என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
X
ஆலஞ்சி புனித சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Byமாலை மலர்19 Feb 2022 10:31 AM IST (Updated: 19 Feb 2022 10:31 AM IST)
ஆலஞ்சி புனித சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினந்தோறும் காலை 6.30 மணிக்கு திருப்பலி நடக்கிறது.
ஆலஞ்சியில் புனித சவேரியார் ஆலயம் உள்ளது. மறைவட்ட முதன்மை ஆலயமான இங்கு 182-ம் ஆண்டு பங்கு குடும்ப திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி இரவு 7 மணியளவில் ஆலஞ்சி வட்டார முதன்மை அருட்பணியாளர் தேவதாஸ் கொடியை ஏற்றி வைத்தார்.
அப்போது கலை நிகழ்ச்சிகள், வாணவேடிக்கை நடந்தது. இதில் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர். குழித்துறை மறைமாவட்டம் வளனூர் பங்குத்தந்தை காட்வின் செல்ல ஜஸ்டஸ் மறையுரையாற்றினார். திருவிழாவையொட்டி தினந்தோறும் காலை 6.30 மணிக்கு திருப்பலி நடக்கிறது.
10-ம் நாள் திருவிழா 27-ந்தேதி காலை 9 மணிக்கு குருகுல முதல்வர் அருட்பணியாளர் ஹில்லாரியுஸ் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. 11 மணிக்கு தேர்பவனி நடக்கிறது.
மாலை 5 மணிக்கு ஆலஞ்சி பங்கு பணியாளர் அருட்பணியாளர் மரியசூசை வின்சென்ட் தலைமையில் திருவிழா நன்றி திருப்பலி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து கொடி இறக்கப்பட்டு 6 மணிக்கு பொதுக்கூட்டமும், அன்பு குடும்பம் என்ற சமூக நாடகமும் நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு இறைமக்கள், அருட்பணி பேரவையினர், அருட்சகோதரிகள், பங்குத்தந்தை மரியசூசை வின்சென்ட், அருட்சகோதரர் விஜய் ஆன்றோ, ஆலஞ்சி வட்டார முதன்மை அருட்பணியாளர் தேவதாஸ் ஆகியோர் செய்துள்ளனர்.

Next Story
×