search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    தவமிருந்து சிவனிடம் பாதி பாகம் கேட்ட பார்வதிதேவி
    X

    தவமிருந்து சிவனிடம் பாதி பாகம் கேட்ட பார்வதிதேவி

    • அதற்கு பார்வதி, “உங்களை இனி என்றென்றும் பிரியாத வரம் வேண்டும்.
    • அப்படி பிரியாமல் இருக்க வேண்டுமானால் உங்களில் பாதியை, உங்கள் இடதுபாகத்தை எனக்கு தந்து அருள வேண்டும்.

    இறைவன் தீயில் இருந்து தோன்றியவர் என்று லலிதா சகஸ்ரநாமத்தில் ஒருவரி உண்டு. அதை பிரதிபலிப்பது போல திருவண்ணாமலையில் தீ மிதி விழா நடைபெறும்.

    இதன் பின்னணியில் ஒரு வரலாறு இருப்பதாக அருணாசல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அந்த வரலாறு வருமாறு:

    ஒரு தடவை சிவபெருமானின் கண்களை பார்வதி தேவி தனது கைகளால் விளையாட்டாக மூடினார்.

    இதனால் பிரபஞ்சம் அனைத்தும் இருளில் மூழ்கியது. உயிரினங்கள் அனைத்தும் தவித்தன.

    எல்லாவித தொழில்களும் நின்று போனது. உடனே அனைவரும் சென்று சிவபெருமானிடம் முறையிட்டனர்.

    அப்போது சிவபெருமான் தனது நெற்றிக் கண்ணை திறந்தார். இதனால் மீண்டும் பிரபஞ்சம் ஒளிபெற்றது.

    ஏழுஉலகிலும் இருள் விலகியது. அப்போதுதான் பார்வதிதேவிக்கு தனது தவறு தெரிய வந்தது.

    உடனே அவர் இதற்கு பிராயசித்தமாக, தனது பாவம் நீங்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்.

    அதற்கு சிவபெருமான் பூலோகம் சென்று தவம் இருக்கும்படி உத்தரவிட்டார்.

    அதை ஏற்று பார்வதிதேவி மாங்காடு வந்தார். தீயை மூட்டி கடும் தவம் இருந்தார்.

    பிறகு அங்கிருந்து காஞ்சீபுரம் சென்றார்.

    அங்கு கம்பா நதிக்கரையோரத்தில் மணலை குவித்து லிங்கமாக உருவாக்கி பூஜை செய்து தவம் இருந்தார்.

    காமாட்சியின் தவத்தை சோதிக்க நினைத்த சிவன் கம்பா நதியில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தினார்.

    உடனே காமாட்சி அந்த மணல் லிங்கத்தை தனது மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டார்.

    இதனால் கம்பா நதி இரண்டாக பிரிந்து லிங்கத்தை சுற்றி ஓடியது.

    இதையடுத்து சிவபெருமான் பார்வதிக்கு காட்சி கொடுத்தார்.

    அப்போது பார்வதியிடம் அவர், "உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேள் தருகிறேன்" என்றார்.

    அதற்கு பார்வதி, "உங்களை இனி என்றென்றும் பிரியாத வரம் வேண்டும்.

    அப்படி பிரியாமல் இருக்க வேண்டுமானால் உங்களில் பாதியை, உங்கள் இடதுபாகத்தை எனக்கு தந்து அருள வேண்டும்.

    இது தவிர எனக்கு வேறு எந்த வரமும் வேண்டாம்" என்று கூறினார்.

    உடனே சிவபெருமான் காஞ்சீபுரத்திற்கு தெற்கே ஒரு நகரம் ஒளிமயமாக திகழும்.

    அந்த நகரை நினைத்தாலே முக்தி கிடைக்கும்.

    அத்தகைய சிறப்புடைய அந்த தலத்துக்கு சென்று தவம் இருந்தால் உனக்கு இடது பாகத்தை தந்து அருள்வேன் என்றார்.

    அதை ஏற்று பார்வதி தேவி காஞ்சீபுரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு புறப்பட்டார்.

    Next Story
    ×