search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சிவராத்திரியில் தரிசிக்க வேண்டிய தலங்கள்-ஓமாம்புலியூர்
    X

    சிவராத்திரியில் தரிசிக்க வேண்டிய தலங்கள்-ஓமாம்புலியூர்

    • சிவபெருமான் பார்வதி தேவிக்கு ‘ஓம்‘ என்ற பிரணவ மந்திரத்தின் பொருளைக் கூறிய இடம் இது என்பார்கள்.
    • இதை பிரணவ வியாக்கிரபுரம் என்கின்றனர். சிவ மகா புராணத்தில் கூறப்பட்டுள்ள கதை போல ஒரு கதை இங்கும் வழக்கத்தில் உள்ளது.

    சிதம்பரத்தில் இருந்து 24 கி.மீ. தொலைவில் ஓமாம்புலியூர் உள்ளது.

    இக்கோவில் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிதம்பரத்திலிருந்தும், காட்டுமன்னார்கோயிலில்லிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளது.

    புலிக்கால் முனிவரால் (வியாக்ரபாதர்) பூசிக்கப்பெற்றதால் புலியூர் என்றும், வேத ஓமங்களில் (வேள்விகளில்) சிறப்புற்றதால் ஓமம் புலியூர் எனப் பெயர் பெற்றது.

    சிவபெருமான் பார்வதி தேவிக்கு 'ஓம்' என்ற பிரணவ மந்திரத்தின் பொருளைக் கூறிய இடம் இது என்பார்கள்.

    இதை பிரணவ வியாக்கிரபுரம் என்கின்றனர். சிவ மகா புராணத்தில் கூறப்பட்டுள்ள கதை போல ஒரு கதை இங்கும் வழக்கத்தில் உள்ளது.

    மூன்றாம் குலோத்துங்கன் காலத்திய கல்வெட்டில் இத்தலம் 'வடகரை விருதராசபயங்கர வளநாட்டு மேற்கா நாட்டுப் பிரமதேயம் ஓமாம்புலியூராகிய உலகளந்த சோழசதுர்வேத மங்கலம் ' என்றும்; இறைவன் பெயர் 'வடதளி உடையார் ' என்றும் குறிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×