search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இலந்தைகுளம் அந்தோணியார் ஆலயத்தில் நள்ளிரவில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடந்த போது எடுத்த படம்.
    X
    இலந்தைகுளம் அந்தோணியார் ஆலயத்தில் நள்ளிரவில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடந்த போது எடுத்த படம்.

    கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை

    நெல்லையில் புத்தாண்டு நேற்று இரவு கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
    2019-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு நேற்று நள்ளிரவு பிறந்தது. இதையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பாளையங்கோட்டையில் உள்ள கத்தோலிக்க ஆலயங்கள், சி.எஸ்.ஐ. ஆலயங்களில் நள்ளிரவு 11 மணி அளவில் சிறப்பு பிரார்த்தனை தொடங்கியது. 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும், ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். மேலும் ஆலயங்கள் முன்பு பட்டாசு வெடித்து புத்தாண்டு பிறப்பை கொண்டாடினர்.

    பாளையங்கோட்டை சீவலப்பேரி ரோடு அந்தோணியார் ஆலயத்தில் முன்னாள் பிஷப் ஜூடு பால்ராஜ் தலைமையில் புத்தாண்டு பிரார்த்தனை நடைபெற்றது. இதேபோல் தெற்கு பஜாரில் உள்ள சவேரியார் பேராலயத்தில் குருமட அதிபர் சேவியர் டெரன்ஸ், பங்கு தந்தை ராஜேஷ் ஆகியோர் தலைமையிலும், இலந்தைகுளம் அந்தோணியார் ஆலயத்தில் அந்தோணிகுரூஸ் அடிகளார் தலைமையிலும் புத்தாண்டு பிரார்த்தனை நடைபெற்றது.

    புத்தாண்டை கொண்டா டும் வகையில் நெல்லை மாநகரில் சந்திப்பு, பாளையங்கோட்டை, டவுன் உள்ளிட்ட பெரும்பாலான பகுதியில் இளைஞர்கள் தயார் நிலையில் இருந்தனர். இரவு 12 மணிக்கு பட்டாசுகளை வெடித்து, கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றனர். மேலும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதேபோல் குடியிருப்பு பகுதிகளில் குடும்பத்தினர் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    புத்தாண்டு கொண்டாட் டம் முடிந்த பிறகு இளைஞர்கள் சிலர் மோட்டார் சைக்கிள் களில் வலம் வந்து வாழ்த்துக்களை கூறியவாறு சென்றனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    ஒரு சில இளைஞர்கள் ரோட்டில் வாகனங்களில் அணிவகுத்து சென்றவாறு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதையொட்டி நெல்லை மாநகரம் முழுவதும் முக்கிய சந்திப்புகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 
    Next Story
    ×