search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    விரதம் தோன்றிய வரலாறு
    X

    விரதம் தோன்றிய வரலாறு

    • ஒன்பதாவது வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். ஐந்து ஏழைகளுக்கு (குறைந்தது) உணவு அளிக்க வேண்டும்.
    • நேரடியாக உணவு வழங்க இயலாதவர்கள் யார் மூலமாகவாவது பணமாகவோ, உணவாகவோ கொடுத்து வழங்கலாம்.

    இந்த விரதத்தை ஆண், பெண் குழந்தைகள் யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

    ஜாதி, மத வித்தியாசமின்றி எல்லோரும் இவ்விரதத்தை மேற்கொள்ளலாம்.

    ஒன்பது வியாழக்கிழமைகள் விதிமுறைப்படி விரதம் இருந்தால், நிச்சயமாக அற்புதமான பலன்களைக் கொடுக்கும்.

    எந்த ஒரு வியாழக்கிழமையிலும் விரதத்தை ஆரம்பிக்கலாம்.

    நாம் எந்தக் காரியத்தை நினைத்து ஆரம்பித்தாலும் தூய மனதோடு சாயி நாமத்தை உச்சரித்து தொடங்கலாம்.

    ஒரு தூய்மையான பலகை அல்லது இருக்கையில் மஞ்சள் துணி விரித்து அதன் மேல் சாயிபாபா படத்தை வைக்க வேண்டும்.

    படத்தை வைப்பதற்கு முன்னால் தூய நீரால், துணியால் படத்தைத் துடைத்து சந்தனம், குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும்.

    மஞ்சள் நிற மலர்களை அணிவிக்க வேண்டும். ஊதுபத்தியும், சாம்பிராணி தூபமும், தீபமும் ஏற்றி சாயி விரத கதையைப் படிக்க வேண்டும். சாயிபாபாவை ஸ்மரணை செய்யவும்.

    பழங்கள், கற்கண்டு, இனிப்புகள் நைவேத்தியம் வைத்து பிரசாதத்தை மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும். காலை அல்லது மாலை அல்லது இருவேளையிலும் செய்யலாம்.

    நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் பட்டினியுடன் இந்த விரதத்தைச் செய்யவே கூடாது. (பால், டீ, காபி, பழங்கள், இனிப்புகள் உட்கொள்ளலாம்) காலை அல்லது மதியமோ அல்லது இரவோ பழ, திரவ ஆகாரம் ஒரு வேளை சாப்பிட வேண்டும்.

    ஒன்பது வியாழக்கிழமைகளும் முடிந்தவர்கள் சாயிபாபா கோவிலுக்குச் சென்று வணங்கலாம். முடியாதவர்கள் வீட்டிலேயே சாயிபா படத்தை வைத்து பூஜையை பக்தியுடன் செய்யலாம்.

    வெளியூர் போக நேர்ந்தாலும் கூட நிறுத்தாமல் இந்த விரதத்தைச் செய்யலாம்.

    பெண்களுக்கு மாதவிலக்கு அல்லது இன்னபிற காரணங்களால் விரதம் இருக்க இயலவில்லை என்றால், அந்த வியாழக்கிழமையை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அடுத்த வியாழக்கிழமை விரதம் இருந்து ஒன்பது வியாழக்கிழமைகள் நிறைவு செய்யலாம்.

    ஒன்பதாவது வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். ஐந்து ஏழைகளுக்கு (குறைந்தது) உணவு அளிக்க வேண்டும்.

    நேரடியாக உணவு வழங்க இயலாதவர்கள் யார் மூலமாகவாவது பணமாகவோ, உணவாகவோ கொடுத்து வழங்கலாம்.

    சாயி பாபாவின் மகிமை மற்றும் விரதத்தை பரப்புவதற்காக, நமது வீட்டிற்கு அருகில் வசிப்பவர், சொந்தம் பந்தம், தெரிந்தவர் என்று இயன்ற அளவு சாயிபாபா விரத புத்தகங்களை இலவசமாக வழங்க வேண்டும்.

    ஒன்பதாவது வியாழக்கிழமை வழங்கும் புத்தகங்களை பூஜையில் வைத்து வழங்கலாம். இப்படிச் செய்வதால் புத்தகத்தைப் பெறும் பக்தர்களின் விருப்பங்களும் ஈடேறும்.

    இந்த விதமாக விதிமுறைகளின்படி விரதமும் விரத நிறைவும் செய்தால் உறுதியாக எண்ணிய காரியம் ஈடேறும். இது சாயிபாபா அருளிச் சென்ற நம்பிக்கை.

    Next Story
    ×