search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    பன்னாரியம்மன் குண்டம்
    X

    பன்னாரியம்மன் குண்டம்

    • மலர் வகைகள் வந்து குவியும். தங்கக் கவசம் ஆடை, ஆபரணம் பூட்டி அம்மன் அலங்காரம் முடியும்.
    • முக்கிய அம்சமான அக்னி குண்ட வழிபாடு நடக்கும். இதில் விளை பொருட்களைக் காணிக்கையாகத் தருவார்கள்.

    பன்னாரி மாரியம்மன் கோவில் அக்னி குண்ட விழா மிகவும் புகழ் பெற்றது.

    ஆயிரக்கணக்கானவர்கள் அக்னி குண்டம் இறங்குவர்.

    பங்கு மாத உத்திரத்திறகு முந்தின 15&ம் நாள் இரவு பன்னாரி மாரியம்மனுக்கு பூச்சாற்று நடைபெறும்.

    மறுநாள் வன துர்க்கை அம்மன் புறப்பாடு நடக்கும்.

    இது ஒரு வித்தியாசமான ஊர்வலம்.

    அப்போது சோலகர் என்ற மலைவாசிகளின் வாத்தியங்களும், அருந்ததியர் வாத்தியங்களும் முழங்கும்.

    மலைவாழ் மக்களும் சுற்றியுள்ள வனப் பகுதி மக்களும் பெரிய தனக் காரர்களும் புடைசூழ வந்து நடத்துவர்.

    இந்த ஊர்வலம் 8&ம் நாள் கோவிலுக்கு வந்துசேரும்.

    மறுநாள் இரவு அம்பிகை ஆராதனை செய்து அக்னி கம்பம் போடுவர்.

    பூச்சாற்றின் 15&ம் நாள் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக மாட்டு வண்டி, பஸ், சைக்கிள், நடைப் பயணம் என பன்னாரிக்குப் புறப்படுவார்கள்.

    மலர் வகைகள் வந்து குவியும். தங்கக் கவசம் ஆடை, ஆபரணம் பூட்டி அம்மன் அலங்காரம் முடியும்.

    முக்கிய அம்சமான அக்னி குண்ட வழிபாடு நடக்கும். இதில் விளை பொருட்களைக் காணிக்கையாகத் தருவார்கள்.

    இந்தக் கானகத் திருவிழா தமிழ்நாட்டிலேயே இங்கு மட்டும் தான் இவ்வளவு சிறப்பாக மக்கள் பெருமளவில் பங்கு பெற்று நடத்துவர்.

    அன்றிரவு சுமார் ஒரு மணிக்கு அம்மன் அழைப்பு நடைபெறும்.

    தெப்பக்கிணற்று அருகே உள்ள அம்மனை அழைத்து வந்து அக்னி குண்டம் அருகே இருத்துவர். குண்டம் சமப்படுத்தப்படும்.

    மறுநாள் காலை, பூசாரி பூஜை செய்தபின் முதலில் குண்டம் இறங்குவார்.

    பிறகு வரிசையாய் ஆண்களும் பெண்களும் இறங்குவார்கள். கடைசியாக கால்நடைகளும் குண்டம் இறங்கும்.

    இது இங்கு மட்டும் நடைபெறும் நிகழ்ச்சியாகும்.

    Next Story
    ×