search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    கனகதாரா ஸ்தோத்திரம் பாடினால் செல்வம் குவியும்
    X

    கனகதாரா ஸ்தோத்திரம் பாடினால் செல்வம் குவியும்

    • வறுமையில் வாடினாலும் யாசகம் கேட்டு வந்தவருக்கு இல்லை என்று பதில் கூற தர்ம சீலைக்கு வருத்தமாக இருந்தது.
    • வேறு வழியின்றி ‘கொடுப்பதற்கு ஒன்றுமில்லை’ என்று மனம் வருந்திக்கூறினாள்.

    மகாலட்சுமியை ஆவணி மாதம் வரும் அஷ்டமியன்று விரதமிருந்து வணங்குவது சிறப்பானது.

    அதுவும் அந்த நாள் வெள்ளிக்கிழமையாக இருந்தால் ரொம்ப விசேஷம்.

    அதனால் எல்லாவிதமான நன்மைகளும் நமக்குக் கிடைக்கும்.

    அதைத்தவிர நாம் பணத்தை எப்போது பயன்படுத்தினாலும் அப்போதெல்லாம் 'ஓம் ஸ்ரீ மகாலட்சுமியை நம' என்று சொல்லிவிட்டுப் பயன்படுத்தினால் நம்மிடம் எப்போதும் பணம் இருந்து கொண்டேயிருக்கும்.

    மிகவும் சின்ன வயதிலேயே துறவுபூண்டவர் ஆதிசங்கரர்.

    துறவு நெறிக்கு ஏற்றவாறு தினமும் இறைவழிபாட்டை முடித்துக்கொண்டு அதன் பின்னால் யாசகம் வாங்கி உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

    அப்படி யாசகம் வாங்குவதற்காக ஒரு வீட்டுக்குச் சென்றார்.

    அவர் போன வீடு ஏழை பிராமணரான சோமதேவருடையது. அவர் போனபோது சோமதேவர் வீட்டில் இல்லை.

    வெளியில் சென்றிருந்தார். அவருடைய மனைவியான தர்மசீலை மட்டும் தான் வீட்டில் இருந்தாள்.

    அந்த வீட்டின்முன் நின்ற சங்கரர் 'பவதி பிசோந்தேஷி!' என்றார்.

    வறுமையில் வாடினாலும் யாசகம் கேட்டு வந்தவருக்கு இல்லை என்று பதில் கூற தர்ம சீலைக்கு வருத்தமாக இருந்தது.

    வேறு வழியின்றி 'கொடுப்பதற்கு ஒன்றுமில்லை' என்று மனம் வருந்திக்கூறினாள்.

    அதைக்கேட்ட சங்கரர் 'அன்னமிட வழியில்லாவிட்டாலும் பரவாயில்லை.

    உண்ணத்தகுந்த பொருள் எதுவாக இருந்தாலும் கொடுங்கள்'! என்றாரர்.

    வீட்டில் அங்குமிங்கும் தேடிப்பார்த்தாள் தர்மசீலை.

    எப்போதோ செய்திருந்த ஒரே ஒரு நெல்லிக்காய் ஊறுகாய் இருந்தது. அதைக் கொண்டுபோய் ஆதி சங்கரருக்கு வழங்கினாள்.

    'அம்மையே தாங்கள் அன்புடன் அளித்ததால் இந்த நெல்லிக்காய் இவ்வுலகிலேயே சிறந்த பொருளாகும்' என்றார் சங்கரர்.

    இந்த ஏழ்மை நிலையிலும் அடுத்தவருக்குத் தர வேண்டும் என்னும் எண்ணம் இருக்கிறதே என்று வியந்த அவர் அந்தத் குடும்பம் நல்லபடியாக வாழ வேண்டும் என்பதற்காகத் திருமகளை நினைத்து கனகதாரா ஸ்தோத்திரம் பாடினார்.

    அவ்வாளவு தான். வானத்தில் இருந்து தங்க நெல்லிக்கனிகள் அந்த வீட்டின்மேல் மழையெனக் கொட்டின.

    'கனகதாராவைப் பாடுவோர் அனைவருக்கும் தனது அருள் கிட்டும்' என்று கூறி லட்சுமி மறைந்தாள்.

    Next Story
    ×