என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
X
தவக்கால சிந்தனை: வறுமை அகலட்டும்
Byமாலை மலர்21 March 2022 10:36 AM IST (Updated: 21 March 2022 10:36 AM IST)
நமது தமிழகத்தை பொறுத்த வரையில் கூட வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மக்களுடைய எண்ணிக்கை அதிகமாகி கொண்டு தான் இருக்கிறது.
இந்த ஏழை கைம்பெண் எல்லாரையும் விட மிகுதியான காணிக்கை போட்டிருக்கிறார் என உண்மையாகவே உங்களுக்கு சொல்கிறேன்.(லூக்21:3)
உலக நாகரிகம் தோன்றிய காலகட்டத்தில் இருந்தே வறுமை அல்லது ஏழ்மை ஒரு விவாதப்பொருளாகவே உள்ளது. கி.பி. 5-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பிளேட்டோ கூறும் போது அதிகமான ஏழ்மையும், அதிகமான பணபலமும் காணப்பட்டால் அது தீங்கு விளைவிக்கும் என்று குறிப்பிட்டார். ஏற்கனவே வசதி படைத்தவர்கள் மேலும் வசதி அடைவதை முன்னேற்றம் என கூற முடியாது. வசதி இல்லாதவர்களுக்கு வசதியை ஏற்படுத்துவதில் தான் முன்னேற்றம் உள்ளது என்கிறார் அமெரிக்க முன்னாள் அதிபர் ரூஸ்வெல்ட், ஏழைகளின் வாழ்க்கை தரம் பற்றி பேசாத தலைவர்கள் இல்லை என்ற போதிலும் ஏழ்மை இந்த சமூகத்தில் அழிப்பட்டு இருக்கிறதா? என்றால் மாபெரும் கடினமான ஒன்றாகதான் இருக்கிறது.
தினசரி உழைத்தால் மட்டும் தான் உணவு என்ற சூழல் இன்று மிக அதிகமாக சமூகங்களில் தென்படுகிறது. நமது தமிழகத்தை பொறுத்த வரையில் கூட வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மக்களுடைய எண்ணிக்கை அதிகமாகி கொண்டு தான் இருக்கிறது. அவர்களை பராமரிப்பதற்கு யாரும் முன்வருவதில்லை.
மலைவாழ் மக்கள், கிராமங்களில் வாழ்கின்ற மக்கள், வீதியோரங்களில் வாழ்கின்ற மக்கள், தெருவோரங்களில் வாழ்கின்ற மக்கள் என்று எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கிராமங்களில் இருந்து நகர் புறத்துக்கு செல்கின்ற மக்களில் 10 பேரில் 3 பேர் வசதி பெறுகிறார்கள். எனவே ஏழ்மையை போக்குவதற்கு முன்னெடுப்புகளை முன்னெடுக்க வேண்டிய ஒரு சூழல் இந்த சமூகத்தில் மிக அதிகம் உள்ளது. அரசும் அதை சார்ந்த நிர்வாகமும் இதற்கான பல தொடர் திட்டங்களை தீட்டி முன்னெடுப்புகளை முன்னெடுக்கின்ற போது மட்டும் தான் இந்த சூழல் சமூகத்தை விட்டு அகலும் என்பதை உணர்ந்திடுவோம்.
-அருட்பணியாளர் குருசு கார்மல், மேலப்பெருவிளை, கோட்டார் மறைமாவட்டம்.

Next Story
×