கள்.

    அதனால் இந்த சுவாமிக்கு கம்பட்ட விஸ்வநாத ஸ்வாமி என்று முதலில் பெயர் ஏற்பட்டது.

    உதயகிரி என்னுமிடத்தில் குடிகொண்டிருந்த மாதவர் என்பவர் சிவபெருமானை தரிசனம் செய்யும் பொருட்டு, தன் புதல்வன் தூம கேதுவுடன் இங்கு வந்தார்.

    அப்போது இந்த இடம் மாலதி வனமாக இருந்தது.

    இருப்பினும் அதைப்பற்றிக் கவலை கொள்ளாமல் தூமகேது மகாமகத் தீர்த்தத்தில் நீராடி கும்பேஸ்வரரை வணங்கி மாலதி வனத்தில் குடியேறினார்.

    • இங்குள்ள இறைவன் திருவடி நர்மதை ஆற்றின் கரையிலிருந்த கற்களால் செதுக்கப்பட்டது என்பது வியக்க வைக்கும் செய்தி.
    • சம்பந்தர் காரோணம் என்று பதிகம் பாடியது இங்குதான் என்று சொல்லப்படுகிறது.

    மகாமகம் சம்பந்தப்பட்ட இன்னொரு முக்கியமான சிவ ஸ்தலம் இது.

    மகா பிரளயத்தின் போது மிதந்து வந்த அமுத கும்பத்தை சிவபெருமான் சிதைத்தார்.

    அப்போது அமுத கலசத்தை தாங்கிக் கொண்டு வந்த "உறி", இந்த இடத்தில் விழுந்து பின்னர் லிங்கமாக மாறிற்று.

    உறிக்கு மறு பெயர் சிக்கம். எனவே இந்த சிவலிங்கத்திற்கு முதலில் சிக்கேசர் என்று பெயர் வந்தது.

    நவகிரகங்களில் ஒன்றான சந்திரன் தான் செய்த தவறுக்காக குருவான பிரகஸ்பதியின் சாபத்திற்கு உள்ளானான்.

    தனது சாபத்தைப் போக்க சிவபெருமான் தான் கருணை காட்ட வேண்டுமென்று எண்ணி இந்த ஸ்தலத்திற்கு வந்து சிவபெருமானான சிக்கேசரை வழிபட்டு வந்தான்.

    தினமும் தான் நீராடுவதற்காக இங்குள்ள இறைவன் சன்னதிக்கு வலப்புறத்தில் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கினான் சந்திரன்.

    இறைவனும் சந்திரனுடைய வேண்டுகோளை ஏற்று இறைவனும் அவனுக்குத் தரிசனம் தந்தார்.

    எனவே இறைவனுக்கு சிக்கேசர் என்ற பெயர் மாறி சோமேஸ்வரர் என்று புதுப் பெயர் வந்தது. அம்பாளுக்கு சோமநாயகி என்று பெயர் உண்டாயிற்று.

    வியாழ பகவான் இத்தலத்தை அடைந்து இறைவனை வழிபட்டதால் வியாழ சோமேஸ்வரர் என்றும் பெயர் உண்டு.

    மகப்பேறு வேண்டும் என்பதற்காக பராந்தக சோழன் இந்த லிங்கத்தை வழிபட்டதால் லிங்கம் சோழீசர் என்று பெயர்க்காரணம் ஏற்பட்டது.

    இத்தலத்திலிருக்கும் தேனார் மொழியம்மை இறைவனது திருமேனியை ஆரோகணித்ததால் காரோணம் என்றும் வழங்கப்பட்டு வருகிறது.

    இங்குள்ள இறைவன் திருவடி நர்மதை ஆற்றின் கரையிலிருந்த கற்களால் செதுக்கப்பட்டது என்பது வியக்க வைக்கும் செய்தி.

    சம்பந்தர் காரோணம் என்று பதிகம் பாடியது இங்குதான் என்று சொல்லப்படுகிறது.

    சந்திரதோஷம், குருதோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் தோஷம் விலகும்.

    மாதவரை விட தூமகேது இங்குள்ள வருண தீர்த்தத்தால் இறைவனுக்கு சதா சர்வ காலமும் பூஜை செய்து வணங்கி வர இறைவனும் தூமகேதுவுக்கு காட்சியளித்தார்.

    தூமகேதுவின் வேண்டுகோள்படியே இறைவன் இங்கு நிரந்தரமாக தங்கி தூமகேதுவுக்கு அருள் பாலிக்கிறார்.

    இங்குள்ள தீர்த்தம் தூமகேது தீர்த்தம் என்று பெயர் பெற்றது.

    • நடராஜப் பெருமான் லதா விருச்சிக நடனத் தோற்றத்தில் அற்புதமாக தாண்டவமாடுவதை பார்க்கலாம்.
    • இந்தக் கோவிலுள்ள துர்க்கை மிகவும் சக்தி உடையவர்களாகக் கருதப்படுகிறாள்.

    குடந்தையில் மிகத் தொன்மை வாய்ந்த சிறப்புடைய கோவில்களில் நாகேஸ்வர சுவாமி கோவில் முக்கியமானதாகும்.

    இறைவன் மடந்தை பாகார், எனும் நாகேஸ்வரர், அம்பாள் பெயர் பெரிய நாயகி.

    பிரளய காலத்தில் அமுத கும்பத்திலிருந்து வில்வம் விழுந்த இடம் இத்தலம்தான். முதலில் இதற்கு வில்வ வனம் என்று பெயர்.

    தேவார காலத்தில் குடந்தையின் கீழ்க் கோட்டமாக இக்கோவில் கருதப்பட்டது.

    முன்பொரு சமயம் பூமியின் பாரத்தால் அதை தாங்க முடியாமல் ஆதிசேஷன் இங்குள்ள சிவபெருமானை வழிபட்டு நிறைய வலிமை பெற்றதால் நாகேஸ்வரர் கோவிலாக பின்பு மாறியது.

    ஆதிசேஷனைப் போல் சூரியனுக்கும் திடீரென்று வலிமையும், பிரகாசமும் குறைந்து கொண்டே வந்தது.

    இத்தலத்தில் குடி கொண்டிருக்கும் சிவபெருமானை தரிசனம் செய்தால் இழந்த ஒளியை மீண்டும் பெறலாம் என்ற வாக்கிற்கிணங்க சூரியன் இங்கு வந்து இறைவனை வணங்கினார்.

    இறைவனும் சூரியனுக்குரிய குறையை போக்கி அருள் பாலித்தார்.

    இதனால் இது பாஸ்கர ஷேத்திரம் என்றும் கருதப்படுகிறது. இங்கு சூரியனுக்கு சன்னதி உண்டு.

    ஒவ்வொரு ஆண்டும் சித்திரை 11, 12, 13ந் தேதியன்று சூரியனின் உதய கால கிரணங்கள் நாகேஸ்வர லிங்கத்தின் மீது விழுகின்ற காட்சியை இப்பொழுதும் காணலாம்.

    இறைவியின் அழகு சொல்ல முடியாதது.

    நடராஜப் பெருமான் லதா விருச்சிக நடனத் தோற்றத்தில் அற்புதமாக தாண்டவமாடுவதை பார்க்கலாம்.

    இந்தக் கோவிலுள்ள துர்க்கை மிகவும் சக்தி உடையவர்களாகக் கருதப்படுகிறாள்.

    • கவுதமர் அன்று முதல் கவுதமேசர் என்று பெயர் பெற்றார். அவர் அமைத்த தீர்த்தம் கவுதம தீர்த்தமாக மாறிற்று.
    • கவுதமருக்கு அருள் பாலித்ததால் உபளிதேச்சுப் பெருமான் பின்னர் கவுதமமேசர் என்று பெயர் மாற்றினார்.

    கவுதமர் என்ற பிரபலமான முனிவருக்கு சிவபெருமான் மீது அளவு கடந்த பக்தி உண்டு.

    இவர் தன் மனைவியுடன் தலயாத்திரை செய்து கொண்டே சிதம்பரம் வந்தார். பிறகு சீர்காழிக்கு வந்தார்.

    அப்போது சீர்காழியில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது.

    இந்த பஞ்சத்தை தன்னால் இயன்றவரை தீர்த்துக் கொண்டிருக்கும் பொழுது கவுதமரின் புகழ் பெருமை அன்னதானப் புண்ணியம் இவற்றைக் கண்டு பொறாமைப்பட்ட அவருடைய சீடர்கள் சிலர், வேண்டுமென்றே ஒரு பசுவை அவர் முன் கொண்டு வந்து நிறுத்தினர்.

    ஏற்கனவே கடுமையான பஞ்சத்தால் இளைத்திருந்த அந்த பசு, கவுதம முனிவரின் கை பட்டவுடன் இறந்து விட்டது. தான் ஒரு பசுவைக் கொலை செய்து விட்டோமே என்ன செய்வது என்று திகைத்த கவுதமர் உடனே தன் மனைவியோடு சீர்காழியை விட்டுக் கிளம்பி மயிலாடுதுறைக்கு வந்தார்.

    மயிலாடுதுறையில் தங்கியிருந்த துர்வாச முனிவரிடம் சீர்காழியில் தான் செய்த பசுவதையைச் சொன்ன போது, அதற்கு துர்வாச முனிவர் பசுவதையை நீ செய்யவில்லை.

    உன் பெருமையைக் கெடுக்க பாதகர் செய்த சூழ்ச்சி.

    இனியும் இப்படிப்பட்ட பசுக்கொலை ஏற்படாமலிருக்க கும்பகோணம் சென்று காவிரியில் நீராடி மகாமகக் குளத்திற்கு தென்மேற்கு முனையில் எழுந்தருளியிருக்கும் உபளிதேச்சுப் பெருமானை தரிசித்தால் உங்களிடம் ஒட்டிக் கொண்டிருக்கும் பாவம் நீங்கும் என்று வழிகாட்டினார்.

    துர்வாச முனிவரின் யோசனையை ஏற்று, கவுதமர் காவிரியில் நீராடி கும்பகோணம் மகாமகக் குளத்தின் அருகே குடிகொண்டிருக்கும் சிவ பெருமானை வழிபட வந்தார். அங்கு தனக்கென்று ஒரு தீர்த்தம் அமைத்தார்.

    அதில் தினமும் நீராடி உபளி தேச்சுப் பெருமானை வழிபட்டு வரும் பொழுது சிவபெருமான் கவுதமருக்குக் காட்சியளித்தார். இதனால் கவுதமரின் பசுக்கொலை பாவம் விலகியது.

    கவுதமர் அன்று முதல் கவுதமேசர் என்று பெயர் பெற்றார். அவர் அமைத்த தீர்த்தம் கவுதம தீர்த்தமாக மாறிற்று.

    கவுதமருக்கு அருள் பாலித்ததால் உபளிதேச்சுப் பெருமான் பின்னர் கவுதமமேசர் என்று பெயர் மாற்றினார்.

    அம்பாள் பெயர் சவுந்தரநாயகி. இன்னொரு காரணப் பெயரும் உண்டு. அமுதக் குடத்திலிருந்து கயிறு (பூணூல்) விழுந்த இடம் இந்த ஸ்தலம்.

    இங்கு தோன்றிய சிவலிங்கத்திற்கு கோவில் கட்டப்பட்டு முதலில் யக்நோபஷதேஸ்வரர் என்று பெயர் வைத்தார்கள்.

    பின்னர் உபளிதேச்சுப் பெருமானாக மாறி இன்றைக்கு கவுதமேஸ்வரர் கோவிலாக விளங்கி வருகிறது.

    • இந்த திருக்கோவில் மகாமகக் குளத்தின் கீழ்க்கரையில் அமைந்துள்ளது.
    • இறைவன் பெயர்அபிமுகேஸ்வரர், அம்பாள் பெயர் அமுதவள்ளி.

    இந்த திருக்கோவில் மகாமகக் குளத்தின் கீழ்க்கரையில் அமைந்துள்ளது.

    இறைவன் பெயர்அபிமுகேஸ்வரர், அம்பாள் பெயர் அமுதவள்ளி.

    பிரளயத்தின் பொழுது சிவபெருமான் வேட உருவம் தாங்கி அமுதகலசத்தை உடைத்த பொழுது அந்தக் கும்பத்திலிருந்த தேங்காய் விழுந்த இடத்தில் ஒரு தென்னை மரம் தோன்றியது.

    அந்தத் தென்னை மரத்திற்கு அடியில் சிவலிங்கமும் தோன்றியது.

    இதனால் இத்தலத்திற்கு நாளிக்கேசர் என்று பெயர் சூட்டப்பட்டது (நாளி என்றால் சமஸ்கிருதத்தில் தென்னை மரத்தைக் குறிக்கும்).

    இத்தலத்தில் இறைவன் முதலில் கிழக்கு நோக்கித்தான் இருந்தார்.

    மகாமகக்குளத்தில் மகாமக தினத்தன்று நீராட நவ புண்ணிய நதிக் கன்னியர்கள் வந்த பொழுது, அவர்களுக்குத் தரிசனம் தர வேண்டி மேற்குத் திசையில் காட்சி கொடுத்தருளினார்.

    இதனால்தான் இங்குள்ள இறைவன் பின்னர் அபிமுகேஸ்வரர் என்ற பெயர் பெற்றார்.

    எந்த புண்ணிய தலத்திற்கும் சென்றும் தீராத குஷ்ட நோயை "சுமதி" என்ற பெண்ணுக்கு இங்குள்ள இறைவன் அந்த நோயைத் தீர்த்தார் என்பதால் அபிமுகேஸ்வரரை வணங்கினால் நோயெல்லாம் தீரும் என்ற நம்பிக்கை உண்டு.

    இதே போல் ஊமையாக இருந்த இளவரசன் ஒருவன், மாசிமகத்தன்று இங்குள்ள குளத்தில் நீராடி அபிமுகேஸ்வரரை பிரார்த்தனை செய்ததால் நன்றாகப் பேசத் தொடங்கினார் என்று புராண வரலாறு உண்டு.

    • நவநதிகளின் கன்னியர்களை சிவ பெருமான் தன்னோடு இங்கு அழைத்து வந்து இந்தக் கோவிலில் தான் தங்க வைத்தார்.
    • மறுநாள் மகாமக குளத்தில் நீராட வேண்டிய வசதிகளையும் செய்து கொடுத்தார்.

    மகாமகக் குளத்தின் வடக்கு கரையில் அமைந்துள்ளது.

    ராவணனைக் கொல்ல உருத்திராம்சம் பெற வேண்டி ராமர் இங்கு வந்து தவம் புரிந்து சிவ பெருமானை வேண்டினார்.

    சிவ பெருமானும் ராமருக்கு உத்திராட்ச ஆரோகணம் கொடுத்தார்.

    நவநதிகளின் கன்னியர்களை சிவ பெருமான் தன்னோடு இங்கு அழைத்து வந்து இந்தக் கோவிலில் தான் தங்க வைத்தார்.

    மறுநாள் மகாமக குளத்தில் நீராட வேண்டிய வசதிகளையும் செய்து கொடுத்தார்.

    காசியிலிருந்து வந்ததால் காசி விஸ்வநாதர் என்று அழைக்கப்படுகிறார்.

    இந்தக் கோவில் மேற்கு திசை நோக்கி இருக்கிறது. இறைவனும் மேற்குத் திசையில் அமர்ந்து அருள் பாலிக்கிறார்.

    இங்குள்ள அம்பிகை தெற்கு திசையில் இருக்கிறார். அம்பிகையின் திருநாமம் விசாலாட்சி ஆகும்.

    நவகன்னி கன்னியர்கள் இங்கு காட்சி தருகிறார்கள்.

    முதலில் கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி, நடுவில் காவிரி அடுத்து கோதாவரி, கிருஷ்ணா, துங்கபத்ரா, சரயு என்று வரிசையாக இருக்கிறார்கள்.

    இதில் கங்கை மட்டும் சங்கு, சக்கரம் அபய வரதத்துடன் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகின்றார்.

    ×