search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    பாவம் போக்கும்  பூசம் நீராடல்
    X

    பாவம் போக்கும் பூசம் நீராடல்

    • தமிழகத்தில் உள்ள பெரிய சிவாலயங்களில் தைப்பூச திருவிழா தீர்த்தவாரியுடன் நடைபெறுகிறது.
    • இத்தலத்தில் உள்ள காவிரி படித்துறையில் (பூசத் தீர்த்தம்) தைப்பூச நீராடல் மேற்கொள்வோர் பாப விமோசனம் பெறலாம்.

    தமிழகத்தில் உள்ள பெரிய சிவாலயங்களில் தைப்பூச திருவிழா தீர்த்தவாரியுடன் நடைபெறுகிறது.

    அதிலும் மத்யார்ஜுனம் எனப் போற்றப்படுவதும், சைவத்தால் மேலோங்கித் திகழ்ந்து மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றிலும் சிறப்படைந்து விளங்குவதுமான திருவிடைமருதூரில் ஸ்ரீமகாலிங்க சுவாமி திருக்கோவிலில் பெருந்திருவிழாவாக நடைபெறுவது வழக்கம்.

    புராண, வரலாற்றுப் பெருமைகளுடன் இன்னும் பல சிறப்புகளையும் கொண்ட இவ்வாலயம் திருவாவடுதுறை ஆதீன நிர்வாகத்தில் சீருடனும், சிறப்புடனும் விளங்குகிறது. காவிரி தென்கரையில் அமைந்துள்ள 30&வது தலமாகும்.

    கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் 10 கி.மீ. தொலைவில் உள்ளது.

    புராணத்தின்படி இத்தலத்தில் தவமிருந்து விபண்டக, முனிவருக்கு சிவபெருமான் காட்சி யளித்தார். அப்போது விபண்டக முனிவர் ஆண்டு தோறும் தைப்பூச நாளன்று காவிரிக்கரையில் உள்ள கல்யாண தீர்த் தத்தில் நீராடியவர்கள் நோய் நொடி, பாவங்கள் நீங்கி புண்ணியம் பெற்று வாழ வேண்டும் என்று சிவனிடம் வேண்டினார். இறைவனும், 'அவ் வாறே ஆகுக' என்று வரம் அருளினார்.

    ஒருமுறை தேவ விரதன் என்ற கள்வன் திருவாபரணங்களைக் களவாட முயன்ற பாவத்தால், நோய் வாய்ப்பட்டு மாண்டான். மறுபிறவியில், அவன் ஒரு புழுவாய்ப் பிறந்து, பூசத்தீர்த்தத்தில் நீராடிய ஒரு புண்ணிய வானின் கால் பட்டு, முக்தியடைந்தான் என்றும், இப்புண்ணிய நாளில் நீராடிய அயோத்தி மன்னன் ஒருவனும், சித்ரகீர்த்தி என்ற பாண்டிய மன்னனும் புத்திரப்பேறு பெற்றனர் என்றும் வரலாறுகள் கூறுகின்றன.

    மேலும், இத்தலத்தில் உள்ள காவிரி படித்துறையில் (பூசத் தீர்த்தம்) தைப்பூச நீராடல் மேற்கொள்வோர் பாப விமோசனம் பெறலாம்.

    Next Story
    ×