என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிறித்தவம்
இதில் கம்ளார் பங்குத்தந்தை பென்ஹர் தலைமையில், ஆர்.ஆர்.நகர் பென்சிகர் அருளுரையாற்றினார். மாலை 3 மணிக்கு திருவிழா வரவேற்பு, கொடி நேர்ச்சை, ஜெபமாலை, புகழ்மாலை ஆகியவை நடந்தது. தொடர்ந்து மேள தாளங்களுடன் ஊர்வலமாக வந்து திருவிழா கொடியேற்றம் நடந்துது. தொடர்ந்து நடந்த திருப்பலியில் பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடுபால்ராஜ் தலைமை தாங்கி அருளுரையாற்றினார். நிகழ்ச்சியில் தேவசகாயம் மவுண்ட் திருத்தல அதிபர் பிரான்சிஸ் சேவியர், பங்குதந்தை பிரைட், இணைபங்குதந்தை ஆன்றனி புருனோ, பங்கு பேரவை துணைத்தலைவர் மிக்கேல், செயலாளர் தேவசகாயமைக்கிள்ராஜ், துனணச்செயலாளர் காயரூபிலெட், பொருளாளர் சகாயபென்சிகர், கோட்டார் மறைமாவட்ட பேரவை உறுப்பினர் ஜேக்கப்மனோகரன், கவுன்சிலர் ஜெனட்சதீஸ்குமார், முன்னாள் பங்கு பேரவை துணைத்தலைவர் பயஸ் ராய், அருட் சகோதரிகள் மற்றும் பங்குமக்கள் திரளாக கலந்து கொண்டனர். கொடியேற்று நிகழ்ச்சியின் போது சமாதான புறாக்கள் பறக்க விடப்பட்டது. இரவு கலைநிகழ்ச்சிகள் நடந்து.
விழா நாட்களில் தினமும் திருப்பலி, ஜெபமாலை, புகழ்மாலை, இரவு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
8-ம் நாள் விழாவில் நற்கருணை பவனியும், 9-ம் நாள் விழாவில் இரவு வாண வேடிக்கையும், தொடர்ந்து தேர்ப்பவனி நடக்கிறது. 10-ம் நாள் விழாவில் திருப்பலியம், மாலை தேர்பவனி, இரவு 7 மணிக்கு நற்கருணை ஆசீர், இரவு தேவா கலைக்குழு வழங்கும் மறைசாட்சி தேவசகாயத்தின் வரலாற்று நாடகம் ஆகியவை நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை தேவசகாயம் மவுண்ட் திருத்தல அதிபர் பிரான்சிஸ் சேவியர், பங்குத்தந்தை பிரைட், பங்கு மக்கள், பங்கு அருட்பணி பேரவை, அருட்சகோதரிகள் செய்து வருகின்றனர்.
சிவில் ஏரியா சேர்மன் அருட்திரு ஜஸ்டின் யேசுதாஸ் பேசுகையில், கடந்த 31 ஆண்டுகளுக்கு முன்பு சீயோன் ஆலயம் சிறிய ஆலயமாக இருந்தது. தற்போது இந்த ஆலயம் பிரமாண்ட வளர்ச்சி அடைந்து உள்ளது. இதற்கு ஆலயத்தின் ஆயர், பரிபாலன குழு மற்றும் சபை மக்களே காரணம். இந்த பண்டிகையில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு இருக்கிறீர்கள். மக்கள் கூட்டத்தை பார்க்கும் போது இந்த ஆலயத்தில் அமர கூட இடம் இல்லை. இன்னொரு ஆலயம் கூட கட்டலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது. மக்களாகிய நம்மை தேவன் பாதுகாத்து வருகிறார். தேவன் நம்மை எப்போதும் சீர்படுத்தி, சிறப்பு படுத்தி நிலை நாட்டுவார் என்றார்.
பின்னர் அவர் 32-வது ஆண்டு பிரதிஷ்டை, அசன பண்டிகை கொண்டாடும் சீயோன் ஆலய ஆயர் செல்வி தாசன் மற்றும் திருச்சபையினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். இதன்பின்னர் சீயோன் ஆலயத்தின் ஆயர் செல்வி தாசன் மக்களுக்கு தேவ செய்தியை வழங்கினார். இதனை தொடர்ந்து மதியம் 12 மணியளவில் சிறப்பு ஆராதனை நடந்தது.
பின்னர் மதியம் 1 மணியளவில் அசன விருந்தை ஆயர் செல்வி தாசன் தொடங்கி வைத்தார். இந்த விருந்தில் நேதாஜி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர். அசன பண்டிகையையொட்டி ஆலயத்தில் இன்னிசையுடன் கூடிய ஆராதனை பாடல்கள் ஒலிக்கப்பட்டன. மேலும் விழாவையொட்டி ஆலயம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இது காண்போரை வெகுவாக கவர்ந்தது.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய ஆயர் செல்வி தாசன், செயலாளர் செல்வராஜ், பொருளாளர் பீட்டர் தங்கதுரை, கமிட்டி உறுப்பினர்கள், ஆலய ஆண்கள் ஐக்கியம், பெண்கள் ஐக்கியம், வாலிபர்கள் ஐக்கியம், ஓய்வுநாள் பாடசாலை குழு, சீயோன் ஆலய குடும்பத்தினர் செய்து இருந்தனர். இந்த பண்டிகையில் பல்வேறு ஆலயங்களை சேர்ந்த ஆயர்களும், காந்திநகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தினேஷ் குண்டுராவ், முன்னாள் கவுன்சிலர்கள் பி.டி.எஸ்.நாகராஜ், பழனி, கர்நாடக இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் செல்லப்பா மற்றும் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அசன விருந்தை தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் யோவான் குழுவினர் செய்து இருந்தனர்.
ஒவ்வொரு நாளும் ஒரு சில நிமிடங்கள் தனிமையில் அமருங்கள். உங்கள் லட்சிய கனவுகளை எண்ணிப்பாருங்கள். நீங்கள் நினைத்தது கிடைத்து விட்டது போன்று மனதில் கற்பனை செய்து கொள்ளுங்கள். அப்போது நீங்கள் வாழ்வில் வெற்றி பெற்று விடுவீர்கள், என்று மனத்தத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள்.
நமது கனவுகள் நியாயமானவை. அர்த்தமுள்ளவை. நமது கனவுகளை நாம் தான் வளர்த்து கொள்ள வேண்டும். கனவுகள் நமது நனவுகளை இனிமையாக்கி இருக்கிறது என்பது உண்மை. எடுத்துக்காட்டாக ஒரு அறிவியல் கண்டுபிடிப்பை எடுத்துக்கொள்வோம். யாரோ ஒருவருடைய கற்பனை திறமை தான் இது. முதலில் அந்த கண்டுபிடிப்பு எப்படி இருக்கும் என்று விஞ்ஞானி சிந்திக்கிறார். எவ்வகையில் சாத்தியம் என்று தன்னைத்தானே திட்டமிடுகிறார். அதற்கான கருவிகளை வைத்து சோதனை செய்கிறார். சோதனையின்படி நிலைகளை வேறு வேறு விதங்களில் மாற்றியமைக்கிறார். நிறைவான வெற்றி பெறுகிறார். புதிய கண்டுபிடிப்பு உருவாகிறது.
இப்படி சிந்திக்கின்ற போது பல வெற்றிகளை நாம் வாழ்வில் பெற்றுக்கொள்ள முடியும். சிந்தனை என்ற கருவியை எடுத்து வாழ்வில் செயல்படுங்கள். வெற்றியும் தோல்வியும் வாழ்வின் இரு பக்கங்கள். தோல்வியை காணாத மனிதன் முழுமனிதம் அல்ல என்கிறார்கள்.
வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் சரித்திரத்தை சற்று நோக்குங்கள். அவர்களுக்கு ஏற்பட்ட தோல்விகள் தான் அவர்களை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றிருக்கிறது. வளைத்து கொடுப்பது என்பது அத்தனை சுலபமல்ல. அதற்கு சாதூரியம், எதையும் தாங்கும் இதயம் பெற்றிருக்க வேண்டும்.
அதனை பின்பற்றிய மனிதர்கள் வாழ்க்கையே வரலாறாக மாறி இருக்கிறது. ஒரு மனிதனின் உண்மையான வெற்றி அவன் அடைந்த தோல்வியிலேயே ஆரம்பிக்கிறது.
பொதுவாக வெற்றியின் பாதை மிகவும் நீளமானது. வெற்றியை தொடும் வரை இடையில் இடஞ்சல்கள் தோன்றும். வெற்றி...வெற்றி...என ஏக்கம் கொள்ளும் போது வெற்றி வந்தடைகிறது.
-அருட்பணியாளர் குருசு கார்மல், மேலப்பெருவிளை, கோட்டார் மறைமாவட்டம்.
முதல் நாளான நாளை காலை 6 மணிக்கு திருப்பலி, 11 மணிக்கு நவநாள் திருப்பலி போன்றவை நடக்கிறது. இதில் அருட்பணியாளர் பென்கர் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் பென்சிகர் மறையுரையாற்றுகிறார்.
மாலை 3 மணிக்கு திருவிழா வரவேற்பு மேளம், தொடர்ந்து கொடி நேர்ச்சை, ஜெபமாலை, புகழ்மாலை, இரவு 7 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி ஆகியவை நடைபெறும். பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடுபால்ராஜ் மறையுரை நிகழ்த்துகிறார். இரவு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
5-ந்தேதி இரவு 7 மணிக்கு கோட்டார் வட்டார முதன்மை அருட்பணியாளர் ஆனந்த் தலைமையில் திருப்பலி நடைபெறும்.
6-ந் தேதி அதிகாலை 5 மணி திருப்பலி, 6.30 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. நிகழ்ச்சியில் அருட்பணியாளர் பேட்ரிக் சேவியர் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் பஸ்காலிஸ் மறையுரையாற்றுகிறார்.
மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, இரவு 7 மணிக்கு திருப்பலி, மறையுரை, தொடர்ந்து மறைக்கல்வி ஆண்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
தொடர்ந்து வருகிற விழா நாட்களில் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, மறையுரை, கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறும்.
11-ந் தேதி இரவு 8.15 மணிக்கு நற்கருணை பவனி நடக்கிறது. 12-ந் தேதி காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 5 மணிக்கு திருப்பயணிகள் திருப்பலி, இரவு 7 மணிக்கு மாலை ஆராதனை, இரவு 9 மணிக்கு வாணவேடிக்கை, தொடர்ந்து 10.30 மணிக்கு தேர்பவனி போன்றவை நடைபெறும்.
13-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு ஜெபமாலை, தொடர்ந்து திருவிழா திருப்பலி, காலை 7.30 மணிக்கு மலையாள திருப்பலி, காலை 9 மணிக்கு திருப்பலி, மாலை 3.30 மணிக்கு தேர் பவனி, இரவு 7 மணிக்கு நற்கருணை ஆசீர், 9.30 மணிக்கு தேவா கலைக்குழு வழங்கும் மறைசாட்சி தேவசகாயம் வரலாற்று நாடகம் போன்றவை நடைபெறும்.
14-ந் தேதி இரவு 7 மணிக்கு அருட்பணியாளர் ஜார்ஜ் பொன்னையா தலைமையில் தேரடி திருப்பலி, 8.30 மணிக்கு கொடியிறக்கம் போன்றவை நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் பிரான்சிஸ் சேவியர், பங்குத்தந்தை பிரைட், இணை பங்குதந்தை ஆன்றனிபுரூணே, பங்கு அருட்பணி பேரவையினர், அருட்சகோதரிகள் மற்றும் பங்குமக்கள் செய்து வருகிறார்கள்.
நாளை காலை 5.30 மணிக்கு ஆலய பிரதிஷ்டை பண்டிகை நடைபெறுகிறது. இதில், அருட்திரு ஜஸ்டின் யேசுதாஸ் தேவ செய்தி அளிக்கிறார். இன்னிசையுடன் கூடிய தெய்வீக பாடல்களுடன் ஆராதனை நடக்கிறது. இந்த ஆராதனையில் சீயோன் ஆலய குடும்பத்தினர் கலந்துகொண்டு இறைவனை ஆராதிக்கிறார்கள்.
அதன்பின்னர் மதியம் 12 மணிக்கு ‘அசன விருந்து’ சிறப்பு ஆராதனையுடன் தொடங்கப்பட்டு, அனைவருக்கும் அறுசுவையுடன் விருந்து வழங்கப்படுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை செயலாளர் எஸ்.செல்வராஜ், பொருளாளர் பீட்டர் தங்கதுரை மற்றும் சபை ஆயர் செல்விதாசன், கமிட்டி உறுப்பினர்கள், ஆலய ஆண்கள் ஐக்கியம், பெண்கள் ஐக்கியம், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ஐக்கியம், ஓய்வுபெற்ற பாடசாலை குழு, சீயோன் ஆலய குடும்பத்தினர் செய்துள்ளனர்.
விழாவில் அனைத்து பொதுமக்களும் கலந்துகொள்ளுமாறு சீயோன் ஆலய ஆயர் செல்விதாசன் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை, மார்ச். 2-
கிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று தொடங்கி உள்ளது. ஏசு கிறிஸ்து வனாந் திரத்தில் தனியாக இருந்து ஜெபித்து, பாடுகளை அனுபவித்து, மரணத்தை தழுவி, உயிர்த்தெழுதலை நினைவுகூரும் இந்த நாட்கள் கடைபிடிக்கப்படுகிறது.
இது கிறிஸ்தவர்களுடைய ஆவிக்குரிய வாழ்வில் வசந்த காலமாக கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் கிறிஸ் தவர்கள் தினமும் வேதா கமத்தை படிப்பதும், விரதம் இருத்தல் போன்ற தங்களது விசுவாசத்தை பலப்படுத்திக் கொள்வார்கள்.
அதன்படி இன்று சாம்பல் புதன் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினம் குருத் தோலை ஞாயிறு அன்று எடுத்து செல்லப்பட்ட குருத்தோலையை எரித்து சாம்பலாக்கி அதை நெற்றியில் சிலுவை அடையாளமிட்டுக் கொள்ளும் நிகழ்ச்சி கத்தோலிக்க திருச்சபைகளில் நடைபெறுவது வழக்கம்.
இதற்கான சிறப்பு திருப்பலியில் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிலுவையின் அடையாளத்தை பாதிரி யார்கள், ஒவ்வொருவரின் நெற்றியிலும் இடுவார்கள். இந்த நிகழ்ச்சி இன்று அனைத்து தேவாலயங் களிலும் நடைபெற்றது.
கத்தோலிக்க திருச்சபை களில் இன்று காலை நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் ஆயிரக் கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபட் டனர். சி.எஸ்.ஐ. மற்றும் இதர கிறிஸ்தவ அமைப்புகளின் ஆலயங்களில் இன்று மாலை சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
சென்னையில் சாந்தோம் தேவாலயத்தில் நடந்த சிறப்பு வழிபாட்டில் நூற்றுக் கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். இதே போல எழும்பூர், அண்ணா நகர், அடையார், பெரம்பூர், பரங்கி மலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதைதொடர்ந்து ஒவ்வொரு வாரமும் 6 வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடை பெறும். அதை தொடர்ந்து குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்படும். அன்றைய தினம் குருத்தோலைகளை பிடித்து கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக செல்வது வழக்கம்.
தொடர்ந்து பரிசுத்த வாரம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வாரம் முழுவதும் கிறிஸ்தவர்கள் பயபக்தியுடன் வழிபாட்டில் கலந்து கொள்வார்கள். பெரிய வியாழன் மற்றும் புனிதவெள்ளி சிறப்பு தினங்களாக அனுசரிக்கப் படுகிறது.
புனித வெள்ளி அன்று ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதை நினைவு கூர்ந்து மும்மணி தியான ஆராதனை நடைபெறும். அதை தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமை உயிர்த்தெழுதல் (ஈஸ்டர்) பண்டிகை கொண்டாடப்படும்.
இந்த தவக்காலங்களில் கிறிஸ்தவர்கள் அசைவ உணவை பெரும்பாலும் தவிர்ப்பார்கள். ஆடம் பரங்களை வெறுத்து அதற்காக செலவிடும் தொகையினை காணிக்கை யாக ஆலயத்தில் படைப் பார்கள். அல்லது ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்வார்கள்.
கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் முதல் நாளான இன்று சாம்பல் புதன் வழிபாடு நடந்தது. இதையொட்டி நாகை மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்புத் திருப்பலி காலையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஏராளமான கிறிஸ்தவர்களுக்கு அருட் தந்தைகள் நெற்றியில் விபூதி பூசினர். இந்த சிறப்பு திருப்பலியில் ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வந்து நாட்டு மக்கள் அமைதியாக வாழ சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
இந்த தவக்காலத்தின் தொடக்க நாள் ‘சாம்பல் புதன்’ என அழைக்கப்படுகிறது. இன்று கிறிஸ்தவ ஆலயங்களில் உலர்ந்த குருத்தோலைகளை எரித்து எடுக்கப்பட்ட சாம்பலால் அருட்பணியாளர்கள் பங்கு மக்களின் நெற்றியில் சிலுவை அடையாளம் பூசுவார்கள். தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடத்தப்படும்.
இந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகை ஏப்ரல் மாதம் 17-ந் தேதி வருகிறது. இதையொட்டி தவக்காலத்தின் தொடக்க நாளான சாம்பல் புதன் இன்று (புதன்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் குமரி மாவட்டத்தில் கோட்டார் சவேரியார் ஆலயம், திரித்துவபுரம் மூவொரு இறைவன் ஆலயம் உள்ளிட்ட அனைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும் சாம்பல் புதன் வழிபாடு நடைபெறும்.
இதுபோல் சி.எஸ்.ஐ., ரட்சணிய சேனை, லுத்தரன் மிஷன் உள்ளிட்ட ஆலயங்களிலும் இன்று சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். தொடர்ந்து வருகிற தவக்கால நாட்களில் ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, வெள்ளிக்கிழமைகளில் சிலுவைப் பாதை வழிபாடு போன்றவை நடத்தப்படும்.
தவக்கால நாட்களில் கிறிஸ்தவர்கள் ஆடம்பர நிகழ்வுகளை தவிர்த்து நோன்பு கடைப்பிடித்து எளிமையான வாழ்க்கையை கடைப்பிடிப்பார்கள்.
10-ம் திருவிழாவான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6.30 மணிக்கு மறைமாவட்ட முதன்மை குரு ஜான்பிரிட்டோ தலைமையில் திருவிழா திருப்பலி நடக்கிறது. மதியம் 1 மணிக்கு ஊர் அசனம் நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை அமல்ராஜ், பங்கு பேரவை துணைத்தலைவர் டி.வி.சி. விட்மன், செயலாளர் சேகர், பொருளாளர் பாத்திமா மைக்கேல் ராஜன் மற்றும் பங்கு பேரவையினர், அருட்சகோதரிகள், பங்கு இறைமக்கள் செய்துள்ளனர்.
இந்த தவக்காலத்தின் தொடக்க நாள் ‘சாம்பல் புதன்’ என அழைக்கப்படுகிறது. அன்றைய நாளில் கிறிஸ்தவ ஆலயங்களில் உலர்ந்த குருத்தோலைகளை எரித்து எடுக்கப்பட்ட சாம்பலால் அருட்பணியாளர்கள் பங்கு மக்களின் நெற்றியில் சிலுவை அடையாளம் பூசுவார்கள். தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடத்தப்படும்.
இந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகை ஏப்ரல் மாதம் 17-ந் தேதி வருகிறது. இதையொட்டி தவக்காலத்தின் தொடக்க நாளான சாம்பல் புதன் நாளை மறுநாள் (புதன்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் குமரி மாவட்டத்தில் கோட்டார் சவேரியார் ஆலயம், திரித்துவபுரம் மூவொரு இறைவன் ஆலயம் உள்ளிட்ட அனைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும் சாம்பல் புதன் வழிபாடு நடைபெறும்.
இதுபோல் சி.எஸ்.ஐ., ரட்சணிய சேனை, லுத்தரன் மிஷன் உள்ளிட்ட ஆலயங்களிலும் புதன்கிழமை சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். தொடர்ந்து வருகிற தவக்கால நாட்களில் ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, வெள்ளிக்கிழமைகளில் சிலுவைப் பாதை வழிபாடு போன்றவை நடத்தப்படும்.
தவக்கால நாட்களில் கிறிஸ்தவர்கள் ஆடம்பர நிகழ்வுகளை தவிர்த்து நோன்பு கடைப்பிடித்து எளிமையான வாழ்க்கையை கடைப்பிடிப்பார்கள்.
தொடர்ந்து சிங்காரி மேளம் முழங்க புனிதரின் தேர்பவனி நடைபெற்றது. தேர்பவனியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து ஆலஞ்சி பங்கு பணியாளர் அருட்தந்தை மரிய சூசை வின்சன்ட் தலைமையில் திருவிழா நன்றி திருப்பலியும், திருக்கொடி இறக்கமும் நடந்தது.
புனித தோமையாரிடம் திருமுழுக்கு பெற்ற சில கிறிஸ்தவ குடும்பங்கள் கி.பி.முதல் நூற்றாண்டின் இறுதியில் வில்லுக்குறி மாடத்தட்டுவிளை ஊரில் தங்கினார்கள். இவர்கள் தான் மாடத்தட்டுவிளையில் குடியமர்த்தப்பட்ட முதல் கிறிஸ்தவ பூர்வீக குடிமக்கள் ஆவார்கள்.
கல்வெட்டு
இங்கு காணப்படும் விளக்குத்தூண் கல்வெட்டு இவர்களின் தொன்மைக்கு சான்றாகும். இந்த கல்தூண் இப்போது ஆலயத்தின் வடமேற்கு மூலையில் நிற்கிறது. இந்த கல்வெட்டில் காணப்படும் எழுத்துக்கள் கல்வெட்டின் தொன்மையை உறுதி செய்கிறது. ஆகவே, இங்கு சுமார் 652 ஆண்டுகளுக்கு முன்பே புனித செபஸ்தியார் ஆலயம் இருந்தது என்பதை உறுதியாக கூறலாம்.
மாடத்தட்டுவிளை புனித ெசபஸ்தியார் ஆலயம் கோட்டார் பங்கின் கீழ் கொல்லம் இயேசு சபை கல்லூரியின் கண்காணிப்பில் செயல்படத் தொடங்கியது.
கி.பி.1644-ம் ஆண்டு ரோம் இயேசு சபை அதிபருக்கு அருட்தந்தை ஆந்திரேயாஸ் லோப்பன் கோட்டார் பங்கில் அடங்கி உள்ள கிளை பங்குகள் பற்றி புள்ளி விவரம் அனுப்பி உள் ளார். அதில் மாடத்தட்டுவிளை மலைப்பகுதியில் உள்ளது என்றும், பாதுகாவலர் புனித செபஸ்தியார் என்றும், அப்போது 350 கிறிஸ்தவர்கள் வாழ்ந்தனர் என்ற செய்தியை தருகிறார். வராப்புழை மறை மாவட்டத்தில் இருந்து கொல்லம் தனி மறைமாவட்டமாக செயல்படத் தொடங்கியதும் மாடத்தட்டுவிளை கோட்டார் பங்கில் இருந்து கி.பி. 1853-ம் ஆண்டு மார்ச் 15-ந் தேதி முதல் காரங்காடு பங்கின் கிளையானது.
தனி பங்கானது
பின்னர், கி.பி.1918-ம் ஆண்டு நவம்பர் 10-ந் தேதி காரங்காட்டில் இருந்து பிரிந்து மாடத்தட்டுவிளை தனி பங்கானது. இந்த ஆலயத்தில் அமைந்திருக்கும் புனித செபஸ்தியார் உருவச்சிலை ரோமாபுரியில் இருந்து கொண்டு வரப்பட்டதாகும். இந்த சிலை உலகம் முழுவதும் காணப்படும் பொதுவான தோற்றத்தில் இருந்து வேறுபட்டு இடது கை மார்பிலும், வலது கை உடலோடு ஒட்டிய நிலையிலும் அமைந்துள்ளது சிறப்பு வாய்ந்ததாகும்.
கி.பி.1923-ம் ஆண்டு ஜனவரி 2-ந் தேதி புனித செபஸ்தியாரின் உடலில் இருந்து சிறிய எலும்புத்துண்டை கொல்லம் ஆயர் அலோசியஸ் மரிய பென்சிகர் அருளிக்கமாக மாடத்தட்டுவிளை ஆலயத்துக்கு வழங்கி பக்தர்களின் வணக்கத்திற்கு வைக்க உத்தரவிட்டார். அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் புனித செபஸ்தியாரின் திருநாளான ஜனவரி 20-ந் தேதியும், ஆலயத்தின் 9-ம் திருவிழாவின் போதும் பக்தர்களின் பார்வைக்கும், வணங்குவதற்காகவும் ஆலயத்தில் வைக்கப்பட்டு வருகிறது. திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித ெசபஸ்தியாரின் திருப்பண்டத்தை முத்தமிட்டு புனிதரின் ஆசி பெற்று வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்