search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    நதிகளை தாயாய் போற்றிய நம் முன்னோர்கள்!
    X

    நதிகளை தாயாய் போற்றிய நம் முன்னோர்கள்!

    • வட மாநில மக்கள் இன்றும் நதிகளை தெய்வமாகவும், தாயாகவும் போற்றுகிறார்கள்.
    • குறிப்பிட்ட கிரகப் பெயர்ச்சிகளின் போது மிகச்சரியாக கும்ப மேளாக்களை நடத்தி விடுகிறார்கள்.

    நதிகளை நம் முன்னோர்கள் நம் குடும்பத்தில் ஒருவர் போல கருதினார்கள். அதனால்தான் நதிகளை "தாய்" என்று அழைத்தனர்.

    தாய்க்கும், தாய்ப் பாசத்துக்கும் இந்த உலகில் ஈடு இணையே கிடையாது.

    ஒரு தாய், எத்தனை பிள்ளைகள் பெற்றாலும், அனைவரையும் பாசத்தோடு வளர்ப்பாள். கண் இமைக்குள் வைத்து பாதுகாப்பது போல பாதுகாப்பாள்.

    அத்தகைய தாய் போன்றதுதான் நதியும். உணவு உற்பத்திக்கும், குடிநீருக்கும் நதிகள்தான் அடித்தளமாக உள்ளன.

    எனவேதான் நதிகளை தாயாக கருதிப் போற்றினார்கள்.

    இன்னும் சொல்லப் போனால் ஒவ்வொரு காலக் கட்டத்திலும் நதிகளை கும்பிட்டு வணங்கினார்கள்.

    நம் முன்னோர்களிடம், நதிகளைப் போற்றும் பண்பு, உணர்வோடு இரண்டற கலந்திருந்தது.

    அது மரபு போல காலம், காலமாக நீடிக்க வேண்டும் என்பதற் காகத்தான் நதிக்கரைக்கு விழாக்கள் எடுக்கும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

    ஜோதிட ரீதியாக கணித்து, ஒவ்வொரு கால கட்டத்திலும் நதிகளுக்கு விழா எடுக்க வேண்டும் என்ற முறையை கொண்டு வந்தனர்.

    கும்ப மேளாக்கள், தீர்த்த மாடல்கள் இப்படித்தான் தோன்றின. நம் மூதாதையர்கள் இந்த விழாக்களை மிக, மிக கோலாகலமாகக் கொண்டாடினார்கள்.

    நதிகளை அவர்கள் எப்படி மதித்தனர், பேணி பாதுகாத்தனர் என்பது சங்க கால இலக்கியங்களில் நிறைய உதாரணங்களாக உள்ளது.

    வட மாநில மக்கள் இன்றும் நதிகளை தெய்வமாகவும், தாயாகவும் போற்றுகிறார்கள்.

    குறிப்பிட்ட கிரகப் பெயர்ச்சிகளின் போது மிகச்சரியாக கும்ப மேளாக்களை நடத்தி விடுகிறார்கள்.

    வட மாநில மக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது கங்கை மாதாவுக்கு ஜே என்று கூறிக் கொள்ள தவறுதில்லை.

    கங்கை நதியை அவர்கள் எந்த அளவுக்கு உயிர்மூச்சு போல வைத்திருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.

    குறிப்பாக குரு பெயர்ச்சி நடக்கும் போது, அது ஒரு ராசியில் இருந்து, இன்னொரு ராசிக்குள் செல்லும்போது, அந்த ராசிக் குரிய நதியில் புஷ்கரம் நடத்துவார்கள்.

    அதாவது அந்த நதியில் புனித நீராடுவார்கள். ஹோமம் வளர்த்து அந்த நதியை வணங்குவார்கள்.

    அதோடு அந்த நதிக்கு ஆரத்தி காட்டி தங்கள் நன்றியைத் தெரிவிப்பார்கள்.

    Next Story
    ×