என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவிலில் தேர் திருவிழா
Byமாலை மலர்1 April 2016 8:43 AM IST (Updated: 1 April 2016 8:43 AM IST)
தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவிலில் தேர் திருவிழா நடந்தது. இதில் 2 தேர்களை தலையிலும், தோளிலும் பக்தர்கள் தூக்கி சென்றனர்.
திருச்சிமாவட்டம் தொட்டியத்தில் உள்ள மதுரைகாளியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு ஆண்டு தோறும் பங்குனித்தேர்த்திருவிழா ஒரு வாரகாலம் நடைபெறுவது வழக்கம். இதில் தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள்.
இந்த ஆண்டு திருவிழா கடந்த 15-ந்தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. தினமும் பல்வேறு அமைப்புகள் சார்பில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. 22-ந் தேதி இரவு காப்புகட்டும் நிகழ்ச்சியை முன்னிட்டு வரதராஜபுரத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இளநீர்களை கொண்டு இளநீர்காவடி எடுத்து வந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது.
திருவிழாவை முன்னிட்டு அம்மன் கோவில் (உட்பிரகாரம், அம்மன் சன்னதி மட்டும்) ஒருவாரம் அடைக்கப்பட்டிருக்கும். அப்படி அடைக்கப்படும் அம்மன் கருவறையில் இரண்டு பெரிய பானைகளில் நெய் ஊற்றி எட்டு முழ வேட்டியால் ஆன இரண்டு பெரிய திரிகள் தயாரிக்கப்பட்டு விளக்கு ஏற்றப்பட்டது. இதை தொடர்ந்து அடுத்த நாள் இரவு அடைத்த கோவிலுக்குள் ஆயிரம்பானையில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். பின்னர் கடந்த 29-ந்தேதி நள்ளிரவு கோவில் வளாகத்தில்¢ சின்னத்தேர், பெரியத்தேர் தலையலங்காரம் நடைபெற்றது. இதில் பெரிய தேரில் ஓலைப்பிடாரிஅம்மனும், சின்னத்தேரில் மதுரைகாளியம்மனும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இத்திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து நேற்று மாலை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்தூக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. கோவிலில் இருந்து இரண்டு தேர்களையும் பக்தர்கள் தலையிலும், தோளிலும் சுமந்து சென்றனர். நேற்று மாலை எல்லை உடைக்கும் நிகழ்ச்சிக்காக முக்கிய வீதிகள் வழியே சென்றது. தொடர்ந்து அழகு நாச்சியம்மன் கோவில் எல்லை உடைக்கும் நிகழ்ச்சி, எல்லை முகம் பார்க்கும் நிகழ்ச்சி, வாணவேடிக்கை, எருமைக்கிடா வெட்டு, மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியுடன் வருகிற செவ்வாய்க்கிழமை வரை இத்தேர்த்திருவிழா நடக்கிறது.
விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தொட்டியத்தை சுற்றியுள்ள 18-பட்டியை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டனர். திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள், கோவில் பூசாரிகள் செய்து வருகின்றனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Next Story
×