search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    தோரணமலையில் சிறப்பு பூஜைகள்
    X

    தோரணமலையில் சிறப்பு பூஜைகள்

    • தினமும் காலையில் விநாயகருக்கும் முருகப்பெருமானுக்கும் அபிஷேகம் நடைபெறும்.
    • பகலில் சிறப்பு பூஜைகள் நடக்கும். கார்த்திகை நட்சத்திரம் போன்ற முக்கியமான நாட்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

    தோரணமலையில் விநாயகர் சன்னதி நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்படும். மாலையில் 5 மணி வரை திறந்திருக்கும்.

    மலை மீதுள்ள சன்னதி காலை 6 மணி திறந்து மாலை 4 மணி திறந்து இருக்கும். ஆனால் தைப்பூசம், வைகாசி விசாகம் போன்ற முக்கிய நாட்களில் இரவு நேரத்திலும் பக்தர்கள் மலை ஏறலாம்.

    தினமும் காலையில் விநாயகருக்கும் முருகப்பெருமானுக்கும் அபிஷேகம் நடைபெறும்.

    பகலில் சிறப்பு பூஜைகள் நடக்கும். கார்த்திகை நட்சத்திரம் போன்ற முக்கியமான நாட்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

    தமிழ்மாத கடைசி வெள்ளி அன்று பக்தர்கள் திரளாக வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.

    செவ்வாய், வெள்ளிக்கிழமை, கார்த்திகை நட்சத்திரம் காலங்களிலும் பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள். பவுர்ணமி அன்று காலையில் கிரிவலம் செல்கிறார்கள்.

    தைப்பூசம், வைகாசி விசாகம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    தைப்பூசத்தன்று பக்தர்கள் அலகு குத்தியும் பால்குடம் எடுத்தும் வருகிறார்கள். அன்று முருகப்பெருமானின் திருக்கல்யாணம் மிக சிறப்பாக நடைபெறும்.

    தென்மாவட்டங்களில் சித்திரை முதல் நாளும், ஐப்பசி முதல்நாளும் புனித நாட்களாக கொண்டாடப்படுகிறது.

    அந்த காலத்தில் இந்த இரு நாட்களும் பாபநாசம், திருக்குற்றாலம் போன்ற தலங்களுக்கு பக்தர்கள் செல்வார்கள்.

    தற்போது இந்த நாட்களில் தோரணமலைக்கும் திரளாக வருகிறார்கள்.

    தமிழ் மாத கடைசி வெள்ளி அன்று விவசாயம் செழிக்க ஸ்ரீவர்ணகலபூஜை நடத்தப்படுகிறது.

    இதற்காக மலைமீதுள்ள சுனையில் இருந்து பக்தர்கள் கலசங்களில் தண்ணீர் கொண்டு வருகிறார்கள்.

    கோவிலுக்கு வடபுறம் உள்ள மேடையில் முருகன், வள்ளி, தெய்வானையை எழுந்தருளச் செய்து உற்சவர்களுக்கு அபிஷேகம் செய்கிறார்கள். அதன்பின் விவசாயம் செழிக்க ஸ்ரீவர்ணகல பூஜை நடத்தப்படுகிறது.

    திருக்கல்யாணமும் இங்குதான் நடைபெறும்.

    Next Story
    ×