search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    அம்பாள் உருவாக்கிய மூலிகை கலந்த சவுபர்னிக்கா ஆறு
    X

    அம்பாள் உருவாக்கிய மூலிகை கலந்த சவுபர்னிக்கா ஆறு

    • வெள்ளிக்கிழமை தோறும் கோவில் வளாகத்தில் ஆயிரத்தெட்டு விளக்குகள் கொண்ட தீபமரத்தில் தீபம் ஏற்றப்படுகிறது.
    • அதேபோல் கருவறையை சுற்றியும் அகல் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அவையும் தீப ஒளியால் மின்னுகின்றன.

    கோவிலுக்கு மேற்கே காலபைரவர் மற்றும் உமாமகேஸ்வரி சந்நதிக்கு இடையே சவுபர்னிக்கா ஆறு ஓடுகிறது.

    கருடன் தனது தாயார் விருந்தாவின் துயரத்தை துடைக்க இங்கு வந்து தவம் செய்யும் போது, வசந்த ஆறு தேவை என கேட்டபோது அம்பாள் ஆசீர்வதித்து நீரோடையை உருவாக்கி தந்தார்.

    அதன்படி இந்த ஆறு கொடச்சாத்தரி மலை உச்சியில் இரண்டு கனவாய் வழியாக உற்பத்தியாகி மலை அடிவாரத்தில் உள்ள கொல்லூர் வந்து செல்கிறது எனக்கூறப்படுகிறது.

    கொல்லூர் வழியில் இந்த ஆறு வரும்போது இதன் பெயர் சம்பாரா என அழைக்கப்படுகிறது.

    இந்த ஆற்றில் 64 வகை மூலிகை தாவரங்கள் கலந்த நீர் இந்த ஓடையில் வருகின்றன.

    இதில் விடியற்காலை நேரத்தில் பக்தர்கள் நீராடினால் நோய்கள் அவர்களை அண்டாது, தீராத நோய்கள் குணமாகும் என்பது புராண நம்பிக்கை. வற்றாமல் அவ்வாறில் நீர் ஓடுகிறது.

    தினமும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு தரம் அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்படுகிறது. அதேபோல் கோவில் உள் பிரகாரம் முழுவதும் ஆற்று நீரால் கழுவப்படுகிறது.

    வெள்ளிக்கிழமை தோறும் கோவில் வளாகத்தில் ஆயிரத்தெட்டு விளக்குகள் கொண்ட தீபமரத்தில் தீபம் ஏற்றப்படுகிறது.

    அதேபோல் கருவறையை சுற்றியும் அகல் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அவையும் தீப ஒளியால் மின்னுகின்றன.

    இரவு சந்நிதானம் அடைபடுவதற்கு முன் அம்பாள் கோவில் உள்ளே தங்க ரதத்தில் பிரகார உலா வருகிறாள்.

    தேவலோக தேவர்கள் அதை தினமும் கண்டு வணங்குகிறார்கள் என்பது புராண நம்பிக்கை.

    தினமும் இரவு சந்நிதானம் மூடும் நேரத்தில் சுக்கு நீர் வழங்கப்படுகிறது. அதை அருந்தினால் மனதில் தெம்பு வரும், நோய்கள் அண்டாது, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    அம்பாளை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தினமும் மதியம், இரவு இரண்டு முறை அன்னதானம் வழங்கப்படுகிறது.

    ஏழை & பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் வரிசையில் வரவைத்து அனைவரையும் சமமாக அமர

    Next Story
    ×