search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    • தமிழகத்தில் குமரி மாவட்டத்தில் சிவராத்திரி நாளில் அத்தகைய தொடர் ஓட்டம் இடம் பெறுகிறது.
    • சிவராத்திரிக்கு முதல் நாளும், சிவராத்திரி அன்றும் ஆயிரக்கணக்கான அடியார்கள் பன்னிரண்டு சிவாலயங்களைத் தரிசிக்கின்றனர்.

    தமிழகத்தில் குமரி மாவட்டத்தில் சிவராத்திரி நாளில் அத்தகைய தொடர் ஓட்டம் இடம் பெறுகிறது.

    சிவராத்திரிக்கு முதல் நாளும், சிவராத்திரி அன்றும் ஆயிரக்கணக்கான அடியார்கள் தொடர் ஓட்டமாகச் சென்று பன்னிரண்டு சிவாலயங்களைத் தரிசிக்கின்றனர்.

    அத்தலங்கள் விவரம் வருமாறு:

    1. திருமலை

    2. திருக்குறிச்சி

    3. திற்பரப்பு

    4. திருநந்திக்கரை

    5. பொன்மலை

    6. பன்னிப்பாக்கம்

    7. கல்குளம்

    8. மேலங்கோடு

    9. திருவிடைக்கோடு

    10. திருவிதாங்கோடு

    11. திருப்பன்றிக்கோடு

    12. திருநட்டாலம்

    • எண்ணெய் விளக்கேற்றுதல் ஞானத்தை அடைதலைக் குறிக்கும்.
    • வெற்றிலை அளித்தல் உலக இன்பங்களில் திருப்தியைக் குறிக்கும்.

    மகாசிவராத்திரி வழி பாட்டில் ஆறு அம்சங்கள் சேர்க்கப்பட வேண்டும்.

    1. சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல் வேண்டும். இது ஆன்மாவைத் தூய்மைப் படுத்துதலைக் குறிக்கும்.

    2. லிங்கத்திற்கு குங்கும் அணிவித்தல் நல்லியல்பையும் நல்ல பலனையும் வழங்கும்.

    3. உணவு நிவேதித்தல் நீண்ட ஆயுளையும் விருப்பங்கள் நிறைவேறுவதையும் குறிக்கும்.

    4. தீபமிடுதல் செல்வத்தை வழங்கும்.

    5. எண்ணெய் விளக்கேற்றுதல் ஞானத்தை அடைதலைக் குறிக்கும்.

    6. வெற்றிலை அளித்தல் உலக இன்பங்களில் திருப்தியைக் குறிக்கும்.

    இந்த ஆறு அம்சங்களும் வீட்டிலாவது கோவிலிலாவது சிவராத்திரியை அனுஷ்டிக்கும் போது இறைவனுக்கு வழங்கப்படவேண்டியவை என்று புராணங்கள் கூறுகின்றன.

    • காலையில் சிவதரிசனம் - அறச்சிந்தனையை வளர்க்கும்
    • முற்பகல் சிவதரிசனம் - நற்செல்வம் தரும்

    சிவதரிசன பலன்

    காலையில் சிவதரிசனம் - அறச்சிந்தனையை வளர்க்கும்

    முற்பகல் சிவதரிசனம் - நற்செல்வம் தரும்

    மாலை சிவதரிசனம் - விரும்பியதை அளிக்கும்

    இரவு சிவதரிசனம் - ஞானத்தை அளிக்கும்

    பிரதோஷகால சிவதரிசனம் - பிறவாமையைத் தரும்

    மகிமை பெற்ற பன்னிரு சிவாலயங்கள்:

    1. திருவண்ணாமலை

    2. தீக்குறிச்சி

    3. திருப்பரப்பு

    4. திருவந்திக்கரை

    5. பொன்மலை

    6. திருபன்றிக்காடு

    7. பனிப்பாக்கம்

    8. கல்குளம்

    9. மேலோங்கோடு

    10. திருவிடைக்காடு

    11. திருவிதாங்கூர்

    12. திருநட்டாலம்.

    • கல்யாண விரதம்-பங்குனி உத்திரம்,
    • பாசுபத விரதம்-தைப்பூசம்,

    அபிஷேகப் பிரியனான சிவனுக்காக எட்டு விரதங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

    அவை:

    சோமாவார விரதம்-திங்கள்,

    உமாமகேஸ்வரர் விரதம்-கார்த்திகை பவுர்ணமி,

    திருவாதிரை விரதம்-மார்கழி,

    சிவராத்திரி விரதம்-மாசி,

    கல்யாண விரதம்-பங்குனி உத்திரம்,

    பாசுபத விரதம்-தைப்பூசம்,

    அஷ்டமி விரதம்-வைகாசி பூர்வபட்ச அஷ்டமி,

    கேதார விரதம்ஸ்ர-தீபாவளி அமாவாசை.

    • உருத்திராட்ச லிங்கம்: நல்ல அறிவு
    • திருநீற்று (விபூதி) லிங்கம்: எல்லா வகை செல்வம்.

    சிவ ஆகமப்படி 16 வகையான பொருள்களால் லிங்க ரூபம் செய்து வழிபடுதல் பெரும் சிறப்பென்று ரிஷிகள் கூறுகின்றனர்.

    1. புற்றுமண் லிங்கம்: முத்தி

    2. ஆற்று மணல் லிங்கம்: பூமிலாபம்

    3. பச்சரிசி லிங்கம்: பொருள் பெருக்கம்

    4. சந்தன லிங்கம்: எல்லா இன்பங்கள்

    5. மலர்மாலை லிங்கம்: நீண்ட வாழ்நாள்

    6. அரிசி மாவு லிங்கம்: உடல் வலிமை

    7. பழம் லிங்கம்: நல்லின்ப வாழ்வு

    8. தயிர் லிங்கம்: நல்லகுணம்

    9. தண்ணீர் லிங்கம்: எல்லா மேன்மை

    10. சோறு (அன்னம்) லிங்கம்: உணவுப்பெருக்கம்

    11. முடிச்சிட்ட நாணல் (கூர்ச்சம்) லிங்கம்: முக்தி

    12. சர்க்கரை, வெல்லம் லிங்கம்: விரும்பிய இன்பம்

    13. பசுவினசாணம் லிங்கம்: நோயற்ற வாழ்வு

    14. பசுவெண்ணெய் லிங்கம்: மனமகிழ்ச்சி

    15. உருத்திராட்ச லிங்கம்: நல்ல அறிவு

    16. திருநீற்று (விபூதி) லிங்கம்: எல்லா வகை செல்வம்.

    • சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய முடியாதவர்கள் அந்த அபிஷேக காட்சியை தரிசனம் செய்யலாம்.
    • சீக்கிரம் அனுக்கிரகம் செய்யும் மூர்த்தி சிவன்.

    சிவராத்திரி அன்றுதான் அன்னை உமாதேவி சிவபெருமானை பூஜித்து வழிபட்டாள்.

    அதனால், நாமும் அந்த தினத்தில் பூஜை செய்து சிவபெருமானை வழிபடுவது சிறந்த பலனைத் தரும்.

    சிவனை "அபிஷேகப்பிரியன்" என்றும் சொல்வார்கள். அதனால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய செய்ய நமது துன்பம் அகலும்.

    உடல் நோய்கள் நீங்கும். மனம் தெளியும். சகல நன்மைகளும் உண்டாகும்.

    சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய முடியாதவர்கள் அந்த அபிஷேக காட்சியை தரிசனம் செய்யலாம்.

    சீக்கிரம் அனுக்கிரகம் செய்யும் மூர்த்தி சிவன்.

    அதேபோல் அவருக்கு சீக்கிரம் கோபமும் உண்டாகும். அதனால் அவருக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தும் திரவியங்கள் சுத்தமாக இருக்க வேண்டும்.

    மேலும் நம் மனதுடன் உடலும் தூய்மையானதாக இருக்க வேண்டும்.

    • இந்த நடனத் தோற்றம் இறைவனின் தத்துவத்தை உணர்ந்த பக்தன் உணர்ச்சியால் மெய் மறந்திருப்பதைப் பிரதிபலிக்கிறது.
    • விழித்திருப்பது, தூங்குவது, ஆழ்ந்த தூக்கம் ஆகியவற்றை கடந்த நிலை, மற்ற உணர்ச்சிகள் இந்த நிலையைப் பாதிக்காது.

    சிவராத்திரி தினத்தன்று நடராஜர் உருவத்தில் சிவபெருமான் நடனம் ஆடியதாகக் கூறுவார்கள்.

    இந்த நடனத் தோற்றம் இறைவனின் தத்துவத்தை உணர்ந்த பக்தன் உணர்ச்சியால் மெய் மறந்திருப்பதைப் பிரதிபலிக்கிறது.

    விழித்திருப்பது, தூங்குவது, ஆழ்ந்த தூக்கம் ஆகியவற்றை கடந்த நிலை, மற்ற உணர்ச்சிகள் இந்த நிலையைப் பாதிக்காது.

    இந்த நிலையில் நித்தியான ஆனந்தத்தை உணருவதே உன்னதமானது.

    அதையே நடராஜரின் தோற்றம் பிரதிபலிக்கிறது.

    உடல் உள்ளம் ஆகியவற்றைச் சார்ந்த உணர்வுகளும், மனத்தின் எண்ணங்களும், புத்தியின் இயக்கமும் கட்டுப்படும் நிலையே பேரானந்தமானது.

    இதையே நடராஜரின் மெய் மறந்து கூத்தாடும் நிலையை உணர்த்துகிறது.

    நடராஜர் ஒரு காலை இருத்தியும், ஒரு காலை உயர்த்தியும் ஆடுவது, உலகப் பற்றுகளை மிதித்து அடக்கியும், உன்னதமான ஆன்மீக உணர்வுகளை உயர்த்தியும் வாழ்வது பேரானந்தம் தரும் என்பதை உணர்த்துகிறது.

    எனவே சிவராத்திரி தினத்தன்று மறக்காமல் நடராஜர் சன்னதிலும் வழிபாடுகள் செய்ய வேண்டும்.

    • பெண்கள் கண்ணனை மனம் உருகி போற்றி வழிபட்டால் திருமண தடைகள் விலகி கல்யாணம் கைகூடும்.
    • விவசாயிகள் கிருஷ்ணரை வழிபட்டால் வயல்களில் விளைச்சல் அதிகரித்து செல்வம் பெருகும். மாடுகள் எண்ணிக்கை பெருகி கடன் தீரும்.

    01. கிருஷ்ணர் ஜெயந்தியன்று சிறுவர் சிறுமிகளை கண்ணன், ராதைகள் வேடமிட்டு ஆராதிப்பது கூடுதல் பலன்களைத் தரும். இப்படி வேடமிடும் குழந்தைகள் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.

    02. கண்ணனை வழிபட்டால் அகந்தை அகலும். குழந்தைகளுக்கு மூர்க்க குணம் ஏற்படாது. இளைஞர்கள் தர்மசிலராக வாழ்வார்கள். அரசியல்வாதிகளுக்கு நிர்வாகத் திறமை அதிகரிக்கும்.

    03. பெண்கள் கண்ணனை மனம் உருகி போற்றி வழிபட்டால் திருமண தடைகள் விலகி கல்யாணம் கைகூடும்.

    04. விவசாயிகள் கிருஷ்ணரை வழிபட்டால் வயல்களில் விளைச்சல் அதிகரித்து செல்வம் பெருகும். மாடுகள் எண்ணிக்கை பெருகி கடன் தீரும்.

    05.தொழில் அதிபர்கள் கிருஷ்ணருக்கு சிறப்பான பூஜைகள் செய்தால், புகழ் கூடும். கூட்டுத் தொழில் செய்தால் வெற்றி பெறுவார்கள். தொழில் நிர்வாகத்தில் ஆற்றல் பெருகும்.

    06. கிருஷ்ண லீலையை மனம் ஒன்றி கேட்டால் பசி, தாகம் ஏற்படாது.

    07.கிருஷ்ண நாமத்தை தினமும் உச்சரிப்பவர்களும், கேட்பவர்களும் புண்ணிய உலகை சென்றடைவது உறுதி.

    08.பாகவதத்தில் உள்ள அவதார கட்டத்தை பாராயணம் செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும். அந்த பாராயணத்தை கேட்டாலும் புண்ணியம் கிடைக்கும்.

    09.கிருஷ்ண ஜெயந்தியன்று கிருஷ்ணரின் அருள் 100 சதவீதம் அதிகரிப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

    10.ஓம் நமோ பகவதே வாசுதேவாயா என்று ஜெபித்தால் கிருஷ்ணர் பார்வைபடும்.

    11.கிருஷ்ண ஜெயந்தி ஜென்மாஷ்டமி, ஸ்ரீஜெயந்தி, கோகுலாஷ்டமி எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

    12. ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி என்பது, பகவான் கிருஷ்ணன் இப்பூமியில் மானிடராக அவதாரம் செய்த திருநாளாகும்.

    13.தீயவர்களையும் தீமைகளையும் அழித்து, நல்லோர்களையும் நன்மைகளையும் காப்பதற்காக உருவானதே ஸ்ரீகிருஷ்ண அவதாரம்.

    14.கிருஷ்ணருக்கு அவரது சிறு வயது நண்பர் குசேலர் அவல் கொடுத்து மகிழ்ந்தார். இந்த நிகழ்ச்சியின் காரணமாகவே ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி அன்று அவலை வைத்து நிவேதனம் செய்வது வழக்கத்தில் உள்ளது.

    15. கண்ணனைக் காணாத கோபியர்கள் பலவிதமாகப் புலம்பினார்கள். அப்போது அவர்கள் பாடிய பாடல், கோபிகா கீதம் எனப்பட்டது.

    • இந்த பாண்டவ பெருமாளை வாசலில் நின்று சற்று குனிந்து பார்த்தால்தான் முழு உருவத்தையும் தரிசிக்க முடியும்.
    • வித்தியாசமான இவரை அவசியம் ஒவ்வொருவரும் கிருஷ்ண ஜெயந்தியன்று தரிசிக்க வேண்டும்.

    பாண்டவர்களைக் காக்க கிருஷ்ணர் லீலைகளை நிகழ்த்திவிட்டு, "பாண்டவ தூதப் பெருமாள்" என்ற பெயரில் காஞ்சிபுரத்தில் கோவில் கொண்டார்.

    அதன் பின்னணியில் உள்ள வரலாறு வருமாறு:

    பாண்டவர்களுக்காக ஐந்து வீடாவது கேட்டு வாங்கி வர, துரியோதனிடம் பகவான் கிருஷ்ணன் தூது சென்றார்.

    அவரை அவமானப்படுத்த நினைத்தார் துரியோதனன்.

    அவர் அமர்வதற்காக போடப்பட்ட ஆசனத்தின் கீழே, ஒரு நிலவறையை உண்டாக்கி அதன் மீது பசுந்தழைகளை போட்டு மறைத்தான்.

    கண்ணனும் வந்து அமர்ந்தார். திட்டப்படி நிலவறை சரிந்து உள்ளே விழுந்தது.

    கண்ணன் உள்ளே விழுந்தார். அங்கே அவரைத் தாக்க சில மல்யுத்த வீரர்கள் தயாராக நின்றனர். அவர்களை அழித்து விஸ்வரூபம் எடுத்தார் கிருஷ்ணர்.

    பாரத யுத்தம் முடிந்த பின் ஜனமேஜயர் என்ற மகாராஜா, வைசம்பாயனர் என்னும் ரிஷியிடம் பாரதக் கதையைக் கேட்க வந்தார்.

    அப்போது ராஜா, "கிருஷ்ணர் தூது சென்ற போது நிலவறையில் அமர்ந்த கோலத்தில் எடுத்த விஸ்வரூப தரிசனத்தை நானும் தரிசிக்க வேண்டும்" என வேண்டினார்.

    ரிஷி கூறிய அறிவுரையின்படி இத்தலத்தில் தவம் செய்து, கிருஷ்ணரின் விசுவரூப தரிசனத்தை அவர் கண்டார்.

    இந்த கிருஷ்ணரின் பெயர் "தூதஹரி" எனப்படும். திருதராஷ்டிரனுக்கு கண்பார்வை அளித்து தனது விஸ்வருப தரிசனத்தை கிருஷ்ண பகவான் இத்தலத்தில் காட்டியருளினார்.

    25 அடி உயரம் உடைய அவரது சிலை அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறது.

    இந்த பிரமாண்ட சிலை சுதையால் செய்யப்பட்டது. எனவே இந்த மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை.

    ஆண்டுக்கு ஒரு தடவை தைலகாப்பு மட்டும் செய்யப்படுகிறது.

    இந்த பாண்டவ பெருமாளை வாசலில் நின்று சற்று குனிந்து பார்த்தால்தான் முழு உருவத்தையும் தரிசிக்க முடியும்.

    வித்தியாசமான இவரை அவசியம் ஒவ்வொருவரும் கிருஷ்ண ஜெயந்தியன்று தரிசிக்க வேண்டும்.

    ரோகிணி தேவி கிருஷ்ண பகவானை வழிபட்டு சந்திரனை அடையும் பேறு பெற்றாள்.

    ரோகிணி தனக்கு ஞான சக்திகளையும், விஸ்வரூப தரிசனமும் கொடுத்த கிருஷ்ணனை இத்தலத்தில் சூட்சும வடிவில் தினமும் வழிபாடு செய்வதாக ஐதீகம்.

    எனவே ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தலத்திற்கு வந்து கிருஷ்ணனை தரிசித்து வந்தால் எந்த பிரச்சினைகள், துயரங்கள் இருந்தாலும் விலகி விடும் என்பது நம்பிக்கை.

    கிருஷ்ணர் இத்தலத்தில் தன் பாதங்களை பூமியில் அழுத்தி "விஸ்வபாத யோக சக்திகளை" கொண்டு அருள்கிறார்.

    எனவே இங்கு அடிப்பிர தட்சணம், அங்கப்பிரதட்சணம் செய்பவர்களின் 72 ஆயிரம் அங்க நாடிகளும் துடிப்புடன் செயல்படும்.

    சோதனைகளும், துன்பங்களும் விலகும். புதன், சனி, ரோகிணி, அஷ்டமி திதி, எட்டாம் தேதிகளில் இங்கு வழிபடுவது சிறப்பாக கருதப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இங்கு தேவர்கள் தேனீக்களாக உருவெடுத்து வந்து பெருமாளை வணங்குவதாக ஐதீகம்.
    • அதை உணர்த்தும் வகையில் தாயார் சன்னதியின் வடபுறத்தில் இப்போதும் தேன்கூடு காணப்படுகிறது.

    உயரமான வழுக்கு மரம்!

    தமிழகத்திலேயே மிகவும் உயரமான வழுக்கு மரம் உள்ள கிருஷ்ணர் கோவில், மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ள நவநீதகிருஷ்ணன் கோவில் தான்.

    இங்குள்ள வழுக்கு மரக்கம்பத்தின் உயரம் 30 அடி.

    ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்காக, இரண்டு வாரங்களுக்கு முன் சோற்றுக் கற்றாழையுடன் விளக்கெண்ணை கலந்து இந்த வழுக்கு மரத்தில் பூசி, கோவில் வாசலில் நடுவார்கள்.

    இந்த வழுக்கு மரத்தில் ஏறி பண முடிப்பு பெறுவதை இந்த பகுதி மக்கள் கவுரவமாக கருதுகின்றனர்.

    திருக்கண்ணமங்கை

    திருவாரூர் மாவட்டத்தில் கண்ணனின் பெயரால் திருக்கண்ணமங்கை என்ற ஊர் இருக்கிறது. இங்குள்ள மூலவரை 'பத்தராவிப் பெருமாள்' என்பர்.

    பக்தர்களின் அன்பைப் பெற ஆவி போல விரைந்து வருவதால் இப்பெயர் பெற்றார்.

    பக்தர்கள் மீது குழந்தை போல அன்பு காட்டுவதால் 'பக்தவத்சலன்' என்றும் பெயர் உண்டு.

    இங்கு தேவர்கள் தேனீக்களாக உருவெடுத்து வந்து பெருமாளை வணங்குவதாக ஐதீகம்.

    அதை உணர்த்தும் வகையில் தாயார் சன்னதியின் வடபுறத்தில் இப்போதும் தேன்கூடு காணப்படுகிறது.

    இங்கு ஒருநாள் தங்கி, பக்தியுடன் பெருமாளை வணங்கினால் மோட்சம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    • தன் கணவர் குழந்தையாக இருந்த போது, எப்படி இருந்தார் என்று பார்க்க ருக்மணி ஆசைப்பட்டாள்.
    • அதனால், தேவலோக சிற்பியான விஸ்வகர்மா மூலம் ஒரு கிருஷ்ண விக்ரகத்தைச் செய்தாள்.

    கண்ணனுக்கு சனிக்கிழமை

    கிரகங்களில் சனீஸ்வர பகவானுக்குரியது சனிக்கிழமை.

    அந்த தினம் கண்ணனை வணங்குவதற்கும் உரிய நாளாக கருதப்படுகிறது.

    அனைத்து கிரகங்களும் கிருஷ்ண பரமாத்மாவுக்கு கட்டுப்பட்டவையே.

    எனவே, கண்ணனை வணங்கினால் எந்த கிரகமும் துன்பம் தராது.

    கதவே இல்லாத கண்ணன் கோவில்

    கர்நாடக மாநிலம் உடுப்பி கிருஷ்ணன் கோவிலில், குழந்தை வடிவில் கண்ணன் காட்சி தருகிறார்.

    வலது கையில் தயிர் கடையும் மத்தும், இடது கையில் வெண்ணையும் ஏந்தியுள்ளார்.

    தன் கணவர் குழந்தையாக இருந்த போது, எப்படி இருந்தார் என்று பார்க்க ருக்மணி ஆசைப்பட்டாள்.

    அதனால், தேவலோக சிற்பியான விஸ்வகர்மா மூலம் ஒரு கிருஷ்ண விக்ரகத்தைச் செய்தாள்.

    அந்த விக்கிரகமே உடுப்பியில் வழிபாட்டில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு வாசல் கதவுகள் இல்லை.

    ஜன்னலைப் போன்ற அமைப்புக் கொண்ட வழி மட்டுமே உண்டு.

    கர்ப்பகிரகத்தின் நுழைவு வாயில் விஜயதசமி அன்று மட்டுமே திறந்திருக்கும்.

    மற்ற நாட்களில் சன்னதியின் இருபுறமும் உள்ள ஜன்னல் வழியாக மட்டுமே கண்ணனைத் தரிசிக்க முடியும்.

    • அதேபோல் பிருந்தாவனத்தில் நடந்த “ராஸ லீலை’யிலும் ஒவ்வொரு கோபிகைக்கும் ஒவ்வொரு கண்ணன் கூட இருந்து ஆடிப் பாடினார்.
    • இந்தக் காட்சியை சிவபெருமானே தரிசித்து ஆனந்தப்பட்டிருக்கிறார்.

    கிருஷ்ணர் ஆயர்பாடி பெண்கள் வைத்துள்ள வெண்ணையை திருடும்போது வெண்ணை கீழே சிந்தி அதில் அவன் பாதங்கள் பதிந்து வீடு முழுவதும் கண்ணன் வந்து போனதற்கான கால் தடங்கள் இருக்கும்.

    இதை வைத்தே கண்ணன் வெண்ணை திருடியிருக்கிறான் என்பதை அறிந்து கொள்வார்களாம்.

    இருப்பினும், கோபப்பட மாட்டார்கள். கண்ணன் வந்து போனால் அவர்கள் வீட்டு பசுக்கள் நிறைய பால் சொறியும்.

    செல்வம் பொங்கும் என்பது அவர்களது நம்பிக்கை.

    இந்த தாத்பரியத்திற்காகவே நம் முன்னோர்கள் கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று தங்கள் வீடுகளில் வெண்ணையினால் கண்ணன் பாதங்கள் போடுவதை வழக்கமாக கொண்டனர்.

    கிருஷ்ண ஜெயந்தியன்று குழந்தை பாத சுவட்டை மாக்கோலமாக வரைவது நாடெங்கும் எல்லா இடங்களிலும் மரபுவழி பழக்கமாக உள்ளது.

    இப்படி பாதம் வரைவதில் சைவ-வைணவ ஒற்றுமை இருப்பதாக சொல்கிறார்கள்.

    குழந்தைகளின் பாத வடிவ சுவடு பார்ப்பதற்கு எட்டு (8) போன்ற வடிவுடன் இருக்கும். அதற்கு மேல் 5 விரல் பதிவுகள் இருக்கும்.

    அதாவது ஓம் "நமோ நாராயணா" என்ற எட்டு எழுத்து மந்திரமும் "நமசிவாய" என்ற ஐந்தெழுத்து மந்திரமும் ஒருங்கிணைந்து இருப்பதை திருப்பாதம் பிரதிபலிக்கிறது.

    16,108 ராணிகளுடன் துவாரகையில் கண்ணன் அரசாட்சி செய்தான். அப்போது நாரத முனிவர், அரசிகள் ஒவ்வொருவரின் வீட்டுக்கும் சென்றபோது எல்லோர் இல்லத்திலும் கண்ணன் இருப்பதைக் கண்டு அதிசயித்தார்.

    அதேபோல் பிருந்தாவனத்தில் நடந்த "ராஸ லீலை'யிலும் ஒவ்வொரு கோபிகைக்கும் ஒவ்வொரு கண்ணன் கூட இருந்து ஆடிப் பாடினார்.

    இந்தக் காட்சியை சிவபெருமானே தரிசித்து ஆனந்தப்பட்டிருக்கிறார்.

    "இப்படி ஒரே நேரத்தில் பல்லாயிரம் இடங்களில் இருக்க வல்ல மகிமை வாய்ந்த தெய்வக் குழந்தை கண்ணன்' என்பதைக் குறிப்பிடவே ஒவ்வொருவர் வீட்டிலும் கிருஷ்ண ஜெயந்தியன்று "திருவடிக் கோலம்' இடப்படுகிறது.

    அன்று எல்லோர் இல்லத்திலும் ஒரே நேரத்தில் "கிருஷ்ணரின் அருளாட்சி' இருக்கும். அதாவது கண்ணனின் அருட்சக்தி அங்கே கொலு வீற்றிருக்கும்.

    ×