search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    பதினெட்டாம் படி பூஜை வழிமுறைகள்
    X

    பதினெட்டாம் படி பூஜை வழிமுறைகள்

    • ஐயப்ப பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வரும் நாட்களில் பதினெட்டும்படி பூஜை நடத்த மாட்டார்கள்.
    • தற்சமயம் ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் பதினெட்டுப்படி பூஜை நடத்தப்படுகிறது.

    பல ஆண்டுகளுக்கு முன்,பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்பட்ட பதினெட்டுப்படி பூஜைக்கு பக்தர்களிடமிருந்து பேராதரவு பெருகிய தால் பதினெட்டுப்படி பூஜை நடத்தப்படும் நாட்கள் அதிகரிக்கப்பட்டன.

    ஐயப்ப பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வரும் நாட்களில் பதினெட்டும்படி பூஜை நடத்த மாட்டார்கள்.

    தற்சமயம் ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் பதினெட்டுப்படி பூஜை நடத்தப்படுகிறது.

    இந்தப் பிரசித்தி பெற்ற பூஜையை நிகழ்த்த, சபரிமலை கோவில் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    முன்பணம் கட்டிவிட்டால் மற்ற ஏற்பாடுகளை தேவஸம் போர்டு செய்து கொள்ளும்.

    கலசத் துணிகள், படி பூஜையின்போது தலைமை புரோகிதர் அணிய வேண்டிய உடைகள், கற்பூரம், சாம்பிராணி, 18 தேங்காய்கள் உதிரிப் பூக்கள், பூமாலைகள், 36 நிலை விளக்குகள் இவைகள் பூஜைக்கு வேண்டிய அத்தியாவசிய பொருட்கள்.

    இந்தப்படி பூஜை நடத்தி முடிய சுமார் மூன்றுமணி நேரம் ஆகும்.

    ஐந்து அடி நீளமும், ஒன்பது அடி அகலமும் உள்ள பஞ்சலோகத் தகடு அடிக்கப்பட்ட படிகளின் நடுவில் பட்டுத்துணி விரித்து பூக்கள் வைக்கப்பட்டு (தாமரைப் பூவும் அடக்கம்) பூக்களின் மேல் தேங்காய் ஒன்றும் வைக்கப்படும். ஒவ்வொரு படிகளின் இரு புறத்திலும் இரண்டு நிலை விளக்குகளின் திரி கொளுத்தி வைப்பார்கள்.

    பூக்கள், பூமாலைகளைக் கொண்டு பதினெட்டுப்படிகளும் அதன் பக்க சுவர்களும் அலங்கரிக்கப்படும்.

    பதினெட்டுப் படிகளில் கீழாக இருக்கும் முதல் படியின் கீழே தளத்தில் அமர்த்து சபரிமலை சந்நிதானத்தை நோக்கியவாறு பதினெட்டுப்படி பூஜைகளை தலைமை புரோகிதர் நிர்வகிப்பார். ஒவ்வொரு படியிலும் பிரத்யேக பூஜை நடத்தப்படும்.

    பூஜை நடக்கும் போது நடை திறந்திருக்கும். படி பூஜை நிறைவுற்று, அத்தாழ பூஜையும் நடத்தி முடிந்த பிறகு தான் நடை அடைக்கப்படும்.

    பதினெட்டுப்படி பூஜையை அதிக அளவில் நடத்துபவர்கள் தமிழ்நாடு, ஆந்திர, கர்நாடக, மஹாராஷ்டிர ஐயப்ப பக்தர்கள் தான்.

    Next Story
    ×