search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சிலிர்க்க வைக்கும் அன்னையின் பிரம்மாண்ட உருவ சிலை
    X

    சிலிர்க்க வைக்கும் அன்னையின் பிரம்மாண்ட உருவ சிலை

    • அன்னைக்கு அபிஷேகம் கிடையாது. அர்ச்சனையும் கிடையாது.
    • ஆண்டுக்கு ஒரு நாள் தை மாதம், முதல் தினத்தன்று அன்னைக்குப் புனுகு தைலம் சாத்தப்படுகிறது.

    அன்னையின் சந்நிதி அமைந்திருக்கும் இடமே யாகபூமி என்பதால் இங்கே யாகம் செய்தால் யார் யாருக்கு என்ன வேண்டுதல்களோ, அவை நியாயமான வேண்டுதல்கள் எனில் அனைத்தும் நிறைவேறுகின்றன.

    மாந்திரீகத்தின் துணைகொண்டு எதிரிகளால் ஏவி விடப்படும் பில்லி, சூனியம், ஏவல், வைப்பு, ரணம், ரோகம் ஆகிய அனைத்தும் இங்கே யாகம் செய்வதால் நிவர்த்தி ஆகின்றன.

    மேலும் வீட்டில் ஏற்படும் அனைத்து திருஷ்டி தோஷங்களும் கழிகின்றன.

    யாகத்தின் போது அன்னம், நெய் மற்றும் அனைத்து திரவியங்களுடன் புஷ்பங்களும் பழங்களும் யாகத்தீக்கு ஆகுதியாக அளிக்கப்படுகின்றன.

    மாந்திரீகத்தின் காரணமாக ஏற்படும் உபாதைகள் நீங்குவதற்காக மிளகாய் வற்றலும் யாகத் தீயில் ஆகுதியாக அளிக்கப்படுகிறது.

    மிளகாய் எவ்வளவு சேர்த்தாலும் சிறிதளவு காரம் கூட வெளிபடுவதில்லை. நெடியும் வருவதில்லை என்பது இன்று வரை இங்கே நிகழ்ந்து கொண்டிருக்கும் ஓர் ஆச்சரியம்.

    ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று காலை 10 மணிக்கு தொடங்கும் நிகும்பலா யாகம், பிற்பகல் இரண்டு மணிக்கு நிறைவு பெறுகிறது. வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து யாகம் செய்கிறார்கள்.

    யாகம் முடிந்தவுடன், தயிர் சாதம் அன்னதானமாக அளிக்கப்படுகிறது. சுமார் இருபதாயிரம் பேர் இந்த அன்னத்தை அன்னையின் அருட்பிரசாதமாக ஏற்று, உண்டு மகிழ்கிறார்கள்.

    மகா பிரத்தியங்கிராதேவி. இரண்டு ஆள் உயரத்துக்குப் பிரமாண்டமான திருஉருவம். 4 சிம்மங்கள் பூட்டிய ரதத்தில், அமர்ந்த நிலையில் 18 திருக்கரங்களுடன் இத்தலத்தில் காட்சி அளிக்கிறாள்.

    அன்னைக்கு அபிஷேகம் கிடையாது. அர்ச்சனையும் கிடையாது.

    ஆண்டுக்கு ஒரு நாள் தை மாதம், முதல் தினத்தன்று அன்னைக்குப் புனுகு தைலம் சாத்தப்படுகிறது.

    சிம்ம முகம் கொண்டு, 18 கரங்களிலும் பல வகை ஆயுதங்கள் ஏந்திப் பயங்கரமாகக் காட்சி தரும் அன்னையின் எதிரில் நின்றால் நம்மை அறியாமல் உடல் சிலிர்க்கிறது.

    எதிரிகளை அழிக்கத்தானே அன்னை இந்த திருக்கோலம் கொண்டிருக்கிறாள் என்ற எண்ணம் எழுந்தவுடன் அன்னையின் முகம் அன்பு வடிவமாக நமக்குத் தோன்றுகிறது.

    Next Story
    ×