என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
எவ்வாறு செய்வது கூட்டு பஜனை
- பஜனை முடிந்த பிறகு நடக்கும் அன்னதானத்தில் முதலில் கன்னிச்சாமி ஒருவரை உண்ணச்செய்ய வேண்டும்.
- சாமிகள் சரணம் சொல்லிய பிறகே அன்னத்தில் கைவைக்க வேண்டும். அதுபோல சரணம் சொல்லிய பிறகே எழுந்திருக்க வேண்டும்.
சபரிமலை செல்லும் பக்தர்கள் கூட்டு பஜனை நடத்த வேண்டும். கூட்டு பஜனையை எப்படி நடத்த வேண்டும் தெரியுமா?
முதலில் மஞ்சள் பொடி கொண்டு மஞ்சள் பிள்ளையார் ஒன்று செய்து வைத்து வணங்க வேண்டும்.
குருசாமியும் மற்ற சாமிகளும் விநாயகர் முதற்கொண்டு மற்ற கடவுள்களை மனதில் வணங்கி பின்னர் ஒவ்வொருவராக சரண கோஷம் எழுப்ப வேண்டும்.
விநாயகர், முருகன், சக்தி, சிவன், விஷ்ணு என்ற வரிசையில் ஆரம்பித்து பிறகு அய்யப்பன் மீது பாடல்கள் பாட வேண்டும்.
பாடல்கள் பாடி முடித்ததும் தேங்காய் உடைத்து நீர் தெளித்து தீபம் காட்ட வேண்டும்.
பிறகு 18 படிகள் இருந்தால் அதிலோ அல்லது வாழை இலையின் இருபக்கங்களிலும் பக்கத்திற்கு 9 வீதம் வாழைப்பழத்துண்டுகளை நறுக்கி வைத்து அதில் கற்பூரத்தை வைத்து படிப்பாட்டு பாட தொடங்க வேண்டும்.
படிப்பாட்டு முடிந்தவுடன் படிகளில் உள்ள கற்பூரத்தை ஏற்றி படி பூஜை செய்ய வேண்டும்.
பிறகு மங்களம் சொல்லி அனைவரும் கற்பூர தீபத்தை கண்களில் ஒற்றிக்கொள்ள இப்பூஜை இனிதே முடியும்.
பஜனை முடிந்த பிறகு நடக்கும் அன்னதானத்தில் முதலில் கன்னிச்சாமி ஒருவரை உண்ணச்செய்ய வேண்டும்.
சாமிகள் சரணம் சொல்லிய பிறகே அன்னத்தில் கைவைக்க வேண்டும். அதுபோல சரணம் சொல்லிய பிறகே எழுந்திருக்க வேண்டும்.