search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளிவரும் அத்திவரதர்
    X

    40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளிவரும் அத்திவரதர்

    • தமிழகத்தில் எங்கும் காணமுடியாத மிகப்பெரிய அளவில் சுதர்சன ஆழ்வார் திருமேனி காட்சி தருகின்றது.
    • இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி காட்சியளிக்கின்றார்.

    திருக்குளத்தின் கிழக்குத்திசையில் சக்கரத்தாழ்வார் என பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சந்நிதி அமைந்துள்ளது.

    தமிழகத்தில் எங்கும் காணமுடியாத மிகப்பெரிய அளவில் சுதர்சன ஆழ்வார் திருமேனி காட்சி தருகின்றது.

    இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி காட்சியளிக்கின்றார்.

    பெருமாளை தரிசித்த பிறகு, பிரகாரத்தில் உள்ள தங்கப்பல்லியை தரிசிக்கும் வழக்கம் உள்ளது.

    முனி குமாரர்கள் இருவர் முனிவரின் சாபத்தினால் பல்லிகளாகி இந்தத் தலத்துக்கு வந்து தவம் செய்து சாபவிமோசனம் பெற்றதாக ஒரு வரலாறு உண்டு.

    அவர்களின் நினைவாக இந்திரன் தங்கத்தால் ஆன பல்லி ஒன்றையும், வெள்ளியால் ஆன பல்லி ஒன்றையும் இங்கே ஸ்தாபித்தான்.

    ஆயினும் இப்போது தங்கப்பல்லி மட்டும்தான் உள்ளது.

    இதைத் தொட்டு வணங்கினால் எல்லா தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

    நம் தலைக்கு மேலே, உயரத்தில் நிறுவப்பட்டுள்ள சுமார் 3 அடி நீளம் உள்ள தங்கப்பல்லியை, படிகளில் ஏறிக் கையால் அதன் உடல் முழுவதும் தொட்டு வணங்கும் பழக்கம் உள்ளது.

    இதனால் வடமாநிலத்தவர்கள் இத்தலத்தை பல்லி கோவில் என்றே அழைக்கிறார்கள்.

    இக்கோவிலின் மிகச்சிறப்பாக போற்றப்படுவது ஆதி அத்தி வரதர்.

    வரதராஜ பெருமாள் ஆலயத்தின் உள்ளே இருக்கும் அனந்தசரஸ் புனித குளத்தின் அடியில் வீற்றிருக்கும் அத்திவரதர் பெருமாளை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும்.

    ஏனெனில் அவர் பக்தர்களின் கண்ணுக்குப் புலப்படாது வீற்றிருப்பது அனந்தசரஸ் திருக்குளத்தின் அடியில்.

    இக்கோவிலின் நூறுகால் மண்டபத்தின் அருகில் நீருக்கு அடியில் உள்ள நான்கு கால் மண்டபத்தில் தன்னை மறைத்துக்கொண்டு பக்தர்களின் எண்ணத்தோடு அருள்பாலித்து வருகிறார்.

    இக்குளத்தில் நீர் எப்போதும் வற்றுவதில்லை. அதனால் பெருமாள் யார் கண்ணுக்கும் புலப்படமாட்டார்.

    பெருமாளின் திருமேனி மிகப்பெரிய அத்தி மரத்தால் வடிவமைக்கப்பட்டு, பிரம்மதேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    அனந்தசரஸ் திருக்குளத்தில் மூழ்கியிருக்கும் பெருமாள் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேலே வந்து 24 நாட்களுக்கு சயன மற்றும் 24 நாட்களுக்கு நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலிப்பார்.

    பேரருளாளன் அத்தி வரதரை வசந்த மண்டபத்தில் 48 நாள்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு வைப்பர்.

    தரிசனம் தந்தபின், மீண்டும் அனந்த தீர்த்தத்தில் பெருமாள் சயனிக்கச் சென்று விடுவார்.

    ஒவ்வொருவரும் அவரது ஆயுள்காலத்திற்குள் ஒருமுறை, தவறினால் இருமுறைதான் இந்த பெருமாளை தரிசிக்க முடியும். எனவே இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்.

    Next Story
    ×