என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தோஷ பரிகாரங்கள்
அக்னி நட்சத்திரம் தொடங்கியாச்சு: இந்த விஷயங்களை கண்டிப்பா செய்யாதீங்க...
- இன்று அக்னி நட்சத்திரம் தொடங்கியது.
- அக்னி நட்சத்திரம் 28-ந்தேதி வரை நீடிக்கிறது.
கோடை காலம் என்றாலே நமக்கு முதலில் ஞாபகம் வருவது "அக்னி நட்சத்திரம்"தான்!
அக்னி என்றால் நெருப்பு அதாவது சூரிய பகவானுக்கு அக்னி என்ற இன்னொரு பெயரும் உண்டு!
சித்திரை மாதம் 21-ந்தேதி துவங்கி, வைகாசி மாதம் 14-ந்தேதி வரையிலான 21 நாட்கள் அக்னி நட்சத்திர காலம் ஆகும். இதை கிராமங்களில் முன்னேழு,பின்னேழு நாட்கள் என்பார்கள். இவ்வாண்டு இன்று தொடங்கிய அக்னி நட்சத்திரம் மே 28ந் தேதி வரை நீடிக்கிறது.
சித்தரை மாதத்தில் சூரிய பகவான் மட்டுமல்ல சந்திர பகவானும் பூமியின் அருகிலே சஞ்சாரம் செய்வார்!
"அக்னி நட்சத்திரம்"என்ற பெயர் பஞ்சாங்க ரீதியாக வந்ததுதான். எல்லோருக்கும் ஒரு சந்தேகம் உள்ளது. அதாவது அக்னி நட்சத்திர நாட்களில் எந்த சுபகாரியங்களும் செய்யக்கூடாதா என்ற சந்தேகம் நிறைய பேருக்கு இருக்கிறது.
அக்னி நட்சத்திர காலத்தில் திருமணம், நிச்சயதார்த்தம், சீமந்தம், பெண் பார்த்தல் உள்ளிட்ட அனைத்து சுப காரியங்களையும் செய்யலாம்.
அதேபோல் அனைத்து விதமான மங்கல காரியங்களுக்கும் பேச்சுவார்த்தை நடத்தலாம்.
ஆனால் இந்த அக்னி நட்சத்திர காலத்தில் பால் காய்ச்ச கூடாது. அதே போல் வீடு நிலை வைப்பது, சிலாப் போடுவது போன்ற விசயங்களை தவிர்க்கவும்.
மேலும் செடி, கொடி மரங்களை வெட்டக்கூடாது, நார் உரிக்கக்கூடாது, விதை விதைக்கக்கூடாது, கிணறு, குளம், தோட்டங்கள் அமைக்கக்கூடாது, நிலம் மற்றும் வீடுகளில் பராமரிப்புகள் செய்யக்கூடாது!
முடி இறக்குதல், காது குத்துதல், புது வீட்டுக்கு குடிபோய் பால் காய்ச்சுதல், கிரகப்பிரவேசம் செய்தல், பூமி பூஜை செய்வது கூடாது. கிணறு வெட்டுதல் போன்ற விவசாய வேலைகளை தொடங்குவது ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும். இரண்டு சக்கர வாகனங்களில் நெடுந்தூரம் பயணம் செய்வதை தவிர்க்கவும்.
அக்னி நட்சத்திர காலங்களில் கண்டிப்பாக நாம் ஒரு மரமாவது நடவேண்டும்.உலகிலே மிக புண்ணிய விசயம் மரம் நடுவது ஆகும்.
நாம் நடும் மரம் நல்லவர்,கெட்டவர் என பாகுபாடின்றி அனைவருக்கும் நிழல் மட்டுமல்ல காய்,கனிகளை கொடுக்கும். அதேபோல் எத்தனையோ பறவைகளுக்கு வாழ்விடமாகவும் இருக்கும்.
நமக்கு நல்ல பல விசயங்களை உணர்த்தும் அக்னி நட்சத்திர காலத்தை வெறுக்காமல் இந்த காலங்களில் நீர் பந்தல்,மோர் பந்தல், தயிர் சாதம் உள்ளிட்ட அன்னதானங்களை செய்து மரங்கள் நட்டால் இந்த அக்னி நட்சத்திரம் பல நன்மைகளை தரும் என்பது உண்மையாகும்.
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்