search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஊசி முனையில் ஒற்றைக்கால் பெருவிரலை ஊன்றி தவம் செய்த பார்வதிதேவி
    X

    ஊசி முனையில் ஒற்றைக்கால் பெருவிரலை ஊன்றி தவம் செய்த பார்வதிதேவி

    • அந்த ஆறு இன்றும் சேயாறு என்று அழைக்கப்படுகிறது.
    • இந்த இடங்களை கடந்துதான் பார்வதிதேவி திருவண்ணாமலைக்கு சென்று அடைந்தார்

    சிவபெருமானிடம் வரத்தை கேட்டு அவர் கூறியபடி காஞ்சிபுரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு பார்வதி தேவி புறப்பட்டார்.

    அவருடன் முருகரும் சென்றார். வழியில் பார்வதி தேவி ஒரு இடத்தில் தங்கினார்.

    அந்த இடத்தில் வாழை இலையால் பந்தல் அமைத்து கொடுத்து பார்வதி தேவிக்கு முருகபெருமான் உதவினார்.

    இன்றும் அந்த இடம் வாழைப்பந்தல் என்று அழைக்கப்படுகிறது.

    அதுபோல அந்த பகுதியில் பார்வதியின் தாகம் தீர்ப்பதற்காக முருகப்பெருமான் தனது வேலை செலுத்தி ஒரு ஆறு உருவாக்கினார்.

    அந்த ஆறு இன்றும் சேயாறு என்று அழைக்கப்படுகிறது.

    இந்த இடங்களை கடந்துதான் பார்வதிதேவி திருவண்ணாமலைக்கு சென்று அடைந்தார்.

    முதலில் வடக்கு வீதிக்கு சென்று அண்ணாமலையாரை வழிபட்டார்.

    பின்னர் தலேச்சுரம் எனும் மலை பகுதியை அடைந்தார்.

    அந்த பகுதியில் கவுதமரும் அவரது மனைவி அகலிகையும் மகன் சதானந்தரும் மடம் அமைத்து வசித்து வந்தனர்.

    அவர்கள் பார்வதியை வரவேற்று வணங்கினார்கள்.

    பார்வதிதேவி சிவபெருமானை நோக்கி தவம் இருப்பதற்கு அவர்கள் தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தனர்.

    பார்வதி தேவி அமைத்த தவச்சாலையில் 7 கன்னியர்கள் காவலுக்கு நிறுத்தப்பட்டனர்.

    8 பைரவர்கள் நான்கு திசைகளையும் காத்தனர்.

    அவர்களுக்கு மத்தியில் கூர்மையான ஊசி முனையில் ஒருகால் பெருவிரலை ஊன்றி பார்வதிதேவி தவம் மேற்கொண்டார்.

    அந்த சமயத்தில் தேவர்கள் வந்து தங்களை மகிஷாசூரன் துன்புறுத்துவதாக முறையிட்டனர்.

    அதை கேட்ட பார்வதி துர்க்கையை அனுப்பி மகிஷாசூரனை வதம் செய்தார். (இதிலிருந்துதான் நவராத்திரி விழா தோன்றியது)

    பார்வதியின் தவம் அதன் பிறகும் நீடித்தது.

    Next Story
    ×