search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    • வைணவத் திருக்கோவில் வழிபாடு மற்றும் சம்பிரதாயங்களை முறைப்படுத்தினார்.
    • தாம் உருவாக்கிய சீர்த்திருத்தங்களையெல்லாம் ஓர் ஓலைச்சுவடியில் செவ்வனே பதித்தும் வைத்தார்.

    கர்நாடக மாநிலத்தில் உள்ள மேல்கோட்டையில் ஸ்ரீமத் ராமானுஜர் சுமார் இருபது ஆண்டுகள் தங்கியிருந்தார். அப்போது பல அற்புதங்களை அவர் நிகழ்த்தியுள்ளார்.

    தொண்டனூரில் பல கோவில்களை செப்பனிட்டார்.

    மேல்கோட்டையில் லட்சுமி நாராயணனுக்கு கோவில் கட்டி, ஆகமப்படி ஆராதனை செய்வதற்கு வழி வகுத்தார்.

    செல்வப்பிள்ளை என்ற உற்சவ மூர்த்தியை டெல்லி பேரரசனிடமிருந்து மீட்டு வந்தார்.

    கர்நாடகப் பகுதியில் பஞ்சநாராயணர்களுக்கு திருக் கோவில்கள் எழுப்பினார்.

    விஷ்ணு பக்தியைப் பரப்ப உறுதுணையாக இருக்கும் பொருட்டு, விட்டல தவராயன் என்ற ஜைன மன்னனை விஷ்ணுவர்த்தனன் என்று பெயரிட்டு, வைணவ பக்தனாக மாற்றினார்.

    பல வைணவ மடங்களை நிறுவி, தொடர்ந்து நாராயண சேவை செய்ய 52 பேரை நியமித்தார்.

    ராஜமுடி உற்சவம், வைரமுடி உற்சவம் ஆகியவை நடைபெற வழிவகுத்தார்.

    ஆயிரக் கணக்கான ஜைனர்கள், வைணவ மதத்தைப் பற்றி ஓராயிரம் கேள்விகள் எழுப்ப, தமது வாதத்திறமையால் அவர்களை தோல்வியுறச் செய்தார்.

    அங்கிருந்த தாழ்த்தப்பட்ட மக்களை திருக்குலத்தார் என அழைத்திடவும், அவர்கள் மற்ற எல்லோரையும் போல கோவில் உற்சவங்களில் பங்கு கொள்ளவும் சம உரிமைகள் வழங்கினார்.

    திருநாராயணப் பெருமாளின் ஆராதனைகள் தொடர்ந்து செவ்வனே நடந்தேறும் பொருட்டு நியமனப்படி என்ற ஆக்ஞா பத்திரத்தை எழுதி வைத்தார்.

    வைணவத் திருக்கோவில் வழிபாடு மற்றும் சம்பிரதாயங்களை முறைப்படுத்தினார்.

    தாம் உருவாக்கிய சீர்த்திருத்தங்களையெல்லாம் ஓர் ஓலைச்சுவடியில் செவ்வனே பதித்தும் வைத்தார்.

    மாருதியாண்டான் என்பவரை அதை ஏழு பிரதிகள் எழுதச் சொல்லி எம்பெருமானார் கட்டளையிட்டார்.

    தம்மால் நியமிக்கப்பட்ட வைணவதாசர்களான திருவனந்தபுரதாசர், யதிராஜதாசர், மாலாகார தாசர், திருக்குறுங்குடி தாசர், வஞ்சிபுரம் தாசர், ஸ்ரீரங்கப்பட்டர், மன்னன் விஷ்ணுவர்த்தனன் ஆகிய ஏழு பேருக்கும் ராமானுஜர் என்று தம் கையப்பமிட்டு ஒவ்வொரு பிரதியைக் கொடுத்தார்.

    ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையும் புனிதமும் மிக்க அந்த ஓலைச்சுவடியை மேல் கோட்டை தலத்தில் மாபெரும் பொக்கிஷமாக இன்றளவும் பாதுகாத்து வருகிறார்கள்.

    • அடுத்து ஒன்பது நவரத்தின கற்கள் பதிக்கப்பட்டு, அவை தங்கச் செயின்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
    • செயின்கள் அனைத்திலும், தங்கம் மீது வெள்ளை நிற கற்கள் இடம் பெற்றுள்ளன.

    ஸ்ரீபெரும்புதூர், ஆதிகேசவ பெருமாள் கோவிலில் உள்ள ராமானுஜருக்கு 100 சவரன் தங்க திருவாபரணம் சேலத்தில் தயாரிக்கப்பட்டது.

    ராமானுஜரின் 1000-வது திருநட்சத்திரம் திருநாளை முன்னிட்டு சென்னை, தாம்பரம் அழகிய மணவாள மாமுனிகள் கைங்கர்ய சபாவினர் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் 100 பவுன் எடையில் தங்க திருவாபரணம் செய்ய முடிவு செய்தனர்.

    இதற்காக அவர்கள் சேலத்திலுள்ள நகை கடைகளில் திருவாபரணம் செய்யும் பணியை கொடுத்திருந்தனர்.

    திருவாபரணம் தயாரிக்கும் பணி ஆறு மாதங்களாக நடந்து வந்தது.

    அதன் பணி முடிவடைந்த நிலையில் சென்னை கைங்கர்ய சபா நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

    திருவாபரணத்தில் நான்கு டாலர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    மேற்புறமுள்ள டாலரில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உபயநாச்சியார் சமேத தேவபெருமாள் காட்சி அளிக்கிறார்.

    வலது புறம், இரண்டாவது டாலரில் நம்மாழ்வார், இடது புறம் மூன்றாவது டாலரில் குமுதவல்லி நாச்சியார், திருமங்கை ஆழ்வார், கீழ்புறம் நான்காவது டாலரில் திருக்கச்சி நம்பி அருள்பாலிக்கின்றனர்.

    அவை நான்கிற்கும் நடுவே பவள கல் இடம் பெற்றுள்ளது.

    அதன் கீழ் ராமானுஜர், திருக்கச்சி நம்பியிடம், தன் சந்தேகங்களை, பெருமாளிடம் கேட்டுச் சொல்லும்படி வினவிய சம்பவமும், அதற்கு பெருமாள் அளித்த பதில்களை விளக்கும் வகையில், பெருமாள், ராமானுஜருக்கு அருளிய, ஆறு வாசகங்களும் இடம் பெற்றுள்ளன.

    அடுத்து ஒன்பது நவரத்தின கற்கள் பதிக்கப்பட்டு, அவை தங்கச் செயின்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.

    செயின்கள் அனைத்திலும், தங்கம் மீது வெள்ளை நிற கற்கள் இடம் பெற்றுள்ளன.

    திருவாபரணம், சேலத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் சென்னை எடுத்து வரப்பட்டு ஸ்ரீபெரும்புதூர், ஆதிகேசவ பெருமாள் கோவிலில் அருள்பாலிக்கும் ராமானுஜருக்கு அந்த திருவாபரணம் சாத்துபடி செய்யப்பட்டது.

    • கவிஞர் வாலி “ராமானுஜய காவியம்” எழுதியுள்ளார். வானதி பதிப்பகம் அதை வெளியிட்டுள்ளது.
    • ராமானுஜர் பெயரில் திருப்பதியில் ஒரு புஷ்கரிணியை அவரது சீடர் அனந்தாழ்வார் ஏற்படுத்தினார்.

    * ராமானுஜரின் அவதார நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரத்தன்று காஞ்சீபுரம் சாலைக்கிணறில் உள்ள ராமானுஜர் கோவிலில் சிறப்புப் பூஜை செய்தால் கால சர்ப்ப தோஷம் விலகும் என்ற நம்பிக்கை உள்ளது.

    * ராமானுஜரின் புரட்சிகரமான சீர்திருத்தங்களை அனைத்து மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி எழுதிய ராமானுஜர் பற்றிய வரலாறு தொடராக தயாரிக்கப்பட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. வைணவ வேத விற்பன்னர்களிடம் அந்த தொடர் மிகுந்த ஆதரவைப் பெற்றது. அவர்கள் கருணாநிதியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

    * கவிஞர் வாலி "ராமானுஜய காவியம்" எழுதியுள்ளார். வானதி பதிப்பகம் அதை வெளியிட்டுள்ளது.

    * ராமானுஜர் பெயரில் திருப்பதியில் ஒரு புஷ்கரிணியை அவரது சீடர் அனந்தாழ்வார் ஏற்படுத்தினார். இப்போதும் அந்த புஷ்கரிணி பயன்பாட்டில் உள்ளது.

    * ராமானுஜர் அவதரித்ததால் ஸ்ரீபெரும்புதுரில் உள்ள ஆதிகேசவ பெருமாள் ஆலயம் நித்ய சொர்க்கவாசல் தலமாகக் கருதப்படுகிறது. எனவே இத்தலத்தில் சொர்க்க வாசல் என்று எதுவும் இல்லை.

    * ராமானுஜரின் நீண்ட ஆயுட்காலத்தில் அவருக்கு ஆயிரக்கணக்கான சீடர்கள் அமைந்தார்கள். அவர்களில் பலர் அவருடைய விக்கிரகங்களை உருவாக்கி பல்வேறு ஆலயங்களில் பிரதிஷ்டை செய்துள்ளனர்.

    • இன்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் அனைத்து பூஜைகளும் ஸ்ரீராமானுஜருக்கு நடந்த பிறகே ஸ்ரீரங்கநாதருக்கு நடைபெறுகிறது.
    • ஸ்ரீரங்கம் கோவிலை ஸ்ரீராமானுஜரே நிர்வகித்து வருகிறார் என்று நம்பப்படுகிறது.

    ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதரிடம் ஐக்கியமான ஸ்ரீராமானுஜர் இன்றும் உடலாலும் வாழ்கிறார்.

    இன்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் அனைத்து பூஜைகளும் ஸ்ரீராமானுஜருக்கு நடந்த பிறகே ஸ்ரீரங்கநாதருக்கு நடைபெறுகிறது.

    ஸ்ரீரங்கம் கோவிலை ஸ்ரீராமானுஜரே நிர்வகித்து வருகிறார் என்று நம்பப்படுகிறது.

    ஸ்ரீராமானுஜருக்கு ஆயுள் 200 ஆண்டுகள் என்றும், ஆனால் அவர் தனது 120-வது வயதில் சித்தி அடைந்து விட்டதால், மீதமுள்ள 80 ஆண்டுகள் கழிக்க அடுத்த பிறவியில் ஸ்ரீ மணவாள மாமுனிகளாக அவதாரம் எடுத்து 80 ஆண்டு காலம் வாழ்ந்ததாக பெரியவர்கள் கூறுகின்றனர்.

    ஸ்ரீராமானுஜர் அவதரித்த தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. வைணவத்தில் மட்டுமின்றி ஆன்மிக உலகில் அரிய புரட்சிகளை உருவாக்கிய ஈடு, இணையில்லாத அம்மகானை மனதார வணங்கி பலன்கள் அடைவோம்.

    • சமயப் புரட்சி செய்த ராமானுஜர் ஒப்பற்ற சமூக சீர்திருத்தவாதி.
    • சமய சித்தாந்தங்களை மக்களுக்கு மிக நெருக்கமாகக் கொணர்ந்து, அனைவரும் அவற்றை எளிதாகக் கடைப்பிடிக்கப் பாடுபட்டவர்.

    சமயப் புரட்சி செய்த ராமானுஜர் ஒப்பற்ற சமூக சீர்திருத்தவாதி.

    சமய சித்தாந்தங்களை மக்களுக்கு மிக நெருக்கமாகக் கொணர்ந்து, அனைவரும் அவற்றை எளிதாகக் கடைப்பிடிக்கப் பாடுபட்டவர்.

    ஆண்டவனின் சன்னி தானத்திலும் கர்ப்ப கிரகத்திலும் வடமொழியுடன் சேர்ந்து தமிழ் வேதமாகிய திவ்வியப் பிரபந்தப் பாடல்களையும் ஓதுவதற்கு ஏற்பாடு செய்தார்.

    பெண்களுக்கு ஆண்களுக்குச் சரி நிகரான அந்தஸ்து அளித்து, அவர்களையும் சீடர்களாக ஏற்றுக்கொண்ட முதல் சமயத்தலைவர் ராமானுஜரே.

    முஸ்லிம் அரச குமாரியை, மதம் மாறாமலேயே, நாராயண மூர்த்திக்குத் திருமணம் செய்து வைத்ததாகச் சடங்குகளை உருவாக்கி, இஸ்லாமியருடன் சமய இணக்கம் காண வழி வகுத்தவர் ராமானுஜர்.

    இவ்வாறு பல துறைகளிலும் புரட்சிகளைச் செய்த மகான் உடையவர் ஒருவரே என்றால் மிகையாகாது.

    இஸ்லாமியர்களுடன் இணக்கம்

    மேலக்கோட்டையில் திருநாராயண சுவாமியின் உற்சவ மூர்த்தியான செல்வப்பிள்ளையை மணந்து கொண்ட துருக்க நாச்சியாருக்கு (பீபி நாச்சியாருக்கு) தனிச் சந்நிதி உள்ளது.

    இதைப் போன்றே திருவரங்கம் அரங்கநாதர் கோவிலிலும், வேறு பல பிரபலமான பெருமாள் கோவில்களிலும் துருக்க நாச்சியாருக்குச் சந்நிதிகள் உண்டு.

    திருவரங்கம் கோவிலில் மார்கழி மாதம் நடைபெறும் ஏகாதசித் திருவிழாவில், பகல் பத்துத் திருநாளில் உற்சவப் பெருமாள் முஸ்லிம் இனத்தவரைப் போல லுங்கி கட்டிக் கொண்டு இந்தத் துருக்க நாச்சியார் சந்நிதிக்குச் சென்று அவருக்குக் காட்சி தரும் வழக்கம் ராமானுஜர் காலத்திலிருந்து இன்று வரையிலும் தொடர்ந்து வருகிறது.

    இவ்விதம் இந்துக்களுக்கும் இஸ்லாமியருக்குமிடையே இணக்கச் சூழலை உருவாக்கிய ராமானுஜரின் ஞானப்பார்வை, வெறும் சமயச்சடங்காக மட்டும் கூனிக் குறுகியிராமல் பரந்த சமுதாயத்தின் மீது உண்மையான தாக்கம் செலுத்தியிருந்தது.

    • "ஆம் முதல்வன் இவன்" என்று ஸ்ரீ ஆளவந்தாராலும்
    • "எதிராஜர்" என்றும், "ராமானுஜ முனி" என்றும் காஞ்சிப் பேரருளாளனாலும் அழைக்கப்படுகிறார்.

    * "இளையாழ்வார்" என்று பெரிய திருமலை நம்பிகளாலும்

    * "பூதபுரீசர்" என்று ஆதிகேசவப் பெருமாளாலும்

    * "ஆம் முதல்வன் இவன்" என்று ஸ்ரீ ஆளவந்தாராலும்

    * "எதிராஜர்" என்றும், "ராமானுஜ முனி" என்றும் காஞ்சிப் பேரருளாளனாலும்

    * "உடையவர்" என்று பெரிய பெருமாளாலும்

    * "எம்பெருமானார்" என்று திருக்கோட்டியூர் நம்பிகளாலும்

    * "திருப்பாவை ஜீயர்" என்று பெரிய நம்பிகளாலும்

    * "லட்சுமணமுனி" என்று திருவரங்கப் பெருமாளரையாலும்

    * "சடகோபன் பொன்னடி" என்று திருமாலையாண்டனாலும்

    * "ஸ்ரீ பாஷ்யகாரர்" என்று கலைமகளாலும்

    * "தேசிகேந்திரன்" என்று திருவேங்கடமுடையானாலும்

    * "கோவில் அண்ணன்" என்று கோதை நாச்சியாராலும் ராமானுஜர் அழைக்கப்பட்டார்.

    • வேதார்த்த-ஸ்ங்கரம்-வேதங்களைக் கொண்டே விசிஷ்டாத்வைதக் கருத்தை நிலை நிறுத்தும் நூல்.
    • ஸ்ரீபாஷ்யம்-போதாயனர் பிரம்ம சூத்திரத்திற்கு விளக்க உரை.

    ராமானுஜர் நவத்னம் போல ஒன்பது நூல்களை இயற்றி அருளிச் செய்துள்ளார்.

    அவை:

    1. வேதார்த்த-ஸ்ங்கரம்-வேதங்களைக் கொண்டே விசிஷ்டாத்வைதக் கருத்தை நிலை நிறுத்தும் நூல்.

    2. ஸ்ரீபாஷ்யம்-போதாயனர் பிரம்ம சூத்திரத்திற்கு விளக்க உரை.

    3. கீதாபாஷ்யம்-பகவத் கீதைக்கு விளக்க உரை.

    4. வேதாநந்த தீபம் - பிரம்ம சூத்திரங்களுக்கு சுருக்கமான உரை.

    5. வேதாந்த ஸாரம்-வேதத்தின் ஸாரமான நூலான பிரம்மசூத்திரத்திற்கு ஆரம்பகால சாதகர்களுக்கு உரிய உரை.

    6. சரணாகதி சத்யம்-இறைவனிடம் சரணாகதி அடைவது பற்றி விளக்கும் நூல்.

    7. ஸ்ரீரங்க கத்யம்-ஸ்ரீரங்கனின் பெருமையை விளக்கி அவனிடம் சரணாகதி அடைய சொல்லும் நூல்.

    8. ஸ்ரீவைகுண்ட கத்யம்-ஸ்ரீவைகுண்டம் பற்றியும், முக்தியைப்பற்றியும் கூறும் நூல்.

    9. நித்யக்ரந்தம்-ஸ்ரீவைஷ்ணவர்கள் தினந்தோறும் இறைவனை வழிபடும் முறை, ஆசாரபததி ஆகியவற்றை கூறும் நூல்.

    10. ஸ்ரீவைஷ்ணவ கோவில்களில் வேதங்களுக்கு ஈடாக நாலாயிரத் திவ்ய பிரபந்தங்களை சேவிக்கும்படி செய்தவர் ராமானுஜர்.


    • ஆதிசங்கர ஸ்தாபித்தது அத்வைதம். அதாவது எல்லாம் பிரம்ம மயம் என்பது.
    • ராமானுஜர் ஸ்தாபித்தது விசிஷ்டாத்வைதம். அதாவது விசேஷத்தோடு கூடிய அத்வைதம்.

    ஆதிசங்கர ஸ்தாபித்தது அத்வைதம். அதாவது எல்லாம் பிரம்ம மயம் என்பது.

    எல்லாம் பிரம்ம மயம் என்பது உண்மையானாலும் சாதாரண மக்களும் உணர்ந்து உய்வடைய முடியாததால் ராமானுஜர் புதியதோர் சிந்தாந்தத்தை உருவாக்கினார்.

    ராமானுஜர் ஸ்தாபித்தது விசிஷ்டாத்வைதம். அதாவது விசேஷத்தோடு கூடிய அத்வைதம்.

    "ஜகத்துக்கு அந்தர்யாமியாய் இருப்பவன் நாராயணன்"

    ஜீவனுக்கும் அந்தர்யாமியாய் இருக்கிறான்

    ஜீவன் என்கிற புருஷனன், ஜகத் என்கிற பிரகிருதி இந்த இரண்டுக்கும் விசேஷத்தோடு கூடியதாகவே பிரம்மம் இருக்கும் என்பதாலேயே "விசிஷ்டாத்வைதம்" என்று அதற்கு பெயர்.

    ஜீவாத்மா சரணாகதி மூலமாகவும், பக்தியின் மூலமாகவும் பரமாத்வாவை அடையும் என்பதை வலியுறுத்தினார் ராமானுஜர்.

    • பாரதத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திருவரங்கத்திற்கு வந்தனர்.
    • அவர்களில் பலர் ராமானுஜர் சீடர்களாகி தொண்டு வாழ்க்கை மேற்கொண்டனர்.

    ராமானுஜர் திருவரங்கம் திருக்கோவில் நிர்வாகத்தை ஏற்றார். பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்தார்.

    அவருடைய முயற்சியால் வைணவம் தழைத்தது. அதனால் உடையவரின் புகழ் எங்கும் பரவியது.

    பாரதத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திருவரங்கத்திற்கு வந்தனர்.

    அவர்களில் பலர் ராமானுஜர் சீடர்களாகி தொண்டு வாழ்க்கை மேற்கொண்டனர்.

    அவ்வகையில் சுமதி என்ற பெண்ணும் உடையவரின் கைங்கர்யத்தில் ஈடுபட்டாள்.

    அவன் கொங்கு நாட்டில் இருந்து வந்தவள் என்பதால், அவளை ராமானுஜர், "கொங்குப்பிராட்டி" என்று அழைத்தார்.

    அனைத்தையும் மறந்து. ஆச்சார்ய சேவையில் ஈடுபட்டிருந்த கொங்குப் பிராட்டிக்கு, சொந்த ஊரில் இருந்து அழைப்பு வந்தது.

    தவிர்க்க முடியாத குடும்பச் சூழலால் அவள் ஊருக்குத் திரும்ப வேண்டி இருந்தது.

    கொங்குப்பிராட்டிக்கு, திருவரங்கத்தையும், ராமானுஜரையும் விட்டுப் பிரிந்து செல்ல மனம் இல்லை. எனினும் செல்ல வேண்டிய சூழ்நிலை.

    கொங்குப்பிராட்டி தன் குருநாதரின் பாதுகைகளைக் கேட்டுப் பெற்றாள்.

    பரதன் ராமபாதுகையை வைத்து வழிபட்டது போல், கொங்குப்பிராட்டி உடையவரின் பாதுகைகளை தன்னுடைய ஊரில் வைத்து வழிபட்டு வந்தாள்.

    ஆசானின் திருவடிகளைப் பெற்று வழிபட்டாள்.

    • அண்ணனைப் போன்று இக்கைங்கர்யம் செய்த ராமானுஜரை, "கோதைக்கு அண்ணன்" என்று போற்றினார்கள்.
    • பிறகு திருமாலிருஞ்சோலையில் இருந்து ஆண்டாளின் அவதாரத்தலமாகிய திருவில்லிபுத்தூரை அடைந்தார்.

    திருநாராயணபுரத்து மக்களிடம் பிரியாவிடை பெற்று உடையவர் திருவரங்கத்திற்கு பயணமானார்.

    மதுரைக்கு அருகில் உள்ள திருமாலிருஞ்சோலைக்கு எழுந்தருளிய ராமானுஜருக்கு ஆண்டாள் பாசுரம் ஒன்று நினைவுக்கு வந்தது.

    அப்பாசுரத்தில் ஆண்டாள் திருமாலிருஞ்சோலைப் பொருமாளுக்கு நூறு தடா அக்கார அடிசிலும், நூறுதடா வெண்ணையும் பிறவும் படைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

    ஆண்டாள் தன் பாசுரத்தில் குறிப்பிட்டவாறு, உடையவர் திருமாலிருஞ்சோலைப் பெருமாளுக்கு நூறுதடா அக்காரஅடிசில் செய்து நிவேதித்தார்.

    அத்துடன் நூறுதடா வெண்ணையும் பிறவும் படைத்தார்.

    அண்ணனைப் போன்று இக்கைங்கர்யம் செய்த ராமானுஜரை, "கோதைக்கு அண்ணன்" என்று போற்றினார்கள்.

    பிறகு திருமாலிருஞ்சோலையில் இருந்து ஆண்டாளின் அவதாரத்தலமாகிய திருவில்லிபுத்தூரை அடைந்தார்.

    அங்கு ஆண்டாளைச் சேவிக்கச் சென்ற ராமானுஜரை ஆண்டாள் பிராட்டி, "வருக என் அண்ணனே" என்று வாயார அழைத்தாள்.

    அதனால், வாழித் திருநாமம், "பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே" என்று போற்றுகிறது.

    • காஷ்மீரத்தில் போதாயன விருத்தி உரை கண்டறிந்த பின்புதான் ஸ்ரீபாஷ்யம் பூரண தவம் அடைந்தது எனலாம்.
    • ஸ்ரீபாஷ்யத்தின் சாரமாக தியானம், உபாசன, பக்தி இவற்றின் மூலமாக முக்தி அடைவது கூறப்படுகிறது.

    சங்கரரின் பாஷ்யம் 'சங்கர பாஷ்யம்' என்று வழங்கப்பட்டது. ராமானுஜரின் பாஷ்யம் ராமானுஜபாஷ்யம் என்ற வழங்கப்பட்டது.

    ராமானுஜருக்கு முன்பே விசிஷ்டாத்வைத வேதாந்தம் இருந்து வந்திருக்கிறது.

    போதாயனரைத் தவிர டங்கர், குகதேவர், முதலானோர், விசிஷ்டாத்வைதக் கொள்கைகளை வெளியிட்டிருக்கிறார்கள்.

    ராமானுஜர் இயற்றிய ஸ்ரீபாஷ்ய நூலே ஸ்ரீவைஷ்ணவ விசிஷ்டாத்வைத கொள்கைக்கு ஆதார நூல் என்பது பெரும்பாலோரது கருத்தாக இருந்து வருகிறது.

    காஷ்மீரத்தில் போதாயன விருத்தி உரை கண்டறிந்த பின்புதான் ஸ்ரீபாஷ்யம் பூரண தவம் அடைந்தது எனலாம்.

    பக்தி சரணாகதியை ஆதாரமாகக் கொண்டே சேவையை மையமாகக் கொண்டதுதான் விசித்டாத்வைத கொள்கையாக இருந்து வந்தது.

    விசேஷத்தன்மை பொருந்திய அத்வைதம்தான் விசிஷ்டாத் வைதம் ஒன்றுடன் ஒன்றினைந்த ஒன்றுடன் அடங்குவது ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணைவது தான் விசிஷ்டாத்வைதம்.

    ஸ்ரீபாஷ்யத்தின் சாரமாக தியானம், உபாசன, பக்தி இவற்றின் மூலமாக முக்தி அடைவது கூறப்படுகிறது.

    ஸ்ரீராமானுஜர் கூற கூரத்தாழ்வார் ஸ்ரீபாஷ்யத்தை எழுதி முடித்ததும் தமது மருமகன் நடாதூராழ்வார் வசம் ஸ்ரீபாஷ்யத்தை கொடுத்து காஷ்மீரத்திலிருக்கும் ஸ்ரீசாரதா பீடத்துக்கு அனுப்பி ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.

    ஸ்ரீராமானுஜர் அருளிய ஸ்ரீபாஷ்யம் நூல் தெய்வீக வேதமறை விஞ்ஞான பொக்கிஷமாக அள்ள அள்ள குறையாத ஞான சமுத்திரமாய் இறைவனின் அருகாமையை உணர்த்தும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

    • ஆனால் ராமானுஜர் சிறிது நேரத்திற்கெல்லாம் மீண்டும் சிந்தித்தார்.
    • கூரத்தாழ்வார் எழுத மறுத்த அந்த வாக்கியத்தைப் பற்றி யோசித்த போது தன்னுடைய தவறு புரிந்தது.

    ஆனால் அந்த நாட்டு பண்டிதர்களோ இதனால் மிகவும் பகைமை கொண்டனர்.

    ராமானுஜரை பின்தொடர்ந்து கண்காணித்து அந்த நூலை அவரிடம் இருந்து திருடிக் கொண்டு போய்விட்டதும் ராமானுஜர் கலங்கிப் போனார்.

    இதனைக்கண்ட கூரத்தாழ்வார், "தேவரீர் தயவு செய்து கலங்க வேண்டாம்.

    நான் ஒருமுறை அந்த நூல் முழுவதையும் படித்துவிட்டேன்.

    தாங்கள் களைத்துப்போய் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் நான் அதைப்படித்தேன்.

    அதில் உள்ள பொருட்களை இப்போதே சொல்ல வேண்டுமா அல்லது இரண்டாற்றுக்கிடையே வந்து சொன்னால் போதுமா" என்று கேட்டார்.

    ராமானுஜர் கூரத்தாழ்வாரின் கல்வி நினைவாற்றல் கண்டு மெய்சிலிர்த்தார்.

    "கூரத்தாழ்வாரே ! நான் சொல்லச்சொல்ல நீர் பாஷ்ய வாக்கியங்களை எழுதிக்கொண்டே வாரும்.

    நான் சொல்லும் வாக்கியங்களுக்கும் உமது நினைவில் இருக்கும் வாக்கியங்களுக்கும் ஏதேனும் முரண் இருப்பதாக புலப்பட்டால் நீர் எழுதுவதை நிறுத்திவிடும்" என்ற ராமானுஜர் கூறவும் அவரும் சம்மதமாய் எழுதத்தொடங்கினார்.

    ராமானுஜர் சொல்லச்சொல்ல எழுதிக்கொண்டே வந்த கூரத்தாழ்வார் ஒரு சமயம் எழுதுவதை நிறுத்திவிட்டார்.

    ராமானுஜர் கூறியது பக்தி மார்க்க மதமாகிய விசிஷ்டாத் வைத கொள்கைக்கு முரணாக இருந்ததால் தான் கூரத்தாழ்வார் அப்படி எழுதுவதை நிறுத்தியபடி இருந்தார்.

    இராமானுஜர் அதனைக்கண்டு கடும் கோபம் கொண்டார்.

    "நான் சொன்னதை எழுத உமக்க இஷ்டம் இல்லையென்றால் நீரே பாஷ்யம் எழுதிக்கொள்ளும்" என்று ராமானுஜர் எழுந்து போய்விட்டார்.

    ஆனால் ராமானுஜர் சிறிது நேரத்திற்கெல்லாம் மீண்டும் சிந்தித்தார்.

    கூரத்தாழ்வார் எழுத மறுத்த அந்த வாக்கியத்தைப் பற்றி யோசித்த போது தன்னுடைய தவறு புரிந்தது.

    அதன்பின் அந்த வாக்கியத்தை திருத்திச்சொல்ல கூரத்தாழ்வார் எழுதத்துவங்கினார்.

    ×