search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    தேவி பார்வதியால் தோன்றிய திருவண்ணாமலை கிரிவலம்
    X

    தேவி பார்வதியால் தோன்றிய திருவண்ணாமலை கிரிவலம்

    • இதன் மூலம் சிவசக்தியாக அவர்கள் காட்சி அளித்தனர்.
    • அதாவது சிவனும், பார்வதியும் சேர்ந்த அர்த்தநாரீஸ்வரர் கோலமாக தோன்றினார்கள்.

    அதன் பிறகு ஒருநாள் கண்களில் நீர் பெருக திருவண்ணாமலை மலையை பார்வதி தேவி வலம் வந்தார்.

    (இந்த நிகழ்வில் இருந்துதான் திருவண்ணாமலை கிரிவலம் தோன்றியது) பார்வதியை கவுதம முனிவர்களும் அவரது சீடர்களும் வாத்தியங்கள் முழங்க பின் தொடர்ந்தனர்.

    பார்வதி தேவி அக்னி திசையில் வந்து மலையை பார்த்து வணங்கினார்.

    பிறகு மேற்கு திசை நோக்கி நடந்தார்.

    அப்போது சிவபெருமான் ரிஷப வாகனத்தில் தோன்றி பார்வதிதேவிக்கு காட்சி கொடுத்தார்.

    பிறகு பார்வதிதேவி வாயு திசை, ஈசான திசை கடந்து கிழக்கு திசைக்கு வந்தார்.

    அங்கும் சிவபெருமான் காட்சி கொடுத்தார்.

    அதோடு அம்பாளை தனது இடப்பாகத்தில் ஈசன் சேர்த்துக் கொண்டார்.

    இதன் மூலம் சிவசக்தியாக அவர்கள் காட்சி அளித்தனர்.

    அதாவது சிவனும், பார்வதியும் சேர்ந்த அர்த்தநாரீஸ்வரர் கோலமாக தோன்றினார்கள்.

    இரண்டு பேரும் ஓருடலாக மாறினார்கள்.

    ஒரு பக்கம் சிவனின் சிவந்த சடை, மறுபக்கம் பார்வதியின் கொன்றை மாலை.

    ஒரு பக்கம் புஷ்ப மாலை, மறுபக்கம் சூலம். ஒரு புறம் பச்சை நிறம், மறுபக்கம் பவள நிறம்.

    ஒரு பக்கம் சிவனின் அகன்ற மார்பு, மறுபக்கம் பார்வதியின் கச்சை அணிந்த கோலம், ஒரு பக்கம் புலித்தோல் ஆடை, மறுபக்கம் சேலை என்ற அழகான வடிவுடன் அர்த்தநாரீஸ்வரராக இருந்தனர்.

    சிவன் பெரிதா, சக்தி பெரிதா என்ற சர்ச்சை தேவை இல்லை.

    ஒன்று இல்லாமல், இன்னொன்று இல்லை என்பதை தெரியப்படுத்த இந்த நிகழ்வு நடந்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×