search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    இன்றளவும் ஒரு இடத்தில் செயற்கை கோள்கள் ஸ்தம்பிக்கும் அதிசய நிகழ்வு
    X

    இன்றளவும் ஒரு இடத்தில் செயற்கை கோள்கள் ஸ்தம்பிக்கும் அதிசய நிகழ்வு

    • அதே சமயம் செயற்கைக் கோளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.
    • இந்த சம்பவத்திற்குப் பிறகு, நாசாவிலிருந்து பலமுறை திருநள்ளாற்றிக்கு நேரில் வந்து பல ஆராய்ச்சிகள் செய்து விட்டனர்.

    சில வருடங்களுக்கு முன்பு, ஒரு அமெரிக்க செயற்கைக்கோள் பூமியின் குறிப்பிட்ட பகுதியினைக் கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்து விட்டது.

    3 வினாடிகளுக்குப் பிறகு வழக்கம் போல வானில் பறக்க ஆரம்பித்தது.

    இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை தந்தது.

    இது எப்படி சாத்தியம்? என்பதை ஆராய்ந்தது.

    கிடைத்த ஆய்வு முடிவு நாசாவை மட்டுமல்ல. உலகத்தையே மிரள வைத்தது.

    எந்த ஒரு செயற்கைக் கோளும் திருநாள்ளாறில் சனிபகவான் வீற்றுள்ள ஸ்ரீதர்ப்பணேசுவரர் கோவிலுக்கு நேர்மேலே உள்ள வான் பகுதியினைக் கடக்கும் போது 3 வினாடிகள்... ஸ்தம்பித்து விடுகின்றன.

    அப்படி ஸ்தம்பிப்பதற்குக் காரணம்... ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் சனிக்கிரகத்திலிருந்து கண்ணுக்குப் புலனாகாத கரு நீலக்கதிர்கள் அந்தக் கோவில் மீது விழுந்து கொண்டே இருக்கின்றன.

    2 1/2 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் ஒவ்வொரு சனிப்பெயர்ச்சியின் போதும் இந்த கரு நீலக்கதிர்களின் அடர்த்தி 45 நாட்கள் வரை மிக அடர்த்தியாக இருக்கின்றன.

    விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக் கோள்கள் இந்த கருநீலக் கதிர்கள் பாயும் பகுதிக்குள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது ஸ்தம்பித்து விடுகின்றன.

    அதே சமயம் செயற்கைக் கோளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.

    இந்த சம்பவத்திற்குப் பிறகு, நாசாவிலிருந்து பலமுறை திருநள்ளாற்றிக்கு நேரில் வந்து பல ஆராய்ச்சிகள் செய்து விட்டனர்.

    மனிதனுக்கு மீறிய சக்தி உண்டு என்பதினை உணர்ந்தனர்.

    அவர்களும் திருநள்ளாறு சனி பகவானை கையெடுத்துக் கும்பிட்டு வழிபட்டு சென்றனர்.

    இன்று வரையிலும், விண்ணில் மனிதனால் ஏவப்பட்டுள்ள செயற்கைக் கோள்கள் திருநள்ளாறு பகுதியைக் கடக்கும் போது 3 வினாடிகள் ஸ்தம்பித்துக் கொண்டே இருக்கின்றன.

    Next Story
    ×