search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    மாங்கல்ய தோஷம் நீக்கும் திருமங்கலக்குடி
    X

    மாங்கல்ய தோஷம் நீக்கும் "திருமங்கலக்குடி"

    • மாங்கல்ய தோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் இத்தல நாயகியை வழிபட திருமணத் தடை நீங்கும்.
    • வழிபடும் பெண்களின் மாங்கல்ய பலம் பெருகும். இத் தலத்தின் பெயர் மங்களக்குடி, தல விநாயகர் மங்கள விநாயகர்.

    நவக்கிரகங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தை நீக்கியவர் கும்பகோணத்தை அடுத்துள்ள ஆடுதுறையில் அமைந்துள்ள "திருமங்கலக்குடி பிராணவரதேஸ்வரர்".

    இத் தலம் மாங்கல்ய தோஷங்கள் நீக்கும் திருத்தலம் ஆகும்.

    முதலாம் குலோத்துங்க சோழனின் மந்திரி ஒருவர் வரிப் பணத்தைக் கொண்டு இக் கோவிலை கட்டினான்.

    இதனை அறிந்து சினமுற்ற மன்னன், அம் மந்திரியை சிரச் சேதம் செய்யுமாறு உத்தரவிட்டான்.

    அஞ்சி நடுங்கிய மந்திரியின் மனைவி இத் தல மங்களாம்பிகையிடம் வேண்டினாள்.

    மந்திரி தனது உடலை திருமங்கலக்குடியில் அடக்கம் செய்யுமாறு கேட்க, மன்னனும் அவ்வாறே செய்யுமாறு ஆணையிட்டான்.

    மந்திரியின் உயிரற்ற உடலை இத் தலம் எடுத்து வர, தனது பக்தையின் வேண்டுகோளுக்கிணங்க மந்திரியை உயிர்ப்பித்தாள் இத் தல நாயகி.

    இதனால் இவள் " மங்களாம்பிகை" எனவும், பிராணனை திரும்ப கொடுத்ததால் இறைவன் "பிராண வரதேஸ்வரர்" எனவும் வழிபடலாயினர்.

    மாங்கல்ய தோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் இத்தல நாயகியை வழிபட திருமணத் தடை நீங்கும்.

    வழிபடும் பெண்களின் மாங்கல்ய பலம் பெருகும். இத் தலத்தின் பெயர் மங்களக்குடி, தல விநாயகர் மங்கள விநாயகர்.

    அம்பாள் மங்களாம்பிகை. தீர்த்தம் மங்கள தீர்த்தம். விமானம் மங்கள விமானம்.

    எனவே, இத் தலம் "பஞ்ச மங்கள ஷேத்திரம்" எனப்படுகிறது.

    Next Story
    ×