search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சரபேஸ்வரரை இவ்வாறு வழிபடுங்கள்!
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சரபேஸ்வரரை இவ்வாறு வழிபடுங்கள்!

    • சரபரை வழிபட்டால் பில்லி,சூன்யம், ஏவல், பிணி, கடன் தொல்லை, இவற்றிலிருந்து விடுபடலாம்.
    • திருமணத்தடை அகன்று விரைவில் திருமணம் நடக்கும்.

    பிரதோஷ காலத்தில் சரபேஸ்வரரை வழிபடுவது சிறப்பு. அருகம்புல்லும், வில்வமும் கொண்டு வழிபடுவது சிறந்தது.

    சரபரை வழிபட்டால் பில்லி,சூன்யம், ஏவல், பிணி, கடன் தொல்லை, இவற்றிலிருந்து விடுபடலாம்.

    திருமணத்தடை அகன்று விரைவில் திருமணம் நடக்கும்.

    அமாவாசை, பவுர்ணமி மற்றும் பிரதோஷ நாட்களில் வழிபடுவது சிறப்பு.

    ராகு காலத்தில் வழிபடுவது மிக்க நல்லது.

    சத்ரு சம்ஹாரமே சரபேஸ்வரரின் அபரிமிதமான சக்தி.

    பக்தர்கள் முழு மனதோடு வழிபட்டு, சரண் அடைந்து சரபரின் அருளைப் பெறலாம்.

    சரபரை ஒரு நிமிஷம் உள்ளன்புடன் நினைத்தாலே போதும் எதிரிகள் குலநாசம், போக மோக்ஷ பலம், முக்தி ஏற்படும்.

    ஹரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை மக்கள் உணரவேண்டும் என்பதை மக்களுக்கு உணர்த்தவே சரபேஸ்வரரின் தோன்றல் நடந்ததாக கூறுவது உண்டு.

    திண்டுக்கல் நகரில் நாகல்நகர் சந்தைரோடு பகுதியில் உள்ள பொன்னழகு காளியம்மன் கோவிலில் சரபேஸ்வரர் சன்னதி உள்ளது.

    இங்கு பிரதிவாரம் ஞாயிற்றுக்கிழமை சரபேஸ்வரருக்கு யாகம் நடைபெறுகிறது.

    இந்த யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பயனடைந்து வருகின்றனர்.

    வீட்டில் ஸ்ரீசரபேஸ்வரர் படம் வைத்து பெண்கள் ராகு கால வேளையில் துதித்து வந்தால் வீட்டில் துர் தேவதைகள் எல்லாம் விலகிவிடும்.

    சரபேசுவரரை மனம் உருக வழிபட்டால் செய்வினை கோளாறு, உடல்நிலை பாதிப்பு, கடன் தொல்லை, எதிரிகளால் ஏற்படும் துன்பங்கள், கடன் நிவர்த்தி எல்லாம் சர்வ நாசம் செய்து உங்களுக்கு உங்கள் குடும்பத்துக்கு நன்மை தருவார்.

    புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் செல்லும் பாதையில் 6 கிலோ மீட்டர் மொட்டாண்ஹில் பக்கம் பிரத்தியங்கரா தேவி உக்கிரமான முறையில் கோவில் கொண்டுள்ளாள்.

    ஸ்ரீநரசிம்ம மூர்த்தியும், ஸ்ரீசரபேஸ்வரர் மூர்த்தியும் சேர்ந்தருள் செய்த சந்தி நேரத்தில் பூஜை செய்வது நல்லது.

    ஸ்ரீசரபேஸ்வரரை வழிபட செல்லுகையில் இல்லத்திலிருந்தே செருப்பு அணியாமல் செல்வது நல்லது.

    ஸ்ரீசரபமூர்த்தி, ஸ்ரீபிரத்தியங்கிரதேவி, ஸ்ரீ துர்க்காதேவி, ஸ்ரீ நரசிம்மமூர்த்தி போன்ற சுவாமி படங்களை வீட்டில் வைத்தும் வழிபடலாம்.

    ஸ்ரீசரபேஸ்வரர் சிலை வடிவமாக இருந்தால் முழு சந்தனக்காப்பும், தூணில் சரப ரூபமிருந்தால் தேங்காய் எண்ணை காப்பும் செய்தும் வழிபடவேண்டும்.

    எதிரே ஸ்ரீநரசிம்மர் இருந்தால் முதலில் அவருக்குத்தான் நல்லெண்ணைய் காப்பும், தைலக்காப்பும் செய்ய வேண்டும்.

    Next Story
    ×