என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தோஷ பரிகாரங்கள்
எதிர்மறை சக்தியை விரட்டும் வெண் பூசணிக்காய்
- புதிய வீட்டில் குடியேறும்போது சில தீய சக்திகளும் அங்கே இருக்கலாம்.
- வீட்டின் முன்பாக வெண் பூசணிக்காயை கட்டி தொங்க விட என்ன காரணம் என்று பலரும் நினைக்கலாம்.
வீ ட்டின் கிரகப்பிரவேசம் எனப்படும் புதுமனைப் புகுவிழா சமயத்தில், புதிய வீட்டின் முன்பாக வெண் பூசணிக்காய் கட்டி தொங்க விடுவார்கள். எவ்வளவோ காய்கள் இருக்க, வீட்டின் முன்பாக வெண் பூசணிக்காயை கட்டி தொங்க விட என்ன காரணம் என்று பலரும் நினைக்கலாம். வளர்ச்சியடையாத வெண்பூசணியின் நிறம் அடர் பச்சை நிறத்தில் இருந்து, கொஞ்சம் கொஞ்சமாக மாறி வெளிர் சாம்பல் நிறம் வரை மாறுபடும். முதிர்ந்த வெண் பூசணியின் மேல் பகுதியில் ஒரு தனித்துவமான வெள்ளை சாம்பல் சூழப்பட்டிருக்கும். இதனால் இந்த பூசணிக்காயை 'சாம்பல் பூசணிக்காய்' என்றும் சொல்வார்கள்.
உணவுகளில் மிகவும் அதிக பிராண (உயிர்சக்தி) சக்தி கொண்ட சில உணவுகள் உள்ளன. அதில் வெண் பூசணிக்குத்தான் முதலிடம். வெண் பூசணியானது, உணவிலும் மிக அதிக சக்திகளைக் கொடுக்கும் உணவாக இருக்கிறது. ஆசிய நாடுகளின் சமையலில் சூப்களில் கட்டாயம் சேர்க்கப்படும் ஒரு உணவுப் பொருளாக, வெண் பூசணி இருக்கிறது. பெரும்பாலும் இந்தியா மற்றும் சீனாவில் இவை விரும்பி உண்ணப்படும் காயாக உள்ளது. இது உடல்நலத்தைப் பேணிப் பாதுகாப்பதில் முன்னிலை வகிக்கிறது.
பழங்காலத்தில் வீடுகளிலேயே கூட வெண் பூசணியை வளர்த்திருக்கிறார்கள். அப்படி வளரும் வெண் பூசணியை, ஏழைகளுக்கு, இயலாதவர்களுக்கு தானம் அளித்தால் அது புண்ணியம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. வெண்பூசணியில் செய்யப்படும் உணவைத் தொடர்ந்து சாப்பிடுவதால், புத்திக்கூர்மையும், உடல் புத்துணர்வும், மன சமநிலையும் ஏற்படும் என்கிறார்கள்.
இந்த வெண் பூசணிக்காயில், மிக அதிக அளவில் நோ்மறை பிராண சக்தி இருக்கிறது. அதனால்தான் நாம் புதியதாக கட்டிக் குடியேறும் வீட்டின் முன்பாக வெண் பூசணிக்காயை கட்டி வைக்கிறோம். புதிய வீட்டில் குடியேறும்போது சில தீய சக்திகளும் அங்கே இருக்கலாம். வீட்டின் முன்பாக கட்டப்படும் வெண் பூசணியில் இருக்கும் நேர்மறை சக்தியானது, அங்குள்ள எதிர்மறை சக்திகளை அகற்றிவிடும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அதனால்தான் வெண் பூசணியை, புதியதாக குடியேறும் வீடுகளின் முன்பாக கட்டி தொங்கவிடுகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்